இலங்கைப் பெண்ணைத் துன்புறுத்திய தம்பதியர் கைது
இலங்கை பணிப்பெண் மீது 24 ஆணி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் 35 வயதாகிய ஆணையும் 29 வயதாகிய அவரது மனைவியையும் சவுதி அரேபியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட்ட தம்பதியினர் தமது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிகின்றன
கடந்த 28 ஆம் திகதி பாதிப்புக்குள்ளாகிய பெண் மணிக்கு நியாயத்தினை பெற்றுத்தருமாறு இலங்கைத் தரப்பு, சவுதி அரேபியாவிடம் வேண்டியமை குறிப்பிடத்தக்கது.










