Lankamuslim.org

One World One Ummah

Archive for September 2010

பாபர் மஸ்ஜித் நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம்

with 3 comments

இணைப்பு -2

இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதி முஸ்லீம்களுக்கும், இரண்டாவது பகுதி நிர்மோகி அகாரா என்கிற இந்து சாதுக்களின் அமைப்புக்கும், மூன்றாவது பகுதி ராமர் கோவில் கட்டுவதற்கான  அமைக்கப்பட்டுள்ள அமைப்புக்கும்  அளிக்கும்படி அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பளித்திருக்கிறதாம் இதன் படி பாபர் மஸ்ஜித்தின் நிலமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரிக்கப்படும்.இதின் இரண்டு பகுதி இந்துக்களுக்கும் ஒரு பகுதி முஸ்லிம்களுக்கும் வழங்கப்படுமாம்

நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்பை வழங்கியுள்ளனர்  இவர்களில் இரண்டு நீதிபதிகள் இந்த தீர்ப்பை அளித்திருப்பதாகவும் மூன்றாவது நீதிபதி இதற்கு மாறான தீர்ப்பை அளித்திருப்ப தாகவும்  செய்திகள் தெரிவித்திருக்கின்றன.

பாபர் மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டிருக்கும் இடம் தான் ராமர் பிறந்த இடம் என்றும், அந்த இடத்தில் பாபர் மசூதியை கட்டியதாகவும் இரண்டு நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கருத்துடன் மூன்றாவது நீதிபதி உடன்படவில்லை என்பது குறிபிட தக்கது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 30, 2010 at 7:16 pm

உள்ளூராட்சி உத்தேச மாற்றங்கள் தொடர்பான நகல் இன்றி கலந்துரையாடல் !!

leave a comment »

கலாநிதி அனீஸ்

உள்ளூராட்சித் தேர்தல் முறையின் உத்தேச புதிய மாற்றங்கள் அடங்கிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கபடவுள்ளது இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம்க வுன்சில் கடந்த 28ஆம் திகதி விசேட கலந்துரையாடன் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது இந்த கலந்துரையாடலின் முஸ்லிம் நிறுவனங்கள், இயக்கங்களின் பிரதிநிதிகளையும் ஆர்வமுள்ளவர்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டியது.

அதன் படி ஹோட்டல் ரண்முத்துவில் நடைபெற்றது பலரும் கலந்து கொண்டனர் ஆனால் அங்கு உள்ளூராட்சித் முறையின் உத்தேச புதிய மாற்றங்களை கொண்ட உத்தேச நகல் கிடைக்காமையால் அது கொண்டுள்ள சாதக பாதக மாற்றங்கள் விவாதிக்க முடியாத நிலை காணப்பட்டது எனினும் அங்கு உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் N.M.அமீன் இதில் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான விடையங்கள் இருப்தாக அறிய முடியவில்லை என்றும் உள்ளூராட்சித் மாகாண சபை அமைச்சர் அதாவுல்லாஹ் சிறுபான்மையினர் நலன்கள் தொடர்பில் அக்கறையுடன் செயல்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது என்றும் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 30, 2010 at 10:27 am

பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படும்: கெஹலிய

leave a comment »

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படும் என ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இன்று பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை, கேள்விப் பத்திர நடைமுறைக்குப் புறம்பாக ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டமை உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்தன விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

September 30, 2010 at 10:20 am

இந்த முறை ஹஜ் ஒழுங்குகளை செய்ய 96 முகவர்கள்

leave a comment »

இம்முறை ஹஜ் கடமையை  நிறைவேற்ற மக்காவுக்கு அழைத்துச் செல்ல இலங்கையில் 96 ஹஜ் முகவர்களுக்கு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா தலைமையிலான இக் குழுவில் பிரதி அமைச்சர் பைஸல் முஸ்தபா, முன்னாள் உப மேயர் அஸாத் சாலி, ஆகியோர் உறுப் பினர்களாகச் சேவையாற்றுகின்றனர். ஹஜ் கட்டணமாக ஹஜ் முகவர்கள் ஆகக்கூடியதாக 3,25,000 ரூபா கட்டணத்தை அறவிட வேண்டு மென அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது

அங்கீகரிக்கப்பட்டுள்ள 96 ஹஜ் முகவர் நிறுவனங்கள் அல்லாத வேறு முகவர் நிறுவனங்களுடன் செய்யும் தொடர்புகளுக்கு முஸ்லிம், சமய கலாசாரத் திணைக்களம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என்று திணை க்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி அறிவித்துள்ளார்.

Written by lankamuslim

September 30, 2010 at 9:01 am

நாளை பாபர் மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு

leave a comment »

பாபர் மஸ்ஜித் திர்ப்புக்கு இடைக்கால தடை கோரிய மனு நேற்று உச்ச நீதின்றத்தில் 2 வது முறையாக விசாரனைக்கு வந்தது. இதன்போது இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அலஹாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. இதனைத் நாளை 30 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்பு வழங்கப் போவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது இதை தொடர்ந்து பல சகாப்தங்களா எதிர்பார்க்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்டவுள்ளது

Written by lankamuslim

September 29, 2010 at 4:59 pm

கல்முனையில் ஆர்ப்பாட்டம்

leave a comment »

இன்று புதன்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கல்முனை ஆதார வைத்தியசாலையின் விழிப்புணர்வு குழவினரால் நடத்தப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்துள்ளனர். காலை 9.30 மணி அளவில் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது. இதேநேரம் இந்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன, வைத்திய பணிப்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக கூறி அவருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது

Written by lankamuslim

September 29, 2010 at 3:00 pm

அணு உலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய விஞ்ஞானிகள் குழு

leave a comment »

2020ல் இலங்கையின் அணுசக்தி ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அணு உலையொன்றை அமைப்பதற்கான சாத்தியக் கூற்றை ஆராய்வதற்காக ஐந்து விஞ்ஞானிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு ள்ளது. இந்தக் குழு ஆறு மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதோடு அதன் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க கூறினார்

அண்மையில் வியன்னாவில் நடைபெற்ற உலக அணுசக்தி அதிகார சபையின் வருடாந்த அமர்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 29, 2010 at 10:11 am

இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவம்

with 7 comments

இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவம் என்ற தலைப்பில் மீள்பார்வை என்ற சஞ்சிகையில் வெளியான கட்டுரையை இங்கு பதிவு செய்கின்றோம்

இலங்கை முஸ்லிம்களின் நெடிய வரலாற்றில் தலைமைத்துவம் என்ற இடை வெளியை அரசியல்வாதிகளே நிரப்புவதற்கு முயன்று வந்துள்ளனர். பல அரசியல் தலைவர்கள் இதற்காக நடத்திய போராட்டங்கள் ஈற்றில் போட்டிகளாகவும் பூசல்களாகவும் வெடித்து, பிரதேச வாதங்களாக உருமாறியுள்ளன. இது கடந்த கால உண்மை. முஸ்லிம் சமூகத்தில் பாமர மக்கள், சிலவேளை ஓரளவு படித்தவர் களும் கூட அரசியல்வாதிகளையே தலைவர்களாக எண்ணியும் செயற் பட்டும் வந்துள்ளனர்.

