Archive for May 8th, 2010
மலே வீதியில் கட்டிடங்கள் உடைக்கப்பட்டுள்ளது
கொழும்பு 02 மலே வீதியில் Slave Island பகுதியில் சட்டத்துக்கு புறம்பான முறையில் கட்டபட்டுள்ளதாக தெரிவிக்கபடும் கட்டுமானங்களை இன்று இராணுவமும் , போலிசும் இணைந்து அவற்றை உடைக்கும் பணியில் இறங்கியபோது அங்குள்ள பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் சிறு மோதல் ஏற்பட்டுள்ளது உடைக்கபட்ட கட்டிடங்கள் சட்ட பூர்வமாக கட்டபட்டவை என்று அதை கட்டியவர்கள் கூறியுள்ளனர் கொழும்பு , மற்றும் கண்டி நகர பகுதிகளில் அமைக்கபட்டிருந்த நடை பாதை வியாபார கடைகள் அகற்றப்பட்டுவருகின்றமை குறிபிடதக்கது பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து இவற்றை அகற்றினர். மலே வீதியில் 20 குடியிருப்புகளில் வசித்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் Read the rest of this entry »
திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களும் பாராளுமன்றமும்

M. ஷாமில் முஹம்மட்
|
திருகோணமலை மாவட்ட மக்கள் தொகையும் , வாக்காளர்களும் |
||||
| இனம் | மக்கள் தொகை | வாக்காளர்கள் | பெற்ற ஆசனங்கள் | |
|
முஸ்லிம் |
15,1692 (45.4%) | 100,000 | 01 | |
|
தமிழ் |
95,652 – (28.6%) | 80,000 |
01 |
|
|
சிங்களம் |
84,766 -(25.4%) | 60,000 | 02 | |
165 கும் அதிகமான மஸ்ஜிதுகளும் ,90 கும் அதிகமான முஸ்லிம் பாடசாலைகளை கொண்ட மாவட்டம் திருகோணமலை மாவட்டம் இங்கு 63 வருட காலமாக தொடர்ந்தும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்க பட்டுவருகின்றது அதிலும் ஆளும் தரப்பு பிரதிநிதித்துவத்தை
பெற்றுவந்த முஸ்லிம் அரசியல் பாரம்பரியம் என்று குறிபிடலாம் இந்த முறை சற்று வித்தியாசம் எனிலும் இந்த 7 ஆவது பாராளுமன்ற தேர்தலிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்க பட்டுள்ளது திருகோணமலை மாவட்டத்தில் 1947 ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்க பட்டுவருகின்றது
திருகோணமலை முஸ்லிம் அரசியல் இலங்கை மக்கள் தொகை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் 2007 ஆம் ஆண்டின் புள்ளி விபரப்படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3 இலட்சத்து 34 ஆயிரத்து 363 பேர் வாழ்கின்றார்கள் . இதில் மாவட்டத்தின் பெரும்பான்மையான முஸ்லிம்கள் 15,1692 (45.4%) பேரும் தொகையில் இரண்டாம் நிலையில் இருக்கும் தமிழர்கள் 95,652 (28.6%), பேரும் மாவட்டத்தின் விரிவாக பார்க்க.. Read the rest of this entry »
இத்தாலியில் கைதுசெய்யப்பட்டவர்கள் அரசின் உளவாளிகளா ??
அல்லது அரசுக்கு இராஜதந்திர நெருக்கடியை கொடுக்க செய்யப்பட்ட நாடகமா ?? – அகதி அந்தஸ்து கோரி வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இத்தாலிய பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட 9 தமிழ் இன வாலிபர்கள் என்று தெரிவிக்க படும் நபர்கள் தாம் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பிரதான அதிகாரியின் இலக்கு ஒன்றுக்காக இத்தாலி வந்ததாக கூறியுள்ளதாக தெரிவிக்க படுகின்றது
இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் பிரதானியொருவரின் அனுமதியுடன், கைதுசெய்யப்பட்டவர்கள் இத்தாலிக்கு அனுப்பட்டதாக கூறப்படும் தகவல் கொழும்பில் ஊடக மட்டங்களில் பரவியுள்ள நிலையில் தாம் முற்றாக அதனை நிராகரிப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க Read the rest of this entry »













