Archive for July 2nd, 2010
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியா பயணம்

இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் அறுவர் அடங்கிய குழு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கின்றது. தமிழ் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித்தார் என்று யாழ்ப்பாண பத்திரிகை ஒன்று தெரிவிக்கின்றது .
மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் நாளை மறுதினம் இந்தியா செல்லவுள்ள கூட்டமைப்பின் குழுவுக்கு இரா.சம்பந்தன் தலைமை வகிப்பார். அவருடன் சுரேஸ் பிரேமச்சந்திரன் மாவை சேனாதிராசா, செல் வம் அடைக்கலநாதன், அ.விநாயகமுர்த்தி, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருர் பயனமாவதாகவும் . புதுடில்லியில் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள், முக்கிய அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்துக் Read the rest of this entry »
ஸாராஹ் மாலினி பெரேராவின் அடுத்த வழக்கு விசாரணை இன்னும் ஐந்து மாதங்களின் பின்

ஸாராஹ் மாலினி பெரேரா நீதிமன்றில் தன் மீது சுமத்த பட்டுள்ள குற்றங்களை மறுப்பதற்காக இரண்டாவது தடவையாகவும் ஆஜரானார் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த வழக்கை வருகின்ற நவம்பர் மாதம் வரை மறு வழக்கு விசாரனைக்காக நீதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது இவரின் சட்டத்தரணி ஸாராஹ் பௌத்த மதத்தை நிந்திக்க முனைய வில்லை என்றும் கிரிமினல் குற்றம் இவர் மீது சுமத்துவதற்கான எந்த அடிப்டையும் இல்லை என்றும் கடந்த முறை நீதிமன்றத்தில் தெரிவித்தார் அனால் நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கில் சட்டத்தரணி தனது வாதத்தை முன்வைக்க நேரம் வழங்கப் படவில்லை இந்த வாழ்கை மீளாய்வு செய்யுமாறு வழக்கு இலங்கை சட்டமா அதிபருக்கு- Attorney General of Sri Lanka அனுப்பிவைக்க பட்டுள்ளது என்பது குறிபிடதக்கது
இவர் மீது இரண்டு சட்டத்தின் இரு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது ஆந்த இரண்டு சட்ட பிரிவுகளும் மற்றவர்களின் மதத்தை நிந்திப்பதன் ஊடாக அவர்களை நிந்திப்பது தண்டனைக்குரிய குற்றமாக கூறுகின்றது விரிவாக பார்க்க Read the rest of this entry »







