Lankamuslim.org

One World One Ummah

Archive for September 1st, 2010

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வழக்கத்தை விட அதிகமாக சீனா ஈடுபாடு காட்டி வருகிறது

leave a comment »

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வழக்கத்தை விட அதிகமாக சீனா ஈடுபாடு காட்டி வருகிறது அதன் திட்டங்களை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இன்று இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய பாராளுமன்றத்தில் , இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக கொண்டு வரப்பட்ட கவனயீர்ப்புத் தீர்மானம் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஸ்மீரில் உள்ள கில்கிற் – பல்ரிஸ்தான் பிராந்தியத்தில் சீனா 11,000 துருப்புக்களை நிறுத்தியிருப்பது தொடர்பான கவனயீர்ப்புத் தீர்மானம் ஆகியவற்றின் மீது பதிலளித்துப் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 1, 2010 at 1:27 pm

சீனாவின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கை வந்தடைதுள்ளது

leave a comment »

நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சீனக்குழுவினரை, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா தலைமையிலான குழுவினர் வரவேற்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன இந்த உயர்மட்டக் குழுவில் சீன யுவான் மாகாணத்தின் ஆளுநர் கிவின் குவான் ரொன்னும்  இடம்பிடித்துள்ளார்.

சீனாவுக்குக் கடந்த மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் அழைப்பின் பேரிலேயே இவர்கள் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன உயர்மட்டக் குழுவினர் பிரதமர் டி.எம்.ஜயரத்னவை இன்று மாலை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது  4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும்  தெரிவிக்க படுகின்றது

Written by lankamuslim

September 1, 2010 at 1:22 pm

கல்பிட்டி அல் அக்ஸாவுக்கு சிறந்த சுற்றாடல் விருது

with one comment


கல்பிட்டி அல் அக்ஸா  தேசிய பாடசாலை 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த சுற்றாடல் பாடசாலைக்கான விருதினை பெற்றுள்ளது. மத்திய சுகாதார அதிகார சபையும், கல்வி அமைச்சும் இணைந்து தேசிய ரீதியில் நடத்திய இந்தப் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா  தேசிய பாட சாலையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 22 மாணவர்கள் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர்என்று செய்திகள் தெரிவிக்கின்றன கற்பிட்டி அல் -அக்ஸா  பாடசாலையே தேசிய மட்டத்தில் கூடுதலான பதக்கங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

September 1, 2010 at 12:41 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers