Lankamuslim.org

One World One Ummah

திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களும் பாராளுமன்றமும்

with 4 comments

M. ஷாமில் முஹம்மட்

திருகோணமலை மாவட்ட மக்கள் தொகையும் , வாக்காளர்களும்

இனம் மக்கள் தொகை வாக்காளர்கள் பெற்ற ஆசனங்கள்

முஸ்லிம்

15,1692 (45.4%) 100,000 01

தமிழ்

95,652 – (28.6%) 80,000

01

சிங்களம்

84,766 -(25.4%) 60,000 02

 

165 கும் அதிகமான மஸ்ஜிதுகளும் ,90 கும் அதிகமான முஸ்லிம் பாடசாலைகளை கொண்ட மாவட்டம் திருகோணமலை மாவட்டம் இங்கு 63 வருட காலமாக தொடர்ந்தும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்க பட்டுவருகின்றது அதிலும் ஆளும் தரப்பு பிரதிநிதித்துவத்தை

பெற்றுவந்த முஸ்லிம் அரசியல் பாரம்பரியம் என்று குறிபிடலாம் இந்த முறை சற்று வித்தியாசம் எனிலும் இந்த 7 ஆவது பாராளுமன்ற தேர்தலிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்க பட்டுள்ளது திருகோணமலை மாவட்டத்தில் 1947 ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்க பட்டுவருகின்றது

திருகோணமலை முஸ்லிம் அரசியல் இலங்கை மக்கள் தொகை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் 2007 ஆம் ஆண்டின் புள்ளி விபரப்படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3 இலட்சத்து 34 ஆயிரத்து 363 பேர் வாழ்கின்றார்கள் . இதில் மாவட்டத்தின் பெரும்பான்மையான முஸ்லிம்கள் 15,1692 (45.4%) பேரும் தொகையில் இரண்டாம் நிலையில் இருக்கும் தமிழர்கள் 95,652 (28.6%), பேரும் மாவட்டத்தின் விரிவாக பார்க்க..

சிறுபான்மையான சிங்கள மக்கள் தொகை 84,766 (25.4%) பேரும் உள்ளனர் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்க பட்டுவந்தாலும் முஸ்லிம்கள் அங்கு பெற்றிருக்கும் வாக்கு வங்கிக்கு உரிய பிரதிநிதித்துவத்தை பெறுவதில் கடந்த 2004, 2010 ஆகிய இரண்டு ஆண்டுகளும் கடந்த தடவைகளை போன்று தவறியுள்ளனர். மக்கள் தொகையின் அடிப்படையில் நியாயமா பார்த்தால் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளை மாவட்டம் பெற்றிருக்க வேண்டும் மாவட்டத்தின் முஸ்லிம் வேட்பாளர்கள் பிரிந்தமை , வாக்களிக்காமை போன்ற இரண்டு பிரதான காரணங்களால் இந்த முறையும் மாவட்டம் கொண்டுள்ள முஸ்லிம் வாக்கு வங்கிக்கு ஏற்ப பிரதிநிதிகளை பெறமுடியவில்லை

முஸ்லிம் வாக்குகள் மிகவும் கூடுதலாக பிரிக்கபட்டுள்ள இடங்களில் திருகோணமலையை முதலாவதாக குறிபிடும் அளவுக்கு முஸ்லிம் வாக்குகள் பிரிக்கபட்டுள்ளதுடன் இந்த மாவட்ட முஸ்லிம்கள் , தமிழர்களை போன்று அதிகமாக வாக்களிக்கவும் தவறியுள்ளனர்

இதனால் இந்த முறை மாவட்டத்தின் சிறுபான்மையான சிங்கள மக்கள் தமது வாக்குளில் 90% மானவற்றை ஆளும் தரப்பு சிங்கள வேட்பாளர்களுக்கு ஒற்றுமையாக திட்ட மிட்டு வழங்கியமையாலும் முஸ்லிம் வாக்குகள் ஆளும் தரப்பால் இந்த முறை நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு முஸ்லிம்களின் வாக்குகள் பிரிக்க பட்டமையாலும் இந்த முறையும் நியாயமாக பெறவேண்டிய மேலும் ஒரு பிரதிநிதித்துவம் பறிபோயுள்ளது

