Lankamuslim.org

Archive for July 2010

கைதுக்குப் பின்னர் கேபி அளித்துள்ள முதல் பேட்டி

leave a comment »

இணையங்களில் வெளியான – The Island பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் தமிழ் வடிவம்

இறுதிக் கட்ட போரின்போது எனது பேச்சை கேட்க தவறி விட்டார் பிரபாகரன் இதனால்தான் அவர் கொல்லப்பட நேரிட்டது. அவர் மட்டும் எனது பேச்சைக் கேட்டிருந்தால், இலங்கை அரசுடன் உடன்பட்டு செல்ல முன்வந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கேபி. கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக அறிவித்த சிங்கள அரசு, ஆகஸ்ட் மாதம் கேபியை மலேசியாவில் வைத்துக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்தின் முகாமில்தான் வசித்து வருகிறார் கேபி.

ஒரு காலத்தில் பிரபாகரனின் வலதுகரமாக கருதப்பட்டவர் கேபி. ஆனால் இன்று இலங்கை அரசின் கைப்பாவையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவத்தின் பிடியில் உள்ள கேபி, இலங்கை அரசின் ஐலன்ட் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

July 29, 2010 at 8:28 pm

பாகிஸ்தானில் விமான விபத்து: 152 பேர் மரணம்

leave a comment »

நேற்று பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வபாதானதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். துருக்கி நாட்டில் இருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் ப்ளூ விமானம் இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மர்கலா மலைப் பகுதியில் விமான வந்த போது விபத்து நடந்துள்ளது. மழை மற்றும் கடும் மேகமூட்டம் காரணமாக விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது Video Read the rest of this entry »

Written by lankamuslim

July 29, 2010 at 7:47 pm

கிழக்கில் போலீஸ் மற்றும் கடற்படை முகாமுக்கு மக்கள் எதிர்ப்பு

leave a comment »

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மட்டும் வசிக்கும் ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருப்பது குறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், உள்ளூர் மீனவர்களும் தமது எதி்ர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் ஏற்கெனவே தென் கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் தற்போது துறைமுகமொன்றும் அமைக்கப்பட்டு வருவதால் இப்பகுதி கேந்திர முக்கியத்துவம் பெற்ற பிரதேசமாக கருதப்படுகின்றது.

சுனாமியினால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட பாடசாலை கட்டிடமொன்றிலேயே கடற் படையினர் முகாமிட்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது. ஆனால் இப்பாடசாலைக் கட்டிடத்தில் மதரசாவும், பாலர் பாடசாலையொன்றும் நடை பெற்று வந்ததாகக் கூறும் ஒலுவில் பெரிய பள்ளிவாசல் தலைவரான அபுபக்கர் லெப்பை இஸ்மாயில் கடற் படையினர் தங்கள் பகுதியில் முகாமிட்டிருப்பது பிரதேசத்தின் இயல்பு நிலைக்கு தடையாக அமையலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

July 28, 2010 at 8:38 am

புத்தளத்தில் பேரீச்சம் காய்கள் காத்தான்குடியில் செழித்து வளரும் பேரீச்சம் மரங்கள் !

leave a comment »

புத்தளம் எலுவன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றின் முன்றலில் பேரீச்சம் காய்கள் காய்த்து காணப்படுகின்றன. இவற்றை காண்பதற்கென பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தருகின்றனர் புத்தளத்திலும்  பேரீச்சம் மர நடுகையை புத்தள  நகர சபை முன்வந்து  ஆரம்பிக்க வேண்டும் இது புத்தளத்தை மேலும் மிகவும்  அழகு படுத்தும் என்பதுடன் பேரீச்சம் கனிகளை பெறுவதற்கான முயற்சியாகவும் அமைய முடியும் என்று எமது புத்தளம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்

அரபு நாடுகளிலேயே இப்பேரீச்சம் மரங்கள் காய்த்து கனி தருகின்றன.தற்போது காய்த்துள்ள பேரீச்சம் மரம் 43 ஆண்டு காலமக இருப்பதாக வீட்டுரிமையாளர் தெரிவித்துள்ளார் ரமழான் மாத நோன்பு அண்மித்து வரும் இந்த வேளையில் பேரீச்சம் பழங்கள் அனைத்து முஸ்லிம்களும் விரும்பி உண்ணும்  கனி விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

July 27, 2010 at 10:51 am

புத்தளத்திலும் காத்தான்குடியிலும் புதிய கட்டிடத் தொகுதிகள்

leave a comment »

புத்தளத்தில் 136 கடைகளைக் கொண்ட வர்த்தக  தொகுதியுடன் மாநாட்டு மண்டபம் உள்ளடங்கிய நவீன பஸ் தரிப்பு நிலையம் சுமார் 10 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது  “பஸ் தரிப்பு நிலையம் மற்றும் நவீன வர்த்தகக் கடைத் தொகுதி என்பன, புத்தளம் நகர மக்களுக்கு பொருளாதார ரீதியாக அதிக நன்மைகளைப் பெற்றுத்தர உள்ளதாகவும், அரசாங்கத்திடமிருந்தோ, தனியார் நிறுவனங்களிடமிருந்தோ ஒரு சதமேனும் நிதியுதவி பெறப்படவில்லை. கடைகளை நிர்மாணிப்பதற்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட முற்பணத்தைக் கொண்டுதான் இந்த பஸ் நிலையமும், கடைத்தொகுதியும், வரவேற்பு மண்டமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன” என்று புத்தளம் நகர பிதா நஸ்மி தெரிவித்துள்ளார் புத்தளம் நகர பிதா நஸ்மி தலைமையிலான வைபவத்தில் கௌரவ அதிதிகளாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பிரதி அமைச்சர் பாயிஸ், முன்னாள் மாகாண அமைச்சர் நவவி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.மேலும் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

July 27, 2010 at 9:50 am

உத்தேச மாற்றங்கள் சிறுபான்மை மக்களுக்கு நம்பிகை யூட்டுவதாக அமைந்துள்ளது ஹக்கீம்!

leave a comment »

உள்ளூராட்சித் தேர்தல் முறையின் உத்தேச மாற்றங்கள் சிறுபான்மை மக்களுக்கு நம்பிகை யூட்டுவதாக அமைந்துள்ளது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்!

முஸ்லிம் அரசியலில் மிகப் பெரிய சந்தேகங்கள் இருக்கின்றன. புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டாயிற்று. அரசு செய்ய முனையும் அரசியல் அமைப்பு தேர்தல் முறை மாற்றங்களில் உள்ளூராட்சித் தேர்தல் முறையின் உத்தேச மாற்றங்கள் சிறுபான்மை மக்களுக்கு நம்பிகை யூட்டுவதாக அமைந்துள்ளது, உள்ளூராட்சித் தேர்தல் முறையில் பழைய வட்டார முறையும், விகிதாசார முறையும் உள்ளடக்கிய விதத்தில் தேர்தல் முறையை மாற்றவும், இரட்டை அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்குவதற்கும் அரசாங்கம் முன்வந்திருப்பது சிறுபான்மை சமூகங்களுக்கு நம்பிகையூட்டுவதாக அமைந்துள்ளது இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் தேவைக்காக மட்டும் அடிக்கடி பேசும் விடயமாகவுள்ளது. இங்கிருந்து இந்தியாவிற்கு படையெடுத்துச் சென்று பேசினாலும் இங்கு பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாகவே இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான் ரவூப் ஹக்கீம் கல்முனையில் நடை பெற்ற கூட்டமொன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

July 26, 2010 at 5:17 pm

ஈராக்கில் அதிகளவில் யுரேனியம் பாவித்ததை ஒப்புகொள்ளும் UK Defense Secretary Liam Fox

leave a comment »

S.M.அப்துல்லாஹ்

ஈராக்கில் ஐதான யுரேனியத்தை -depleted uranium- கொண்ட ஆயுதங்களை அமெரிக்காவும், பிரிட்டனும் பாவித்தமையை பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ்- Liam Fox- ஒத்துக்கொண்டுள்ளார் “UK forces used about 1.9 metric tons of depleted uranium ammunition in the Iraq war in 2003,” UK Defense Secretary Liam Fox said in a written reply to the House of Commons on Thursday, the Kuwait News Agency reported.

அதிகரித்துள்ள கேன்சர், பிறக்கும் குழந்தைகளின் ஊனம் போன்ற நோய்களுக்கான காரணங்களை உலக சுகாதார அமைப்பு- The World Health Organization- ஆராய தொடங்கியுள்ளது ஈராக்கில் 2000  டன் ஐதான யுரேனியம் அமெரிக்க, பிரிட்டன் ஆக்கிரமிப்பு படைகளால் பயன் படுத்த பட்டுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன ஈராக்கின் பலுஜா போன்ற பயங்கர அமெரிக்க தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது  அமெரிக்கா படு பயங்க இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே பிறக்கும் குழந்தைகளில் அதிகமானது உடற் குறைபாடுகளுடன் பிறப்பதாகத் ஈராக் மருத்துவ செய்திகள் கூறிவருகின்றது இதில் குறிப்பாக அதிகமாக ஐதான யுரேனியம் பயன் படுத்தபட்டுள்ளதுVideo விரிவாக பார்க்க

Written by lankamuslim

July 26, 2010 at 4:45 pm

Posted in ஈராக்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 11,111 other followers