Archive for June 4th, 2010
காத்தான்குடி புதிய வைத்தியசாலை கட்டுமான வேலைகள் பெரும்பாலும் பூர்த்தி
சுனாமியால் முற்றாக அழிவடைந்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் முழுமையான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது எதிர்வரும் ஜூலை மாத நடுப்பகுதியில் இப்புதிய வைத்தியசாலை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் என்று தெரிகின்றது இவ்வைத்திய சாலையை நிர்மாணிப்பதற்காக நோர்வே நாட்டு மக்கள் சார்பாக நோர்வே செஞ்சிலுவைச் சங்கம் 670 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்திருந்தது .
இதில் 470 மில்லியன் ரூபா செலவில் இப்புதிய வைத்தியசாலைக் கட்டிடம் சகல வசதிகளுடன் அழகிய தோற்றத் தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மிகுதி 200 மில்லியன் ரூபாவுக்கும் இவ்வைத்தியசாலைக்குத் தேவையான வைத்திய உபகரணங்கள் வழங் கப்படவுள்ளன. சுனாமியின்போது முற்றாக அழிவடைந்த இவ்வைத்தியசாலையை உடனடியாக மீள மைத்துக் கொள்ள முடியாதவாறு இங்குள்ள அரசியல் தலைமைகளின் செல்வாக்குத் தாக்கம் அமைந்ததிருந்தது. அது 2006ம் ஆண்டு நடைபெற்ற நகர சபைத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் தெளிவாகவே வெளிப்பட்டது. எனினும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிப் பிரிவு மேற்கொண்ட விடாத் தொடரான நடவடிக்கைகளின் காரணமாகவே நோர்வே செஞ்சிலுவைச் சங்கத்தினர் அந்நாட்டு மக்களின் நிதிப் பங்களிப்பில் இவ்வைத்திய சாலையை முழுவதும் புதிதாக நிர்மாணிக்க முன் வந்தனர் என்று காத்தான்குடியில் இருந்து வெளியாகும் வார உரைகல் என்ற பிராந்திய பத்திரிகை தெரிவித்துள்ளது
இஸ்ரேல் மேற்கொள்ளும் பயங்கரவாதத்தை எதிர்த்து இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது
பலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் பயங்கரவாத யுத்தத்தையும் கஸாவில் மீது இஸ்ரேல் கடைபிடித்து வரும் அணைத்து வகையான முற்றுகையையும் கண்டித்தும் இஸ்ரேலுடனான இலங்கையின் இராஜதந்திர தொடர்புகளை கைவிடுமாறுமாறு கோரியும் இன்று வெள்ளிகிழமை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் பெரும் ஆர்பாட்டம் இடம்பெற்றது இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிரான பதாகைகளை சுமந்து சென்றனர் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் மற்றும் ஊடகவிலாளர் நிசார் தீன் ஆகியேர் கலந்து கொண்டிருப்பதை படத்தில் காணலாம் . கஸாவில் அடக்குமுறைக்கும் பொருளாதார முற்றுகைக்கும் உட்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை எடுத்துச் சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர் 60 பேர் படு காயம் அடைந்தனர் இந்த இஸ்ரேல் பயங்கரவாதத்தை கண்டிப்பது இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான நோக்கமாகும் – பிந்திய செய்திகளின் படி குறைந்தது 9 பேர் கொல்லப்படும் 50 பேர் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்-
இஸ்ரேல் சர்வதேச சட்டத்திற்கு அடிப்பணியும் வரை அந்நாட்டுடன் இருக்கும் இராஜதந்திர உறவுகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி சுதந்திர பாலஸ்தீன நண்பர்கள் அமைப்பு Friends of free Palestine – மற்றும் சில அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன
மாத்தளை நகரில் இஸ்லாமிய வானொலி ஒலிபரப்பு நிலையம்
மாத்தளை நகரில் ஜம்யதுல் உலமா சபையின் நகர கிளையின் ஏற்பாட்டில் மாத்தளை F.M என்ற பெயரில் ஒரு இஸ்லாமிய வானொலி ஒலிபரப்பு நிலையம் ஒன்று நாளை முதல் 91.6. என்ற F.M அலைவரிசையில் தனது ஒலிபரப்பை தொடங்கவுள்ளது இந்த வானொலி ஒலிபரப்பு நிலையம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தின் வார இறுதி நாட்களான சனிக்கிழமையும் ஞாயிற்றுகிழமையும் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணிவரையும் ஒலிபரப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று எமது மாத்தளை செய்தியாளர் தெரிவிக்கின்றார்,கல்வி , கலாச்சாரம் , சுகாதாரம் , இஸ்லாமிய சட்ட கலை , சிறுவர் நிகழ்ச்சி , பெண்களுக்கான நிகழ்ச்சி, குத்பா பேருரைகள் என்பன இதன் நிகழ்ச்சி தலைப்புகளாக இருக்கும் என்றும் இந்த வானொலி ஒலிபரப்பு நிலையம் மாத்தளை டவுன் மஸ்ஜித் வளாகத்தில் அமைத்துள்ள கட்டிட தொகுதியில் இயங்கும் என்று தெரிவிக்கின்றார் இலங்கையின் பல முஸ்லிம் பிரதேசங்களில் இவ்வாறான இஸ்லாமிய வானொலி , மற்றும் தொலைகாட்சி சேவைகள் இயங்குவது குறிபிடதக்கது
இஸ்ரேலிய பயங்கரவதத்தை கண்டித்து இன்று கொழும்பில் ஆர்பாட்டம்
M.ரிஸ்னி முஹம்மட்
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் பயங்கரவாத யுத்தத்தையும் கஸாவில் மீது இஸ்ரேல் கடைபிடித்து வரும் அணைத்து வகையான முற்றுகையையும் கண்டித்தும் இஸ்ரேலுடனான இலங்கையின் இராஜதந்திர தொடர்புகளை கைவிடுமாறுமாறு கோரியும் இன்று வெள்ளிகிழமை ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் பெரும் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. கஸாவில் அடக்குமுறைக்கும் பொருளாதார முற்றுகைக்கும் உட்பட்டுள்ள முஸ்லிம் மக்களுக்கான நிவாரணங்களை எடுத்துச் சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர் 60 பேர் படு காயம் அடைந்தனர் இந்த இஸ்ரேல் பயங்கரவாதத்தை கண்டிப்பது இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான நோக்கமாகும்
இஸ்ரேல் சர்வதேச சட்டத்திற்கு அடிப்பணியும் வரை அந்நாட்டுடன் இருக்கும் இராஜதந்திர உறவுகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி சுதந்திர பாலஸ்தீன நண்பர்கள் அமைப்பு மற்றும் சில அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
ஜனாதிபதியால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனம்
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும் வட மாகா ஆளுநார் ஜீ.ஏ. சந்திரசிறியும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக கைத்தொழில் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களாக கிழக்கு மாகண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் மீன் பிடித்துறை பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயும் நியமிக்கப்பட்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரா பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரா நாடளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார்