இன்றும் அவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கின்ற ஏராளமானவர்கள் எமக்கு மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர். வடக்குக் கிழக்கையும் தென்னிலங்கையையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகை யில் தோற்றமெடுத்த அரசியல்வாதிகள் தமது சந்தர்ப்பவாத கூட்டுகள் மூலம் உண்மைச் சொரூபங்களை வெளிப்படுத்திய போதும்கூட, இன்னும் அரசியல் வாதிகள் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒரு பெரும் கூட்டம் நமக்கு மத்தியில் உள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 29, 2010 at 10:00 am

கம்பளை வைத்தியசாலையில் இரு வருடங்களாக மூடிக்கிடக்கும் ஜனாஸா அறை

leave a comment »

கம்பளை போதனா வைத்திய சாலையில் இரு வருடங்களுக்கு முன்னர் சுமார் 7 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான ஜனாஸா அறை – பிரேத அறை – இது வரையும் பயன்படுத்த படாது மூடி வைக்கப்பட்டுள்ளது கம்பளை டவுன் மஸ்ஜித் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் வர்த்தகர் ஒருவரின் உதவியுடன் இந்த ஜனாஸா அறைநிர்மாணிக்கப்பட்டுள்ளது  விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 29, 2010 at 9:33 am

காங்கேயனோடை வீட்டு திட்டம் பற்றி BBC

leave a comment »

மட்டகளப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிறிய நிலப்பரப்பில் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வருகின்றார்கள் குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம் மக்கள் மிகவும்  சன நெருக்கடிக்குள்  வாழ்ந்து வருகின்றனர் ஆசியாவிலேயே 3 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் வாழும் ஒரு  சமூகம் காத்தான்குடி சமூகம் என்பது குறிபிடத்தக்கது  இந்த நிலையில்

மட்டகளப்பு காங்கேயனோடையில் சுனாமியால் வீடுகளை இழந்த முஸ்லிம்களுக்கு அமைக்கப்படும் வீட்டு  திட்டத்தை அங்குள்ள தமிழ் குழுவொன்று எதிர்த்து வருகின்றது இது பற்றி எமது இணையத்தளத்தில் பதிவுகளை வழங்கி இருக்கின்றோம் இது பற்றி BBC  ஆரையம்பதி வீடமைப்புக்கு எதிர்ப்பு என்ற தலைப்பில் வழகியுள்ள செய்தியை இங்கு தருகின்றோம் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 28, 2010 at 9:34 am

புத்தளதில் மோட்டார் கைக்கிள் திருடர்கள் கைது

leave a comment »

புத்தளதில் பல பகுதிகளில் மோட்டார் கைக்கிள்களை திருடி குறைந்த விலைக்கு விற்று வந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இருவர் கல்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் குறைந்த விலையில் விற்க்கப்பட்ட 9 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர் என்று அறிய முடிகின்றது

Written by lankamuslim

September 27, 2010 at 5:45 pm

சட்டவிரோதமான ஆயுதங்களை ஒப்படைக்குமாறு வேண்டுகோள்

leave a comment »

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருப்போர், அவற்றை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று தெரிவிக்க படுகின்றது குறித்த திகதிக்கு முன்னர் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோருக்கு எதிராக அனுமதிப் பத்திரமின்றி சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்படும் இக்குற்றத்தைப் புரியும் ஒருவர் 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும் எனவும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கபட்டுள்ளது

Written by lankamuslim

September 27, 2010 at 5:43 pm

கல்முனையில் மின்னல் தாக்கி ஒருவர் வபாத்தாகியுள்ளார்

leave a comment »


கல்முனை  நாவிதன்வெளிப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் வபா த்தாகியுள்ளார் இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் நாவிதன்வெளிப் பிரதேச சவளக்கடை கிராமத்தின் 5ஆம் பிரிவைச் சேர்ந்த ஷம்சு லெவ்வை அப்துல் சலாம் என்பவர் அந்த பகுதியில் அமைந்துள்ள குளம் ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போதே மின்னல் தாக்கி ஸ்தலத்தில் வபாத்தாகியுள்ளார் 5 பிள்ளைகளின் தந்தையான இவர் 53 வயது குடும்பத் தலைவர். இன்று நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

September 27, 2010 at 5:28 pm

ஆப்கான் அப்பாவிகளை கொலை செய்யக் killing club அமைத்து செயல்படும் அமெரிக்க படை

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்

ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்திவரும் அமெரிக்க ஆக்கிமிப்புபடை அங்கு கிளப்- US soldiers killing club- அமைத்து அப்பாவி பொது பொதுமக்களை கொலை செய்து வந்த விடையம் வெளிவந்துள்ளது ஆப்கானிஸ்தானில் இயங்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் ஒரு பகுதியினர்  தமது ஆக்கிரமிப்பு கொலைகளுக்கு மேலதிகமாக தமது ரோந்திபோது   வயல்களிலும், வீடுகளிலும் இருந்த அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து கொலை செய்யப் பட்டவர்களின் உறுப்புகளை வெட்டி எடுத்து சென்றமையும் தெரியவந்துள்ளது.

இவர்கள் எவ்வளவு காலமாக எந்தனை  கொலை செய்துள்ளார்கள்  என்றவிடையம் மற்றும் இந்த கொலை   கிளப்பை எத்தனை பேருடன் எவ்வளவு காலமாக நடத்தி வருகின்றார்கள்   என்பது அறியப்படவில்லை ஆப்கானிஸ்தானில் பல பாகங்களில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட, எரிக்கப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கபடுவது குறிபிடத்தக்கது    இந்த ஆண்டின் ஜனவர் மாதம் தொடக்கம் இவர்கள் மூன்றுக்கும்  அதிகமானவர்களை கொலை செய்துள்ளது வெளிவந்துள்ளது வெளிவந்த  கொலைகளில் மட்டு    விரிவாக பார்க்க

Written by lankamuslim

September 27, 2010 at 12:47 pm

மாநகர சபை அதிகார சபையாக மற்றப்படுமாயின் பாரிய ஆர்பாட்டம் வெடிக்கும்

leave a comment »

கொழும்பு மாநகரை அரசாங்கம் அதிகார சபையாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாயின் அதற்கு எதிராக வரலாறு காணாத பாரிய போராட்டத்தை நடத்த ஐ.தே.க நடவடிக்கை மேற் கொள்ளும் என மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபு ரஹ்மான் தெரிவித்துள்ளார்

