Archive for June 28th, 2010
ஏகபோக வர்த்தகத்துக்கு இடமளிக்கலாகாது!

இன்றைய தினகரன் ஆசிரியர் தலையங்கம்:
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியில் தனியார் துறையினரின் ஏகபோகம் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அன்றாடம் நாம் பயன்படுத்துகின்ற அரிசி, பருப்பு, சீனி, கடலை, பயறு, கோதுமை, கெளபி, மாசி உட்பட ஏராளமான உணவுப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்பொருட்களை தனியார் துறையினரே வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகின்றனர்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியானது புறக்கோட்டை வர்த்தகர்களின் ஏகபோக ஆதிக்கத்தில் இருந்து வருவதாக அக்காலம் தொடக்கமே குறை கூறப்பட்டு வருகிறது. தாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான விலையை அவ்வர்த்தகர்களே தீர்மானிப்பதாகவும் பாவனையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர் விரிவாக பார்க்க Read the rest of this entry »







