Archive for July 2010
‘சியத்த, வெற்றி எப்.எம்.’ தீயிட்டு கொளுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை
‘சியத்த, வெற்றி எப்.எம்.’ தனியார் வானொலி செய்திப் பிரிவு நேற்று நள்ளிரவு தீயிட்டு கொளுத்தப்பட்டமை தொடர்பாக தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இவ்விசாரணைகளை மேற்கொள்வதற் கென மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியில் அமைந்துள்ள சியத்த எப்.எம்., வெற்றி எப்.எம். தனியார் வானொலி நிலையம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த நபர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிவிட்டு செய்திப் பிரிவு எங்கே எனக் கேட்டவாறு உள்ளே நுழைந்துள்ளனர் Read the rest of this entry »
காதர் எம்.பி.யின் செயற்குழு அங்கத்துவம் இடைநிறுத்த ஐ.தே.க. தீர்மானம்
கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் அவர்களை ஐ.தே.க. செயற்குழு அங்கத்துவத்திலிருந்து நீக்கியுள்ளதாக ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக நேற்று தெரிவித்துள்ளார்.
அண்மைகாலமாக பராளுமன்ற அங்கத்தவர் அப்துல் காதர் அவர்களது சில நடவடிக்கை காரணமாக ஐ.தே.க.யில் அதிருப்தி நிலைமை ஒன்று காணப்பட்டு வந்தது. எனவே அவரது மேற்படி நடவடிக்கைகள் காரணமாக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சாத்தியக் கூறுகள் உண்டு
கைதுக்குப் பின்னர் கேபி அளித்துள்ள முதல் பேட்டி-02
இணையங்களில் வெளியான – The Island பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் தமிழ் வடிவம்-02
4வது ஈழப் போரின் கடைசி மாதங்களில் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைமை தப்ப முடியாத அளவுக்கு சிக்கியிருந்ததா? ராணுவத்தை தடுக்க முடியவில்லை என்று உங்களது தலைமை உங்களிடம் கூறியதா?
பிரபாகரன், அவரது முக்கியத் தளபதிகள், புலம் பெயர்ந்த தமிழர்களில் சில பிரிவினர், தமிழ்நாடு நமக்கு உதவும் என நம்பியிருந்தனர். தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்கு உதவ முன்வரும், பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவார் என அவர்கள் பெரிதும் நம்பினர் விரிவாக பார்க்க Read the rest of this entry »
முஸ்லிம்களின் காணிகள் ஆரையம்பதியிலுள்ளவர்களினால் அடாவடித்தனமாக பிடிக்கப்பட்டுள்ளன
காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை:
மன்முனைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் நாம் அத்து மீறி நிருவாகம் செய்யவில்லை, எமக்கு சொந்தமான காணிகளிலேயே நாம் அபிவிருத்தி நடவடிக்கையினை செய்கின்றோம் என காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக் அகமது லெவ்வை தெரிவித்தார்.
மன்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் காத்தான்குடி நகர சபைக்கெதிராக நடாத்தப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பாக காத்தான்குடி நகர சபையின் தலைவரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்; “காத்தான்குடி மக்கள் சன அடர்த்திக்குள் வாழ்ந்து வருகின்றனர். ஆசியாவிலேயே 3 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் வாழும் ஒரு நகரமே காத்தான்குடியாகும். காத்தான்குடிப்பிரதேசத்தை அண்டிய பாலமுனை மற்றும் காங்கேயனோடை ஒள்ளிக்குளம், கீச்சான்பள்ளம், சிகரம் மன்முனைத்துறை கர்பலா, உள்ளிட்ட முஸ்லிம் கிராமங்களில் வாழுகின்ற மக்கள், ஆரையம்பதி பிரதேச சபையின் பல் வேறு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டு வருவதோடு பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் விரிவாக பார்க்க Read the rest of this entry »
ஜனாதிபதி மஹிந்த கண்டி மாவட்டத்தை துரித அபிவிருத்தி தொடர்பில் கூட்டம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று 30ஆம் திகதி கண்டிக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இந்நிலையில், கண்டி மாவட்டத்தையும் குறிப்பாக கண்டி நகரையும் துரித அபிவிருத்திக்கு உட்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று கண்டியிலுள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்தில் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கண்டி மாவட்ட சமூக அமைப்புக்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர் என்று தெரிவிக்க படுகின்றது
கண்டி மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி அவர் பல்வேறு அமைப்புக்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடவுள்ளார். நாளையும் அவர் கண்டியில் தங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஅத்துடன் மகாசங்கம் உட்பட சமயத் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்துப் பேசுவார். கண்டி நகரம் உட்பட கண்டி மாவட்ட அபிவிருத்தி தொடர்பாகவும் கவர்ச்சிகரமான நகரமாக கண்டி நகரத்தை உருவாக்குவது குறித்தும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இதன்போது ஆலோசிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
கொம்பனித்தெருவில் உடைத்து தகர்க்க பட்ட வீடுகளுக்கு பதில் வீடுகள் கிடைக்குமா ?
கொழும்பு கொம்பனித்தெருவில் உடைத்து தகர்க்க பட்ட வீடுகளுக்கு பதில் வீடுகள் கொழும்பு -14 இல் அமைக்க படும் வீட்டு திட்டத்தில் வீடுகள் வழங்க விருப்பதாக அரச சட்டத்தரணி கடந்த திங்கக்கிழமை உயர் நீதிமன்றில் தெரிவித்ததாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிகின்றன.
கொம்பனித்தெருவில் காலாதிகாலமாக குடியிருந்துவந்த மக்களை திடுதிப்பென வெளியேற்றி அக்கட்டிடங்களை கட்டிடம் உடைத்து தகர்க்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன அதனால் உருவான நெருக்கடி நிலையும் விவகாரத்தை நீதிமன்றம் வரை சென்றுள்ளது இந்த கவலைதரக்கூடிய சம்பவத்தை அனைத்து ஊடகங்களும் முழு நாட்டுக்குமே அறிவிக்கத் தவறவில்லை. இச்சம்பவத்தால் ஆத்திரமுற்ற குடியிருப்பாளர்கள் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடனும் பொலிஸாருடனும் மோதினர் ஒரு குடும்பம் வீடில்லாமல் நடுத்தெருவுக்கு வருவதென்பது மிகவும் வேதனை தரக்கூடியதொன்றாகும். எனிலும் இதுவரை இவர்களின் பிரச்சனைக்கு தீர்வுகளாக பல வாக்குறுதிகள் மட்டும் கிடைக்க பெற்றுள்ளது என்று விமர்சிக்க படுகின்றது
யாழ் அபூபக்கர் வீதி சின்ன மொஹிதீன் ஜும்மாஹ் மஸ்ஜித் திறக்கபடுகின்றது
யாழ்ப்பாண அபூபக்கர் வீதியில் அமைந்துள்ள சின்ன மொஹிதீன் மஸ்ஜித் என்று அழைக்கப்படும் ஜும்மாஹ் மஸ்ஜித் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வெள்ளிகிழமை ஜும்மாஹ் தொழுகையுடன் மீண்டும் திறக்கப்பட்டு ஐந்து வேலை தொழுகை உட்பட அனைத்து மஸ்ஜிதின் நடவடிக்கைகளும் வழமைக்கு கொண்டுவர சின்ன மொஹிதீன் மஸ்ஜித்தின் புதிய நிர்வாக சபை ஏற்பாடு களை செய்துவருகின்றது அதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்றுவருகின்றது.
1990 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் அனைத்து அசையும் அசையாத சொத்துகளையும் கொள்ளையிட்ட புலிகள் பலவந்தமாக முஸ்லிம்களை ஆயுத முனையில் வெளியேற்றினர் அதுவரையும் யாழ்ப்பாண குடாநாட்டில் 20 கும் அதிகமான மஸ்ஜிதுகள் இயங்கிவந்தன கடந்த 19 வருடங்களாக கைவிடப்பட்டிருந்த மஸ்ஜிதுகள் கடந்த இரு வருடங்களாக ஒன்றன் பின் ஒன்றாக இயங்க ஆரம்பித்து வருகின்றது தற்போது , டவுன் மஸ்ஜித் Town Mosque, கே ,கே வீதி மஸ்ஜித் , முஹமதியா மஸ்ஜித் , யாழ் பெரிய மஸ்ஜித் Grand Mosque, பெரிய மொஹிதீன் மஸ்ஜித் , செவல சந்தியில் அமைத்துள்ள கிரீன் மஸ்ஜித் ஆகியன மீண்டும் இயங்க தொடங்கியுள்ள மஸ்ஜிதுகள் ஆகும் அவற்றுடன் தற்போது சின்ன மொஹிதீன் மஸ்ஜித் என்று அழைக்க படும் ஜும்மாஹ் மஸ்ஜிதும் இணைகின்றது இதனுடன் யாழ்ப்பாணத்தில் ஏழு மஸ்ஜிதுகள் இயக்கம் பெறுகின்றது இன்ஷாஅல்லாஹ் வரும் வாரத்துடன் யாழ்ப்பாணத்தில் மூன்று ஜும்மாஹ் மஸ்ஜிதுகளில் ஜும்மாஹ் நடைபெறும் என்பதும் மகிழ்ச்சியான செய்தி- செய்திகளும் படமும் எமது யாழ் செய்தியாளர்கள்
கைதுக்குப் பின்னர் கேபி அளித்துள்ள முதல் பேட்டி
இணையங்களில் வெளியான – The Island பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் தமிழ் வடிவம்
இறுதிக் கட்ட போரின்போது எனது பேச்சை கேட்க தவறி விட்டார் பிரபாகரன் இதனால்தான் அவர் கொல்லப்பட நேரிட்டது. அவர் மட்டும் எனது பேச்சைக் கேட்டிருந்தால், இலங்கை அரசுடன் உடன்பட்டு செல்ல முன்வந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கேபி. கடந்த ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்ததாக அறிவித்த சிங்கள அரசு, ஆகஸ்ட் மாதம் கேபியை மலேசியாவில் வைத்துக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்தின் முகாமில்தான் வசித்து வருகிறார் கேபி.
ஒரு காலத்தில் பிரபாகரனின் வலதுகரமாக கருதப்பட்டவர் கேபி. ஆனால் இன்று இலங்கை அரசின் கைப்பாவையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. ராணுவத்தின் பிடியில் உள்ள கேபி, இலங்கை அரசின் ஐலன்ட் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »
பாகிஸ்தானில் விமான விபத்து: 152 பேர் மரணம்
நேற்று பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வபாதானதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். துருக்கி நாட்டில் இருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் ப்ளூ விமானம் இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மர்கலா மலைப் பகுதியில் விமான வந்த போது விபத்து நடந்துள்ளது. மழை மற்றும் கடும் மேகமூட்டம் காரணமாக விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது Video Read the rest of this entry »
கிழக்கில் போலீஸ் மற்றும் கடற்படை முகாமுக்கு மக்கள் எதிர்ப்பு
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மட்டும் வசிக்கும் ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டிருப்பது குறித்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், உள்ளூர் மீனவர்களும் தமது எதி்ர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் ஏற்கெனவே தென் கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் தற்போது துறைமுகமொன்றும் அமைக்கப்பட்டு வருவதால் இப்பகுதி கேந்திர முக்கியத்துவம் பெற்ற பிரதேசமாக கருதப்படுகின்றது.
சுனாமியினால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட பாடசாலை கட்டிடமொன்றிலேயே கடற் படையினர் முகாமிட்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது. ஆனால் இப்பாடசாலைக் கட்டிடத்தில் மதரசாவும், பாலர் பாடசாலையொன்றும் நடை பெற்று வந்ததாகக் கூறும் ஒலுவில் பெரிய பள்ளிவாசல் தலைவரான அபுபக்கர் லெப்பை இஸ்மாயில் கடற் படையினர் தங்கள் பகுதியில் முகாமிட்டிருப்பது பிரதேசத்தின் இயல்பு நிலைக்கு தடையாக அமையலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »
புத்தளத்தில் பேரீச்சம் காய்கள் காத்தான்குடியில் செழித்து வளரும் பேரீச்சம் மரங்கள் !
புத்தளம் எலுவன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றின் முன்றலில் பேரீச்சம் காய்கள் காய்த்து காணப்படுகின்றன. இவற்றை காண்பதற்கென பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தருகின்றனர் புத்தளத்திலும் பேரீச்சம் மர நடுகையை புத்தள நகர சபை முன்வந்து ஆரம்பிக்க வேண்டும் இது புத்தளத்தை மேலும் மிகவும் அழகு படுத்தும் என்பதுடன் பேரீச்சம் கனிகளை பெறுவதற்கான முயற்சியாகவும் அமைய முடியும் என்று எமது புத்தளம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்
அரபு நாடுகளிலேயே இப்பேரீச்சம் மரங்கள் காய்த்து கனி தருகின்றன.தற்போது காய்த்துள்ள பேரீச்சம் மரம் 43 ஆண்டு காலமக இருப்பதாக வீட்டுரிமையாளர் தெரிவித்துள்ளார் ரமழான் மாத நோன்பு அண்மித்து வரும் இந்த வேளையில் பேரீச்சம் பழங்கள் அனைத்து முஸ்லிம்களும் விரும்பி உண்ணும் கனி விரிவாக பார்க்க Read the rest of this entry »
புத்தளத்திலும் காத்தான்குடியிலும் புதிய கட்டிடத் தொகுதிகள்
புத்தளத்தில் 136 கடைகளைக் கொண்ட வர்த்தக தொகுதியுடன் மாநாட்டு மண்டபம் உள்ளடங்கிய நவீன பஸ் தரிப்பு நிலையம் சுமார் 10 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது “பஸ் தரிப்பு நிலையம் மற்றும் நவீன வர்த்தகக் கடைத் தொகுதி என்பன, புத்தளம் நகர மக்களுக்கு பொருளாதார ரீதியாக அதிக நன்மைகளைப் பெற்றுத்தர உள்ளதாகவும், அரசாங்கத்திடமிருந்தோ, தனியார் நிறுவனங்களிடமிருந்தோ ஒரு சதமேனும் நிதியுதவி பெறப்படவில்லை. கடைகளை நிர்மாணிப்பதற்காகப் பெற்றுக் கொள்ளப்பட்ட முற்பணத்தைக் கொண்டுதான் இந்த பஸ் நிலையமும், கடைத்தொகுதியும், வரவேற்பு மண்டமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன” என்று புத்தளம் நகர பிதா நஸ்மி தெரிவித்துள்ளார் புத்தளம் நகர பிதா நஸ்மி தலைமையிலான வைபவத்தில் கௌரவ அதிதிகளாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பிரதி அமைச்சர் பாயிஸ், முன்னாள் மாகாண அமைச்சர் நவவி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.மேலும் விரிவாக பார்க்க Read the rest of this entry »
உத்தேச மாற்றங்கள் சிறுபான்மை மக்களுக்கு நம்பிகை யூட்டுவதாக அமைந்துள்ளது ஹக்கீம்!

உள்ளூராட்சித் தேர்தல் முறையின் உத்தேச மாற்றங்கள் சிறுபான்மை மக்களுக்கு நம்பிகை யூட்டுவதாக அமைந்துள்ளது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்!
முஸ்லிம் அரசியலில் மிகப் பெரிய சந்தேகங்கள் இருக்கின்றன. புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டாயிற்று. அரசு செய்ய முனையும் அரசியல் அமைப்பு தேர்தல் முறை மாற்றங்களில் உள்ளூராட்சித் தேர்தல் முறையின் உத்தேச மாற்றங்கள் சிறுபான்மை மக்களுக்கு நம்பிகை யூட்டுவதாக அமைந்துள்ளது, உள்ளூராட்சித் தேர்தல் முறையில் பழைய வட்டார முறையும், விகிதாசார முறையும் உள்ளடக்கிய விதத்தில் தேர்தல் முறையை மாற்றவும், இரட்டை அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்குவதற்கும் அரசாங்கம் முன்வந்திருப்பது சிறுபான்மை சமூகங்களுக்கு நம்பிகையூட்டுவதாக அமைந்துள்ளது இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை என்பது இந்தியாவின் தேவைக்காக மட்டும் அடிக்கடி பேசும் விடயமாகவுள்ளது. இங்கிருந்து இந்தியாவிற்கு படையெடுத்துச் சென்று பேசினாலும் இங்கு பழைய குருடி கதவைத் திறவடி என்ற கதையாகவே இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான் ரவூப் ஹக்கீம் கல்முனையில் நடை பெற்ற கூட்டமொன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »
ஈராக்கில் அதிகளவில் யுரேனியம் பாவித்ததை ஒப்புகொள்ளும் UK Defense Secretary Liam Fox
S.M.அப்துல்லாஹ்
ஈராக்கில் ஐதான யுரேனியத்தை -depleted uranium- கொண்ட ஆயுதங்களை அமெரிக்காவும், பிரிட்டனும் பாவித்தமையை பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ்- Liam Fox- ஒத்துக்கொண்டுள்ளார் “UK forces used about 1.9 metric tons of depleted uranium ammunition in the Iraq war in 2003,” UK Defense Secretary Liam Fox said in a written reply to the House of Commons on Thursday, the Kuwait News Agency reported.
அதிகரித்துள்ள கேன்சர், பிறக்கும் குழந்தைகளின் ஊனம் போன்ற நோய்களுக்கான காரணங்களை உலக சுகாதார அமைப்பு- The World Health Organization- ஆராய தொடங்கியுள்ளது ஈராக்கில் 2000 டன் ஐதான யுரேனியம் அமெரிக்க, பிரிட்டன் ஆக்கிரமிப்பு படைகளால் பயன் படுத்த பட்டுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன ஈராக்கின் பலுஜா போன்ற பயங்கர அமெரிக்க தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது அமெரிக்கா படு பயங்க இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே பிறக்கும் குழந்தைகளில் அதிகமானது உடற் குறைபாடுகளுடன் பிறப்பதாகத் ஈராக் மருத்துவ செய்திகள் கூறிவருகின்றது இதில் குறிப்பாக அதிகமாக ஐதான யுரேனியம் பயன் படுத்தபட்டுள்ளதுVideo விரிவாக பார்க்க
கல்முனையில் இயங்கிய கல்முனை தேசிய வீ டமைப்பு காரியாலயம் தொடர்ந்தும் இயங்கும்
கல்முனையில் இயங்கிய தேசிய வீடமைப்பு காரியாலயம் அம்பாறைக்கு மாற்றபட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டபாரளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பாராளுமன்றதில் அமைச்சர் விமல் வீர வன்சாவை சந்தித்து இது தொடர்பாக பேசியதில் தேசிய வீ டமைப்பு காரியாலயம் தொடர்ந்தும் கல்முனையில் இயங்கும் என்று உறுதியளிந்துள்ளார் என்று தெரியவருகின்றது நாட்டின் 25 மாவட்டங்களிலும் வீடமைப்பு மாவட்ட அலுவலகங்கள் இருக்கும்போது கல்முனையில் மட்டும் தனியானதொரு அலுவலகம் ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் புதிய நிர்வாகம் பத்து வருடங்களாக இயங்கிவந்த தேசிய வீ டமைப்பு காரியாலயத்தை அம்பாறையுடன் இணைக்க முடிவு செய்தது இந்த தேசிய வீடமைப்பு காரியாலயம் 10 வருடங்களுக்கு முன்னர் முன்னால் கிராமிய வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்களினால் திறக்கப்பட்டுள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »
பெயர் மாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம் பாடசாலைக்கு மீண்டும் முஸ்லிம் பெயர்
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மொறிவேவ நல்லகுடியாறு தமிழ் மொழி அரச முஸ்லிம் பாடசாலைக்கு நாமல் வித்தியாலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிங்கள அதிபர் ஒருவரும் நியமிக்கபட்டார் என்ற செய்தியை நாம் அறிவித்திருந்தோம் தற்போது மீண்டும் இந்த முஸ்லிம் பாடசாலைக்கு பழைய முஸ்லிம் பெயர் வைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது எனிலும் சிங்கள அதிபரே தொடர்ந்தும் பதவியில் இருக்கின்றார் என்று அறிய முடிகின்றது
இந்த முஸ்லிம் பாடசாலை 1975 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவந்த பாடசாலை 1990 புலிகளினால் இந்த பகுதி மக்கள் வெளியேற்றத்துடன் மூடப்பட்டுள்ளது. தற்போது புலிகளின் தோல்வியை தொடர்ந்து மீள் குடியேறிய மக்களுடன் மீண்டும் ஆரம்பிக்கபட்டுள்ள பாடசாலைக்கு சிங்கள அதிபர் ஒருவர் நியமிக்க பட்டுள்ளதோடு பெயரும் நாமல் வித்தியாலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக இயங்கிவந்துள்ளது ,தற்போது இந்த பாடசாலையில் 75 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றார்கள் இவர்களில் எவரும் சிங்கள மொழி மாணவர்கள் இல்லை என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் விரிவாக பார்க்க Read the rest of this entry »
புலிகளின் சர்வதேச வலையமைப்பை முறியடிக்க நடவடிக்கை
வெளிநாடுகளில் தளம் அமைத்து செயற்படும் புலிகளின் சர்வதேச வலயமைப்பினை முறியடிப்பதற்கும் புலிகளின் முக்கியஸ்தர்களை கைது செய்வதற்கும் இன்டர்போல் பொலிஸாருடன் இணைந்து இலங்கை புலனாய்வு பிரிவினர் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் விசுவமடுவில் கண்டெடுக்கப்பட்ட புலிகளின் சர்வதேச பிரிவிற்கு தலைமை தாங்கிய கஸ்ரோ என்பவரின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் நாள் குறிப்புக்கள் ஆகியவற்றிலிருந்து வெளிநாடுகளில் இருந்து செயற்பட்டுவரும் புலிகளின் முக்கியஸ்தர்கள் தொடர்பான தவல்கள் மற்றும் சட்டவிரோத நிதி சேகப்பு குறித்த விபரங்கள் என்பன தெரியவந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »
நீதிமன்றத்தை விமர்சித்தார் என ஹக்கீம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி ?
நீதிமன்றம் தொடர்பாக காணப்படும் நம்பிக்கை சீர்குலைந்திருப்பதாகவும் அந்த நம்பிக்கையை வெளிக்காட்டும் தன்மைகள் தற்போது காணப்படவில்லை எனவும் நீதிமன்றத்தை விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியுமா என்பதை உடனடியாக ஆராய்ந்து அறியத்தருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன என இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது என்று பல இணையத்தளயங்களில் இந்த செய்தி வெளியாகியுள்ளது
பாக்கீர் மாக்கார் நிலையத்தினால் கொழும்பு வெள்ளவத்தை மெராய்ன் ரைவ் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் உரையாற்றும்போதே நீதிமன்றத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் விமர்சனங்களை முன்வைத்திருந்தார் விரிவாக பார்க்க Read the rest of this entry »
பலஸ்தீனர்களுக்கு எதிரான யுத்தத்தை இலங்கை ஆதரிக்கிறது: செய்தி தவறானது
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் டொனால்ட் பெரேரா, பலஸ்தீனர்களின் பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை ஆதரவளிக்கிறது என, தான் கூறியதாக வெளியான செய்தியினை மறுத்துள்ளார். இலங்கைத் தூதுவர் இத்தகைய கருத்துத்தினை தெரிவித்தாக வெளிவந்த செய்திகளினடிப்படையில், இது இலங்கை முஸ்லிம்களினதும் , பல முஸ்லிம் நாடுகளினதும் உடன் கவனத்தை பெற்றதுடன் அதற்கு பலஸ்தீன- இலங்கை நட்புறவுச் சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந் நிலையில், இஸ்ரேலிய பத்திரிகையில் வெளியான செய்தி தவறானது எனவும், தான் அவ்வாறான கருத்துப்பட எதையும் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்விரிவாக பார்க்க Read the rest of this entry »
இஸ்ரேலுக்கான தூதுவரின் கருத்துக்கு பலஸ்தீன – இலங்கை நட்புறவு சமூகம் கண்டனம் தெரிவித்துள்ளது
பலஸ்தீனர்கள் பேச்சுவார்த்தையை நிராகரித்தால் யுத்தத்தை இஸ்ரேல் தீவிரப்படுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் டொனால்ட் பெரேரா கருத்துத் தெரிவித்தமை தொடர்பாக பலஸ்தீன – இலங்கை நட்புறவுச் சமூகம் கடும்; எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பலஸ்தீன – இலங்கை நட்புறவுச் சமூகத்தின் இணைத் தலைவரான அமைச்சர் அதாவுட செனவிரட்ண, டெய்லிமிரர் இணையத்தளத்திற்குக் கருத்துத் தெரிவிக்கையில், தூதுவர் டொனால்ட் பெரேரா என்ன கூறினாலும் இலங்கை அரசாங்கம் பலஸ்தீன மக்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல், பலஸ்தீனம் ஆகிய இருதரப்பினரையும் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுமாறு வலியுறுத்துவதாகவும கூறினார்.
இதேவேளை, டொனால்ட் பெரேராவின் கூற்று, இலங்கை அரசாங்கத்தின் கருத்தை பிரதிபலிக்கிறதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்;டும் என பலஸ்தீன – இலங்கை நட்புறவுச் சமூகத்தின் மற்றொரு இணையத்தலைவரான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு இத்தகைய பொறுப்பற்ற வகையில் கருத்துத் தெரிவிப்பதற்காக தூதுவருக்கு எதிராக பலஸ்தீன – இலங்கை நட்புறவுச் சமூகத்தின் ஸ்தாபகத் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தெரிவித்துள்ளார்விரிவாக பார்க்க Read the rest of this entry »
மஸ்ஜிதின் ஒலிபெருக்கி பாவனைக்கு எதிரான முறைப்பாடு

குருநாகல் மாவட்டத்தின் கனே தன்னை இங்குருவத்த மஸ்ஜிதின் ஒலிபெருக்கி பாவனை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடித்து அந்த மஸ்ஜிதின் ஒலிபெருக்கி பாவனையை நிறுத்துமாறு கடந்த வாரம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர் என்று தெரிவிக்க படுகின்றது எனிலும் அந்த மஸ்ஜிதின் வழமையான தொழுகைகள் நடைபெற்றுவருவதாகவும் , அந்த மஸ்ஜிதின் ஒலிபெருக்கி பாவனைக்கான போலீஸ் அனுமதி காலவதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது
நிபந்தனை எதுவுமின்றி நேரடி பேச்சுவார்ததைக்கு பலஸ்தீனர்கள் முன்வர வேண்டுமாம்!

பலஸ்தீன பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்திற்கு இலங்கை உறுதியான ஆதரவளிப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவரான முன்னாள் படையதிகாரிகளின் பிரதான டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். அதேவேளை, நிபந்தனை எதுவுமின்றி நேரடி பேச்சுவார்ததைக்கு பலஸ்தீனர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இரத்தம் சிந்தப்படுவதை எவரும் விரும்பவில்லை. அடுத்த (பலஸ்தீன) தரப்பு நிபந்தனையற்ற நேரடி பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டும். இப்பேச்சுவார்த்தைகள் இரு தரப்பினரும் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதில் கவனம் செலுத்தவேண்டும் என வைநெட்நியூஸுக்கு அளித்த செவ்வியொன்றில் டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான எமது யுத்தத்திற்கு தகவல்கள் பரிமாற்றம் மற்றும் இராணுவத் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளின் விற்பனை மூலம் இஸ்ரேல் பல வருடகாலம் இஸ்ரேல் உதவியது. எமது வான்படையில் 17 கிபிர் யுத்த விமானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எமது விமானிகள் இஸ்ரேலில் பயிற்றுவிக்கப்பட்டனர். கடந்த சில வருடங்களில் பில்லியன் கணக்கான டொலர் உதவிகளும் எமக்கு கிடைத்தன. அதனால்தான் நான் இஸ்ரேலில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறேன் எனக் கருதுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன
நெறிபடுத்தபட்ட இஸ்லாமிய கற்கைக்கு முதல் தமிழ் மொழி Online Islamic College
தமிழ் மொழியில் இஸ்லாத்தை இணையத்தளம் மூலம் விளங்கி கொள்வதற்கு ஏதுவான முறையில் “இஸ்லாஹ்” Online Islamic College -www.islahme.com என்ற பெயரில் ஒரு இணையத்தளம் ஆரம்பிக்ககபடுள்ளது இது வரும் ரமழான் முதல் திகதியுடன் தனது முதல் இணைய வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளது இந்த தளத்தில் உறுப்பினராவதற்கும் மற்றும் பயிற்சி நெறிகளில் பயன்பெறுவதட்கும் முதலில், உங்களது தகவல்களை பதிவுசெய்து கொள்ளவேண்டும் என்று கேற்கப்பட்டுள்ளது
இணையத்தில் தமிழ் மொழி மூலமாக இஸ்லாத்தை கற்கின்ற வாய்ப்பை தமிழ் பேசும் சகோதர சகோதரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் Islah Team பெருமகிழ்ச்சி அடைகிறது. இத்தகையதொரு முயற்ச்சியைத் துவக்கி வைக்கின்ற பாக்கியத்தை நமக்கு நழ்கிய ஏக அல்லாஹவுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும். என்று அந்த இணையத்தளம் குறிபிடுகின்றது
Islah – Online Islamic College , தனது முதல் பாட நெறியை இலங்கை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியுடன் இணைந்தே நடாத்துகிறது. எமது முதல் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்கின்ற மாணவர்கள் இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியினால் உறுதிப் படுத்தப்பட்ட சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வர் என்று அதில் தெரிவிக்க பட்டுள்ளது இந்த இணையத்தளம் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பால் தொடங்கப்படுள்ளதாக அறிய முடிகின்றது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஒருமித்த கருத்து நிலவுவதாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், நிபந்தனையற்ற முறையில் வடக்கு கிழக்கு இணைவதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. அது தொடர்பில் நாடளுமன்ற உறுப்பினர் டி.சுமந்திரனிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதுவும் தெரிவித்திருந்தால் அதை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிகின்றன
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு தமது கட்சி பூரண ஆதரவளித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் மக்களிடம் போலியான பிரசாரங்களைசெய்து வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் தெரிவித்துள்ளார்
கொழும்பு வடக்கு வாக்காளர் இடாப்பில் 10,000 வாக்காளர்களின் பெயர் நீக்கம் : ரவி

ஐக்கியத் தேசியக் கட்சியின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க நேற்று பிரதி தேர்தல் ஆணையாளர் பி.எம்.சிறிவர்தனவைச் சந்தித்து வாக்காளர் இடாப்பில் இருந்து ஏராளமானோரின் பெயர் திட்டமிட்ட முறையில் நீக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “ஐக்கியத் தேசியக் கட்சியின் பலமான தொகுதி கொழும்பு வடக்கு. இத்தொகுதியிலிருந்து 10 ஆயிரம் வாக்காளர்களின் பெயர் வாக்காளர் இடாப்பில் இருந்து கடந்த தேர்தலில் நீக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 1 லட்சத்து 63 ஆயிரம். ஆனால் கடந்த 2009 ஆம் ஆண்டு 84 ஆயிரத்து 801 ஆக அது குறைந்திருந்தது” எனத் தெரிவித்தார். பிரதி தேர்தல் ஆணையாளர் இதற்குப் பதிலளிக்கையில், விரைவில் இவ்விடயம் குறித்து ஆராயவுள்ளதாகத் தெரிவித்தார். தேர்தல் கண்காணிப்புக் குழுவான பெஃப்ரல் அமைப்புக்கு, 50 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களிடமிருந்தே கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது என்று வீரகேசரி தெரிவிக்கின்றது
நியாஸ் மௌலவி மீது அபகீர்த்தி ஏற்படுத்தியதாக தெரிவிக்கபடும் நபர் 30 லட்சம் பிணையில்

வபாத்தான இஸ்லாமிய விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் மௌலவி மொஹமட் நியாஸ் பற்றி அபகீர்த்தியான முறையில் இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிட்டதாக தெரிவிக்க படும் நபர் ஒருவருக்கு 30 லட்சம் ருபா பிணையில் செல்ல நீர் கொழும்பு பிரதான நீதவான் அனுமதிவழங்கியுள்ளார்.
வபாத்தான மௌலவி மொஹமட் நியாஸ் அவர்களை இழிவு படுத்தும் முகமாக நீர் கொழும்பு பலகத்துரை பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டி இணைய தளத்திலும் தகவல் வெளியிட்டதாக தெரிவிக்கபடும் விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சனையை தொடர்ந்து போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இதை தொடர்ந்து போலீஸ் இந்த வழக்கை நீதிமன்றில் சமர்ப்பித்ததாக தெரியவருகின்றது தற்போது இந்த வழக்கு ஜூலை மாதம் 22 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது
சாய்ந்தமருதில் சுனாமியால் வீடுகளை இழந்த 250 குடும்பங்களுக்கு இன்னும் வீடுகள் இல்லை
கடந்த 2004 இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் உரியவர்களுக்கு வழங்கபட்டுள்ளபோதும் வருடங்கள் 6 ஆகியும் சாய்ந்தமருதில் 250 குடும்பங்களுக்கான வீடுகளை கட்டி வழங்குவதற்குரிய எந்த நடவடிக்கைகளும் இன்னும் ஆரம்பமாக வில்லை என்று தெரிவிக்க படுகின்றது சாய்ந்தமருது பிரதேசத்தில் சுனாமியால் சுமார் 2000 குடும்பங்களுக்கு மேல் தமது வீடுகளை இழந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
கல்முனை அதிகார சபைகள் அம்பாறைக்கு மாற்றம் ?
கல்முனையில் இயங்கிய தேசிய வீ டமைப்பு காரியாலயம் மற்றும் , நகர அபிவிருத்தி அதிகார சபை காரியாலயம் ஆகியன அம்பாறைக்கு மாற்றபடவுள்ளதாக தெரியவருகின்றது நாட்டின் 25 மாவட்டங்களிலும் வீடமைப்பு மாவட்ட அலுவலகங்கள் இருக்கும்போது கல்முனையில் மட்டும் தனியானதொரு அலுவலகம் ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் புதிய நிர்வாகம் பத்து வருடங்களாக இயங்கிவந்த தேசிய வீ டமைப்பு காரியாலயத்தை அம்பாறையுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது இந்த தேசிய வீடமைப்பு காரியாலயம் 10 வருடங்களுக்கு முன்னர் முன்னால் கிராமிய வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்களினால் திறக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அம்பாறை மாவட்டத்தின் ஒரேஒரு நகரசபையான கல்முனை நகர சபையின் நகர அபிவிருத்தி வேலைகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகம் ஒன்றை முன்னால் அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஏற்படுத்தியுள்ளார் இந்த அலுவலகத்தையும் அம்பாறை நகர அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்துடன் இணைக்க புதிய நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானம் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்க படுகின்றது
வட மாகண முஸ்லிம்களின் வெளியேற்றம் பற்றி சர்வதேச கவன ஈர்ப்பு நிகழ்சிகள்

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் எதிர்வரும் அக்டோபர்மாதம் வட மாகண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில் சர்வதேச சமூகத்திற்கு காட்டும் வகையில் தமது பாரிய செயற்திட்டம் ஒன்றையும் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் வபாத்தாகி 10 ஆண்டுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவடையவுள்ளதனை முன்னிட்டு குர் ஆன் ஆராய்ச்சி மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்
‘புத்தள முஸ்லிம்களின் வரலாறும் வாழ்வியலும்’ என்ற கலாநிதி அனஸின் ஆய்வு நூல்
கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ் எழுதிய ‘புத்தளம் முஸ்லிம்கள்– வரலாறும் வாழ்வியலும்’ என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை மலை 400 மணி அளவில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை அஸ்வர் மண்டபத்தில் இடம்பெற்றது அந்த நூலில் புத்தள முஸ்லிம்களின் வரலாற்று இருப்பு, பாரம்பரியம் போன்றவிடையங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு புத்தள முஸ்லிம்களின் 400 வருட வரலாறு மட்டும் இங்கு ஆதார பூர்வமாக முன்வைக்க பட்டுள்ளது புத்தள முஸ்லிம்களின் வரலாறு 7ஆம் நூற்றாடின் ஆரம்பத்துடன் தொடங்கியுள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைக்க மேலும் பல ஆய்வுகள் அகழ்வு ஆராச்சிகள் மேற்கொள்ளபடவண்டியுள்ளது இலங்கை முஸ்லிம்கள் பற்றிய வாரலாற்று தடையங்கள் , கல்வெட்டுகள் என்பன புத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது இலங்கை முஸ்லிம்களில் தொன்மையை நிரூபிக்கும் வரலாற்று தடையங்கள் கண்டு பிடிக்கபட்ட இடங்களில் புத்தளம் முக்கியமானது ஆக புத்தள முஸ்லிம் வரலாறு என்பது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுக்கு துணைபுரியும் வரலாறாகும் கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ் அவர்களின் இந்த முயற்சி பெரிதும் பாராட்ட படவேண்டியது என்பதுடன் கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ் தனது இந்த ஆய்வு தொகுப்பை பகுதி ஒன்றாக கருதி பகுதி இரண்டு , மூன்று என்று தனது ஆய்வை தொடரவேண்டும் விரிவாக பார்க்க Read the rest of this entry »
அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூடுகின்றது

அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூடி ஆராயவுள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கிறது . இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் நிலைப்பாடு குறித்து நாளைய தினம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூடி ஆராயவுள்ளது இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கபடவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது
பொதுத் தேர்தல்களின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு முதல் தடவையாக நாளைய தினம் நகர மண்டபத்தில் கூடவுள்ளது கட்சியின் அதி உயர் பீடம், அரசியல் சபை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர் என்று தெரியவருகின்றது
General James Mattis: ஆப்கானிஸ்தானில் மக்களை சுட்டு கொல்வது ஒரு மகிழ்ச்சி தரும் விளையாட்டு
M.ரிஸ்னி முஹம்மட்
ஆப்கானிஸ்தான் அமெரிக்க படைகளுக்கு புதிய தளபதியாக ஒபாமாவினால் பெயர் குறிப்பிடபட்டுள்ள ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ்-General James Mattis- என்பவன் தெரிவித்ததாக இருதினங்களுக்கு முன்னர் -ஆப்கானிஸ்தானில் மக்களை சுட்டு கொல்வது ஒரு மகிழ்ச்சி தரும் விளையாட்டு- It’s fun to kill in Afghanistan- என்று தெரிவித்து தனது கொலை இரத்தவெறியை மிக சர்வசாதாரணமாக வெளிபடுத்தியுள்ளான்.
2004 ஆண்டு ஈராக் பலுஜா பிரதேசத்தின் மீது வெறித்தனமான தாக்குதல்கள் நடாத்தி பல ஆயிரம் உயிர்களை கொன்ற பலுஜா அமெரிக்க பயங்கரவாதப் படைக்கு தலைமை தான்கியவந்தான் இந்த ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ் அன்று பலுஜா நகர் மீது இரசாயன குண்டுகள் வீசப்பட்டு பல ஆயிரம் முஸ்லிம்கள் மொடூரமான முறையில் அழித்தவன் இந்த ஜெனரல் ஜேம்ஸ் மட்டிஸ் அன்று பலுஜாவில் பல ஆயிரம் பேர் அழிக்கப்பட்டது குறித்தும் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அன்றைய அமெரிக்க இராணுவ அமைச்சர் டோனால்டிடம் பத்திரிக்கைகாரர்கள் கேட்ட போது, நாங்கள் பிணங்களை எண்ணுவதில்லை. என்று வெறித்தனமாக பதில் கூறி ஜெனரல் ஜேம்ஸ் மட்டிசை குற்றசாட்டுகளில் இருத்து பாதுகாத்தார் என்பதும் குறிபிட தக்கது இன்று ஆப்கானிஸ்தான் அமெரிக்க படைகளுக்கு புதிய தளபதியாக ஒபாமா ஒபாமாவினால் பெயர் குறிப்பிட பட்டுள்ள Video வுடன் விரிவாக பார்க்க
இலங்கை முழுவதிலும் 6628 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது

பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்திப்பதற்காக அடுத்த பாடசாலை தவணைக்கு முன்னர் 6628 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் இதன்படி, 554 பட்டதாரிகளை ஆங்கில ஆசிரியர்களாக நியமிப்பதற்கு நாளை மறுதினம் 18 ஆம் திகதி நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் பட்டதாரி ஆசிரியர் பதவிக்காக 8200 பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு கொழும்பில் அமைக்கப் பட்டுள்ள 60 நிலையங்களில் நேர்முகப் பரீட்சை நடத்தப்படும் என்றும் இதுதவிர 3174 அழகியற் கலை ஆசிரியர்களை நியமிக்க நிதி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இவர்கள் பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கேற்ப நியமிக்கப்படுவர் என்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »
79சிங்கள மொழி உதவி ஆசிரியர் நியமனம், தமிழ் மொழி உதவி ஆசிரியர் நியமனம் புறக்கணிப்பு ?

அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தில் 79 சிங்கள மொழி தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் தமிழ் மொழி முஸ்லிம் , தமிழ்- சேர்ந்த ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை என்று தெரிய வருகின்றது மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் அம்பாறை மாவட்டதில் உள்ள தொண்டர் ஆசிரியர்களில் 179 பேரை உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது என்று தெரிவிக்க படுகின்றது இந்த நியமனம் முதற்கட்ட நியமனம் என்றும் அறிய முடிகின்றது எனிலும் ஏனைய
109 உதவி ஆசிரியர்கள் நியனங்கள் இது வரை வழங்கப்படவில்லை என்றும் விரைவில் வழங்கப் படும் என்பதற்கான நடவடிக்கைகளை அவதானிக்க முடியாது உள்ளதாகவும் தெரிவிக்க படுகின்றது மேலும் “உதவி ஆசிரியர் நியமனத்திற்காக, கடந்த 2009 பெப்ரவரி மாதம் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பல முஸ்லிம்கள் தமிழர்,நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டபோதும் . வருடங்கள் ஒன்றறை கடந்தும் இவர்களுக்கான நியமனம் இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்க பட்டுள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »
ஜனாதிபதி Award பெறும் 6 முஸ்லிம் விஞ்ஞான ஆய்வாளர்கள்

விஞ்ஞான ஆய்வுக்கான ஜனாதிபதி பரிசுகளை -Presidential Award for Scientific Research- 6 முஸ்லிம் ஆய்வாளர்கள் பெற்றுகொள்ள இருப்பதாக அறிய முடிகின்றது இவர்கள் 2003, 2004, 2005 ,2006 காலப் பகுதிகளில் அங்கீகாரம் பெற்ற சர்வதேச விஞ்ஞான ஆய்வு சஞ்சிகைகளில் பல்வேறு தலைப்புகளில் தமது ஆய்வு கட்டுரைகளின் ஊடாக தமது ஆய்வுகளை வெளிபடுத்தியுள்ளனர்
இவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் வரும் 27 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விசேட நிகழ்சிக்கு அழைத்து சான்றிதல்கள் வழங்கி பாராட்டப்படவுள்ளனர் என்று தெரிய வருகின்றது
இதன் படி சிரேஷ்ட விரிவுரையாளர் M.A.M. சித்தீக் -Faculty of Dental Sciences, University of Peradeniya, Dr . M.C.M. இக்பால் – Senior Research Fellow, Institute of Fundamental Studies, Kandy, Dr. நஸ்ரின் மரிக்கார்- Researcher Coconut Research Institute, presently at University Putra, Malaysia, Mr. M.M. பாஹிர் – Freelance Conservation Biologist , Dr.M.M.M. நஜீம் -Senior Lecturer, University of Kelaniya, Dr. M.I.M. மௌஜூத்-enior Lecturer, University of Peradeniyaவிரிவாக பார்க்க Read the rest of this entry »
கிலாபத் அழிக்கபட்டு 89 வருடங்கள் அல்ல 86 வருடங்களும் 4 மாதங்களும் 12 நாட்களும்
தவறான தகவலை திருத்துமாறு வேண்டுகோள்: S.M.அப்துல்லாஹ்
பிரதான தமிழ் பத்திரிகையான வீரகேசரியின் வாராந்த பதிப்பான விடிவெள்ளியில் “கிலாபத் வீழ்ந்து 89 வருடங்கள் நிறைவு ” என்ற தலைப்பில் இன்று ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது இது தவறான தகவலாகும், கிலாபத் 1924 மார்ச் 3 இம் திகதி திங்கள் கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது கிலாபத் வீழ்ந்து இன்றுடன் 86 வருடங்களும் 4 மாதங்களும் 12 நாட்களும் என்பதுதான் சரியான தகவல், தவறான செய்திகள் தவறாக பதிவுகளை உள்ளங்களில் பதித்துவிடும் என்பதால் சம்பந்த பட்ட பத்திரிகை தவறை திருத்தி கொள்ளவேண்டும் என்று பணிவாக வேண்டுகிறேன் விரிவாக பார்க்க Read the rest of this entry »
இணைப்புக் கோரிக்கை தீர்வைச் சிக்கலாக்கும்

தினகரன் ஆசிரியர் தலையங்கம்
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைய வேண்டுமா அல்லது தனித்தனியாக இயங்க வேண்டுமா என்ற பிரச்சினை மீண்டும் தலை தூக்கியிருக்கின்றது. அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் இரண்டு மாகாணங்களும் இணைவதைத் தனது கட்சி எதிர்ப் பதாகப் பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றார். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் அதே கருத் துப்பட அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு இந் தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் னரே இங்கு இப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கியிருக் கின்றது. வடக்கும் கிழக்கும் இணைந்த தீர்வே தேவை என்று கூட்டமைப்புத் தலைவர்கள் இந்தியாவில் அறிவித்ததன் எதிரொலியாகவே இணைப்புக்கு எதி ரான குரல் இங்கு மீண்டும் ஒலிக்கத் தொடங்கி யிருக்கின்றது விரிவாக பார்க்க Read the rest of this entry »
சிலுவை யுத்தம் ஒரு வரலாற்று பார்வை பகுதி 1
M.ரிஸ்னி முஹம்மட்
ஒரு இருண்ட கண்டம் எப்படி அணைத்து அறிவியல் துறைகளிலும் முன்னேரிகொண்டிருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை தாக்கமுடியும் அதனால் சரியான சந்தர்பம் பார்த்து இருந்தது கிறிஸ்தவ உலகம் – கி.பி. 1095-ம் ஆண்டு. போப்பாண்டவராக பதவிக்கு வந்த ஏர்பன் II- Pope Urban II at the Council of Clermont – முஸ்லிம்களை தாக்கி இஸ்லாத்தை வீழ்த்த தகுதியான சந்தர்பமாக கி.பி. 1095-ம் ஆண்டு கால பகுதியை கண்டார் , முஸ்லிம்கள் தமக்குள் மோதிக்கொண்டனர், இஸ்லாம் வணக்க வழிபாடுகளில் மட்டும் பிரகாசித்தது அரசியல், பொருளாதார சமுக கட்டமைப்பு விடையங்களில் பலம் இழந்து கொண்டிருந்தது
அந்த கிறிஸ்தவ இராணுவம் ஐரோப்பிய நாடுகளில் இருந்த ஜெருசலம் நோக்கி பாய்ந்தது இதன் பிரதான நோக்கமாக எழுச்சி பெற்று வரும் இஸ்லாத்தை இராணுவ , அரசியல் தளங்களில் தோற்கடிப்பதும், ஆசியாவில் கத்தோலிக்க கிருஸ்தவ மேலாதிக்கத்தை நிறுவி ஐரோபாவின் கட்டுபாட்டில் முஸ்லிம் தேசங்களை கொண்டுவருவதுமாகும் இவரின் அழைப்பு ஐரோப்பிய அரசர்களின் கவனத்தை பெற்றது அன்று அரசர்களின் அரசராக போப் அதிகாரம் பெற்றிருந்தார் . அரசுத்தரப்புப் பிரதிநிதிகள் கலந்து விவாதித்தார்கள் விரிவாக பார்க்க
வடக்கு கிழக்கை இணைப்பை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கும் என்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்
![]()
கல்முனை மாநகரசபையின் புதிய மேயர் மசூர் மௌலானாவை கௌரவிக்கும் நிகழ்வை புறக்கணித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்நிகழ்வில்கலந்துகொள்ளவில்லை நிகழ்வுக்கு மு. காங்கிரஸின் தலைவரும் , பா. உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், பாரனுமன்ர உறுப்பினர் எச்.எம்.என்.ஹரிஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். இந்த புறக்கணிப்பு இது தொடர்பாக கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான ஹென்றி என அழைக்கப்படும் குலசேகரம் மகேந்திரன் மகேந்திரன் தெரிவித்துள்ளதாவது
கல்முனை மாநகரசபையின் மேயருக்கு கௌரவம் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதற்கு எங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஹரிஸ் அதிதியாக வருகை தந்ததால் அவரின் கருத்தை ஆட்சேபித்து இந்த நிகழ்வையும் நாங்கள் பகிஷ்கரிக்க முடிவு செய்தோம் என்றும் கூறியுள்ளார் . மேலும் Read the rest of this entry »
எல்லை மீள் நிர்ணயம்; கஷ்ட பிரதேசங்கள் தொடர்பில் விசேட கவனம் கொள்ளபடுகின்றது

எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான சிபாரிசுகளின் போது மலையகம் மற்றும் வடக்கு கிழக்கின் கஷ்டப் பிரதேசங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 20ம் திகதி எல்லை மீள் நிர்ணயக் குழுவின் அடுத்த அமர்வு நடைபெறவுள்ளதுடன் அதன்போது தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆலோசனைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாகக் குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் : எல்லை மீள் நிர்ணயம் தொடர்பாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு அக்குழு தமக்கான செயற்பாடுகளைத் துரிதமாக முன்னெடுத்து வருகிறது.
ஏற்கனவே இக்குழுவானது மாவட்டச் செயலாளர்கள், பிரதேசச் செயலாளர்கள் மற்றும் கிராமசேவகர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் அவர்களது ஆலோசனைகளையும் பெற்று வருகிறது. அத்துடன் முக்கிய அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிடமிருந்தும் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன விரிவாக பார்க்க Read the rest of this entry »
யாழ்ப்பாண மாநகர சபை வர்த்தக நிலையங்கள் மீண்டும் முஸ்லிம்களுக்கு
யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் தற்போது அவற்றில் இருப்பவர்களுக்கும் 1990 ஆம் ஆண்டு வரை அந்த வர்த்தக நிலையங்களை நாடத்தி வந்தவர்களுக்கும் இடையில் காணப்பட்ட இழுபறி நிலைக்கு யாழ்ப்பாண மாநகர சபை தீர்வு கண்டுள்ளது இதன் பிரகாரம் 1990 ஆண்டு புலிகளினால் யாழ்ப்பான முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றும் வரை குறித்த வர்த்தக நிலையங்களை நடாத்தி கொண்டிருந்தவர்களிடம் மீட்டும் அவற்றை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாநகர சபையில் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் மௌலவி B.A.S.சுபியான் முன்வைத்த பிரேரணை சபையில் ஏகமனதாக அங்கீகரிக்க பட்டுள்ளது என்று மாநகர சபை உறுப்பினர் மௌலவி B.A.S.சுபியான் Lankamuslim.org க்கு தெரிவித்தார் இந்த சபையின் தீர்மானத்தின்படி கடந்த கால வாடகையும் அந்த வர்த்தக நிலையங்களுக்கு அறவிடபடாது என்றும் வர்த்தக நிலையங்களை நடாத்துபவர்கள் கடைகளை தாம் திருத்துவதற்கும் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்
யாழ் மாநகர சபைத் 23ஆசனங்களை கொண்டது இதில் 5 முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர் இத்த வருடம் செப்டம்பர் மாதம் அளவில் மாநகரசபையின் பிரதி மேயர் பதவி முஸ்லிம் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கபடும் என்ற வாக்குறுதிக்குஅமைய வழங்கப்படவேண்டும் என்று எதிர் பார்க்க படுகின்றது
வவுனியா முஸ்லிம்களுக்கு தனியான பிரதேச செயலாளர் பிரிவு வேண்டும்
வவுனியா மாவட்ட முஸ்லிம்களுகென்று தனியான பிரதேச செயலாளர் பிரிவு ஒன்றை ஏற்படுத்த முயற்சி களை செய்திதுள்ளனர் இது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று கடந்த சனிகிழமை வவுனியா இஸ்லாமிய கலாசார அபிவிருத்தி சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது , இதில் வவுனியா மாவட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் , மஸ்ஜிதுகளில் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர் சுடுவெந்த பிலவு, பழைய குடிமனை , மாங்குளம் , வாழவைத்த குளம் பட்டக் காடு , புளி தரித்த புளியங்குளம் , சாளம்பை குளம் , ஆகிய முஸ்லிம் கிராமங்களில் புதிய கிராமசேவகர் பிரிவுகளை உருவாக்கவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது வவுனியாவில் ௨௧ முஸ்லிம் கிராமங்களில் மட்டும் 4100 குடும்பங்கள் வாழவதாக தெரிவிக்க பட்டுள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »
கணம் கோட்டார் அவர்களே!

எஸ்.எம்.எம்.பஷீர்
“தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணுவார்”.( திருக்குறள் )
அண்மையில் யாழ் சட்டட்தரணி நண்பர் ஒருவர் எனக்கனுப்பிய மிண்னஞ்சல் தனிப்பட்ட சுற்றுக்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற எனது அணுமானம் ஓரிரு நாட்களின் பின்னர் அம்மின்னஞ்சல் இணையம் ஒன்றில் பதிவாகி பகிரங்கமானகியபின் , அது குறித்த எனது பார்வை இது. முன்னாள் இலங்கையின் உச்ச நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் மதிப்புக்குரிய திரு விக்னேஸ்வரன் அவர்களின் 24.06.2010ல் யாழ் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்ட எழுந்தமானமான ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை கொச்சைப்படுத்தும் கருத்து குறித்து தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர் விரிவாக பார்க்க Read the rest of this entry »
50 மணித்தியால உண்ணாவிரதம் முற்றுபெற்றது
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழுவை கலைக்குமாறு கோரிக்கை வைத்து சாகும் வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார். அவரை பார்வையிடுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேரில் வந்து, நீர் அருந்த செய்ததை அடுத்து அவரது போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. தற்போது அமைச்சர் விமல் வீரவன்ஸ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அங்கு வருவதற்கு சற்று நேரத்து முன்னர், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அங்கு வந்திருந்தார். இதன்படி, கடந்த 50 மணித்தியாலயங்களாக நடைபெற்ற அமைச்சர் விமல் வீரவன்ஸவின் போராட்டம் நிறைவடைந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டைவேடத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது
வடக்கு,கிழக்கை மீண்டும் இணைக்குமாறு கோரும் எந்தவித உரிமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. அவ்வாறு வடக்கு,கிழக்கு மீண்டும் இணைக்கப்படுவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளாதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட எம்.பி.யான ஹரீஸ் தெரிவித்துள்ளார்
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதியமைச்சு மீதான வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;அரசியல் யாப்புத் திருத்தம் செய்யப்படும்போது சிறுபான்மை இனம் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.முஸ்லிம்களின் கோரிக்கைகளும் அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட வேண்டும் விரிவாக பார்க்க Read the rest of this entry »
இலங்கை வானொலி முஸ்லிம் சேவை இந்தியாவை எட்டுகின்றது

இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள் தமிழகத்தை எட்டச் செய்க! என்ற இந்திய தமிழ் நாட்டு முஸ்லிம்களின் வேண்டுகோள் நிறைவேறுகின்றது இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வரும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை மீண்டும் தமிழகத்தில் கேட்கச் செய்ய ஆவன செய்து தருமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைத் தொடர்புகொண்டு கோரிக்கை முன்வைக்குமாறு பல கோரிக்கைகள் இந்திய முஸ்லிம்களால் முன்வைக்க பட்டது குறிப்பாக அதிரை எக்ஸ்ப்ரஸ் வேண்டுகோள் விடுத்தது அவர்களின் இந்த கோரிக்கைகளை http://www.lankamuslim.org யும் பதிவு செய்திருந்தது என்பது குறிபிடதக்கது தற்போது இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வரும் முஸ்லிம் சேவையை இந்தியாவில் ஒலிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தென் இந்திய முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தமிழ் நாட்டு சென்று இந்த விடையங்களை ஆராய இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் மூத்த ஒலிபரப்பாளர் M.Z. அஹமட் முனவ்வர் தலைமையிலான குழுவினர் நேற்று இந்தியா புறப்பட்டு சென்றுள்ளனர்
அமைச்சு பதவியிலிருந்து விலகுகிறார் விமல் வீரவன்ச

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவை கலைக்ககோரி, சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் விமல்வீரவன்ச தாம் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக கூறி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »
அமைச்சர் விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதம்
![]()
கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக நேற்றுக் காலையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச, இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கவென ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்திருக்கும் நிபுணத்துவ குழுவை வாபஸ் வாங்குமாறு கோரி ஊர்வலம் நடாத்தி, சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இருப்பினும் ஐ.நா. செயலாளர் நாயகம் எமது கோரிக்கைக்குத் திருப்திகரமான பதிலை அளிக்கத் தவறியதாலேயே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தாமே குதிக்கத் தீர்மானித்து அதில் ஈடுபட்டிருக்கின்றேன். விரிவாக பார்க்க Read the rest of this entry »
இலங்கைக்கான பிரதிநிதியை பான் கீ மூன் திருப்பியழைத்துள்ளார்

இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகங்களின் பணிகள் சுமுகமாக நடைபெறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளை சீர் செய்ய இலங்கை அரசு செய்யத் தவறியது ஏற்றுக் கொள்ளமுடியாததாக ஐ நா வின் தலைமைச் செயலர் கருதுவதாக அவரது சார்பில் வெளியாகியுள்ள அறிக்கை கூறுகிறது.
அரசில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரின் தலைமையில் ஒழுங்கற்ற வகையில் கொழும்பிலுள்ள ஐ நா வின் அலுவலகம் முன்பாக நடத்தப்படும் போராட்டங்கள் காரணமாக, அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சிப் பணிகளுக்கான அலுவலகத்தை மூட தலைமைச் செயலர் முடிவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது விரிவாக பார்க்க Read the rest of this entry »
தென் கிழக்கு பல்கலைகழகத்தின் சமூகவியல் பீடாதிபதி மௌலவி , கலாநிதி கே.எம்.எச். காலித்தீன் வபாதானார்
தென் கிழக்கு பல்கலைகழகத்தின் சமூகவியல் பீடத்தின் பீடாதிபதியாக மௌலவி , கலாநிதி கே . எம் .எச் காலித்தீன் நேற்று மாலை 4.00 மணியளவில் ராஜகிரியவில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் வபாதாகியுள்ளார் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் இவர் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா ஈச்சந்தீவு கிராமத்தில் 1944 ஆண்டு பிறந்தார் இவர் ஒரு இஸ்லாமிய மற்றும் பொதுத்துறை புத்திஜிவியுமாவார் இவர் தனது ஆரம்ப கல்வியை முடித்து அறபு கல்லூரி ஒன்றில் மௌலவி பட்டம் பெற்ற இவர் தனது உயர் கல்வியை இலங்கையின் மூன்று பல்கலைகழகங்களில் பெற்றுள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »










