மேல்மாகாண சபை கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் கொழும்பு வாழ் மக்களின் சவால்களுக்கு மத்தியில்தான் அரசாங்கம் இவ் ஜனநாயக விரோத செயல்பாட்டினை மேற்கொள்ள முடியும் எனவும் குறிபிட்டுள்ளார்

கொழும்பு மாநகர சபையை தேர்தலில் எந்த வகையிலும் வெல்ல முடியாதென்பதை கண்டுகொண்ட அரசாங்கம் தனது அடிவருடிகளை  வைத்து மாநகர நிர்வாகத்தை மேற்கொள்ளும் நோக்கியில் அதிகாரசபையாக மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 27, 2010 at 9:44 am

மட்டக்களப்பில் அமைச்சர் பஸில் மற்றும் பௌசி

leave a comment »

மட்டக்களப்பு நகரத்தில் நெக்டப் திட்டத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் தகவல் நிலையத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று காலை திறந்து வைத்துள்ளார் .

இவ்வைபவத்தில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மட்டக்களப்பு, மாநகர மேயர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர் .

Written by lankamuslim

September 26, 2010 at 5:46 pm

ஊடக போலி பிரசாரங்களை முறியடிபதற்கு ஒன்று பட்டு உழைக்க தீர்மானம்

leave a comment »

முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைகாலமாக அதிகரித்து வரும் ஊடக சதிகளை முறியடிக்கும் நோக்குடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையுடன் இணைந்து செயல்பட்ட பல முஸ்லிம் அமைப்புகள் தீர்மானித்துள்ளது மேல் மாகான ஆளுநர் எஸ் . அலவி மௌலானாவின் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ள விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கபடுள்ளது.

இலங்கையில் அமைதியான முறையில் இஸ்லாமிய பணிகளை மேற்கொண்டு வரும் அமைப்புகள் பயங்கரவாதத்திற்கு துணை போகும் விதத்தில் செயல்பட்டு வருவதாக சிங்கள பத்திரிகையான லக்பிம வீக்கென்ட் பத்திரிகையும் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் ஆகிய செய்திகளை கூறியிருந்தன இந்த பத்திரிகையின் செய்திகளால் மிகவும் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன இதனை அடுத்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஏனைய இஸ்லாமிய அமைப்புகளுடன் இணைந்து மேல் மாகான ஆளுநர் எஸ் அலவி மௌலானாவை சந்தித்து இந்த ஊடக தகவல்கள் பற்றி விரிவாக கலந்துரையாடியுள்ளது.

ஒரு சிலர் தமது சொந்த நலன்களுக்காக முஸ்லிம் அமைப்புகளை  நிறுவனங்களை பயங்கரவாதிகள், அடிபடைவாதிகள், மதத்தீவிரவாதிகள் போன்ற மேற்கின் முத்திரைகளை இவர்கள் மீது குத்தி இவர்களுக்கும் சர்வதேச பயங்கரவாத அடிப்படைவாத குழுக்களுக்கும் இடையில் தொடர்புகள் உண்டு என்று மீடியாகளிலும் போலீசிடமும் , அரச அதிகாரிகள் மட்டத்திலும் கூறும் போக்கு காணப்படுகின்றது இது மிகவும் பாரதுரமான பிரச்சனைகளை இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திவிடும் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 25, 2010 at 1:29 pm

இரட்டை கோபுர தாக்குதலுக்கு அமெரிக்கா தான் காரணம்-ஈரான் அதிபர்

with 2 comments

Ahmadinejad

நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதிநிஜாத். அவரது பேச்சைக் கண்டித்து அமெரிக்க குழுவினர் ஐ.நா.விலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அவர், 2001ம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர்.ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியதே அமெரிக்கா தான் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 25, 2010 at 1:06 pm

அக்குறணை நகரில் வேன் கடத்தல்

leave a comment »

அக்குறணை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 இலட்ச ரூபாய் பெறுமதியுடைய வேன் ஒன்று அதிகாலையில் களவாடப்பட்டுள்ளதாக அலவத்துகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்குறணை மல்வானஹின்னை பிரதேசத்தை சேர்ந்த வியாபாரியொருவர் 11 இலட்சம் ரூபாவுக்கு வேன் ஒன்றினை வாங்கியபின் அதை அக்குறணையில் கண்டி – மாத்தளை ஏ-9 வீதி ஓரமாக நிறுத்தி வைத்திருந்த போதே வாகனம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

September 24, 2010 at 7:52 pm

லஷ்கர்-இ-தொய்பா முற்றுமுழுதான ஒரு கட்டுக்கதை: கெஹலிய ரம்புக்வெல

leave a comment »

லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி பெறுவதற்கு இலங்கை ஒரு தளமாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுவது முற்றுமுழுதான கட்டுக்கதை என்றும் சில உள்நோக்கங்களுடன் இவ்வாறான கதை தெரிவிக்கப்படுவதாகவும் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார் இந்தியாவுக்கு இலங்கை ஊடாக நுழைவதற்கு தயாராக 200 லஷ்கர்-இ-தொய்பா உறுப்பினர்கள் இருப்பதான அமெரிக்காவினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படும் அறிக்கை பற்றிய கேள்விக்கு பதில் கூறும்போது அரசாங்க பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுடன் நாம் தெளிவான புரிந்துணர்வைக் கொண்டுள்ளோம். இணைந்த கண்காணிப்பு நடவடிக்கை, தகவல் பறிமாற்றம் போன்றவற்றை மேற்கொள்கிறோம். இந்த பிராந்தியத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை வெறொரு எவரையும் விட இந்தியா நன்கறியும். எனவே எந்த நடவடிக்கையும் கண்டுபிடிக்கப்பட்டு விபரங்கள் இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அமைச்சர் ரம்புக்வெல கூறியுள்ளார்

Written by lankamuslim

September 24, 2010 at 5:22 pm

இரண்டாவது பதவிக் காலம் முதலாவது பதவிக் காலத்தை விட பெரிதும் மாறுபட்டது ஜனாதிபதி

leave a comment »

ஐக்கிய நாடுகள் சபையின் 65ஆவது மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றுகையில் தமிழர்களின் வளமான வாழ்வுக்கு இலங்கையை தவிர வேறு நாடு சிறந்ததாக அமையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரித்துள்ளார். அத்துடன் பிரிவினைவாதம், குரோதம், மற்றும் வன்முறைக்கு துணை போகாதீர்கள் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான சவால்களை நாம் இனங்கண்டுள்ளோம். அதில் பாரிய சவாலாக இருப்பது எமது கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதாகும். இந்நிலையில் அதற்காக இவ்வருட முற்பகுதியில் கற்றுணர்ந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 24, 2010 at 5:20 pm

