Lankamuslim.org

One World One Ummah

Archive for April 4th, 2010

தீயில் எரிக்கபடும் முஸ்லிம் சகோதரத்துவம்

leave a comment »

காத்தான்குடிப் பகுதியில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாதர் அணிக்கான கிழக்கு மாகாண அமைப்பாளரான  ஸல்மா ஹம்ஸாவின் பிரசார வாகணம் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது இதில் வேன் முற்று முழுதாக எரிந்து சாம்பாலாகியுள்ளது.

சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான குறித்த வாகணம் காத்தான்குடி சேர்மன் இப்றாகிம் சதுக்கத்திலுள்ள குறித்த மாநகர் அமைப்பாளரின் வளவில் அதிகாலை ஒரு மணியளவில் நிறுத்திவைத்து விட்டு உறக்கத்தில் இருந்த வேளை இனம் தெரியாத குழுவினரால் எரித்து முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது

குறித்த மாதர் அமைப்பாளர் இப் பகுதியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் பிரபல வேட்பாளரும் முன்னாள் அமைச்சரின் சகோதரியென்றும், இத் தேர்தலில் அவருக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்து வருபவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Written by lankamuslim

April 4, 2010 at 9:21 pm

ஸாராஹ் மாலினி பெரேரா என்ற முஸ்லிம் எழுத்தாளரும் தடுப்பு காவலும்

with one comment

M.ஷாமில் முஹம்மட்

பௌத்த மத கடவுள் மீது சிறு நீர் கழித்து, அதை உடைத்து தகர்த்தவர்கள் தேச தலைவர்கள் பௌத்த மத கோட்பாடுகளை ஒப்பிட்டு ஆய்வு செய்த எழுத்தாளர் தேசதுரோகி வாழ்க இலங்கை ஜனநாயகம்

சில திங்களுக்கு முன்னர் தம்புள்ள பிரதேசத்தில் ‘இளமல்பொத’ பகுதியில் அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவருமான ஜானக பண்டார தென்னக்கோன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோன் ஆகிய இருவரும் புத்தர் சிலை ஒன்றை தாக்கி சேத படுத்தியதாக சண்டே லீடர் பத்திரிகை தெரிவிக்கின்றது இவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பது குறிபிடதக்கது இது பற்றி மேலும் தெரிவிக்கையில் இரு பாராளுமன்ற ஆளும் தரப்பு வேட்பாளர்கள் மத்தியில் ஏற்பட போட்டியின் விளைவு தென்னக்கோன்களின் ஆதரவாளர்கள் புத்தர் சிலைக்கு அருகில் சிறுநீர் கழித்த பின்னர் அதனை தாக்கி உடைத்துள்ளனர் – புத்தர் சிலையின் தலையும் , ஒரு பக்க காலும் முற்றாக தகர்த்து வீசப்பட்டுள்ளது-என்றும் இந்த புத்தர் சிலை தாக்குதல் சம்பவத்தில் தென்னக்கோனும் நேரடியாக தாக்குதலில் பங்கு பற்றியதாகவும் எனிலும் போலீஸ் அமைச்சர் தென்னக்கோனின் சில ஆதரவாளர்களை ஒரு நாள் மட்டும் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்து மறுநாள் எந்த குற்ற சாட்டுகளும் இன்றி விடுதலை செய்ததாகவும் பௌத்த தேரர் ஒருவரை ஆதாரமாக கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

April 4, 2010 at 4:09 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers