Lankamuslim.org

One World One Ummah

Archive for August 2010

ஹஜ் முகவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய நூல் தயாரிக்கபடுள்ளது

leave a comment »

ஹஜ் முகவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய நூல் ஒன்று தயாரிக்கபடுள்ளது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய ஹஜ் முகவர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய நூலை தயாரிப்பதற்காக சட்டத்தரணி என்.எம்.சஹீட்டை ஹஜ் குழு தலைவர் அலவி மெளலானா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நியமித்திருந்தார் என்று தகவல்கள் தெரிவிகின்றன

இவ்வழிகாட்டி நூலில் ஹஜ் முகவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் எவ்வாறு அமைய வேண்டும், ஹஜ் முகவர்களாக செயற்படுவதற்கு எவ்வாறான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும், ஹஜ் விவாகாரம் தொடர்பில் ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய விவகார திணைக்களம் எவ்வாறு செயற்பாட வேண்டும்விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 31, 2010 at 2:13 pm

மேர்வின் சில்வா குற்றம் அற்றவர் என அறிக்கை

leave a comment »

சமுர்த்தி ஊழியர் முஹமட் நிசாம் என்பவரைமரத்தில் கட்டியது தொடர்பாக மேர்வின் சில்வா மீது விசாரணை நடத்த லங்கா சுதந்திர கட்சியினர் நியமித்த குழு அவர் குற்றம் அற்றவர் என தெரிவித்துள்ளது என்று செய்திகள் தெரிவிகின்றன.

முன்னாள் பெருந் தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் மேர்வின் சில்வா சமுர்த்தி அதிகாரியை மரத்தில் கட்டியதாக கூறப்படுவதற்கு எதுவிதமான ஆதாரமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வேலையினை சரிவர செய்யாதவருக்கு வழங்கும் தண்டனை இவ்வாறு அமையுமென அதிகாரியின் அனுமதியுடன் தான் உதாரணம் ஒன்றை செய்து காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் குற்றம் அற்றவர் என குறிப்பிட்ட குழு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்பித்துள்ளது என அமைச்சர் மைதிரிபால சிறி சேன தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

August 31, 2010 at 1:54 pm

இலங்கைப் பெண்ணைத் துன்புறுத்திய தம்பதியர் கைது

leave a comment »

இலங்கை பணிப்பெண் மீது 24 ஆணி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படும் 35 வயதாகிய ஆணையும் 29 வயதாகிய அவரது மனைவியையும் சவுதி அரேபியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட்ட தம்பதியினர் தமது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிகின்றன

கடந்த 28 ஆம் திகதி பாதிப்புக்குள்ளாகிய பெண் மணிக்கு நியாயத்தினை பெற்றுத்தருமாறு இலங்கைத் தரப்பு, சவுதி அரேபியாவிடம் வேண்டியமை  குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

August 30, 2010 at 6:17 pm

எல்லை மீள் நிர்ணயக் குழுவுக்கு 1500 மகஜர்கள் கிடைத்துள்ளன

leave a comment »

எல்லை நிர்ணயக் குழு புதிதாக பிரதேச செயலாளர் பிரிவுகள் கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகள் போன்றவற்றை புதிதாக உருவாக்க உருவாக்கப்பட்ட எல்லை மீள் நிர்ணயக் குழு பொது மக்களுடமிருந்தும் சமூக அமைபுகளிடமிருந்தும் 1500 மகஜர்களை பெற்றுக்கொண்டுள்ளது

ஏற்கனவே இக்குழுவானது மாவட்டச் செயலாளர்கள், பிரதேசச் செயலாளர்கள் மற்றும் கிராமசேவகர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் அவர்களது ஆலோசனைகளையும் பெற்று வருகிறது. அத்துடன் முக்கிய அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிடமிருந்தும் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 30, 2010 at 1:03 pm

W.I.C.S- சர்வதேச இஸ்லாமிய அழைப்பு சமுகத்தின் ஆய்வுச் சுற்றுல்லா

leave a comment »

லிபிய அரசால் உருவாக்கப்பட்ட  சர்வதேச இஸ்லாமிய அழைப்பு  சமுகம் -World Islamic Call Society- என்ற அமைப்பின் இலங்கைக் கிளை வடமாகாணத்தில் முஸ்லிம்களின்  மீள்குடியேற்றம், அங்கு இருக்கும் மஸ்ஜிதுகள்   மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக வடமாகாணம் சென்றுள்ளனர் என்று அறிவிக்கபடுகின்றது .

இதன் போது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, நயினாதீவு, சாவகச்சேரி, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு அவர்கள் விஜயம் செய்துள்ளனர். யாழ்ப்பாணம் விஜயம் செய்த அந்த நிறுவனம்   யாழ் ஒஸ்மானியா  கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்து  அங்கு மீள்குடியேறிய வரும்  மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும்   வழங்கியுள்ளனர்.

Written by lankamuslim

August 30, 2010 at 12:17 pm

‘இருப்புக்காகப் பிரார்த்திப்போம்’ காங்கேயனோடையில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரம்

leave a comment »

இன்று வெளியடப்பட்டுள்ள இந்த துண்டுப்பிரசுரம் காத்தான்குடி காங்கேயனோடை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் முஸ்லிம் கிராம பிரச்சினையை எடுத்து காட்டுவதாக அமைத்துள்ளது.

ஆரையம்பதிக்கு மேற்கே உள்ள காங்கேயனோடைக்கும் மாவிலங்கத்துறைக்கும் இடையிலுள்ள காணியில் முஸ்லிம்களுக்கென ஒரு  மாதிரிக் கிராமத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இதனை உடனடியாக தடுக்குமாறு  அண்மையில் தமிழ் குழு ஒன்றினால் கிழக்கு மாகாண முதலமைச்சரை கோரும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது  இது தொடர்பில் பதிலளித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்ச முஸ்லிம் மக்களுக்கான மாதிரிக் கிராமம் அமைக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாதுவிரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 29, 2010 at 9:42 pm

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தீர்க்கமான சக்தியாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது ?

leave a comment »

இரண்டு வாரத்தில் புதிய அரசியலமைப் திருத்தங்கள்

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளு மன்றத்தில் சமர்பிக்கப்படும் என சிரேஷ்ட அமைச்சர் டினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இந்த வாரத்தில், புதிய திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவை ஆராய்ந்து அவற்றை ஜனாதிபதியிடம் அனுப்பிய பின்னர், அவற்றை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைகளுக்காக ஜனாதிபதி அனுப்பி வைப்பார் எனவும் அமைச்சர் டினேஷ் குணவர்தன கூறியுள்ளார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தீர்க்கமான சக்தியாக

அரசியலமைப்பு மாற்றம் மற்றும் ஜனாதிபதி பதவிக் கால நீடிப்பு ஆகிய விடயங்களில் அரசாங்கத்தை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது இதன் மூலம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் எதிர்பார்த்திருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் மிகவும் பலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது விரிவாக பார்க்க

Written by lankamuslim

August 29, 2010 at 12:11 pm

இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுதானம் பயான்கள் அடங்கிய இருவெட்டுகளை வெளியிட்டுள்ளது

leave a comment »

இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுதானம் நேற்று ஏற்பாடு செய்தவிசேட தேசிய இப்தார் நிகழ்ச்சியில்  மௌலவி ஸலாஹுத்தீன்  அவர்களினதும்  மர்ஹும் மௌலவி நியாஸ் அவர்களினதும் பயான்கள் அடங்கிய இருவெட்டுகளை வெளியிட்டுள்ளது.

மௌலவி ஸலாஹுத்தீன் கண்டி மௌலானா என்று அழைக்கபடுவதும் உண்டு கண்டி கல்ஹின்ன என்ற பிதேசத்தில் பிறந்த இவர் சிறந்த மார்க்க பிரச்சாரகரும்  எழுத்தாளருமாவார்   இவர் பல நூல்களை எழுதியுள்ளார் இலங்கையில் 1957ஆம் ஆண்டில் இருந்து எழுத்து பணியில் ஈடுபட்டு வரும் இவர் தமிழ், ஆங்கிலம்  சிங்களம் ஆகிய மொழிகளில்  நூற்றுக்கனக்கான  ஆக்கங்களை  வெளியிட்டுள்ளார்  இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுதானத்தின் ஆரம்பம் முதல் நிகழ்ச்சிகளை நடாத்தி வரும்  மௌலவி ஸலாஹுத்தீன் பல நாடுகளுக்கு பயணம் செய்து தனது இஸ்லாமிய பணியை செய்துள்ளார் இவரை பாராட்டி மதிபளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது இதில் பல அரசியல் , சமூக பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்

Written by lankamuslim

August 28, 2010 at 6:09 pm

இலங்கை வீட்டுப் பணிப்பெண் பற்றிய செய்திகளை Al-jazeera, Arab news சேவைகள் ஒலி ஒளி பரப்பி வருகின்றன

leave a comment »

சவுதி அரேபியாவில் கொடுமைகளுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கும்  இலங்கை  வீட்டுப் பணிப்பெண்ணின் உடலில் இருந்து 18 ஆணிகளையும் ஊசிகளையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர் தனது வீட்டு  எஜமான் அவற்றை உடலில் ஏற்றியதாக எல்.ஜீ.ஆரியவதி என்ற இந்த வீட்டுப் பணிப்பெண் கூறுகின்றார்

சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற இந்த சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட ஆணிகள் 2 அங்குலம் வரை நீளமானவை. இந்த துன்புறுத்தல் சம்பவம் குறித்து ரியாத்தில் உள்ள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இது பற்றி அல் ஜஸீரா Al-jazzera-அரபு மற்றும் ஆங்கில சேவைகள் , மற்றும் அரப் நியூஸ் -Arab News-சேவை என்பனவும் இந்த தகவல்களை பெற்று ஒலி ஒளி பரப்பி வருகின்றன Video விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 28, 2010 at 11:30 am

அரசுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும்

with one comment

அரசியலமைப்பு திருத்தத்திற்காக அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இன்று மாலை நடைபெற்ற கட்சியின் அதியுயர் பீடக் கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனிலும் அரசியலமைப்பு திருத்தம் தவிர்ந்த ஏனைய விடயங்களுக்கு அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பில் தாம்  தொடர்ந்தும் ஆலோசனைகளை செய்யபோவதாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதற்காக அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதன் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் எதிர்க் கட்சிகளின் கூட்டமைபிற்கு இடையிலான உறவில் எந்தவித பாதிப்பும் ஏற்பாடாது எனவும் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 27, 2010 at 9:51 pm

உலக முஸ்லிம்களில் செல்வாக்குமிக்க 500 பேர்களில் மூன்று இலங்கை முஸ்லிம்கள்

leave a comment »

THE 500 MOST INFLUENTIAL MUSLIMS என்ற Ebook முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது

ஜோர்தான் நாட்டை தளமாக கொண்டு இயங்கும் றோயல் இஸ்லாமிய தந்திரோபாய கற்கை நிலையம் – The Royal Islamic Strategic Studies Centre-என்ற அமைப்பு  இந்த வருடமும் 2010 உலக முஸ்லிம்களில் செல்வாக்குமிக்க  500 நபர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது இதில் மூன்று இலங்கை முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர்

இந்த அமைப்பு தனது முதலாவது ஆய்வு தொகுப்பை 2009 ஆம் ஆண்டு முதல் தடவையாக அறிமுகப்  படுத்தியது தற்போது வெளி வந்துள்ள பதிப்பு அந்த அமைப்பின் இரண்டாவதாகும் இதன்  2010 ஆண்டுக்கான பதிப்பில் முஸ்லிம்களில் செல்வாக்குமிக்க  500 நபர்களின் பெயர்களையும்    செல்வாக்கு மிக்கதாக கருதப்டும் நிறுவனங்கள் , அமைப்புகள் என்பன வற்றின் பெயர்களையும்  பதிவு செய்யதுள்ளது  இவற்றில் முதல் 50 நபர்கள் வரிசைப் படுத்த பட்டுள்ளார்கள் ஏனைய 450 நபர்கள் அமைப்புகள் வரிசைப்படுத்த  படவில்லை இந்த 500 நபர்களில் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 27, 2010 at 5:01 pm

மின்தடையென்றால் 1987 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள்

leave a comment »

மின்சார விநியோகம் தடைப்படும் சந்தர்ப்பங்களில் 1987 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிவிக்குமாறு இலங்கை மின்சார சபை பாவனையாளர்களைக் கேட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கம் தொடர்பாக முன்னரும் மக்களுக்கு அறிவித்திருந்தபோதிலும் அவர்கள் மின்சார சபையின் பிரதேச அலுவலகங்களுக்கே அறிவிப்பதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் வித்யா அமரபால தெரிவிக்கிறார்.

மின்சாரப் பாவனையாளர்கள் 1987 என்ற இலக்கத்தினூடாக அறிவிப்பதன் மூலம் மின்சாரத் தடைக்கான காரணம் மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய தீர்வு நடவடிக்கை போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Written by lankamuslim

August 26, 2010 at 2:31 pm

பொறியியலாளர் எம்.எம். ஏ. அப்துர்றஹ்மான் ஒரு சிறந்த இஸ்லாமிய போதகனாக

with 2 comments

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயலாளாரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம். எம். ஏ. அப்துர்றஹ்மான் அவ் இயக்கம் நடாத்திய இப்தார் நிகழ்வில் உரையாற்றும் போது இது ரமழான் காலம் என்பதால் நம் மத்தியில் ஆன்மீக உணர்வும் தேடலும் அதிகரித்து காணப்படுவது இயல்பானது, அதிலும் குறிப்பாக இது போன்ற நோன்பு திறக்கின்ற வேளைகளில் மிகைத்த ஆன்மீக உணர்வோடு இறைவனின் மன்னிப்புக்காகவும் அவனது நற்கூலிக்காகவும் நாம் ஆவல் கொணடிருப்பதும் இயல்பானதே. ஆனாலும் நம் மத்தியில் இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்கைத்திட்டம் என நாம் வாயாற் பேசிக்கொண்ட போதிலும் அதனை செயல்படுத்துவதில் அதிகம் அக்கறை காட்டுவதில்லை என தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய பொறியியலாளர் எம்.எம். ஏ. அப்துர்றஹ்மான்;  தொழுகை, நோன்பு , மற்றும் சுன்னத்தான வணக்க வழிபாடுகள் போன்ற ஆன்மீக நடவடிக்கைகள் மாத்திரமே நமது கடமைகள் என்றும் அவை மாத்திரமே இறைவனின் முழுமையான திருப்தியையும் நற்கூலியையும் பெற்றுக்கொள்வததற்கு போதுமானவை என்றும் நாம் துரதிஷ்ட வசமாக நம்பிக்கொண்டிருக்கிறோம் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 26, 2010 at 1:49 pm

ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் இன்று சந்தித்து பேசியுள்ளனர்

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாளை நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர் பீடத்தில் கலந்துரையாட வுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் ஜனதிபதியுடனான சந்திப்பு சாதகமாக அமைந்துள்ளது என்றும் தெரியவருகின்றது முஸ்லிம் சமுகத்துக்கு பாதகமில்லாத எந்த விடையத்தையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர் பீடம் எதிர்க்க போவதில்லை என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

August 25, 2010 at 10:50 pm

கொழும்பில் 66 ஆயிரம் குடும்பங்களை அகற்றும் நடவடிக்கை இடைநிறுத்தம்

leave a comment »

66 ஆயிரம் குடும்பங்களில் 45 ஆயிரம் தமிழ்க் குடும்பங்களும் 15 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களும் 6 ஆயிரம் சிங்கள குடும்பங்கள்

கொழும்பு நகரிலிருந்து 66 ஆயிரம் குடும்பங்களை அப்புறப்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்ட முன்னகர்வை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் இடைநிறுத்தி வைத்துள்ளார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினரின் ஆட்சேபனையையடுத்து தமிழ், முஸ்லிம் குடும்பங்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்த 66 ஆயிரம் குடும்பங்களை நகரிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்øகயை ஜனாதிபதி இடைநிறுத்தி வைத்ததாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தற்போது சேரி குடியிருப்புகளாக இருக்கும் வர்த்தக ரீதியாக அபிவிருத்தி செய்யப்படவேண்டிய பெறுமதிமிக்க காணியிலிருந்து குடும்பங்களை அகற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கான நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டிருந்தது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 25, 2010 at 12:08 pm

ஆரையம்பதி-காத்தான்குடி எல்லைப் பிரச்சினைக்கு எந்தவொரு சமூகத்துக்கும் பாதகமின்றித் தீர்வு

leave a comment »

முதலமைச்சர் சந்திரகாந்தன்

முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் அனைத்து மக் களும் கெளரவத்துடன் வாழும் நிலைமை இன்று உருவாக்கப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் வள நிலையத்தினை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற் கண்டவாறு கூறினார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தனின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண முதலமைச்சரின் உத்தர வின் பேரில் நெக்டப் திட்டத்தின் கீழ் இரண்டு கோடி ரூபா செலவில் மேற்படி நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. முத லமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சமூக ஒற்றுமை என்பது மிகவும் முக் கியமானது. ஆகவே சமூக ஒற்றுமை மேம்பாட்டை பாதிக்கும் நடவடிக்கையில் எவரும் ஈடுபடக்கூடாது. இதில் விழிப்பாக அனை வரும் நடந்துகொள்ளவேண்டும். சமூக வன்முறைகளிலிருந்து தங்களை பாது காத்துக்கொள்ள வேண்டும் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 25, 2010 at 12:07 pm

சவூதி அரேபியாவில் கடமையாற்றிய இலங்கைப் பணிப்பெண்ணின் உடலில் ஆணிகள்

leave a comment »

சவூதி அரேபியாவில் கடமையாற்றிய இலங்கைப் பணிப்பெண் ஒருவரின் உடலில் ஆணிகள் அடித்து மோசமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைப் பணிப் பெண்ணின் உடலில் 23 ஆணிகளை ஏற்றிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சவூதி அரேபிய அதிகாரிகள் வலியுறுத்தப்படுவர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார் .தான் பணிபுரிந்த வீட்டு எஜமான் இரும்பு ஆணிகளைச் சூடாக்கித் தனது உடலில் அடித்ததாக அவர் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்கு மூலம் மொழிபெயர்க்கப்பட்டு, இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக சவூதி அரேபிய அதிகாரிகளுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கையை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கண்டிப்பதாகவும், இவ்வாறான நடத்தைகளை சிவில் சமூகமொன்றிலிருந்து எதிபார்க்கவில்லை எனவும் இவ்வாறான செயற்பாடுகளை சகித்துக் கொள்ள முடியாது எனவும் கிங்கிஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

August 25, 2010 at 12:05 pm

ஜனாதிபதி ரவூப் ஹக்கீம் இன்று கண்டியில் முக்கிய பேச்சு !

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று கண்டியில் நடை பெற இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் அரசுடன் இணைவது தொடர்பாகவும் பேசவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீமுக்கும் ஜனாதிபதி க்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது இந்த சந்திப்பில் ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமை அங்கிருந்து அகற்றுவது தொடர்பாக ஜனாதிபதி சாதகமாக கருத்து தெரிவித்திருந்தார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் அரசுடன் இணையவேண்டும் என்ற அழுத்தம் கட்சி மட்டத்திலும் முஸ்லிம் சமூக மட்டத்திலும் அதிகரித்து வருவது குறிபிடத்தக்கது

Written by lankamuslim

August 24, 2010 at 1:19 pm

JRP மற்றும் MFCD நிறுவனங்கள் இணைந்து யாழ் முஸ்லிம் மீள்குடியேற்ற திட்டம்

leave a comment »

யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் களை மீளக்குடியேற்றுவதற்காக யாழ்ப்பாண மீளக்குடியேற்ற திட்டம் என்ற பெயரில் MFCD- Muslim Foundation for Culture & Development- நிறுவனம் மற்றும் JRP- Staring committee of Jaffna resettlement project என்ற நிறுவனமும் இணைந்து வேலை திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது

இந்த திட்டதினை பொது நிறுவனங்களுடன் இணைத்து முதற்கட்டமாக 550,000 ரூபா பெறுமதியான 100 வீடுகள் கட்டுதல், சேதமடைந்துள்ள 100 வீடுகளை புனர்நிர்மானம் செய்து கொடுத்தல், வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு உதவுதல், தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து முக்கியமான கற்கை நெறிகளை பயிற்றுவித்தல், சிறு முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் ஒஸ்மானியா கல்லூரியை புனர்நிர்மாணம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான நிகழ்ச்சியொன்று கடந்த 22 ஆம் திகதி கொழும்பில்  நடைபெற்றுள்ளது இந்நிகழ்வில் MFCD நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிராஜ் மசூர் தமது அமைப்பு யாழ்ப்பாண முஸ்லிம்களுக்காக மேற்கொள்ளவுள்ள செயல் திட்டம் தொடர்பில் விளக்கியுள்ளார் ,இங்கு JRP நிறுவனத்தின் தலைவர் வர்த்தக பிரமுகர் நியாஸ் அவர்களும் கலந்து கொண்துள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 24, 2010 at 10:49 am

இலங்கை அகதிகளுக்கு சாட்டையால் அடிக்கும் C-News

leave a comment »

