Lankamuslim.org

Archive for July 30th, 2010

முஸ்லிம்களின் காணிகள் ஆரையம்பதியிலுள்ளவர்களினால் அடாவடித்தனமாக பிடிக்கப்பட்டுள்ளன

leave a comment »

காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை:

மன்முனைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் நாம் அத்து மீறி நிருவாகம் செய்யவில்லை, எமக்கு சொந்தமான காணிகளிலேயே நாம் அபிவிருத்தி நடவடிக்கையினை செய்கின்றோம் என காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை தெரிவித்தார்.

மன்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் காத்தான்குடி நகர சபைக்கெதிராக நடாத்தப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் தலைவரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்; “காத்தான்குடி மக்கள் சன அடர்த்திக்குள் வாழ்ந்து வருகின்றனர். ஆசியாவிலேயே 3 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் வாழும் ஒரு நகரமே காத்தான்குடியாகும். காத்தான்குடிப்பிரதேசத்தை அண்டிய பாலமுனை மற்றும் காங்கேயனோடை ஒள்ளிக்குளம், கீச்சான்பள்ளம், சிகரம் மன்முனைத்துறை கர்பலா, உள்ளிட்ட முஸ்லிம் கிராமங்களில் வாழுகின்ற மக்கள், ஆரையம்பதி பிரதேச சபையின் பல் வேறு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டு வருவதோடு பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் விரிவாக பார்க்க Read the rest of this entry »

Written by lankamuslim

July 30, 2010 at 10:12 pm

ஜனாதிபதி மஹிந்த கண்டி மாவட்டத்தை துரித அபிவிருத்தி தொடர்பில் கூட்டம்

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று 30ஆம் திகதி கண்டிக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இந்நிலையில், கண்டி மாவட்டத்தையும் குறிப்பாக கண்டி நகரையும் துரித அபிவிருத்திக்கு உட்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று கண்டியிலுள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்தில் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கண்டி மாவட்ட சமூக அமைப்புக்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர் என்று தெரிவிக்க படுகின்றது

கண்டி மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி அவர் பல்வேறு அமைப்புக்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடவுள்ளார். நாளையும் அவர் கண்டியில் தங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஅத்துடன் மகாசங்கம் உட்பட சமயத் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்துப் பேசுவார். கண்டி நகரம் உட்பட கண்டி மாவட்ட அபிவிருத்தி தொடர்பாகவும் கவர்ச்சிகரமான நகரமாக கண்டி நகரத்தை உருவாக்குவது குறித்தும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இதன்போது ஆலோசிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Written by lankamuslim

July 30, 2010 at 9:18 pm

கொம்பனித்தெருவில் உடைத்து தகர்க்க பட்ட வீடுகளுக்கு பதில் வீடுகள் கிடைக்குமா ?

leave a comment »

கொழும்பு கொம்பனித்தெருவில் உடைத்து தகர்க்க பட்ட வீடுகளுக்கு பதில் வீடுகள் கொழும்பு -14 இல் அமைக்க படும் வீட்டு திட்டத்தில் வீடுகள் வழங்க விருப்பதாக அரச சட்டத்தரணி கடந்த திங்கக்கிழமை உயர் நீதிமன்றில் தெரிவித்ததாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிகின்றன.

கொம்பனித்தெருவில் காலாதிகாலமாக குடியிருந்துவந்த மக்களை திடுதிப்பென வெளியேற்றி அக்கட்டிடங்களை கட்டிடம் உடைத்து தகர்க்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன அதனால் உருவான நெருக்கடி நிலையும் விவகாரத்தை நீதிமன்றம் வரை சென்றுள்ளது இந்த கவலைதரக்கூடிய சம்பவத்தை அனைத்து ஊடகங்களும் முழு நாட்டுக்குமே அறிவிக்கத் தவறவில்லை. இச்சம்பவத்தால் ஆத்திரமுற்ற குடியிருப்பாளர்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடனும் பொலிஸாருடனும் மோதினர் ஒரு குடும்பம் வீடில்லாமல் நடுத்தெருவுக்கு வருவதென்பது மிகவும் வேதனை தரக்கூடியதொன்றாகும். எனிலும் இதுவரை இவர்களின் பிரச்சனைக்கு தீர்வுகளாக பல வாக்குறுதிகள் மட்டும் கிடைக்க பெற்றுள்ளது என்று விமர்சிக்க படுகின்றது

Written by lankamuslim

July 30, 2010 at 10:01 am

யாழ் அபூபக்கர் வீதி சின்ன மொஹிதீன் ஜும்மாஹ் மஸ்ஜித் திறக்கபடுகின்றது

leave a comment »

யாழ்ப்பாண அபூபக்கர் வீதியில் அமைந்துள்ள சின்ன மொஹிதீன்  மஸ்ஜித் என்று அழைக்கப்படும் ஜும்மாஹ் மஸ்ஜித் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வெள்ளிகிழமை ஜும்மாஹ் தொழுகையுடன் மீண்டும் திறக்கப்பட்டு ஐந்து வேலை தொழுகை உட்பட அனைத்து மஸ்ஜிதின் நடவடிக்கைகளும் வழமைக்கு கொண்டுவர சின்ன மொஹிதீன் மஸ்ஜித்தின் புதிய நிர்வாக சபை ஏற்பாடு களை செய்துவருகின்றது அதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்றுவருகின்றது.

1990 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் அனைத்து அசையும் அசையாத சொத்துகளையும் கொள்ளையிட்ட புலிகள் பலவந்தமாக முஸ்லிம்களை ஆயுத முனையில் வெளியேற்றினர் அதுவரையும் யாழ்ப்பாண குடாநாட்டில் 20 கும் அதிகமான மஸ்ஜிதுகள் இயங்கிவந்தன கடந்த 19 வருடங்களாக கைவிடப்பட்டிருந்த மஸ்ஜிதுகள் கடந்த இரு வருடங்களாக ஒன்றன் பின் ஒன்றாக இயங்க ஆரம்பித்து வருகின்றது தற்போது , டவுன் மஸ்ஜித் Town Mosque, கே ,கே வீதி மஸ்ஜித் , முஹமதியா மஸ்ஜித் , யாழ் பெரிய மஸ்ஜித் Grand Mosque, பெரிய மொஹிதீன் மஸ்ஜித் , செவல சந்தியில் அமைத்துள்ள கிரீன் மஸ்ஜித் ஆகியன மீண்டும் இயங்க தொடங்கியுள்ள மஸ்ஜிதுகள் ஆகும் அவற்றுடன் தற்போது சின்ன மொஹிதீன் மஸ்ஜித் என்று அழைக்க படும் ஜும்மாஹ் மஸ்ஜிதும் இணைகின்றது இதனுடன் யாழ்ப்பாணத்தில் ஏழு மஸ்ஜிதுகள் இயக்கம் பெறுகின்றது இன்ஷாஅல்லாஹ் வரும் வாரத்துடன் யாழ்ப்பாணத்தில் மூன்று ஜும்மாஹ் மஸ்ஜிதுகளில் ஜும்மாஹ் நடைபெறும் என்பதும் மகிழ்ச்சியான செய்தி- செய்திகளும் படமும் எமது யாழ் செய்தியாளர்கள்

Written by lankamuslim

July 30, 2010 at 9:19 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 8,604 other followers