Archive for August 1st, 2010
ஜனாதிபதி இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரின் கூற்று பற்றி விசாரிக்க உத்தரவு ?
பலஸ்தீனர்கள் பேச்சுவார்த்தையை நிராகரித்தால் யுத்தத்தை இஸ்ரேல் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் ஹமாஸ் இலங்கையில் LTTE போன்ற பயங்கரவாத அமைப்பு என்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் டொனால்ட் பெரேரா கருத்துத் தெரிவித்தமை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவத்துள்ள கருத்துகள் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி தனக்கு அறிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல் . பீரிசிசுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது
அதே வேளை பலஸ்தீனம் தொடர்பான இலங்கையின் நிலைபாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை யென்றும் தூதுவரின் கருத்தைக் கேட்டுத் தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர் அல் அகாவிடம் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் வெளியானமை குறிபிடத்தக்கது விரிவாக பார்க்க Read the rest of this entry »








