Archive for April 30th, 2010
நாடு கடந்த புலிகளின் தேர்தல் மே – 2

மே மாதம் 2 ஆம் திகதி நடைபெற இருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலில், போட்டியிட உலகின் இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன இதன் படி குறித்த நாடுகளில் இருந்து வேட்பாளர்களை தெரிவு செய்யும் வேலைகள் நிறைவுக்கு வருகின்றது உதாரணமாக சுவிஸ் நாட்டில் இருந்து பத்துப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு 7 தேர்தல் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன . இந்த ஏழு தொகுதிகளிலும், 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிகின்றது . இத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் இதுவரை தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனுக்கள் யாவும், சுவிஸ் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் ஆணையாளார் திரு. கார்த்திகேயபிள்ளை ஆனந்தநடராசா -யாழ்ப்பாணம் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகங்களின் முன்னாள் விரிவுரையாளர் – அவர்களால் பரிசீலனை செய்யப்பட்டது. அவரது பரிசீலனையின் அடிப்படையில், 19 வேட்பாளர்கள் இத் தேர்தலில் போட்டியிடத் தகுதியுடையவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளதக தெரிய வருகின்றது .
டென்மார்க்கில் 3 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக டென்மார்க் 3 தேர்தல் தொகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளதுடன் 30 இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது
இவர்கள் குறிப்பிடும் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான முதல் அரச அவையின் பிரதிநிதிகளாக 135 பேர் இருப்பர் இதில் 115 பேர் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர் ஏனைய 20 பேர் தெரிவு செய்யப்பட்ட 115 பிரதிநிதிகளால் தெரிவு செய்யபடுவர் என்று உருத்திரகுமாரின் அறிக்கை சொல்கின்றது