இலங்கையில் இருந்து கனடாவுக்கு அகதிகளாக வந்தவர்கள் நிச்சயம் ஏமாற்றுக்காரர்கள் அல்லது புலிகளுடன் தொடர்புடையவர்களாகவே இருப்பார்கள் என சீ நியூஸ்- C-News -என்ற கனடிய இணையத்தளம் தனது ஆசிரியர் தலையங்கத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இலங்கை அகதிகள் விடயத்தில் கனேடிய அரசு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம் என தாமதப்படுத்தக்கூடாது’ என இவ் இணையத்தளம் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆவேசத்திற்கு காரணம், காலம் காலமாக, கனடாவில் அகதி அந்தஸ்த்து கோரி வரும் இலங்கையர்களில் 70 சதவீதமானோருக்கு மேற்படோர் இப்போது உல்லாசமாக மீண்டும் இலங்கை சென்று வருகின்றனர்.
அகதி அந்தஸ்த்து கோரும் போது இலங்கையில் அவர்களுக்கு இருந்த உயிர்அச்சுறுத்தல், குடியுரிமை கிடைத்த பின்னர் எங்கு செல்கிறதென்று தெரியவில்லை விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 23, 2010 at 4:19 pm

பர்தா, புர்கா பற்றி ஜாதிக ஹெல உறுமய கட்சி அமைச்சர் உதய கம்மன்பில

with one comment

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சட்ட ஆலோசகரும் அமைச்சருமான உதய கம்மன்பில பிரான்ஸ் முஸ்லிம்கள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பா தெரிவித்ததாக லங்காதீப பத்திரிகையில் வெளியான தகவலின் முஸ்லிம்கள், இஸ்லாமிய உடை பற்றிய முக்கிய பகுதிகள் இங்கு தரப்படுகினறது …. பர்தா அணிவதைத் தடை செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை …பிரான்ஸ் 2000 புர்கா அணியும் பெண்களுக்கு விடுதலை வழங்குவதாக கூறி 50 லட்சம் முஸ்லிம்களை பிரான்ஸ் பழி வாங்கியுள்ளது ….ஒருவர் தனது உடலை முற்றாக மறைபதற்கு விரும்பினால் அதற்கு சட்டம் மூலம் தடைபோடுவது பாரிய குற்றமாகும்….ஒரு நிறுவனத்தின் சீருடைக்கு பர்தாவோ , புர்காவோ அணிவது பொருத்தமற்றதாக இருப்பின் அவ்வாறான சீருடைக்கு பர்தா அணியக்கூடாது என்று கேட்பதற்கும், அவ்வாறான் தொழில்களுக்கு பர்தா அணிவோரை சேர்க்கா திருபதற்கும் உரிமையுண்டு...

…. பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்பது இஸ்லாம் உதயமாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னே இருந்து வந்துள்ளது பர்தாவிலிருந்து புர்கா வரை பல்வேறு முஸ்லிம் ஆடைகள் கடந்த காலத்திலிருந்து தற்காலதிற்கும் உரித்தாக இருப்பதோடு, சில நாடுகளில் எதிர்காலத்துக்கு உரித்தாகாது என மேற்கு நாடுகளில் இருந்து கிடைகும் தகவல்கள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது இங்கு பர்தா மற்றும் புர்கா என்ற வசனங்களை பயன்படுத்துவது குர் ஆன்- அர்த்தபடியன்றி சங்க மொழி வழக்கின் அடிபடையிலாகும் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 23, 2010 at 3:40 pm

நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகார வரம்புகளை விரிவாக்க ஜனாதிபதியுடன் பேச்சு

leave a comment »

இலங்கையில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தனியாக ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. ஜனாதிபதியால் அமைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின்- the Commission of Inquiry on Lessons Learnt-  முன்னர் சாட்சியம் அளிப்பது குறித்து தாம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றாலும், அந்தக் குழு குறித்து தங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளது என அதன் பொதுச் செயலர் ஹசன் அலி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு 2002 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை இடம் பெற்ற நிகழ்வுகளிலிருந்து தான் பாடம் கற்றுக் கொண்டு இணக்கப்பாடு ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளது என்று சுட்டிக்காட்டும் அவர், அதற்கு முன்னரான காலகட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்துவதாகவும் கூறுகிறார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 23, 2010 at 3:35 am

முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்த்தபட்ட வன் கொடுமைகளை முறையிட வழில்லை !!

leave a comment »

யுத்த காலப்பகுதியில்  முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பாரதுரமான அநீதிகள் கொடுமைகள் குறித்து முறையிடமுடியாதவகையில் மட்டுபடுத்தப்பட்ட கால வரையறைகளுடன் ஆரம்பமான நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பகதன்மை குறித்து சந்தேகபடவேண்டியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான   ஹசன் அலி தெரிவித்துள்ளார்

2002 ஆண்டு தொடக்கம் 2009 ஆண்டு வரை யான காலபகுதியில் இடம் பெற்ற சம்பவங்கள் குறித்தே நல்லிணக்க ஆணைக்குழு முறைபாடுகளை பதிவு செய்து வருகின்றது எனினும் 2002 ஆம் ஆண்டுக்கு முந்திய காலபகுதியில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான மிகவும் பாரதுரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன ஆனால் இவைகள் குறித்து முறைபாடுகளை உள்வாங்க முடியாதவகையில் குறுகிய கால  வரையறை யொன்றை நல்லிணக்க ஆணைக்குழு வரையறுத்ததன் மூலம் அதன் நம்பகத்தன்மை மற்றும்  அதன் நோக்கம் குறித்து மயக்கமும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 22, 2010 at 4:17 pm

மலேசியவாவிற்கான புதிய இலங்கைத்தூதுவராக அனுருத்த ரத்வத்த ?

leave a comment »

மலேசியவாவிற்கான புதிய இலங்கைத்தூதுவராக முன்னாள் இராணுவத்தளபதி அனுருத்த ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான பேச்சுவார்த்தை அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்டதாகவும், இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவின் உறவினரான அனுருத்த ரத்வத்தைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் மோசடி மனுவினை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.எனினும், இந்த மனுவை மீள் பரிசீலனை செய்யுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றில் மீளவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியானமை குறிபிடத்தக்கது இந்த வழக்குகள் விரைவில் வாபஸ் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதை அடுத்தே அவர் மலேசியாவிற்கான புதிய தூதராக நியமிக்கப்படலாம்  என்று செய்திகள் வெளியாகியுள்ளன விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 22, 2010 at 4:15 pm

புலிகளுக்கு சப்பைக்கட்டு கட்டிய சம்பந்த(னுக்கு)ம் முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்?

with one comment

எஸ்.எம்.எம்.பஷீர்

“முடிவில் நாங்கள் எங்களின் எதிரிகளின் வார்த்தைகளை அல்லாது, எங்களின் நண்பர்களின் மவுனத்தை ஞாபகத்தில் கொள்வோம்” -மார்டின் லூதர் கிங் -(“In the end, we will remember not the words of our enemies, but the silence of our friends.” -  Martin Luther King Jr.)

இருபது வருடங்களுக்கு முன்பு காத்தான்குடி பள்ளிவாசல்களில்  வணக்கதில் ஈடுபட்டுக் கொன்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் பொது மக்களை (  சிறுவர்கள் உட்பட ) புலிகள் கொன்றனர் என்பதை ஐயத்திற்கிடமின்றி தமக்கும் தெரிந்தும், இருபது வருடத்திற்கு பின்னர் “இன்று புதிதாய்  பிறந்து ” அறிந்தோம் என்பதுபோல் ஒரு வேடிக்கையான செய்தியினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸால்  ” தமிழ் பேசும் மக்களின் தலை மகன் ” என விருது வழங்கப்பட்ட தமிழரசுக் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன “திருவாய்” மல(ர்)ந்திருக்கிறார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 22, 2010 at 12:50 pm

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார்

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷவின் விசேட ஏற்பாட்டில் நோன்பு துறப்பதற்கான இப்தார் வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் கலந்துகொண்ட பெரும் திரளான உள்நாட்டுப் வெளிநாட்டு முஸ்லிம் பிரமுகர்கள் உட்பட பலர் இந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இங்கு ஜனாதிபதி கலந்து கொண்டவர்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார். மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மௌலானா இங்கு உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அயராத முயற்சியின் காரமான இன்று நாட்டில் அமைதி நிலவுவதாகவும் அதனால் இது போன்ற வைபவங்களை பெரும் சிரமங்களின்றி நடத்தக்கூடியாக இருப்பதாகவும் கூறிய அவர் இந்த இப்தார் ஏற்பாட்டுக்காக முஸ்லிம்கள் சார்பில் அவர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

Written by lankamuslim

August 21, 2010 at 9:12 pm

ஒலுவில் பிரதேச கடற்படை முகாமை அகற்ற ஜனாதிபதி நடவடிக்கை

leave a comment »

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருப்பது குறித்து  பிரதேச வாசிகள் மற்றும் மீனவர்களும் இரண்டு மாதங்களுக்கு முன்னர்  தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர் இதை தொடர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளார்.

இதன்போது ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமை அங்கிருந்து அகற்றுவதாக உறுதியளித்துள்ளார் இது தொடர்பாக பாதுகாப்பு செயலாளருடன் விரைவில் பேசி முகாமை அங்கிருந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் ஏற்கனவே ஜனாதிபதிக்கு இது தொடர்பாக கடிதம் மூலம் அறிவித்துள்ள போதிலும் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 20, 2010 at 2:20 pm

நூற்றாண்டுகால மஸ்ஜிதுகள் தொல்பொருள் இடங்களாகப் பிரகடனம்

leave a comment »

1815ஆம் ஆண்டுக்கு முற்பட்ட சகல முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் சமய ஸ்தாபனங்களைத் தொல்பொருள் இடங்களாக பிரகடனப்படுத்த தேசிய மரபுரிமைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசனையின்படி இவற்றை பட்டியல்படுத்தவுள்ளதாக தேசிய மரபுரிமை அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். மஸ்ஜிதுகள் இந்த பட்டியலில் இணைக்கபடுள்ளமை இதுதான் முதல் தடவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ஹீகீம் இது தொடர்பாக இலங்கையில் நூற்றாண்டுகள் பழமை பாய்ந்த மஸ்ஜிதுகள் இருகின்றன இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பலாங்கொடை தப்தர் ஜெய்லானியையும் அப்பட்டியலில் உள்ளடக்கும் படி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு பதிலளித்த தேசிய மரபுரிமை அமைச்சர் பவித்ராதேவி அதனை உடனடியாக மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்

இதன் பிரகாரம் வடக்கு கிழக்கில் உள்ள பல மஸ்ஜிதுளையும்  இந்த பட்டியலில் இணைத்து கொள்ளமுடியும் என்பது குறிபிடத்தக்கதுஇலங்கையில் முதன் முதலாக  நிர்மாணிக்கபட்டதாக கருத படும்  பேருவளை தர்கா நகரிலுள்ள அப்ரார் மஸ்ஜிதைச் சேர்த்துக் கொள்ளும் படி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Written by lankamuslim

August 20, 2010 at 2:15 pm

அப்துல் ரசூல் வபாத்தானார்

leave a comment »

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் இவர் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற 4 வது ஜனாதிபதி தேர்தலில் தராசு சினத்தில் அப்துல் ரஸ்ஸாக் அப்துல் ரசூல் என்ற பெயரில் போட்டியிட்டதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளரானார் என்ற பதிவை பெற்றுகொண்டார் 21.12.1999 இல் இடம்பெற்ற 4 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் தராசுச் சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி சார்பாகப் போட்டியிட்ட அப்துல் றசூல் 17,359 வாக்குகளை பெற்றிருந்தார்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்து பொது முன்னணியின் ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி இணைந்த கட்சிகளில் ஒன்றாக விளங்கியது. கடந்த பாரளுமன்ற தேர்தலில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக, இவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டார் இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை கொழும்பு -07 ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் இடம் பெற்றுள்ளது

Written by lankamuslim

August 20, 2010 at 2:00 pm

இந்த வருடம் ஏழு மாதங்களில் போதை பொருளுடன் தொடர்புடைய 23 ஆயிரத்து 306 வழக்குகள்

leave a comment »

போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக இவ்வருடத்தின் ஜுலை மாதம் வரையில் 23 ஆயிரத்து 306 வழக்குகள் தொடரப்பட்டதாக பிரதமர் டி. எம். ஜயரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வழக்குகள் மூலம் 850 இலட்சம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டிருப்ப தாகவும் பிரதமர் குறிப்பிட்டார். வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கடத்தி வரப்படுவதற்கு இங்குள்ளவர்களின் உதவி, ஒத்துழைப்பும் உள்ளன. அதனால் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிக பட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளிலும், சீனாவிலும் இக்குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

போதையூட்டும் ஒளடதங்கள் தொடர்பான ஒழுங்கு விதிகள் மற்றும் அவற்றின் பாவனையில் தங்கியுள்ளவர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வளிப்பது தொடர்பான கட்டளையின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 19, 2010 at 11:35 am

கையடக்க தொலைபேசியில் ஆபாச இணையத்தளங்களுக்கு தடை

leave a comment »

கையடக்க தொலைபேசி மூலமான ஆபாச இணையத்தளங்களைத் தடை விதிக்க   நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் ஆபாச இணையதளங்களை சிறுவர்கள் கையடக்க தொலைபேசி ஊடாக பார்ப்பதை தடை செய்யக் கோரி வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர்  இது பற்றி குறித்த  கையடக்க தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் இரு மாதங்களுக்கு முன்னர்  உத்தரவிட்டது   இது தொடர்பில்கையடக்க தொலைபேசி நிறுவனங்களான டயலொக், மொபிடல், ஹட்ச், எடிசலாட், எயாடெல் ஆகியனஆபாச இணையதள பாவனையை கையடக்கத் தொலைபேசியில் தடை செய்வதற்கு ஏற்கனவே இணக்கம்  தெரிவித்துள்ளன கையடக்க தொலைபேசியில் ஆபாச இணையதள பாவனை அதிகரித்து வருவதே இத்தடைக்கு பிரதான காரணம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர் இந்த தடை இன்று முதல் அமுலுக்கு வருகின்றது

ஆனாலும் இந்த தடை ஆபாச தளங்களை கையடக்க தொலைபேசியில் முழுமையாக தடுக்குமா என்பதை தடை நடைமுறைக்கு வந்த பின்னர் தான் கூறமுடியும் என்று சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

Written by lankamuslim

August 19, 2010 at 11:34 am

புத்தர் சாவிக்கொத்து விற்பனை செய்த இருவருக்கு சிறை

leave a comment »

இலங்கையில் புத்தரின் உருவம் பொறித்த சாவிகொத்துகளை விற்றதன் மூலம் புத்த மதத்தை அவமரியாதை செய்து விட்டதாக கூறி இரண்டு பேருக்கு நீதிபதி ஒருவர் சிறை தண்டனை விதித்துள்ளார்.

அபுபக்கர் கலாம் மற்றும் துவான் ரஜாப்தீன் என்ற இந்த இருவரும் பொலிஸாரால் நகரத்தின் மையப்பகுதியான பெட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை விசாரித்த கொழும்பு தலைமை நீதிபதி, தண்டனை சட்டத்தின் ஒரு பிரிவின் அடிப்படையில் மதத்துக்கு புனிதமான பொருளை இவர்கள் அவமரியாதை செய்து விட்டார்கள் என்று கூறி ஒராண்டுக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

இந்த தண்டனை இரண்டு ஆண்டு காலத்திற்கு பின்னர் தான் அமலுக்கு வரும். இவ்வாறான தீர்ப்புகள் இலங்கையில் அபூர்வம் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புத்த துறவிகளின் அதிகரித்து வரும் அரசியல் சக்தியை தொடர்ந்து, புத்த மதம் தொடர்பான அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பதில் மிகவும் கெடுபிடி காணப்படுவதாக ஒரு சிலர் கூறுகின்றனர் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 19, 2010 at 11:08 am

பல்கலைக்கழகங்களின் போதனா மொழி ஆங்கிலமாக்கப்படும்: எஸ். பி. திசாநாயக்க

leave a comment »

அடுத்தாண்டு முதல் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலுமுள்ள கற்கை நெறிகளில் 99 சதவீதமானவற்றின் போதனா மொழி ஆங்கிலமாக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேநேரம் இந்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளும் ஒழுங்கு விதிகளும் துரிதமாகத் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் எதுவும் இற்றை வரையும் இலங்கையில் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த 78 நிறுவனங்கள் முதலீட்டு சபையின் கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 26 நிறுவ னங்கள் தான் தற்போது இயங்குகின்றன. ஏனையவை இற்றை வரையும் செயற்பட வில்லை. இந்நிறுவனங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கற்கை நெறிகளை நடாத்தி பட்டம், டிப்ளோமா, சான்றிதழ்களை வழங்குகின்றன விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 19, 2010 at 11:07 am

முஸ்லிம் கிராமங்களில் முஸ்லிம் கிராம சேவகர்கள் இல்லை !!!

leave a comment »

ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் 186 கிராம சேவை அதிகாரி பிரிவுகள் அமைத்துள்ளது அவற்றுள் சுமார் மூன்றில் ஒரு பகுதி    கிராம   சேவை பிரிவுகள் முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கியதாகவே அமைத்துள்ளது நூறு சதவீதம் முஸ்லிம்களை கொண்ட சில பிரிவுகளில் கூட பெரும்பான்மை சமூகத்தவர்களே கிராம சேவகர்களாக கடமையாற்றி வருகின்றனர் இந்த நிலைமை காரணமாக முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டு வருகின்றது என்று அறியமுடிகின்றது கடந்த காலங்களில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் முஸ்லிம்களே கிராம சேவை அதிகாரிகளாக நியமனம் செய்யப்படவேண்டும் என்ற நிலை அங்கு நிலவியபோதும் தற்போது இது நடைமுறைபடுத்த படுவதில்லை என்று தெரிவிக்கபடுகின்றது

எனவே பிரதேச அரசியல் வாதிகள் மற்றும்  முஸ்லிம் சமுக  நலத்தில் அக்கறை கொண்ட அமைப்புகள்   இந்த விடையம் தொடர்பாக உடன் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று பிரதேச முஸ்லிம்கள் வலியுறுத்தியுள்ளனர்

Written by lankamuslim

August 18, 2010 at 12:07 pm

அரசாங்க காணிகளிலேயே இராணுவ முகாம்களை மீளமைத்துவருகின்றோம்

leave a comment »

வடக்கில் சிவில் நிர்வாகத்தை படிப்படியாக பொலிஸாரிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. ஆனால், வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை முழுமையாக அகற்ற முடியாது. இராணுவ முகாம்கள் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை போன்ற நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காணப்படுகின்றன. முக்கியமாக வன்னியில் காடு மற்றும் கடற் பகுதிகளுக்கு பாதுகாப்பு தேவைப்படுகின்றது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் வன்னியில் மக்களினதோ தனியாரினதோ காணிகளில் எக்காரணம் கொண்டும் இராணுவ முகாம்களையும் இராணுவ நிலையங்களையும் அமைக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை. அரசாங்க காணிகளிலேயே இராணுவ முகாம்களை மீளமைத்துவருகின்றோம். அதுவும் அரசாங்க கட்டடங்கள் உள்ள பகுதிகளிலும் இராணுவ நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 18, 2010 at 11:30 am

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் இணைந்து ஜனாதிபதியை கொல்ல முயன்றதாக வழக்கு

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்காக முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன்கூட்டுச் சேர்ந்து செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சரின் அனுமதியை கோருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மிக்கா சிங்கப்புலியிடம் தெரிவித்தனர்.

குற்ற புலனாய்வு பிரிவினரின் புலனாய்வு சுருக்க அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த விசாரணையை பொலிஸ் மா அதிபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வு பிரிவினரினர் ஆரம்பித்தனர் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 18, 2010 at 11:00 am

இலங்கையில் அமெரிக்க சிப்பாய்கள் புத்தளத்தில் இரண்டு இடங்களில் முகாம்

leave a comment »

அமெரிக்க இராணுவத்தின் விமான மற்றும் தரை படையை சேர்ந்த 40 சிப்பாய்கள் கொண்ட படைபிரிவு ஒன்று கடந்த 14 ஆம் திகதி இலங்கை வந்தடைதுள்ளது இவர்கள் மருத்துவ, மற்றும் பொறியியல் பயிற்சி நடவடிக்கைகளை இலங்கை அரசுடனும் மற்றும் மாலைதீவு, மொங்கோலிய நாட்டு மருத்துவ பிரதிநிதிகளுடனும் நடத்தவுள்ளனர் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

இவர்கள் Pacific Angel-Sri lanka- என்று பெயரைக்கொண்ட பிரிவினர் என்று தெரிவிக்க படுகின்றது புத்தளம், அனுராதபுரம் ஆகிய இடங்களில் இலவச மருத்துவம், மற்றும் பாடசாலை திருத்த வேலைகளை செய்து வருகின்றனர் இவர்களின் ஒரு அணியினரின் முகாம் புத்தளம் நகரில் பிஸ்ருல் ஹாபி மண்டபத்தில் நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 3 மணி வரை என்ற கால அட்டவணையில் இந்த இலவச வைத்திய முகாம் இடம் பெற்று வருகின்றது தொடர்ந்து ஆறு நாட்களுக்கு இது நடைபெறவுள்ளது என்று எமது புத்தளம் செய்தியாளர் தெரிவிக்கின்றார் அதே வேளை புத்தளம் புறநகர் பகுதி ஒன்றில் ஒரு பொறியியல் அணியும் பாடசாலை திருத்த வேலை ஒன்றை செய்து வருகின்றது இந்த அணியும் தொடர்ந்து ஆறு நாட்களுக்கு தமது பொறியல் பணியை செய்யவுள்ளது படங்கள் பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 17, 2010 at 5:23 pm

பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட மேன் முறையீட்டு நீதிபதி

leave a comment »

இலங்கையின் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளார் பிரதம நீதி அரசர் அசோக டீ சில்வாவால் இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது  என்று செய்திகள் தெரிவிக்கின்றது தமது வீட்டில் பணிபுரிந்த இலங்கையின் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த இளம் தமிழ் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் யுவதி பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டை நீதிபதி தமது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்துச்செய்துள்ளார் என்றும் இந்த நீதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தநிலையில் அந்த நீதிபதியின் நீதிமன்ற அமர்வுகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

Written by lankamuslim

August 17, 2010 at 11:22 am

போதுமான அரச உதவிகள் இன்றி தாமதமாகும் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்

leave a comment »

யாழ். மாவட்ட முஸ்லிம் குடும்பங்களின் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியுடன் யாழ். மாநகரசபை உறுப்பினர் மௌலவி சுபியான் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் கடந்த வியாழகிழமை  மாலை 4 மணியளவில் வடமாகாண ஆளுநரின் யாழ் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.  இந்த சந்திப்பில்  யாழ். மாவட்ட அரச அதிபர், யாழ். மாநகரசபை மேயர் ஆகியோரும் மற்றும் பல  அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்

இங்கு யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் , முஸ்லிம்களின் கல்வி குறிப்பாக ஒஸ்மானிய கல்லூரியின் புனர் நிர்மாணம் , மீள்குடியேறியுள்ள முஸ்லிம் குடும்பங்களின் வீட்டு பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேறியுள்ள தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் 500,00 ஆயிரம் ரூபா கொடுப்பனவு முஸ்லிம்களுக்கு வழங்கபடாமை தொடர்பாகவும்  கலந்துரையாடியுள்ளனர் வடமாகாணத்தில் மீள்குடியேறும் முஸ்லிம் குடும்பங்களுக்கு  எந்த கொடுப்பனவுகளும் வழங்கபடுவதில்லை என்பது குறிபிடத்தக்கது விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 16, 2010 at 3:33 pm

யாழ். முஸ்லிம் பகுதி யாழ். நகருக்குள் ஒரு பாழடைந்த நகராக இன்றும் தொடர்கின்றது

leave a comment »

Written by lankamuslim

August 16, 2010 at 3:32 pm

புனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் இலங்கைக்கு கிடைத்து வருகின்றது

leave a comment »

புனித ரமழான் நோன்பை  முன்னிட்டு மஸ்ஜிதுகளுக்கு விநியோகிப்பதற்கு பேரீச்சம் பழங்கள் இலங்கையை வந்தடைகின்றது நேற்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதராலயம் 32 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்களை கையளித்தது அதேவளை 15 மெற்றிக் தொன் பேரீச்சம்பழத்தை ஈரான் இலங்கை முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. பௌத்தசாசன அமைச்சுக்கு பொறுப்பான பிரதமர் டி.எம்.ஜயரத்ன சார்பாகப் பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன ஐக்கிய ராச்சியத்தின் தூதுவர் மஹ்முத் முஹமட் அல்மஹ்மூத் அவர்களிடமிருந்து அதைப்பெற்றுக்கொண்டார். முஸ்லிம் சமயவிவகார அமைச்சின் பணிப்பாளர் வை.எல்.எம். நவவி; அங்கு சமுகமளித்திருந்தார்

Written by lankamuslim

August 16, 2010 at 1:43 pm

எமது தாயகம் இனிமேல் வெளிநாடுகளின் “குப்பைகளை கொட்டும்’ இடமாக இருக்காது: ஜனாதிபதி

leave a comment »

எமது தாயகம் இனிமேல் வெளிநாடுகளின் “குப்பைகளை கொட்டும்’ இடமாக இருக்காது. மாறாக “மேட் இன் ஸ்ரீலங்கா” என்ற நாமத்தை உலகம் பூராவும் பறைசாற்றும் உற்பத்திகளை உருவாக்கும் பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றுவதே எமது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தியில் முன்னேறி வரும் வேளையில் அதனை சகிக்க முடியாமல் பலர் பொய்யான விமர்சனங்களை முன் வைத்து எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அம்பாந்தோட்டை மாகம்புறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுளள் துறைமுகத்துக்கு நீர் நிரப்பும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார் படங்களுடன் விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

August 16, 2010 at 1:42 am

கலாநிதி கிரிஸ்டோபர் .G. வீரமந்திரிக்கு ஜம்இய்யத்துல் உலமா தங்க பதக்கங்கள் வழங்கி பாராட்டியுள்ளது

leave a comment »

M.ஷாமில் முஹம்மட்

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரும்  முன்னாள் சர்வதேச நீதிமன்றத்தின் உபதலைவருமான கலாநிதி கிரிஸ்டோபர் .G. வீர மந்திரி ஆங்கிலத்தில் எழுதியுள்ள இஸ்லாமிய சட்ட முறைமை ஒரு சர்வதேச கண்ணோட்டம் – Islamic Jurisprudence: An International Perspective என்ற நூலை பாராட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கலாநிதி வீரமந்திரிக்கு விருது மற்றும் இரண்டு தங்க பதக்கங்களையும் வழங்கி பாராட்டியுள்ளது

இந்த நிகழ்ச்சி கடந்த கிழமை கொழும்பு இலங்கை கண்காட்சி ,மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது    இங்கு உரையாற்றிய அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி இந்த நூலை முழு உலகிற்கும் தெளிவு படுத்தும் நோக்குடன் நீதியரசர் துணிச்சலுடன் மேற்கொண்ட முயற்சிக்கு எம்முடைய நன்றிகளை தெரிவிபதற்கு நாம் கடமை பட்டுள்ளோம்.

இருண்ட காலம் தொடக்கம் நவீன காலம் வரையும் நூலாசிரியர் அழைத்து செல்வதுடன் மனித வாழ்வின் சகல கட்டங்களுக்கும் இஸ்லாமிய சட்ட வழிகாட்டல் எந்தளவு பொருத்தமான அறிவுரைகளை வழங்குகின்றது என்பதையும் மிகத் தெளிவா இந்த நூலில் விளக்குகின்றார் என்றும்  மனித குலத்தின் ஒன்றுமை , மனித உரிமைகள் , சமாதானமும்  ஜிஹாத் கோட்பாடுகளும் பொறுமை , கல்வி போன்ற பல விடையங்களையும் இந்த நூலில் உள்ளடகியுள்ளார் என்று தெரிவித்தார் இந்த நூலின் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கும் நீதியரசர் பெரும் கீர்த்தியை பெற்று தந்துள்ளார் என்றும் இந்த நூலுக்கான பாராட்டை உலக முஸ்லிம்கள் சார்பில் மட்டுமின்றி முழு உலக சமுகம் சார்பிலும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா பாராட்டுவதாக   தெரிவித்தார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

August 15, 2010 at 9:03 pm

BCAS- கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழா

with one comment

BRITISH COLLEGE OF APPLIED STUDIES -BCAS- கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழா இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது பிகாஸ் என்று அழைக்கப்படும் இந்த கல்லூரி மாணவர்களின் அபிமானத்தை வென்ற கல்லூரி என்பது குறிபிடத்தக்கது இந்த கல்லூரி பல துறைகளில் மாணவர்களை கற்பித்து வருகின்றது என்பதுடன் உடன் வேலை வாய்ப்புகளையும் பெற உறுதுணையாக செயல்பட்டு வருகின்றது இந்த கல்லூரி ௧௯௯௯ ஆம் ஆண்டு கண்டியில் உருவாக்கப்பட்டு   பின்னர்  கொழும்பிற்கும் விஸ்தரிக்கபடுள்ளது

இந்த  பட்டமளிப்பு விழா இதன் தலைவர்  பொறியலாளர் அப்துரஹ்மான்   தலைமையில் இடம்பெற்றுள்ளது இந்த விழாவில் இந்த வருடம் பாடதிட்டங்களை முடித்துக்கொண்ட450  மாணவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கபட்டுள்ளது  இந்த விழாவுக்கு பல பிரமுகர்கள் அழைக்கபட்டிருந்தனர் பிரதமன அதிதியாக பிரிட்டன் பல்கலை   கழகம்  ஒன்றின் கணனித்துறை பீடாதிபதி பேராசிரியர் ரொபேர்ட் மேடான் கலந்து கொண்டுள்ளார் இவர்களில்  ராபிதா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி இனாமுல் முஹீதீனும் கலந்துகொண்டுளார்.

Written by lankamuslim

August 15, 2010 at 6:25 pm

புர்கா, நிகாப் போன்ற உடைகளை தடைசெய்ய கோரும் அமீர் அலி

with 3 comments

இலங்கையை சேர்த்தவரும் அவுஸ்ரேலியாவில் 1977ஆம் ஆண்டு குடியேறி வசித்துவரும் கலாநிதி A. C. அமீர் அலி என்ற பொருளியல் துறை விரிவுரையாளர் புர்கா மற்றும் நிகாப் போன்ற முகத்தை மூடும் உடைகள்  அவுஸ்ரேலியாவில் தடை செய்யப்படவேண்டும் என்று தெரிவித்து அவுஸ்ரேலியா முஸ்லிம்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

August 15, 2010 at 5:35 pm

நல்லிணக்க ஆணைக்குழு வவுனியாவில்

leave a comment »

இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய நல்லிணக்க ஆணைக்குழு வவுனியாவுக்கு விஜயம் செய்து பொதுமக்களின் சாட்சியங்களைப் பதிவு செய்திருக்கின்றது. வவுனியா அரச செயலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில் பலதரப்பட்டவர்களும் சாட்சியமளித்தனர்.

குறிப்பாக, காணாமல் போயுள்ள இளைஞர்கள், புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகள் குறித்தும், அரச நிர்வாக சேவை, நீதித்துறை ஆகியவற்றில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் பாகுபாடு, இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகள் அரசினால் கையேற்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் விடயம் என்பன குறித்தும் இந்தச் சாட்சியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது Read the rest of this entry »

Written by lankamuslim

August 15, 2010 at 2:31 pm

ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஜெனரல் பதவி உட்பட்ட தரங்கள் மற்றும் பதக்கங்கள் யாவும் ரத்து

leave a comment »

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அவருக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அங்கீகாரம் வழங்கியுள்ளார். இதனையடுத்து சரத் பொன்சேகாஇதுவரை இராணுவத்தில் வகித்து வந்த ஜெனரல் பதவி உட்பட்ட தரங்கள் மற்றும் பதக்கங்கள் யாவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் அவர் இன்று முதல் சாதாரண பொதுமகனாகவே கருதப்படுவார். இராணுவத்தில் சேவையாற்றிய போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முதலாவது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுத்தது Read the rest of this entry »

Written by lankamuslim

August 14, 2010 at 8:02 pm

தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று மட்டக்களப்பில்

leave a comment »

தமிழ் கட்சிகளின் அரங்கம் இன்று மட்டக்களப்பில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த அமைப்பில் பெரும்பாலான தமிழ் கட்கள் அங்கம் வகிக்கின்றன மட்டக்களப்பு பாடும்மீன் உல்லாச விடுதியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகான முதலமைச்சரின் ஊடகசெயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்அரங்கத்தில் பங்கு கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகின்றது ஓன்பது தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய இந்த அமைப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பங்குபற்றாது என்று தெரிவிக்கபடுகின்றது கடந்த மாதம் கொழும்பில் ஈ.பி.டி.பி. செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தமிழ் அரசியல் கட்சிகளை கொண்ட ஒரு கூட்டம் நடைபெற்றது இதில் மக்களின் அரசியல், அன்றாடப் பிரச்சினைகள் குறித்து தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கவேண்டும் என்று அதற்கொரு புதிய கூட்டணி அமைப்பது பற்றிய விடையங்கள் ஆராயப்பட்டமை குறிபிடத்தக்கது

Written by lankamuslim

August 14, 2010 at 10:03 am

தணிக்கை சபைக்கு முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை நியமிக்க கோரிக்கை

leave a comment »

கலாசார அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தணிக்கை சபையில் இந்த முறை முஸ்லிம் உறுப்பினர் இடம்பெறவில்லை முஸ்லிம் ஒருவரை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது இதற்கு முன்னர் இயங்கிய தணிக்கை சபையில் முஹம்மத் இர்பான் என்ற முஸ்லிம் ஊழியர் ஒருவர் இருந்துள்ளார் .

எனினும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சபையில் எந்த ஒரு முஸ்லிமும் நியமிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கலாசார அமைச்சர் பவித்திர வன்னியாராச்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கடிதம் அனுப்பியுள்ளதாக என்.எம்.அமீன் தெரிவித்துள்ளார் முஸ்லிம் ஒருவர் தணிக்கை சபையில் நியமிக்கப்படுவதன் மூலம், இலங்கையில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் மற்றும் வெளியீடுகளில் இஸ்லாமிய கலாசாரத்திற்கு பொருந்தாத விடயங்கள் இருப்பின் அவற்றை தடுக்க முடியும் என அமீன் தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

August 13, 2010 at 3:28 pm

பிரேசில் தூதுவர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்

leave a comment »

இலங்கைக்கான பிரேசில் தூதுவர் வென்ரோ வெயாரிட்டோ கிழக்கு மாகாணத்திற்கு முதற்தடவையாக உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலைக்கு நேற்று சென்றுள்ளார் .
இவ்விஜயத்தின்போது பிரேசில் தூதுவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை . முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார் இச்சந்திப்பின் போது முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எம்.எம். ஹன்ஸீர் கலந்து கொண்துள்ளார் .

இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் யுத்தத்திற்கு பின்னரான மக்களின் இயல்பு நிலைமை குறித்து முதலமைச்சரிடம் கேட்டு அறிந்து கொண்டதுடன் பிரேசில் நாட்டு முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா துறையிலும் சீனி உற்பத்தியிலும் முதலீடு மேற்கொள்ள ஆயத்தமாக உள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

Written by lankamuslim

August 13, 2010 at 3:03 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers