Archive for July 27th, 2010
புத்தளத்தில் பேரீச்சம் காய்கள் காத்தான்குடியில் செழித்து வளரும் பேரீச்சம் மரங்கள் !
புத்தளம் எலுவன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றின் முன்றலில் பேரீச்சம் காய்கள் காய்த்து காணப்படுகின்றன. இவற்றை காண்பதற்கென பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தருகின்றனர் புத்தளத்திலும் பேரீச்சம் மர நடுகையை புத்தள நகர சபை முன்வந்து ஆரம்பிக்க வேண்டும் இது புத்தளத்தை மேலும் மிகவும் அழகு படுத்தும் என்பதுடன் பேரீச்சம் கனிகளை பெறுவதற்கான முயற்சியாகவும் அமைய முடியும் என்று எமது புத்தளம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்
அரபு நாடுகளிலேயே இப்பேரீச்சம் மரங்கள் காய்த்து கனி தருகின்றன.தற்போது காய்த்துள்ள பேரீச்சம் மரம் 43 ஆண்டு காலமக இருப்பதாக வீட்டுரிமையாளர் தெரிவித்துள்ளார் ரமழான் மாத நோன்பு அண்மித்து வரும் இந்த வேளையில் பேரீச்சம் பழங்கள் அனைத்து முஸ்லிம்களும் விரும்பி உண்ணும் கனி விரிவாக பார்க்க Read the rest of this entry »
புத்தளத்திலும் காத்தான்குடியிலும் புதிய கட்டிடத் தொகுதிகள்
புத்தளத்தில் 136 கடைகளைக் கொண்ட வர்த்தக தொகுதியுடன் மாநாட்டு மண்டபம் உள்ளடங்கிய நவீன பஸ் தரிப்பு நிலையம் சுமார் 10 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது “பஸ் தரிப்பு நிலையம் மற்றும் நவீன வர்த்தகக் கடைத் தொகுதி என்பன, புத்தளம் நகர மக்களுக்கு பொருளாதார ரீதியாக அதிக நன்மைகளைப் பெற்றுத்தர உள்ளதாகவும், அரசாங்கத்திடமிருந்தோ, தனியார் நிறுவனங்களிடமிருந்தோ ஒரு சதமேனும் நிதியுதவி பெறப்படவில்லை. கடைகளை நிர்மாணிப்பதற்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட முற்பணத்தைக் கொண்டுதான் இந்த பஸ் நிலையமும், கடைத்தொகுதியும், வரவேற்பு மண்டமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன” என்று புத்தளம் நகர பிதா நஸ்மி தெரிவித்துள்ளார் புத்தளம் நகர பிதா நஸ்மி தலைமையிலான வைபவத்தில் கௌரவ அதிதிகளாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பிரதி அமைச்சர் பாயிஸ், முன்னாள் மாகாண அமைச்சர் நவவி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.மேலும் விரிவாக பார்க்க Read the rest of this entry »















