புத்தளத்தில் பேரீச்சம் காய்கள் காத்தான்குடியில் செழித்து வளரும் பேரீச்சம் மரங்கள் !
புத்தளம் எலுவன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றின் முன்றலில் பேரீச்சம் காய்கள் காய்த்து காணப்படுகின்றன. இவற்றை காண்பதற்கென பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தருகின்றனர் புத்தளத்திலும் பேரீச்சம் மர நடுகையை புத்தள நகர சபை முன்வந்து ஆரம்பிக்க வேண்டும் இது புத்தளத்தை மேலும் மிகவும் அழகு படுத்தும் என்பதுடன் பேரீச்சம் கனிகளை பெறுவதற்கான முயற்சியாகவும் அமைய முடியும் என்று எமது புத்தளம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்
அரபு நாடுகளிலேயே இப்பேரீச்சம் மரங்கள் காய்த்து கனி தருகின்றன.தற்போது காய்த்துள்ள பேரீச்சம் மரம் 43 ஆண்டு காலமக இருப்பதாக வீட்டுரிமையாளர் தெரிவித்துள்ளார் ரமழான் மாத நோன்பு அண்மித்து வரும் இந்த வேளையில் பேரீச்சம் பழங்கள் அனைத்து முஸ்லிம்களும் விரும்பி உண்ணும் கனி விரிவாக பார்க்க என்பது குறிபிடத்தக்கது அதேவேளை காத்தான்குடி நகர வீதிகளின் நடுவில் சவுதியில் இருந்து ஒரு பேரீச்சம் மரம் ஒரு லட்சம் ரூபா செலவில் தருவிக்கபட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன் 11 பேரீத்தை மரங்கள் நாடப்பட்டது; அவை அனைத்தும் செழித்து வளர்ந்து வருகின்றது என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து மேலும் 40 பேரீத்தை மரங்கள் நாட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக வும் தற்போது நகரில் பிரதான வீதியை விரிவுபடுத்தி அழகுபடுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவேலை திட்டங்களில் பேரீச்சம் மரம் நடுகை பிரதான இடத்தை வகிப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்











