புதிய அமைச்சரவை முறைமை மாவட்ட ரீதியில் வழிநிலை அமைச்சர்கள் ?

புதிய அரசில் 35 இற்கும் குறைவான அமைச்சர்களே இடம்பெறுவர் என்ற தக வல் ஆளும் தரப்பின் உயர் பீடத்தினால் வெளியிடப்பட்டு வருகின்ற அதேவேளை, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு மேலதிகமாகப் பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் கள், வழிநிலை அமைச்சர்கள் என பல தரத்தில் பல மட்டங்களில் அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆராய்ந்து வருகின்றார் என சில செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு மேலதிகமாகவே பல தரங்களில் அமைச்சர்கள் நியமிக்கப்படவிருக்கின்றார் கள். அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சரின் கீழ் சில பிரதி அமைச்சர்கள் அல்லது வழி நிலை அமைச்சர்கள் நியமிக் கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.
மாவட்ட ரீதியில் வழிநிலை அமைச்சர்கள் அதிலும் வழிநிலை அமைச்சர்கள் மாவட்ட ரீதியில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சின் நடவ டிக்கைகள் அந்தந்த மாவட்டங்களில் சீராக முன்னெடுக்கப்படுகின்றமைக்கு இவர்களைப் பொறுப்பாக்குகின்றமை குறித்து ஜனாதிபதி ஆலோசித்து வருகின் றார் எனவும் கூறப்படுகின்றது. இதேசமயம், சர்வதேசத்தின் நவீன முறைமைப் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாக இலங்கையை மாற்றுவதற்காக இது சம்பந்தமான விசேட தொழில்நுட்ப அமைச்சுக்களையும் உருவாக்க ஜனாதிபதி திட்டமிட்டிருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.