இஸ்ரேலின் இரகசிய அலுவலகம் இலங்கையில் ?

leave a comment »

M.ஷாமில் முஹம்மட்

இலங்கையில் இஸ்ரேலின் உத்தியோக பூர்வ அலுவலகம் ஒன்று இரகசியமாக இயங்கிவருவதாக தெரிவிக்க படுகின்றது கொழும்பில் இயங்கிவரும் அந்த அலுவலகம் இலங்கையில் இருந்து பணிப்பெண்களைச் இஸ்ரேலுக்கு அனுப்ப தேவையான விசா வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்க படுகின்றது பெயர் பலகைகள் அற்ற நிலையில் இயங்கும் இந்த அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இரு நாடுகளும் தங்களது தூதரக உறவுகளை 1970 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் முறித்துக் கொண்டன. இந்த நிலையில் 2000ஆண்டு முன்னால் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சிக் காலத்தில் வடக்கில் குறிப்பாக்க யாழ்ப்பாணத்தில் போர் உக்கிரமடைந்திருந்த நிலையில் இலங்கைக்கு வெளிநாட்டு உதவி தேவைப்பட்டது. அந்த காலப்பகுதியில் இந்தியா இராணுவ உதவியை நிராகரித்து விட்டதால் இஸ்ரேலுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள இலங்கை முடிவு செய்ததது. இதன் பிரகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதர் ஜான் டி சாரம் மற்றும் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் லெவி ஆகியோர் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் நியூயார்க் நகரில் கையெழுத்திட்டனர். உறவு புதுப்பிக்கப்பட்ட பின் இரு நாடுகள் சார்பில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கபட்ட கூட்டறிக்கையில், தூதரக அளவில் முதலில் உறவு ஏற்படுத்திக் கொள்ளப்படும். படிப்படியாக பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கபட்டது எனினும் உறவு புதுப்பிக்கப்பட்டாலும் கூட இப்போதைக்கு இரு நாடுகளும் தங்களது தூதரகத்தை அமைக்காது என்று கூறப்பட்டது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 24, 2010 at 10:24 am

பாபர் மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

leave a comment »

இந்தியாவில், மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்ககப்பட்ட பாபர் மஸ்ஜித்  பற்றிய தீர்ப்பு இன்று 24-9-2010 வெளியாக இருந்தது இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நிறுத்திவைக்குமாறு அலஹாபாத் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை ஒத்திவைக்குமாறு கோரி ஆர்.சி. திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனு மீது வரும் 28-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் பொதுநலன் கருதி, இந்தத் தீர்ப்பை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Written by lankamuslim

September 24, 2010 at 9:04 am

ஜனாதிபதி மஹிந்த துருக்கி ஜனாதிபதி அப்துல்லாஹ் சந்திப்பு

leave a comment »

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, துருக்கி ஜனாதிபதி அப்துல்லாஹ் குல் ஆகியோர் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது இலங்கையின் யுத்தத்துக்கு பின்னரான வீட்டு கட்டுமான பணிகளுக்கு துருக்கியின் உதவிகள் பெற்றுகொள்வது பற்றியும் கருத்துகள் பரிமாற்ற பட்டுள்ளது அதேவேளை, ஜமேக்கா பிரதமர் புரூஸ் கோல்டிங்கையும் ஜனாதிபதி நேற்றுச் சந்தித்துள்ளார்

Written by lankamuslim

September 23, 2010 at 11:37 am

புதுக்குடியிருப்பு முஸ்லிம்கள் படுகொலை நினைவு கூறப்படவில்லை

leave a comment »

1990 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் 21 ஆம் திகதி அம்பாறை புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த புலி பயங்கரவாதிகள்  15 அப்பாவி முஸ்லிம் மக்களை சுட்டும் வெட்டியும் கொன்றதுடன் மேலும் 11பேர் படுகாயமடைந்தனர் இந்த சம்பவம் நேற்று முன்தினம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் நினைவு கூரப்பட்டுள்ளது எனிலும் இந்த நிகழ்வு கிராம மட்டத்தில் நினைவு கூறப்படவில்லை அதேவேளை 1990 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் 21 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியில் முஸ்லிம் ஆயுதக்குழுவால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் 17 தமிழ் மக்கள் நேற்று உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டுள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 23, 2010 at 9:17 am

அம்பாறை முஸ்லிம் கரையோர மாவட்டம் பெற்றுத் தரப்படும் பசீர் சேகுதாவூத்

with one comment

ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சி காலத்தில் ஆகக் குறைந்தது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கரையோர மாவட்டத்தையாவது முஸ்லிம் காங்கிரஸ் பெற்று தரும் என்றும் முஸ்லிம் காணிகளைப் பறித்து பல்வேறு அநியாயங்களை மேற்கொண்ட புலிகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணக்க அரசியலை செய்துள்ள நிலையில் முஸ்லிம்களின் காணிகளை பறிக்காத ஜனாதிபதி மகிந்தவுடன் இணக்க அரசியலை மேற்கொள்வதில் என்ன பிழையிருகின்றது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் கூறியுள்ளார்.

மேலும் முஸ்லிம்களின் உயிருடன் விளையாடிய முஸ்லிம்களைக் கொலை செய்த யாழ்ப்பாணத்தியிருந்து முஸ்லிம்களை விரட்டிய முஸ்லிம்களின் காணிகளை அபகரிப்பு செய்த புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இணக்க அரசியலை செய்துள்ளது நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் இணக்க அரசியலை செய்துள்ளார் என்று எம்.எச்.எம்.அஷ்ரப் வபாத்தாகி அல்லது கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் கல்முனையில் நடைபெற்றுள்ள நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

September 23, 2010 at 9:00 am

நாளை பாபர் மஸ்ஜித் உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

leave a comment »

அயோத்திப் பாபர் மஸ்ஜித் பிரச்சனைக்கு நாளை 24ந் திகதி அலஹபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இத் தீர்ப்பின் காரணமாக கலவரம் ஏற்படலாம் என்ற அச்சம் பல தரப்பிலும் இருந்து வருகிறது இன்நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தீர்ப்பு எத்தகையதாக இருந்த போதும், அதனை அனைவரும் சட்ட வரையறை மதித்த நடக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது. இத் தீர்ப்பு முஸ்லீம்களுக்குச் சாதகமாக அமைந்தால், அதனை யாரும் கொண்டாடும் வகையில் செயற்படக் கூடாதெனவும், பாதமாக அமைந்தால், அது குறித்த சட்டரீதியான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும், அவ்வாறான நடவடிக்கைகளுக்கே ஆதரவு தர வேண்டும் எனவும் கேட்டுள்ளது. மேலும் இது விடயத்தில் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும், மேற்படி தீர்ப்பு நாளில் முஸ்லீம்களின் இஸ்லாமிய நிறுவனங்கள் தாக்கபடலாமென அஞ்சப்படுவதால், பாதுகாப்பினை பலப்படுத்துமாறு, உள்துறைச்செயலரிடமும், காவல்துறையிடமும் மனு மூலம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 23, 2010 at 8:55 am

இலங்கையில் புத்தசாசன நெறிமுறைச் சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டும்: ஜனாதிபதி

leave a comment »

இலங்கையில் புத்தசாசன நெறிமுறைச் சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டுமென, ஐக்கிய நாடுகளின் மிலேனிய இலக்குகள் தொடர்பான பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார் நியூயோர்க்கில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில் மூன்று தசாப்த கால யுத்தம், எதிர்பாராத இயற்கை அனர்த்தமாக வந்த சுனாமி போன்ற அழிவுகள், நாட்டின் பொருளாதார சமூகஅபிவிருத்தியினை வெகுவாகப் பாதித்திருந்த போதும், அபிவிருத்தி இலக்குகளை நோக்கி இலங்கை பயணிக்கத் தவறவில்லை. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான முக்கியத்துவத்தினை அளிப்பதன் மூலம் வளமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 23, 2010 at 8:50 am

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்

leave a comment »

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி தமிழ் பிரிவில் 192 புள்ளிகளை பெற்று கண்டி மாணவன் சுக்ரி முஹமட் ஷபீர் இரண்டாம் இடத்தையும், 190 புள்ளிகளை பெற்று வவுனியா விபுலானந்த வித்தியாலய மாணவன் யோகேஸ்வரன் பிரியநேசன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவின்படி தமிழ் பிரிவில் 193 புள்ளிகளை பெற்று கல்முனை தம்புலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மலவன் சுபதா முதலிடம் பெற்றுள்ளார். மேலும் வெளியாகியுள்ள முடிவுகளின்படி196 புள்ளிகளை பெற்ற பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய மாணவன் சனுஜ கல்யான் எதிரிசிங்க நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

Written by lankamuslim

September 22, 2010 at 6:54 pm

கரடியனாறு வெடிமருந்து வெடிப்பு – மக்கள் விடுதலை முன்னணி சந்தேகம்

leave a comment »

கரடியனாற்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி சந்தேகம் வெளியிட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ளார்.

கரடியனாறு பகுதியில் பலம்பொருந்திய அரசாங்கமொன்று பொருளாதார நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும், அதற்கு எதிராக மற்றுமொரு பலம்பொருந்திய அரசாங்கம் செயற்பட முனைவதாகவும் அனுரகுமார திஸாநாயக்க கூறினார். இந்தச் சம்பவம் பலம்பொருந்திய அரச சக்தியின் கையாட்களது செயற்பாடாக இருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

Written by lankamuslim

September 22, 2010 at 3:08 pm

மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம்செய்த பஸ் விபத்து

leave a comment »

ஆனமடுவ- சிலாபம் வீதியிலுள்ள முதலிக்குளம் பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஆனமடுவ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன இவ்விபத்தில் இரு ஆண்களும், இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர். மன்னார் எருக்கலம் பிட்டியைச் சேர்ந்த முஹம்மத் நசீர்  முஹம்மத் பஸ்ரி வயது 21, மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த எமலின் அலெக்ஸியா பெரேரா வயது 30 கிரேண்ட்பாஸைச் சேர்ந்த பெருமாள் வயது 65, வெள்ளையப்பா யுவமணி வயது 37 ஆகிய நால்வருமே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களென தெரியவருகின்றது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 22, 2010 at 2:42 pm

முல்லைத்தீவுச் செயலகத்தில் முஸ்லிம் பெண் கண்ணீருடன் இரகசிய சாட்சியம்

leave a comment »

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினரிடம் தமது காணாமற்போன, பிடித்துச்செல்லப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு 200 இற்கு மேற்பட்ட மக்கள் நேற்று முல்லைத்தீவுச் செயலகத்தில் கண்ணீருடன் சாட்சியம் அளித்துள்ளனர் இதில் முஸ்லிம் பெண் ஒருவர் கண்ணீருடன் இரகசிய சாட்சியம் அளித்துள்ளார் என்று அறியமுடிகின்றது நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு நேற்று முற்பகல் 11.30 மணிக்கு முல்லைத்தீவுச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது . முற்பகல் 10.30 மணிக்கு அமர்வு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் பெரும் எண்ணிக்கையான மக்கள் காலையிலேயே செயலகத்துக்கு வந்து விட்டனர். தாமதமாக அமர்வு ஆரம்பமானதால் நால்வரின் வாய்மூலச் சாட்சியங்களே பதிவு செய்யப்பட்டன. ஏனையோரிடம் மகஜர்கள் பெறப்பட்டன. மூவரின் சாட்சியங்கள் பகிரங்கமாகப் பதியப்பட்டன. தமது உடன்பிறப்புக்களை மீட்டுத்தரு மாறு கோரியே பெரும்பாலானோர் சாட்சி யம் அளித்துள்ளனர்

Written by lankamuslim

September 21, 2010 at 7:38 pm

ஜனாதிபதி நாட்டு தலைவர்களை சந்தித்து வருகின்றார்

leave a comment »

நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐ.நா.சபை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று ஈரான் ஜனாதிபதி மொஹமட் அஹமடி நிஜாட் மற்றும் நோர்வே நாட்டின் பிரதமர் ஜென்ஸ் ஸ்ரோல்ரென்பெர்க் ஆகியோரை சந்திக்கவுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கட்டாரிலிருந்து இலங்கைக்கு எல்.எம்.ஜி எரிவாயுவினை பெற்றுக்கொள்வது தொடர்பான சாத்தியக்கூறுகள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அந்நாட்டு தலைவர் அஷ்ஷெய்க் நவாட் பின் கலிபா அல் சானிக்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. மற்றும் கட்டார் நாட்டு வர்த்தகப் பிரமுகர்கள் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் லூசியன் ராஜகருணா தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

September 21, 2010 at 12:24 pm

கிழக்கில் மீள் கட்டுமான பணியில் முஸ்லிம்களுக்கு உரிய இடமளிக்கப்படவில்லை

leave a comment »

கிழக்கில் மேற்கொள்ளபட்டு வரும் மீள் கட்டுமான பணிகளில் முஸ்லிம்களுக்கு உரிய இடம வழங்க படாதது குறித்து முஸ்லிம்கள் கவலை கொண்டுள்ளதாக முஸ்லிம் சமாதன செயலகத்தின் முன்னால் பணிப்பாளர் அல்ஹாஜ் M.I.M முஹிதீன் கூறியுள்ளார் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் படிப்பினைகள் தொடர்பான நல்லினக்க ஆணைக் குழுவின் முன் சாட்சிய மளிந்த இவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்த வற்றில் முக்கியபகுதி இங்கு உங்கள் பார்வைக்கு நல்லினக்க ஆணைக் குழுவின் பதிவுகளுக்கான கால வரயறையை 1987 ஆம் ஆண்டி இருந்து தொடங்கப்படவேண்டும் தற்போதைய கால வரயறை முஸ்லிம்களின் பிரச்சனைகளை பதிவு செய்யபோதாது என்றும் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றியும் அதன்போது அரச தரப்பும் புலிகளும் முஸ்லிம் பொதுமக்களை கருத்தில் கொள்ளாது நடந்து கொண்டமை பற்றியும் , மூதூர் மட்டுமின்றி வாழைச் சேனை பொத்துவில், கிண்ணிய போன்றபகுதிகளிலும் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களை செய்தார்கள் ஆனால் இதனை தடுத்து நிறுத்த அரச படைகள் போதிய அக்கறை காட்டவில்லை விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 21, 2010 at 10:35 am

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையில் வேண்டுகோள்

leave a comment »

இலங்கை முழுவதிலும் உள்ள ஆலிம்களை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கேட்டு வருகின்றது இது வரையில் இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் 3000 க்கும் அதிகமான ஆலிம்கள்- மார்க்க அறிஞர்கள் உறுப்புரிமையை பெற்றுள்ளார்கள் அவர்களுக்கு அங்கீகாரம் பெற்ற விசேட அடையாள அட்டைகள் வழங்கபட்டுள்ளது உறுப்புரிமைக்கு விண்ணப்பித்த இன்னும் பல ஆயிரம் ஆலிம்களின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றது, விண்ணப்பங்களை  ஜம்மியத்துல் உலமா சபை மாவட்ட கிளைகளில் பெற்றுக்கொள்ளமுடியும்.

இலங்கை முஸ்லிம்களின் மார்க்க விவகாரங்களை கையாள்வதில் இலங்கை முஸ்லிம்களால் அங்கீகாரம் பெற்ற பலம் பொருந்திய சபையாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை விளங்குகின்றது என்பதும் இலங்கை முஸ்லிம்களின் 98% வீதமான முஸ்லிம்களின் ஆங்கிகாரம் பெற்ற மிகவும் பழமையான நிறுவனம் இது என்பது குறிபிடத்தக்கது இதன் தற்போதைய தலைவராக அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி செயல்பட்டு வருகின்றார்.

Written by lankamuslim

September 20, 2010 at 8:49 pm

கிண்ணியாவில் இடிமின்னல் தாக்கி மாணவன் வபாத்

leave a comment »

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் கிண்ணியா மத்திய கல்லூரியில் தரம் 9ல் கல்விபயிலும் காக்காமுனையை பிறப்பிடமாகக் கொண்ட என்.முகம்மது நிக்லாஸ் என்ற 14 வயதுடைய மாணவன் மின்னல் தாக்கி வபாத்தகியுள்ளார் இது பற்றி தெரிய வருவதாவது கடந்த ஞாயிறுமாலை கிண்ணியா மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் உதைபந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில கடும் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தவேளை இவ் அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Written by lankamuslim

September 20, 2010 at 12:35 pm

அமைச்சர் றிசாத் பதியுதீன் ஈரான் வர்த்தக துறை அமைச்சர் கலாநிதி மெஹ்தி சந்திப்பு

leave a comment »

இலங்கை – ஈரான் இணைந்த பொருளாதார மற்றும் வியாபார கூட்டுறவு செயற்குழு கூட்டத்தை முடித்து கொண்ட ஈரான் நாட்டின் வர்த்தக துறை அமைச்சர் கலாநிதி மெஹ்தி ஹஸன்தரி மற்றும் ஈரானிய வர்த்தக பிரதிநிதிகள் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து உரையாடியுள்ளனர் ஈரானிய வர்த்தக அமைச்சர்அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நினைவு சின்னமொன்றை வழங்குவதை காணலாம். இலங்கை – ஈரான் இணைந்த பொருளாதார மற்றும் வியாபார கூட்டுறவு செயற்குழு கூட்டம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் கடந்த – 14-15 திகதிகளில் நடைபெற்றது இதன்போது இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் முக்கிய 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

September 20, 2010 at 12:30 pm

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு வெளியாகவுள்ளநிலையில் தில்லியில் சுற்றுலாப் பயணிகள் சுடப்பட்டனர்

leave a comment »

இந்தியத் தலைநகர் தில்லியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் தாக்கியுள்ளனர். தில்லியின் பிரபலப  ஜமா மஸ்ஜித்தின் வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது துப்பாக்கிதாரிகளின் தாக்குதலில் தாய்வான் நாட்டை சேர்ந்த   இருபது, இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் இருவர் காயடைந்துள்ளனர்.

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த நூற்றாண்டு கால  பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் 1992ஆம் ஆண்டு  ஹிந்து பயங்கரவாத  அமைப்புகளால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது. சுமார் 450 ஆண்டுகால பழமைவாய்ந்த இப்பள்ளிவாசல் இருக்கும் இடம் இந்துக் கடவுளான ராமர் பிறந்த இடம் என்றும், எனவே அவ்விடம் தங்களுக்கே சொந்தம் என்றும் கூறி, கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 24.09.2010 அன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது. இந்த வழக்கு முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையும் நிலை இருப்பதால் ஹிந்து பயங்கரவாத  அமைப்பு கள் பாரிய இன படுகொலை ஒன்றை இந்திய முழுவதும் செய்ய தட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியானமையும்  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தில்லியில் இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளமையும் குறிபிடத்தக்கது

Written by lankamuslim

September 20, 2010 at 8:49 am

பிபிசி ஊடகத்திற்கு தடை விதிக்கப் படவில்லை

leave a comment »

கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் தற்போது பொதுமக்கள் முன்னிலையில் நடக்கின்றன , குறிப்பிட்ட இந்த விசாரணைகளுக்கு பிபிசி செய்தியாளர்கள் வந்து செய்தி சேகரிக்க அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. மறுப்புக்கு காரணம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை
என்று பிபிசி  தெரிவித்திருந்தது இது பற்றி நல்லிணக்க ஆணைக்குழு தெரிவிக்கையில் பிபிசி ஊடகத்திற்கோ, வேறு ஊடகங்களுக்கோ நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் கலந்து கொள்ள தடைவிதிக்கவில்லை என ஆணைக்குழுவின் ஒருங்கமைப்பு செயலாளர் ஏ.ஜி.குணவர்த்தன தெரிவித்துள்ளார்

இதேவேளை தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலைய ஆணையாளர் லக்ஷ்மன் உலுகல்லவும் ஊடகங்களுக்கு எதுவித தடையும் விதிக்கபடவில்லை எனவும் தேவையாயின் நேரில்சென்று அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

September 19, 2010 at 9:36 am

வந்தாறுமூலை அகதிகளும் வந்தாறாத மன வடுக்களும் !

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்

“உலகத்தில் நாட்டில் சமூகத்தில் மனிதர்கள் படும் துயரை நினைத்து இரங்கி ஒரு துளி கண்ணீர் உன்னிடம் வராவிடின்;; எதற்காக நான் பாடிகொண்டிருக்கிறேன். என் பாடல் உன்துயரை துடைக்காது மேலும் மூட்டி விடுமாயின் நான் பாடாமல் ஊமையாக இருந்து விடுகிறேன்” குணதாச கபுகே (மறைந்த பிரபல சிங்கள பாடகர்)

1990 ஆம் ஆண்டு போர்ச் சூழலின் காரணமாக பாதுகாப்பு கருதி   மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில்  தமிழ்  குடும்பங்களின் 174 இளைஞர்கள் அவ்வாண்டு  செப்டெம்பர் 5 ஆம் திகதியும் 23ம் திகதியும்  சீருடை அணிந்தவர்களால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. இச்சம்பவங்களின் நினைவாக சென்ற ஐந்தாம் திகதி இருபது ஆண்டு நிறைவு நிகழ்வு  மத வழிபாடுகளுடன் இடம்பெற்றன என்ற செய்தி பல ஊடகங்களில் வெளிவந்தது. அவ்வாறு கடத்தி செல்லப்பட்ட குடும்பத்தினரில்  சிலர் இன்றும் தமது குடும்பத்தில்  கடத்திசெல்லப்பட்டவர்கள் உயிருடன் இருப்பதாக நம்புவதாகவும் வேறு சிலர் அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்பும் காலம் கடந்துவிட்டதாகவும் துயரத்துடன் சொன்ன வார்த்தைகள் இரு தசாப்தங்கள் கடந்துவிட்டபோதும் குடும்ப உறவுகளின் அசம்பாவித  இழப்புக்கள் ஆறாத துயராக அக்குடும்பத்தினரை வாட்டிவருவதை கோடிடிட்டு காட்டுகிறது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 19, 2010 at 8:53 am

புத்தளத்தில் 560 வறிய குடும்பங்களுக்கு வீடுகள் !

leave a comment »

புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 294 குடும்பங்களுக்கு உலக வங்கி நிதியில் வீடுகள் அமைப்பதற்கான முதல் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று கல்பிட்டி சியாப் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது

முன்னால் மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முயற்சியால் வட மாகாணத்தில் இருந்து புலிகளால் வெளியேற்ற பட்டு  புத்தளத்தில் வசிக்கும் முஸ்லிம்ளுக்கு உலக வங்கியின் உதவியுடன் வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்க பட்டபோது  ,  முன்னால்  பிரதி அமைச்சர் பாயிஸ் ஆகியோரின் முயற்சியால் புத்தளம் தேர்தல் தொகுதியில் வாழ்ந்து வரும் மிகவும் வறிய குடும்பங்களுக்கும் வீடுகளை நிர்மாணித்து வழங்க உலக வங்கி இணங்கியது இதன் பிரகாரம் 600 வீடுகளை புத்தளம் மாவட்டம் புத்தளம் தேர்தல் தொகுதியில் இருக்கும் மிகவும் வறிய குடும்பங்களுக்கு நிர்மாணித்து கொடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 18, 2010 at 6:11 pm

புத்தளம் மாவட்ட அபிவிருத் கூட்டம் முஸ்லிம் பிரதிநிதிகள் இன்றி நடைபெற்றுள்ளது

leave a comment »

புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசு 726 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய ஜனாதிபதியின் ஆலோசகரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளியன்று (17.09.2010) புத்தளம் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்தின, மஹிந்த யாப்பா அபேவர்தன, மில்ரோய் பர்னாந்து, தயாசித்த திசேரா, பிரதி அமைச்சரான நியூமல் பெரேரா, பாராளு மன்ற உறுப்பினர் விக்டர் என்டனி பெரேரா மற்றும் மாகாண சபை அமைச்சர் சனத் நிஸாந்த உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் இங்கு புத்தளத்தை பிரதிநிதித்துவ படுத்த எந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த பொது தேர்தலிலும் தெரிவு செய்யப்படாமையால் முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடதக்கது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 18, 2010 at 4:59 pm

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் எம்.டி.எம் ஜிப்ரி வபாத்தானார்

leave a comment »

எம்.டி.எம் ஜிப்ரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவரம்-The University Grants Commission -ஸ்ரீ ஜெயவர்தன் புர பல்கலைகழகத்தின் விஞ்ஞானத்துறை   முதுநிலை   பேராசிரியரும்  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 8 உறுபினர்களை கொண்ட கற்று   கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினரும் ஆவார்   இவர் இன்று அதிகாலை சிறிய சுகவீனத்தின் பின்னர் வபாத்தானர் – இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்- என்று அறிவிக்க பட்டுள்ளது  இவர் ஒரு சிறந்த ஓவியர் என்பதும் குறிபிடத்தக்கது.

பேராசிரியர் ஜிப்ரியின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு தெஹிவளை ஜும் ஆ பள்ளிவாசலில் உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். இவர்  மாத்தறையை பிறப்பிடமாகக் கொண்டவர் இவர் வபாத் தாக்கும்போது இவருக்கு இவருக்கு 62 வயது என்று தெரிய வருகின்றது Video n Pictures Read the rest of this entry »

Written by lankamuslim

September 17, 2010 at 5:24 pm

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்

leave a comment »

இணைப்பு-2

மட்டக்களப்பு கரடியனாறு இன்று காலை 11.30 அளவில் ஜும்மாஹ் தொழுகைக்கு சற்று முன்னர் கரடியனாறு போலீஸ் நிலையத்தில் களஞ்சியப் படுத்தி வைக்கபட்டிருந்த சீனா கட்டிட நிர்மான பணியாளர்களின் வெடிமருந்துகள் வெடித்ததில்  62 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாகவும் 100 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன போலிஸ் நிலையம், அதிரடி படை முகாம், கமநல சேவைகள் நிலையம் என்பனவும் முற்றாக சேதமடைந்துள்ளது என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன உயிரிழந்தவர்களில் இரண்டு சீன பிரஜைகளும் ஏராவூரை சேர்ந்த ஐயூப் கான் என்ற பொலிஸ் உத்தியோகர்தவரும் அடங்குவதாகவும் அறிய முடிகின்றது

பிந்திய செய்தி சற்று முன்னர் வரையும் 27 உடல்கள் மாத்திரம் சிதைந்த பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. படங்களை பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 17, 2010 at 4:13 pm

