சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கை வந்தடைதுள்ளது
நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சீனக்குழுவினரை, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையிலான குழுவினர் வரவேற்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன இந்த உயர்மட்டக் குழுவில் சீன யுவான் மாகாணத்தின் ஆளுநர் கிவின் குவான் ரொன்னும் இடம்பிடித்துள்ளார்.
சீனாவுக்குக் கடந்த மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன உயர்மட்டக் குழுவினர் பிரதமர் டி.எம்.ஜயரத்னவை இன்று மாலை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்க படுகின்றது