முஸ்லிம் வாக்குகள் ஆளும் தரப்பில் இந்த முறை நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு முஸ்லிம்களின் வாக்குகள் ஆளும் தரப்பால் திட்ட மிட்டு பிரிக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது கடந்த பாராளுமன்ற தேர்தல்களின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பின் மூன்று முஸ்லிம்களையும் ஒரு தமிழரையும் மூன்று சிங்கள வேட்பாளர்களையும் நிறுத்தும் வழக்கம் ஆனால் இந்தமுறை தமிழ் வேட்பாளர் தவிர்க்கப்பட்டு அதற்கு பதிலாக முஸ்லிம் வேட்பாளர்கள் நான்கு பேர் நிறுத்தியமை முஸ்லிம் வாக்குகள் பிரிந்தமைக்கு பிரதான காரணமாக கருதப்படுகின்றது

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தொகை 241,133 பேர் அதில் 149,982 வாக்காளர்கள் வாக்களிதுள்ளனர் 91,151 பேர் வாக்களிக்கவில்லை முஸ்லிம் காங்கிரஸ் சார்பான ஐக்கிய தேசிய முன்னணி 39,691 வாக்குகளை பெற்று 01 ஆசனத்தையும் , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புகு 59,784 வாக்குகளை பெற்று 02 ஆசனத்தையும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 33,268 வாக்குகளை பெற்று 01 ஆசனத்தையும் பெற்று கொண்டது ஆளும் தரப்பில் களம் இறங்கிய நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்விகண்டனர்

2004 ஆம் ஆண்டு மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 224,307 பேர் இதில் வாக்களித்தவர்கள் 191,657 பேர் அதில் 32,650 பேர் வாக்களிக்கவில்லை அந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 65,185 (35.66%) வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 31,053 (16.99%) வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், இலங்கை தமிழரசுக் கட்சி 68,955 (37.72%) வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டன. ஐ.தே. க. 15,693 (08.59%) வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இந்த மாவட்டத்தில் 100,000 முஸ்லிம் வாக்காளர்களும் , 80,000 தமிழ் வாக்காளர்களும் , 60,000 சிங்கள வாக்காளர்களும் உள்ளனர் இங்கு தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களின் வாக்குகள் அதிகமாக பிரித்து இருப்பதை, முஸ்லிம் வாக்காளர்கள் பலர் தமது வாக்குகளை பயன்படுத்த வில்லை என்பதையும் காட்டுகின்றது 1 லச்சம் முஸ்லிம் வாக்காளர்கள் குறைந்தது இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிதுவதை பெற்றிருக்க வேண்டும் ஆனால் கடந்த 2004 ஆம் ஆண்டு இழந்ததை போன்று இந்த 2010ஆம் ஆண்டு தேர்தலிலும் பெற முடியவில்லை

எவ்வாறாயினும் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இரண்டு நியாயமான பாராளுமன்ற பிரதிநித்துவத்தில் ஒன்று ஆளும் தரப்பு சார்பாக பறிபோயுள்ளது என்பது மட்டும் உண்மை இந்த வகையில் கண்டி மாவட்டத்தில் 13 வீதம் மக்கள் தொகையை கொண்ட முஸ்லிம்கள் நான்கு பாராளுமன்ற பிரதிநிதிகளை சரியாக சிந்தித்து பெற்றுள்ளார்கள் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் திருகோணமலை மாவட்டம் போன்று செறிவாக வாழவில்லை அக்குரனையில் மட்டும்தான் செறிவாக வாழ்கின்றார்கள் ,கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் 21 பிரதேச செயலாளரர் பிரிவுகளில் சிதறி வாழ்கின்றார்கள் எனிலும் அவர்களின் வாக்குகள் சிதறி போகவில்லை கண்டி மாவட்டத்தில் களம் இறங்கிய நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது திருகோணமலை மாவட்டம் முஸ்லிம்களுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு

மாவட்டத்தின் சிறுபான்மை வேட்பாளர்கள் இருவர் வெற்றி பெற்றிருப்பது அவர்களின்  ஒற்றுமையை காட்டுகின்றது முஸ்லிம் வேட்பாளர்களின் தேல்வி முஸ்லிம் வாக்காளர்களின் ஒற்றுமை இன்மையை காட்டுகின்றது முஸ்லிம் வாக்குகளை சிதறடிப்பதற்காக செய்யப்படும் அரசியல் நகர்வுகளை சம்மந்த பட்டவர்கள் சரியாக ,சரியான நேரத்தில் இனம் கண்டுகொண்டால் தோல்விகளை தவிர்துகொள்ளமுடியும்

Advertisement

Written by lankamuslim

May 8, 2010 at 9:40 pm

4 Responses

Subscribe to comments with RSS.

  1. கண்டி மாவட்டத்தில் 13 வீதம் மக்கள் தொகையை கொண்ட முஸ்லிம்கள் நான்கு பாராளுமன்ற பிரதிநிதிகளை சரியாக சிந்தித்து பெற்றுள்ளார்கள் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் திருகோணமலை மாவட்டம் போன்று செறிவாக வாழவில்லை அக்குரனையில் மட்டும்தான் செறிவாக வாழ்கின்றார்கள் ,கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் 21 பிரதேச செயலாளரர் பிரிவுகளில் சிதறி வாழ்கின்றார்கள் எனிலும் அவர்களின் வாக்குகள் சிதறி போகவில்லை கண்டி மாவட்டத்தில் களம் இறங்கிய நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது திருகோணமலை மாவட்டம் முஸ்லிம்களுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு

    rinazeef

    May 8, 2011 at 2:07 pm

  2. இதிலிருந்து விளங்கிகொள்ளவேண்டியது நம் திருகோணமலை முஸ்லிம்கள் ஒற்றுமையின்மை. வாக்களிக்கும் முக்கியத்துவம் உணரப்படவில்லை. இனிமேலாவது நாம் புரிந்துகொண்டு வாக்கை சிதறவிடாது எல்லோரும் ஒற்றுமையாக சிறந்த முஸ்லிம் தலைவர்களை உருவாக்குவோம்.

    rifas

    May 11, 2011 at 11:11 am

  3. முக்கியமாக கூற வேண்டியது என்னவென்றால் திருமலை மாவட்ட முஸ்லிம்கள் மொத்தமாக இல்லாது கிண்ணியா முஸ்லிம்கள் மட்டும் ஒன்று பட்டாள் போதும் இன்ஷா அல்லாஹ் இரண்டு பாராளமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்யலாம் இது கிண்ணியா மக்கள் அறிந்த உண்மை

    கடந்த பாராளமன்ற தேர்தலில் எமது முஸ்லிம் வாக்காளர்கள் பலர் பணத்தை கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்பதை எடுத்து காட்ட …-வேறு- வேட்பாளர்களின் பின்னால் குடை பிடித்துகொண்டு சென்றதை நம் கண்களால் கண்டோம் இத்தகையவர்கள் இருக்கும் வரை எமது இலக்கு நிறைவேறாது முக்கியமாக திருமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மிகச் செறிவாக வாழும் கிண்ணியாவையும் அங்கு வாழும் முஸ்லிம்களையும் பயப்படாமல் குற்றம் கூறலாம்.

    இது அவர்களின் பிழை என்பதை அவர்களே அறிவார்கள் ஆனால் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை பேண மறுத்த இவர்கள் இனியாவது முஸ்லிம் என்ற வகையில் சுயமாக சிந்தித்து செயல் பட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய வேண்டும். இந்த இழப்பு இம்முறையோடு இல்லாமல் போக அனைத்து முஸ்லிம்களும் சுய சிந்தனையுடன் சமூக பற்றுடன் நடந்துகொள்ள அல்லாஹ் அருள் பாலிப்பானாக ஆமீன்.

  4. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    ******1
    பகுதி 2. புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு.
    மன்னிப்போம் மறக்கமாட்டோம். புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை. புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
    பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்?……..
    *********************************************************************************

    2. *******
    பகுதி 1. ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள்.

    மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) – (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********

    vanjoor

    January 6, 2012 at 7:50 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 67 other followers