வன்னியில் மீள் குடியேறும் முஸ்லிம் குடும்பங்களுக்கு 6000 வீடுகள்

leave a comment »

வன்னியில் மீள் குடியேறும் முஸ்லிம் குடும்பங்களுக்கு 6000 வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வன்னி பிரதேச முஸ்லிம்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்து உரையாடியபோது மீள் குடியேறும் முஸ்லிம் குடும்பங்களுக்கு 6000 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார் இதேவேளை வன்னியில் முஸ்லிம்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முஸ்லிம் இராணுவ உயரதிகாரியான மேஜர் ஸாகிர் என்பவரை அரசாங்கம் நியமித்துள்ளது என்றும் 1990ஆம் ஆண்டு 24 மணித்தியால அவகாசத்தில் புலிகளால் வெளியேற்றபட்ட வட மாகாண முஸ்லிம்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாகவும் தற்போது வன்னியில் முஸ்லிம் பிரதேசங்களில் வளர்த்துள்ள காடுகளை வெட்டி அகற்றும் வேலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

September 17, 2010 at 3:13 pm

தமிழ் தின போட்டியில் ஹிஜாபை கழட்டிய முஸ்லிம் பாடசாலை

with one comment

எம் .அனஸ்
அண்மையில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டியில் தமிழ் மக்களின் பண்பாட்டை வெளிப் படுத்தும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் அநுராதபுரம் முஸ்லிம் ஹில்மில்லாவ முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் பாடசாலை உடையான ஹிஜாப் உடைகளை தவிர்த்த நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர் ஒரு முஸ்லிம் பாடசாலை நிர்வாகம் இஸ்லாமிய முன்மாதிரிகளை புறக்கணித்து நடைபெற்ற போட்டிகளில் மாணவிகளை அனுமதிதுள்ளமை பெரிதும் விமர்சிக்க படுகின்றது இந்த நிலையில் இந்த பாடசாலை வடமத்திய மாகாணத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 17, 2010 at 10:45 am

உள்ளூராட்சித் தேர்தல் முறையின் உத்தேச மாற்றம் முஸ்லிம் காங்கிரஸ் ஆராய்ந்து வருகின்றது

leave a comment »

உள்ளூராட்சித் தேர்தல் முறையின் உத்தேச புதிய மாற்றங்கள் அடங்கிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கபடவுள்ளது புதிய உள்ளூராட்சி சபைகள் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது இந்த உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் தொடர்பான விடையங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங் கிரஸ் ஆராய்ந்து வருகின்றது.

இதில் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான, சாதகமான விடயங்கள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் பேசும் என்றும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கபடவுள்ளது என்றும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றதேர்தல் புதிய நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் என்றும் அறிய முடிகின்றது

அது பற்றி சாதகமான கருத்துகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் 18வது அரசியல் அமைப்பு மாற்றத்துக்கு தமது ஆதரவை அரசுகுக்கு வழங்க முன்னர் தெரிவித்தமை குறிபிடத்தக்கது அவர் இது பற்றி தெரிவித்துள்ளதாவது உள்ளூராட்சித் தேர்தல் முறையின் உத்தேச மாற்றங்கள் சிறுபான்மை மக்களுக்கு நம்பிகை யூட்டுவதாக அமைந்துள்ளது, உள்ளூராட்சித் தேர்தல் முறையில் பழைய வட்டார முறையும், விகிதாசார முறையும் உள்ளடக்கிய விதத்தில் தேர்தல் முறையை மாற்றவும், இரட்டை அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்குவதற்கும் அரசாங்கம் முன்வந்திருப்பது சிறுபான்மை சமூகங்களுக்கு நம்பிகையூட்டுவதாக அமைந்துள்ளது என்று கூறியமை குறிபிடத்தக்கது

Written by lankamuslim

September 17, 2010 at 9:32 am

ஓ மரணித்த வீரனே உன் ஆயுதங்களை எனக்கு தா

with 5 comments

M.ஷாமில் முஹம்மட்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் வபாத்தாகி அல்லது கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளது இவர் 2000 ஆம் ஆண்டில் உலங்கு வானூர்தி ஒன்றில் பயணிக்கும் போது வபாத்தானார்.

இவர் 1986.11.29 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம் சமூக நிறுவனத்தை ஒரு அரசியல் கட்சியாக பிரகடனம் செய்து வைத்தார்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் வளர்ச்சி ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களின் எழுச்சியாகத்தான்  பார்க்க படுகின்றது சரணாகதி அரசியலுக்கு பதிலாக பேரம் பேசும் அரசியல் பலத்தை முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு பெற்று கொடுத்தது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் வேறு எந்த முஸ்லிம் வாதிகளும் செய்ய தயங்கிய விடையங்களை அஷ்ரப் துணிவுடன் நடத்தியபோதும் பாராளுமன்றத்தில் அல் குர்ஆன் வசனங்களை முழங்கி இஸ்லாமிய அரசியல் தோற்றத்தை முஸ்லிம் சமூகத்தினுள் காட்ட முற்பட்ட போதும் முஸ்லிம் மக்களின் மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்ற ஒரு முஸ்லிம் தலைவன் என்ற அந்தஸ்தைப் எம்.எச்.எம்.அஷ்ரப் பெற்றுக்கொண்டார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 16, 2010 at 10:46 am

புலிகளுக்கு உதவிய முஸ்லிம் நபர் கைது ?

leave a comment »

புலிகள் அமைப்பு கடந்த காலத்தில் கொழும்பு நகரில் மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவி, ஒத்தாசைகளை வழங்கி வந்த முஸ்லீம் என்று தெரிவிக்கபடும் நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இந்த சந்தேகநபர் கொழும்பு பாலத்துறை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைதுசெய்யப்படும்போது அவரிடம் இருந்து கைக்குண்டும் மீட்கப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். கொழும்பு நகர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 20ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by lankamuslim

September 15, 2010 at 8:35 pm

ஹஜ் முகவர் நிலையங்களுக்கு எதிராகக் கடும் எச்சரிக்கை

leave a comment »

இம்முறை புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்பவர்களின் பாதுகாப்புத் தொடர்பாக உரிய கவனம் செலுத்தத் தவறும் முகவர் நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பிரதமர் டி எம் ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஹஜ் யாத்திரையை மேற்கொள்பவர்களுக்கான சேவைகளை வியாபார நோக்கத்தில் முன்னெடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனித ஹஜ் யாத்திரைக் குழுவினரை அனுப்பிவைக்கும் நடவடிக்கையைச் சிலர் வர்த்தக நோக்கத்திற்காக மட்டுமே மேற்கொள்ள முயற்சிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அது குறித்துக் கவனம் செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 70 ஹஜ் யாத்திரை முகவர் நிறுவனங்கள் குறித்துத் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

September 15, 2010 at 8:12 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers