Archive for April 2010
நாடு கடந்த புலிகளின் தேர்தல் மே – 2

மே மாதம் 2 ஆம் திகதி நடைபெற இருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தலில், போட்டியிட உலகின் இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன இதன் படி குறித்த நாடுகளில் இருந்து வேட்பாளர்களை தெரிவு செய்யும் வேலைகள் நிறைவுக்கு வருகின்றது உதாரணமாக சுவிஸ் நாட்டில் இருந்து பத்துப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கு 7 தேர்தல் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன . இந்த ஏழு தொகுதிகளிலும், 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிகின்றது . இத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் இதுவரை தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனுக்கள் யாவும், சுவிஸ் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல் ஆணையாளார் திரு. கார்த்திகேயபிள்ளை ஆனந்தநடராசா -யாழ்ப்பாணம் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகங்களின் முன்னாள் விரிவுரையாளர் – அவர்களால் பரிசீலனை செய்யப்பட்டது. அவரது பரிசீலனையின் அடிப்படையில், 19 வேட்பாளர்கள் இத் தேர்தலில் போட்டியிடத் தகுதியுடையவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளதக தெரிய வருகின்றது .
டென்மார்க்கில் 3 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக டென்மார்க் 3 தேர்தல் தொகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளதுடன் 30 இடங்களில் வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது
இவர்கள் குறிப்பிடும் இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான முதல் அரச அவையின் பிரதிநிதிகளாக 135 பேர் இருப்பர் இதில் 115 பேர் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர் ஏனைய 20 பேர் தெரிவு செய்யப்பட்ட 115 பிரதிநிதிகளால் தெரிவு செய்யபடுவர் என்று உருத்திரகுமாரின் அறிக்கை சொல்கின்றது
14 வயது பாடசாலை மாணவியை கற்பழித்த சீனப் பிரஜை

புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் சம்பவம்
புத்தளம் மாவட்டத்திலுள்ள நுரைச்சோலைப் பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜையொருவர் புத்தளம் விசேட பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயதுச் சிறுமியான பாடசாலை மாணவியை கற்பழித்த குற்றத்திற்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குறித்த சிறுமையை நாசுக்காக பேசி மூடிய லாரி ஒன்றினுள் ஏற்றி கற்பழித்தாக தெரிவிக்க படுகின்றது
32 வயதான இந்த சீனப் பிரஜை மின்சார தொழில் பிரிவில் வேலை செய்பவர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் கோபமுற்றுள்ள அந்த பகுதி மக்கள் சீனர்களைத் தாக்கலாம் என்ற அச்சத்தில் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு , கண்டி நகர நடை பாதை கடைகள் அகற்றப்பட்டுள்ளன

கொழும்பு , மற்றும் கண்டி நகர பகுதிகளில் அமைக்கபட்டிருக்கும் நடை பாதை வியாபார கடைகள் அகற்றப்பட்டுள்ளது கண்டி நகர பகுதிகளில் அமைக்கபட்டிருக்கும் நடை பாதை வியாபார கடைகள் நேற்று முன்தினமும் புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் நடைபாதைகளில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் நேற்று இரவும் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளன. இதனால் இரு நகரங்களிலும் வியாபாரத்தில் ஈடுபட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி நகர பகுதிகளில் அமைக்கபட்டிருந்த கடைகளை முன்னறிவுப்பு செய்தபின்னர் கண்டி நகர சபையாலும் , கொழும்பு ஒல்கொட் மாவத்தை கடைகள் எந்த முன்னறிவுப்பும் இன்றி இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளன என்பதுடன் அவற்றை யார் அகற்றினார்கள் என்பது இன்னும் வியாபாரம் செய்தவர்களுக்கு அறிவிக்கபடவில்லை என்று தெரிவிக்கபடுகின்றது
அமெரிக்க படுகொலையின் மற்றுமொரு புதிய பதிவு

ஈராக்கின் வட பகுதி பிரதேசம் ஒன்றை அமெரிக்க ஆக்கிரமிப்பு படையும் , ஈராக்கிய அமெரிக்க கூலிப்படைகளும் இணைந்து சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டன , இதன் போது பல பொதுமகள் ஆக்ரமிப்பு படைகளால் சுட்டு கொல்லபட்டனர் என்று தெரிவிக்க படுகின்றது இந்த சம்பவத்தில் ஒருவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட தனது மனைவிக்கு மருந்துகளை வாங்கி தனது வீட்டுக்கு அவசரமாக போக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது ஆனால் அவரின் தேவைதையை மறுத்த அமெரிக்க ஆக்கிரமிப்பு படை தனது வீட்டுக்கு போக முற்பட அந்த குறித்த நபரை பலதடவைகள் சுட்டு கொலை செய்துள்ளது பலதடவைகள் சுட்டு கொலை செய்யும் காட்சி பதிவு செய்யப்பட்டு தற்போது வெளிவந்துள்ளது வீடியோ விரிவாக பார்க்க…
சாய்ந்தமருது தனியான பிரதேச சபை கோரிக்கை
சாய்ந்தமருது பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையான தனியான பிரதேச சபை என்ற கோரிக்கை கடந்த பொதுத் தேர்தலின் போது அதிகமாக சாய்ந்தமருது பிரதேச தேர்தல் மேடைகளில் பேசப்பட்ட விடையம் இந்த வகையில் சாய்ந்தமருதுக்கான தனி பிரதேச சபை கோரிக்கை முன் வைத்து அமைச்சர் அதாவுல்லாவுக்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழு 01 இறுதி நேரத்தில் தனது ஆதரவை அமைச்சர் அதாவுல்லாவுக்கு வழங்கியது மேலும் சில பொது அமைப்புக்களும் தமது ஆதரவு வழங்கி இருந்தமை சுட்டிக்காட்டபடுகின்றது . தேர்தலில் வெற்றி பெற்ற அதாவுல்லா மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது சாய்ந்தமருது தனியான பிரதேச சபை கோரிக்கையை இலகுவாக நிறைவேற்றுவார் . என்று பிரதேச மக்கள் நம்பிக்கை தெரிவிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்
இலங்கைக்கும் அவசியமான சித்திரவதைக்கு எதிரான சட்டம்

இந்தியாவில் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யும் அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா இந்திய மக்களவையில் கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமின்றி தனி நபர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டாலும் 10 ஆண்டுகள் வரை இதன் மூலம் சிறை தண்டனை வழங்க முடியும் என்று தெரிவிக்க படுகின்றது .இந்த சட்ட மசோதாவை உள்துறை இணை அமைச்சர் முல்லபள்ளி ராமச்சந்திரன் தாக்கல் செய்துள்ளார் . சித்திரவதை , துன்புறுத்துதல், அவமரியாதை செய்தல் போன்ற விடையங்களுக்கு தண்டனை அளிப்பதற்கான ஐ.நா. உடன்படிக்கையில் 1997-ம் ஆண்டு இந்தியா கையெழுத்திட்டுள்ளது . அதன்படி எது சித்திரவதை, என்பதை நிர்ணயிக்கும் விளக்க கோவை உருவாக்கப்பட்டு அதை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . இதன் பிரகாரம் இந்த புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது Read the rest of this entry »
ஊடகவியலாளர்களே எனது தலைவர்கள்: அமைச்சர் மேர்வின் சில்வா
யார் என்ன சொன்னாலும், தன்னை ஊடகத்துறை பிரதி அமைச்சராக நியமித்திருப்பதற்காக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஊடகத்துறை பதில் அமைச்சர் மேர்வின் சில்வா, ஊடகவியலாளர்களே தனது தலைவர்கள், இனி ஊடகவியலாளர்களது பாதுகாப்பை மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரது பாதுகாப்பையும் தான் பொறுப்பேற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார் இவரின் பிரதி ஊடகத்துறை அமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்டமைக்கு எல்லைகளற்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.மேர்வின் சில்வாவை அவரது அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறும் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம், சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிபிடதக்கது Read the rest of this entry »
எனது வெற்றி தமிழ் பேசும் மக்களின் வெற்றி: டாக்டர் ஜெயலத் ஜயவர்தன
டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா: கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்யிட்டு பாராளுமன்றம் தெரிவான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா தனது வெற்றி தமிழ் போசும் மக்களின் வெற்றி என்று தெரிவித்துள்ளார் மீண்டும் பாராளுமன்றம் தெரிவான இவர் விடுத்துள்ள செய்தியில் மீண்டும் நான் பாராளுமன்றம் தெரிவு செய்யபடுவதற்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கிய கம்பஹா மாவட்ட தமிழ் பேசும் இதையன்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன் என்றும் எனது வெற்றிக்கு காரணம் மாவட்ட தமிழ் பேசும் மக்கள்தான் என்றும் அவர்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் தான் பாராளுமன்றம் தெரிவாயிருக்க முடியாது என்றும் இந்த ஒத்துழைப்புக்கு கைமாறாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக அரும்பாடுபடுவேன் என்றும் அவர் விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவர் மனித உரிமைகள் செயல் பாட்டாளரும் , முன்னால் அமைச்சரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜெயலத் ஜயவர்தன அன்மை காலமாக இஸ்லாம் பற்றி கற்பதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்க படுகின்றது தற்போது இவர் நவீன விஞ்ஞானத்தையும் இஸ்லாமிய கோட்பாடுகளையும் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் இந்த நூலுக்கு “ வைத்திய விஞ்ஞானம் அங்கீகரித்துள்ள இஸ்லாத்தின் உண்மைகள்” -Truth of Islam which is being proved medically -என்ற தலைப்பில் குறித்த நூலை எழுதியுள்ளார் என்பது குறிபிடதக்கது
30 வருடங்களின் பின் நாடெங்கும் சனத்தொகைக் கணக்கெடுப்பு

முப்பது வருடங்களுக்குப் பின்னர், நாடுமுழுவதிலும் சனத் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2011ஆம் ஆண்டு இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள இயக்குநர் நாயகம் டி.பி.பி.எஸ். விஜயரத்ன தெரிவித்தார்.
1981ஆம் ஆண்டு நாடு முழுவதும் சனத்தொகை கணக்கெடுப்பு முதல்முதலில் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 10 வருடங்களுக்கு முன்னர் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் கணக்கெடுக்கப்பட்டன. Read the rest of this entry »
G-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு

எதிர்வரும் மே மாதம் 17ம் திகதி ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் G-15 நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ளது 989ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த 18 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.இதன் முதல் மகாநாடு 1990 இல் மலேசியாவில் நடைபெற்றது
இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது ஜனாதிபதி தனது கடந்த பதவிகாலத்தில் ஈரானுக்கு இரண்டு தடவைகள் விஜயம் செய்துள்ளார் என்பது குறிபிடதக்கது இந்த முறை விஜயத்தின் போது ஈரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். G-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இலங்கைக்கு கிடைக்கப் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. என்பதுடன் இரண்டு நாள் நடைபெறவுள்ள மாநாட்டின் போது தலைமைப் பதவி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. ஈரான் பல வழிகளிலும் இலங்கை பொருளாதரத்துக்கு உதவி வரும் நாடு என்பது இலங்கையின் தேயிலையை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு என்பதும் குறிபிட தக்கது
Lankamuslim.org இன் சிறப்பு பதிவுகள் :
- திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களும் பாராளுமன்றமும்
- அரசியல் விழிப்புணர்வு அது புத்தளத்தின் அவசரத் தேவை !!
- முல்லைத்தீவு முஸ்லிம்கள் மறக்கப்பட்ட ஒரு சமூகம் M. ஷாமில் முஹம்மட்
- அல் குர்ஆனை அரசியல் களத்தில் தவறாக பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும்
- ஸாராஹ் மாலினி பெரேரா என்ற முஸ்லிம் எழுத்தாளரும் தடுப்பு காவலும்
- வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனியான சட்ட கொள்கை ஒன்றின் ஊடாக
- யாழ் குடாநாட்டில் 20 கும் அதிகமான மஸ்ஜிதுகளின் இன்றைய நிலை !
- மேற்கு பயங்கரவாதம் இஸ்லாமிய விஞ்ஞானத்தை ஊதி அணைக்க முனைகிறது!
- இஸ்லாத்தை பற்றி வரலாறு படைத்தவர்கள் என்ன கூறியுள்ளார்கள்
- யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமும் பாகம்-1
- வடமாகாண முஸ்லிம் அகதி வாழ்வுக்கு வயது 19 முடிந்து 20 ஆரம்பம் !
- முஸ்லிம்களின் ஒற்றுமை – “நேர் அணுகுமுறை”( Positive approach) M.ஷாமில் முஹம்மட்
- மேலாதிக்க போட்டி இலங்கை முஸ்லிம்களை பாதிக்குமா ? M. ஷாமில் முஹம்மட்
- யாழ்ப்பாண முஸ்லிம்கள் சம்மந்தமாக எம் . ஷாமில் முஹம்மட் ஆங்கிலத்தில் …
- இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுடன் இலங்கையின் உறவு
- புலிகளால் மறைக்கப்பட்ட வரலாறும் முஸ்லிகளால்..எஸ். எம்.எம்.பஷீர்
- பலபக்க அடிகளை சுமக்க முஸ்லிம் உம்மாஹ் தயாராக வேண்டும்: M.ஷாமில் முஹம்மட்
- “முஸ்லிம்” – விட்டுகொடுக்க முடியாத எமது அடையாளம்: M.ஷாமில் முஹம்மட்
- ஆகஸ்ட் 3-இன்று 19 ஆம் சுஹதாக்கள் தினம் M. ஷாமில் முஹம்மட்
- கிலாபா- உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்துவது கட்டாய கடமை
-
ஒருவருடத்தின் பின்னர் உப மாநகர சபை முதல்வராக யாழ் முஸ்லிம்?
-
கல்முனை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு நிலங்களில் அத்துமீறி வாழ்கிறார்களா?
-
மதுரங்கேணி தமிழ் முஸ்லிம் விவசாய காணி பிரச்சினை!
புதிய பிரதமர் கம்பளை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவன்
கம்பளை சாஹிரா கல்லூரி என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த பெயர் இலங்கையின் புதிய பிரதமர் கம்பளை சாஹிரா கல்லூரியின் பழைய மாணவன் என்று தெரிவிக்க படுகின்றது கம்பளை சாஹிரா கல்லூரி இலங்கை முஸ்லிம் நிறுவனங்களில் குறிபிடதக்க ஒன்றாகும்.
கொலையும் விலையும் !

எஸ்.எம்.எம்.பஷீர்
“சுட்டதென்னவோ அவர்களைத்தான்
விழுந்ததென்னவோ நாங்கள்தான்”
ஏ. கந்தசாமி
அண்மையில் பாராளுமன்றத்துக்கு ஐக்கிய தேசிய முன்னணியில் யாழ்ப்பான மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று பாராளுமன்றம் செல்லும் முதல் தமிழ் பெண்மணி விஜயகலா மகேஸ்வரன் தனது கொல்லப்பட்ட கணவனின் அரசியல் வழியில் கட்சியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றிருக்கிறார். அதேபோல் கம்பஹா மாவட்டத்தில் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளை தனது கணவனின் வழியில் வழியில் போட்டியிட்டு வெற்றி ஈட்டியுள்ளார். ஆனால் இலங்கை வரலாற்றில் வேறு சில தமிழ் பெண்மணிகளும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்கள். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில்
Read the rest of this entry »
16 வது சார்க் உச்சி மாநாடு 28,29 ஆம் திகதிகளில் திம்புவில்
16 வது சார்க் உச்சி மாநாடு பூட்டான் தலைநகரான திம்புவில் 28 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை தூதுக்குழு திங்கள் அன்று பூட்டான் புறப்பட்டுச் செல்கிறது.
சார்க் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு 25 ஆண்டுகள் நிறைவு இதுவாகும். அமைப்பின் முதலாவது உச்சிமாநாடு பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் 1985 டிசம்பரில் நடைபெற்றது. 16 வது உச்சி மாநாடு நாளை மறுநாள் பூட்டானில் ஆரம்பமாகிறது. பூட்டான் உச்சிமாநாட்டை பொறுப்பேற்று நடத்துவது இது முதல் முறையாகும்.
விரிவுரையாளராக தெரிவு செய்யப்பட்டால் இஸ்லாமிய உடையை தவிர்க்க தயாரா ?

பேராதனை பல்கலை கழக சமூகவியல் பீடத்திற்கு விரிவுரையாளர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வில்
பேராதனை பல்கலை கழக சமூகவியல் பீடத்திற்கு விரிவுரையாளர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வில் இஸ்லாமிய உடையான ஹிஜாப் பற்றியும் அந்த இஸ்லாமிய உடையை தவிக்க முடியுமா என்பது பற்றியும் தேர்வில் கலந்து கொண்ட முஸ்லிம் பெண்களிடம் வினவபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது
பேராதனை பல்கலை கழக சமூகவியல் பீடத்திற்கு தற்காலிக ஆங்கில , தமிழ் மொழி விரிவுரையாளர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வில் இரு முஸ்லிம் பெண்களும் ஒரு தமிழ் பெண்ணும் அழைக்கபட்டனர் நேர்முக தேர்வில் முடிவில் மேலதிக தகமையாக நிபந்தனை ஒன்றை முன்வைத்து அதற்கு தனிப்பட்ட முறையில் தீர்வுக்கு வரமுடியாவிட்டால் பெற்றோரின் சம்மதத்துடன் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர் – அந்த கேள்வி இவ்வாறு அமைந்துள்ளது ‘விரிவுரையாளராக தெரிவு செய்யப்பட்டால் இஸ்லாமிய உடையை தவிர்க்க தயாரா’ ? என்பதாகும் விரிவாக பார்க்க..
Read the rest of this entry »
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கூட்டு கட்சிகள் சவால் விடுக்கவேண்டாம்

புதிய அமைச்சரவை நியமனத்தின் போது மலையக மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அமைச்சுப் பதவி வழங்கப்படாமையினாலேயே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சுப் பதவியைப் பெறவில்லையெனெ இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்திருந்தார் அதே வேளை தேசியப் பட்டியலில் தமது கட்சிக்கு 2 ஆசனங்கள் தருவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த போதும் இறுதியில் ஒரு ஆசனம் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகக் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியிருந்தார் ,
இந்த நிலையில் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா; “ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடைத்த 144 ஆசனங்களில் 124 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே கிடைத்துள்ளன. இதை வைத்து சுதந்திரக் கட்சிக்குத் தனியாக ஆட்சியமைக்க முடியும். எனினும் எமக்கு அப்படியான எண்ணம் கிடையாது. நாம் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து மேலும் ஆட்களை இணைத்துக் கொள்ளவே நாம் பார்க்கிறோம். எனினும் சுதந்திரக் கட்சியின் பலத்துக்கு யாராலும் சவால் விடுக்க முடியாது என்று கூறியுள்ளார் Read the rest of this entry »
யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பார்ப்புகளும் ஒரு சிறு அலசல்

எஸ்.எம்.எம்.பஷீர்
இன்று இலங்கையில் அமைச்சர்கள் துணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியுடன் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிட்டு அக்கூட்டணியை வெற்றியீட்ட தாங்களும் அதிகம் பாடுபட்டதாக கூறும் சுதந்திரக் கட்சியினரரும் அதன் பங்காளிக்கட்சிகளும் சிலர் அமைச்சர் நியமனங்கள் தேசிய பட்டியல் எம் பீ நியமனங்கள் தொடர்பில் தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக அல்லது தாம் புறக்கனிக்கப்பாட்டிருப்பதாக குறை கூறும் செய்திகளும் வந்த வன்னமுள்ளன. என்றாலும் இதில் விமல் வீரவன்ச வழக்கம்போல் மிகவும் வெளிப்படையாக தமது கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரான முசம்மிலுக்கு எம்.பீ பதவி வழங்கப்படவில்லை என்று தமது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். அவரது எதிர்ப்பில் முன்னாள் சமாதானச் செயலாளர் ராஜீவ் விஜயசிங்கவுக்கு எம் பீ பதவி வழங்கப்பட்டதை ஒரு பகிடியாக கூறி விலைக்கு வாங்கப்படாத அரசியல் ரீதியாக அதிகம் தீவிரமாக பங்காற்றிய முசம்மிலுக்கு எம்.பீ பதவி வழங்கப்படாதது முறையற்றது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். விரிவாக பார்க்க….
37 புதிய அமைச்சர்களும் ,39 பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் 37 புதிய அமைச்சர்களும் ,39 பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர் இதுவரையும் கிடைத்த தகவல்களின் பிரகாரம் 03 முஸ்லிம் அமைச்சர்களும் -01முஸ்லிம் பிரதி அமைச்சரும் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்
அமைச்சர்கள்-03
ஏ.எச்.எம்.பௌசி இடர்முகாமைத்துவ அமைச்சர்-Disaster Managemenet
ரிஷாட் பதியுதீன் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு- Industrial Development
ஏ. எல் .எம் . அதாவுல்லா மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
பிரதி அமைச்சர்கள்-01
எம் .எல் .எம் .ஹிஸ்புல்லா- சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரம்
அமைச்சர்கள் முழு விபரம்
Read the rest of this entry »
புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்குகின்றது

புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட போதிலும், அதன் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகள் தொடர்வதாக கருத்துத் தெரிவித்துள்ள பிரேசிலுக்கான இலங்கை தூதுவர் ஏ. எம் .ஜே . சாதிக் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ச்சியாக இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் மூன்று முதல் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் காணப்படலாம் என அவர் தெரிவிக்கின்றார் . தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான கப்பல்கள் போதைப் Read the rest of this entry »
அரசின் 144 ஆசனங்களுடன் மேலும் 2 ஆசனங்கள் இணைகின்றது

அரசியல் கள நிலவரம்
அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் 4 ஆசனங்கள் மட்டும்தான் தேவை ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் பிளவு மேலும் இரு ஆசனங்களை அரசு பெற்று ஆசனங்களின் எண்ணிக்கையை 146 ஆக உயர்த்துகின்றது.ஆளும் தரப்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மேலும் இரு ஆசனங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்க படுகின்றதுஅரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு 150 ஆசனங்களை தனதாக்க வேண்டும்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் குறிவைத்திருந்தது எனிலும் தேசிய பட்டியலுடன் 144 ஆசனங்கள் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கு இன்னும் 6 உறுப்பினர்கள் அரசுடன் இணைய வேண்டும் என்ற நிலை காணப்பட்டது இன்று கிடைக்கும் தகவல்கள் மேலும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து விலக அரசுக்கு தமது ஆதரவை வழங்கமுடிவு செய்திருப்பதாக தெரிவிக்க படுகின்றது விரிவாக பார்க்க..
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் வரை 40 பேரைக் கொண்ட அமைச்சரவை

புதிய சபாநாயகர் தெரிவு மற்றும் இலங்கையின் 20வது பிரதமராக பதவியேற்றுக்கொண்ட டி. எம். ஜயரட்ன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட 225 உறுப்பினர்களும் இன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள் என்று தெரிவிக்க படுகின்றது . 40 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவை ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் வரை இருக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன . இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 8.45க்கு ஆரம்பமாகவுள்ளது .
புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது

S.M.அப்துல்லாஹ்
புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 18 குறைத்துள்ளது கடந்த பாராளுமன்றத்தில் 25 வரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தமை குறிபிட்ட தக்கது இங்கு தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் அவர்களின் கட்சி , அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் , அவர்களின் பிரதேசம் என்பன கீழ் தரப்பட்டுள்ளது -கடந்த பாராளுமன்றத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பற்றிய விபரங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
| பெயர் | கட்சி | பிரதேசம் | |
| 1. | A.H.M.பௌசி- 51,641 | UPFA | கொழும்பு |
| 2. | A.L.M.அதவுல்லா 36,943 | UPFA | திகாமடுள்ள |
| 3. | H.M.M.ஹாரிஸ் – 44,755 | UNF | திகாமடுள்ள |
| 4. | M.C.M.பைசல் -41,852 | UNF | திகாமடுள்ள |
| 5. | M.L.M.ஹிஸ்புல்லாஹ் 22,256 | UPFA | மட்டகளப்பு |
| 6. | பஷீர் சேகு தாவுத்- 11678 | UPFA | மட்டகளப்பு |
| 7. | ரிஷாத் பதியுதீன் – 37,780 | UPFA | வன்னி |
| 8. | உனைஸ் -12,780 | UPFA | வன்னி |
| 9. | நூர்தீன் மசூர் – 10,870 | UNF | வன்னி |
| 10. | பைசர் முஸ்தபா – 44,648 | UPFA | கண்டி |
| 11. | காதர் ஹாஜி- 54,937 | UNF | கண்டி |
| 12. | ரவூப் ஹகீம்- 54,047 | UNF | கண்டி |
| 13. | R.ஹலீம் – 46,240 | UNF | கண்டி |
| 14. | எஸ் . எம் தவ்பீக்- 23,588 | UNF | திருகோணமலை |
| 15. | கபீர் காசிம் – 48,344 | UNF | கேகாலை |
| 16. | எம் எச் எம் , அஸ்வர் | UPFA | தேசிய பட்டியல் |
| 17. | ஹசன் அலி | UNF | தேசிய பட்டியல் |
| 18. | அஸ்லம் முஹம்மத் சலீம் | UNF | தேசிய பட்டியல் |
கட்சிகளின் தேசிய பட்டியளில் 03 முஸ்லிம்கள் மட்டும்

தேசிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- எம் எச் எம் , அஸ்வர்
ஐக்கிய தேசிய முன்னணி- ஹசன் அலி, அஸ்லம் முஹம்மத் சலீம்
கட்சிகள் தமது தேசிய பட்டியலை அறிவித்துள்ளன இவற்றில் மொத்தமாக மூன்று முஸ்லிம்களின் பெயர்கள் மட்டும் இந்த முறை தேசிய பட்டியலில் உள்ளடக்கபட்டுள்ளது இதன் படி தேசிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- தனது 17 பேர்களை கொண்ட தேசிய பட்டியலில் எம் எச் எம் , அஸ்வரையும்
ஐக்கிய தேசிய முன்னணி- தனது 9 பேர்களை கொண்ட தேசிய பட்டியலில் ஹசன் அலி , மற்றும் அஸ்லம் முஹம்மத் சலீம் ஆகிய இரண்டு முஸ்லிம்களின் பெயர்களை அறிவித்துள்ளன எனிலும் இவை இரண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் சார்பாக அறிவிக்கப்பட்டவை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முஸ்லிம்கள் எவரின் பெயரும் இடம் பெறவில்லை என்பது குறிபிடதக்கது
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வை.எல்.எஸ்.ஹமீட் என்பவரை தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்திருந்த போதும் குறித்த கட்சி சார்பாக எவரும் நியமிக்கப்படவில்லை
கண்டி, திருகோணமலை மாவட்ட- முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம்- 5
![]()
ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்களில் அப்துல்காதர் ஹாஜி 54,937 கூடிய விருப்பு வாக்குகளை பெற்று முதலாவதாகவும் , ரவூப் ஹகீம் 54,047 கூடிய விருப்பு வாக்குகளை பெற்று இரண்டாவதாகவும் தெரிவாகியுள்ளனர்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
பைசர் முஸ்தபா – 44,648 வாக்குகள்- தெரிவானார்
ஐக்கிய தேசிய முன்னணி- UNF
காதர் ஹாஜி- தெரிவானார்- 54,937-வாக்குகள்- தெரிவானார்
ரவூப் ஹகீம்- 54,047-வாக்குகள்- தெரிவானார்
R.ஹலீம் – 46,240வாக்குகள்- தெரிவானார்
திருகோணமலை மாவட்டத்தில் வேட்பாளர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்மந்தன் 24, 488 கூடிய விருப்பு வாக்குகளை பெற்று முதலாவதாகவும் , ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் எஸ் . எம் தவ்பீக் 23,588 கூடிய விருப்பு வாக்குகளை பெற்று இரண்டாவதாகவும் தெரிவாகியுள்ளனர்
ஐக்கிய தேசிய முன்னணி -
எஸ் . எம் தவ்பீக்- 23,588 வாக்குகள்- தெரிவானார்
கண்டி, திருகோணமலை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள்

கண்டி மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3,39819 -வாக்குகள்- 8 ஆசனம்
ஐக்கிய தேசிய முன்னணி 1,92798 -வாக்குகள்- 4 ஆசனம்
ஜனநாயக தேசிய முன்னணி 23,728௮ வாக்குகள்- 0 ஆசனம்
திருகோணமலை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 59,784 -வாக்குகள்- 2 ஆசனம்
ஐக்கிய தேசிய முன்னணி 39,691 -வாக்குகள் 01 ஆசனம்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 33,268 வாக்குகள் 01 ஆசனம்
நாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியேற்றிய புலிக்கட்சித் தேர்தலும்
எஸ்.எம்.எம்.பஷீர்
ஒருபுறம் நாடுகடந்த தமிழீழ தனியரசுக்கான அடிப்படை கோட்பாடுகளை மிதக்கவிட்டு ருத்திரகுமாரன் வகையறாக்கள் படு அமர்க்களமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தேர்தல் நடாத்த முஸ்தீபுகள் செய்துவரும் வேளையில் முஸ்லிம்களுக்கு ஒரு தனியான தாயகம் உண்டு சுயநிர்ணய உரிமையை பிரயோகித்து அவர்கள் பிரிந்து செல்ல முடியும் என்றெல்லாம் போலியாகவேனும் வெளிப்படையாக சொல்கையில் அவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் அரசியல் விஞஞானி இம்தியாஸ் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தை அவர்களின் அரசியல் அடிப்படை உரிமைகளை Read the rest of this entry »
எழுத்தாளர் ஸாராஹ் பிணையில் செல்ல அனுமதி

இணைப்பு-9
ஸாராஹ் மாலினி பெரேரா 30 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட பின்னர் நேற்று பினையில் செல்ல நீதி மன்றம் அனுமதியளித்தது எனிலும் ஸாராஹ் மாலினி பெரேரா நேற்று இரவு முழுவதும் போலீஸ் நிலையம் ஒன்றில் வைக்கபடிருந்தார் என்று தெரிவிக்கபடுகின்றது , ஸாராஹ் தடுப்பு காவலில் உடலியல் வதைகளுக்கு உட்பட்டாரா என்பதை கண்டறிவதற்கான ஒரு பரிசோதனை ஒன்றை சம்மந்த பட்ட அதிகாரிகள் செய்வார்கள் என்று தெரிவிக்க பட்டுள்ளது , இவரின் கடவு சீட்டு நீதி மன்றத்தால் பெற்று கொள்ளப்படுள்ளது அடுத்த விசாரணை மே மாதம் 19 திகதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தொடர்ந்தும் இவரை தடுப்பு காவலில் வைக்க போலீஸ் நீதிமன்றத்தை கோரியபோதும் ஸாராவின் சட்டத்தரணி புத்தகங்களில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது பற்றிய போதுமான அறிவு இன்றி எதிர் தரப்பு வாதாடுவதாக வாதத்தை முன்வைதுள்ளார் இதை கருத்தில் கொண்ட நீதி மன்றம் பிணை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது
எழுத்தாளர் ஸாராஹ் இன்று நீதி மன்றம் கொண்டுவரப்படுவாரா ?

இணைப்பு-8
ஸாராஹ் மாலினி பெரேராவை தடுப்பு காவலில் வைத்திருக்கும் போலீஸ் இன்று கோட்டில் ஆஜர் படுத்தும் என்று எதிர்பாக்க படுகின்றது நேற்று இவர் அதிகாரிகளின் அனுமதியின் பின்னர் நீதிமன்றம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆனால் நேற்று நீதிமன்றம் விடுமுறை என்பதால் மீண்டும் இன்றும் இவர் நீதிமன்றம் கொண்டுவரப்படுவார் என்று தெரிவிக்கபடுகின்றது இவர் தடுப்புகாவலில் வைக்கப்பட்டு நேற்றுடன் 30 நாட்கள் முடிவடைதுள்ளது என்பது குறிபிடதக்கது இவரை விடுவிக்க கோரும் குரல்கள் அதிகரித்து வருகின்றமை குறிபிட தக்கது இவரை விடுதலை செய்ய கோரும்- RELEASE SRILANKAN MUSLIM AUTHOR SARAH MALANIE என்ற பெயரிலான பேஸ் புக் பேஜ் – FaceBook pageஉருவாக்க பட்டு தற்போது 1735 ஆதரவாளர்களை இரண்டு வார காலத்துக்குள் பெற்றுள்ளது என்பதும் ஸாராஹ் பௌத்ததை நிந்திதிருந்தால் அவரை விடுதலை செய்யக்கூடாது என கோரும் பேஸ் புக் பேஜ் 162 ஆதரவாளர்களையும் பெற்றுள்ளது என்பது குறிபிடதக்கது
ஸாராஹ் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட கால பகுதியில் இருந்து கடந்த பத்து வருடங்களாக ஆய்வு செய்தது தொகுத்த கிறிஸ்தவம் , ஹிந்துவம் , இஸ்லாம், பௌத்தம் ஆகிய மதங்கள் பற்றிய ஒப்பிட்டு ஆய்வையும் , தனது சொந்த இஸ்லாம் நோக்கிய பயணம் பற்றிய அனுபவங்களையும் இரண்டு நூல்களா பதிவு செய்தார் இவை பௌத்த மதத்தை நிந்திப்பதாக கூறி 30 நாட்களுக்கு மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்
RELEASE SRILANKAN MUSLIM AUTHOR SARAH MALANIE
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனம் இமாமுக்கு வழங்க படாது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம் இமாம் கடந்த பாராளுமன்றத்தில் த. தே. கூ பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் இந்த முறை தேசியப்பட்டியல் அவருக்கு இடம் வழங்கபடவில்லை என்று அவர் எமது Lankamuslim.org செய்தியாளருக்கு சற்று முன்னர் தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேசிய பட்டியலில் சுமந்திரன் என்ற தமிழ் இன சட்டத்தரணி ஒருவருக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்த அவர் இதற்கு புத்தளத்தில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமிழ் தேசியக் கூட்டமைபுக்கு தமது வாக்குகளை வழங்காமையும் ஒரு காரணம் என்று தெரிவித்தார் .
புலிகளின் காலகட்டத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வடபகுதி முஸ்லிம்களின் பிரதிநிதியாக சட்டத்தரணி இமாம் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த முறை நியமிக்கப்பட்டபோது இவர் இப்படி கூறியிருந்தார் விரிவாக பார்க்க…
நாவலப்பிட்டியில் குண்டர் நடமாட்டம்: ரவூப் ஹகீம் முறைப்பாடு

நாவலப்பிட்டியிலுள்ள சில வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை குண்டர்கள் நடமாடியதாக பொலிஸாரிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாவலப்பிட்டி தொகுதி வேட்பாளருமான ரவூப் ஹகீம் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் நாவலப்பிட்டி பகுதியின் பிரதி பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருப்பதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு அவர் கூறியுள்ளார். பொலிஸாரிடம் தான் முறைப்பாடு செய்ததை அடுத்து, நாவலப்பிட்டி வாக்களிப்பு நிலையங்களிலிருந்து குறித்த குண்டர்கள் விலகிச் சென்றிருப்பதாகவும் ரவூப் ஹகீம் குறிப்பிட்டுள்ளார் .
இன்று நாவலப்பிட்டி திருகோணமலையில் மீள் வாக்குபதிவு
வாக்கெடுப்பு ரத்துச் செய்யப்பட்ட நாவலப்பிட்டி மற்றும் திருகோணமலை ஆகிய வாக்கெடுப்பு நிலையங்களில் மீண்டும் இன்று மு.ப. 7.00 மணி முதல் பி.ப. 4.00 மணிவரை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த மீள் வாக்குபதிவு முடிவுகள் இன்று இரவு அறிவிக்கப்பட்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது வாக்கெடுப்பு தொடர்பாக முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணையாளருக்கு முன்வைப்பவர்கள் கீழ்க்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார். நாவலப்பிட்டி வாக்கெடுப்புப் பிரிவு – 011-2877608 ,திருகோணமலை வாக்கெடுப்புப் பிரிவு – 011-2877609
புத்தளம் நகரில் இஸ்லாமிய ஊழியர் மகாநாடு
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் அகில இலங்கை இஸ்லாமிய ஊழியர் மகாநாடு புத்தளம் நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பக்காவில் நடைபெற்றது இதில் இலங்கையின் அணைத்து பிரதேசங்களில் இருந்தும் சுமார் 1200 வரையிலான அமைப்பின் இஸ்லாமிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்
கடந்த சனி மற்று ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற ஊழியர் மாகாநாட்டில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுள் அக்பர் அவர்களின் ஊழியர்களுக்கான வழிகாட்டல் உரை மற்றும் பல இஸ்லாமிய புத்திஜீவிகளின் உரைகள் என்பனவும் இடம் பெற்றுள்ளன
இந்த ஊழியர் மாகாநாட்டில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் இஸ்லாமிய சஞ்சிகையான அல் ஹஸனாத்-தின் 40 தாவது வருட பூர்த்தியை குறிக்கும் வகையிலான் அல் ஹஸனாத் கண்காட்சியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிபிடதக்கது
அரசாங்கம் முதலில் வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வை முன்வைக்கட்டும்.
அரசாங்கம் முதலில் வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வை முன்வைக்கட்டும். அதன் பிரதிபலிப்பு சாதகங்களை வைத்தே எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒரு தடவை கையைச் சுட்டுக்கொண்டவன் நான். இன்னொரு தடவை அப்படிச் செய்வதற்கு நானொரு முட்டாள் அல்லவெனத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச் சமூகத்தை விலைபேசும் துரோகத்தனத்தை ஒருபோதும் செய்யமாட்டேன் எனவும் உறுதிபடக் கூறியுள்ளார். இன்றைய நிலையில் அரசுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் இடமில்லையெனவும் சுட்டிக்காட்டியிருக்கும் ஹக்கீம் இது நாவலப்பிட்டியில் தனக்கு அளிக்கப்படக்கூடிய வாக்குகளைத் தடுக்கும் ஒரு சதித்திட்டமெனவும் தெரிவித்தார். விரிவாக பார்க்க…
மீள்தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டிய மீள்தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று கூறியது. தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் நேற்று முன்தினம் (17) நள்ளிரவு பூர்த்தியடைந்ததோடு தேர்தல்கள் நாளை நடைபெறவுள்ளன.
பாதுகாப்புக் கடமைகளில் சுமார் இரண்டாயிரம் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் இன்று முதல் (19) வாக்கு நிலையங்களுக்கு செல்ல உள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வாக்குப் பெட்டிகளும் இன்று (19) வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.

நாவலப்பிட்டியிலும் கும்புறுப்பிட்டியிலும் அமைதியான தேர்தல்களை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் திணைக்களம் கூறியது. விசேட அதிகாரிகள் குழு இன்று (19) நாவலப்பிட்டிக்கு செல்கிறது எனவும் திணைக்கள உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
மக்கள் எதுவித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்கும் வகையில் உச்ச பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கடமைகளுக்குப் பொறுப்பான பாதுகாப்பு அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரத்ன கூறினார். 1200 இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு தேர்தல் தினத்தில் மேலும் 800 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை விடுமுறை தினமான நேற்று (18) விசேட வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெற்றதோடு இன்றும் (19) வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் கூறியது. நாவலப்பிட்டியவில் 37 வாக்களிப்பு நிலையங்களிலும் கும்புறுப்பிட்டியவில் ஒரு வாக்களிப்பு நிலையத்திலும் மீள் தேர்தல் நடைபெறுகிறது.
நாவலப்பிட்டிய வாக்குகள் கண்டி மாவட்ட செயலகத்திலும் கும்புறுப்பிட்டிய வாக்குகள் திருகோணமலை கச்சேரியிலும் எண்ணப்படவுள்ளன. கும்புறுப்பிட்டிய வாக்குகள் அதே வாக்களிப்பு நிலையத்தில் எண்ணுவதற்கே முன்னர் தீர்மானிக்கப் பட்டிருந்தது.- தினகரன்
நாடு கடந்த தமிழீழமும் நாக்கு நுனிக்கண் நறுந்தேன் நயவஞ்சகர்களும்
“நாக்கு நுனிக்கண் நறுந்தேனும் நெஞ்சகத்தில்
நீக்கரிய நஞ்சும் நிலைபெற்ற – தீக்குணத்தோன்
இன்சொல் உரைக்கின்றான் என்றவனை நம்பாதே
என்சொலினும் செய்வான் இடர்” –
நாடு கடந்த தமிழீழம் எனும் வெற்றுத் தீர்மானம் பற்றி நமக்கென்ன கவலை என்று வாளாவிருந்தால் இந்த தமிழ் அறிவு சீவிகள் எம்மை சும்மாவிடமாட்டார்கள் போல் தெரிகிறது அதனால்தான் அது குறித்து நாமும் எழுதாமலிருக்க முடியவில்லை
நாடு கடந்த தமிழ் ஈழ கருத்தியலாளர்கள் (கே பீ உட்பட) முதன்முதலில் தற்காலிக தமிழ் ஈழ எண்ணக்கருவை பிரபாகரன் வைகாசியில் வைகுண்டம் ஏகி சுமார் இரு மாதத்தின் பின்னர் வெளியிட்டனர். பிரபல சர்வதேச இன்டர்போல் தேடும் கேடியான கே பியின் பின்பலத்துடன் புலம் பெயர் தமிழ் பேராசிரியர் கூட்டமும் ஓரிரு வெளிநாட்டு புலிசார்பு கல்விமான்களும் சேர்ந்து சுடச்சுட விட்ட அறிக்கையில் தமது எதிர்கால தமிழ் ஈழத்திற்கான நியாயங்கள் முன்வைக்கப்பட்டன. ஹக்கீமின் மொழியில் சொல்வதானால் புலிகள் தோற்கலாம் அவர்களது போராட்ட நியாயங்கள் தோற்கமுடியாது என்பதை இந்த புலன் பெயர் புத்திசீவிகளும் தாங்கள் சீவிக்கும் காலம் வரையாவது பிரபாகரனை கட்டியழ கட்டியம் கூறியதாகவே இந்த அறிக்கை தோன்றியது வழக்கம்போல் தனது மாவீரர் உரைகளில் பிரபாகரன் தவறாது குறிப்பிடும் திம்பு வட்டுக்கோட்டை வரலாறும் கோடிட்டு காட்டப்பட்டிருந்தது இந்த அறிக்கையில் குறிப்பிடும் வரலாறுகளில் நாங்கள் தலையிடவில்லை ஆனால் இந்த அறிக்கை குறிப்பிடும் எந்த விடயமும் எங்களை (முஸ்லிம்களை) உள்ளடக்கவில்லை என்பதுடன் எங்களை ஒரு இனமாக கருதாவிட்டாலும் பரவாயில்லை (அன்றைய காலகாட்டங்களில்) ஒரு தனித்துவ சமூகமாகத்தானும் கண்டு கொள்ளவில்லை. அந்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது விரிவாக பார்க்க…
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வென்ற ஒரு ஆசனத்தை இழக்கும் நிலை ?

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஹுனைஸ் பாருக் 10,850 வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவானார் எனிலும் இவரின் ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்விகண்ட சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வேண்டுவதாக அதற்கு உடன்பட்டால் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனம் ஒன்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வழங்படும் என்றும் தவறும் பட்சத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் வளங்கப்படமாட்டாது என்று அறிய முடிவதாக எமது புத்தள செய்தியாளர் தெரிவிக்கின்றார்
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களைக் கைப்பற்றி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று உலகின் பல பாகங்களிலும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஸ்டிக்க படுகின்றது

ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டு பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஷ்டிக்க உலகம் முழுவதிலும் உள்ள ஆதரவாளர்களை ,பலஸ்தீன பொது அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தது தமது அறிக்கையில் 34 வது பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் முக்கியமான கால கட்டத்தில் வர இருப்பதாகவும் இந்த தினத்தை இஸ்ரேல சிறைகளில் வதைக்க படும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் பற்றிய விழிபுனர்வுகான வாரமாக கருதி வாரம் முழுவதும் கைதிகள் பற்றிய விழிபுணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யுமாறும் ஏப்ரல் மாதம் 17 திகதி அன்று பலஸ்தீன் அரசியல் கைதிகளுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக பட்டங்களை ஏற்றுமாறும் கூறியிருந்தது
இஸ்ரேலிய சிறைகளில் 7300 கும் அதிகமான் அரசியல் கைதிகள் வதைக்க படுகின்றார்கள் இவர்களில் 33 பேர் பெண்கள் , 300 பேர் சிறுவர்கள் , இவர்களில் 400 பேர் ஜெருசலத்தில் இருந்தும் , 745 பேர் காஸ பகுதியில் இருந்தும் , 6155 பேர் மேற்கு கறை பிரதேசத்தில் இருந்தும் இஸ்ரேலிய வதை முகாம்களில் வதையுருகின்றனர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வதை முகாம்களில் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடனேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது – இன்று உலகின் பல பாகங்களிலும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஸ்டிக்க பட்டுவருகின்றது விரிவாக பார்க்க…
அமையப்போகும் புதிய அரசுக்கு கோத்தபாய ராஜபக்ஸ எச்சரிக்கை
புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் பிரிவினைவாத சக்திகள் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய அரசாங்கம் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிர்கொடுக்க சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினர் தீவிர முனைப்புக் காட்டி வருவதாகவும் , இலங்கைக்கு எதிராக பாரிய அளவிலான உயர் மட்ட செயல்பாடுகள் இடம்பெறுவதாகவும் சர்வதேச அரசியல் வாதிகளை இதன் செல்வாக்கு உட்படுத்தும் வேலைத்திட்டங்கள் இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு ச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார் – he said. Pro LTTE sections of the Tamil Diaspora, he said, were carrying out a high profile campaign against Sri Lanka. The Global Tamil Forum was lobbying overseas to win over foreign politicians. He said that the presence of high profile British politicians and officials at a recent gathering of GTF in the UK had revealed the gravity of the situation. -
புலிகளுடன் தொடர்புடைய தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 12,000 பேரில் சிலர் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புலிகளின் எஞ்சியுள்ள உறுப்பினர்களால் மீண்டும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 9,000 பேரும் முறையாக புனர்வாழ்வு வழங்கப்பட்டு நாட்டுக்கு அவர்களால் அச்சுறுத்தல் எதுவும் ஏற்படாது என உறுதி செய்யப்பட்டு படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு இணைப்பு பற்றியும் ஸ்ரீ . மு. கா – த. தே. கூ இணைவு பற்றியம் ரவூப் ஹகீம்

வடக்கு கிழக்கு இணைப்பு பற்றியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைவு பற்றியம் ரவூப் ஹகீம்
தமிழ் தேசிய பரப்பில் இன்று , தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் மொழி மாநிலம் அமைய வேண்டும் என்று கூறுகின்றது அது அவர்களின் நீண்ட கால கோரிக்கை, அந்த கோரிக்கைக்கு குறுக்கே நின்று முஸ்லிம் காங்ரஸ் ஒரு போதும் அரசியல் செய்தது கிடையாது இருந்தாலும் ஒரு நீதி மன்ற தீர்ப்பின் ஊடாக தற்காலிகமாக பிரிக்கபட்ட நிலையில் கிழக்கு கிழக்கு மாகாணத்துக்கு என்று தனியான மாகாணம் அமைந்து இருகின்ற நிலையில் மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசுகிறபோது முன்பு விட்ட தவறுகளை மீண்டும் செய்யாது முன் கூட்டியே முஸ்லிம் சமூகத்துடன் அதன் அரசியல் தலைமைகளுடன் ஒரு நேர்மையான பேச்சுவார்த்தையை தமிழ் தலைமைகள் நடத்தி அதற்கான ஒரு இறுதி தீர்வை பற்றி சிந்திக்கலாம் என்று தெளிவாக சொல்லிவைக்க விரும்புகின்றேன் – விடுதலை புலிகள் விட்ட தவறுகளுக்காக போராட்ட நியாயங்கள் அழிந்து விட்டது என்று யாரும் கருத முடியாது போராட்ட நியாயங்கள் இன்னும் உயிர் வாழுகின்றன என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹகீம் கூறியுள்ளார் -
அதே வேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹகீம் நேற்று BBC தமிழ் சேவைக்கு வழங்கிய செவ்வியில், தமிழ்,முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள கட்சிகள் என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸும்ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தார்மீக பொறுப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். எதிர்கால அரசியல் விரிவாக பார்க்க..
அரசு முஸ்லிம் , தமிழ் கட்சிகளுடன் பேரம் பேசுமா உறுபினர்களை பிரித்து எடுக்குமா ?

ஒரு அரசியல் கள ஆய்வு:
அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு 150 ஆசனங்களை தனதாக்க வேண்டும்
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அரசு அழைப்பு விடுக்க இருப்பதாக தெரிவிக்க படுகின்றது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் குறிவைத்திருந்தது அது சாத்தியமாகவில்லை தேசிய பட்டியலுடன் 142 ஆசனங்கள் வரை பெற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கபடும் நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி பட்டியலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆறு ஆசனங்களைத் தனதாக்கி யிருப்பதாக கொள்ளமுடியும் .
மேலும் தேசியப் பட்டியலின் ஊடாக இரண்டு ஆசனங்கள் கிடைக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. ஆக அக்கட்சியின் மொத்த ஆசனங்கள் 8 டாக உயரும் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு வேண்டிய 8 ஆசனங்களை வைத்துள்ளது அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவதற்கு 150 ஆசனங்களை விரிவாக பார்க்க….
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு- என்ன பேசபோகின்றன ?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் நேற்றிரவு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார் . தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு தாம் இணங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் . சிறுபான்மையின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஒன்றாக இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவிருப்பதாக மேலும் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்க படுகின்றது
புதிய அமைச்சரவை முறைமை மாவட்ட ரீதியில் வழிநிலை அமைச்சர்கள் ?

புதிய அரசில் 35 இற்கும் குறைவான அமைச்சர்களே இடம்பெறுவர் என்ற தக வல் ஆளும் தரப்பின் உயர் பீடத்தினால் வெளியிடப்பட்டு வருகின்ற அதேவேளை, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு மேலதிகமாகப் பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் கள், வழிநிலை அமைச்சர்கள் என பல தரத்தில் பல மட்டங்களில் அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆராய்ந்து வருகின்றார் என சில செய்தி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு மேலதிகமாகவே பல தரங்களில் அமைச்சர்கள் நியமிக்கப்படவிருக்கின்றார் கள். அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓர் அமைச்சரின் கீழ் சில பிரதி அமைச்சர்கள் அல்லது வழி நிலை அமைச்சர்கள் நியமிக் கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.
மாவட்ட ரீதியில் வழிநிலை அமைச்சர்கள் அதிலும் வழிநிலை அமைச்சர்கள் மாவட்ட ரீதியில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சின் நடவ டிக்கைகள் அந்தந்த மாவட்டங்களில் சீராக முன்னெடுக்கப்படுகின்றமைக்கு இவர்களைப் பொறுப்பாக்குகின்றமை குறித்து ஜனாதிபதி ஆலோசித்து வருகின் றார் எனவும் கூறப்படுகின்றது. இதேசமயம், சர்வதேசத்தின் நவீன முறைமைப் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாக இலங்கையை மாற்றுவதற்காக இது சம்பந்தமான விசேட தொழில்நுட்ப அமைச்சுக்களையும் உருவாக்க ஜனாதிபதி திட்டமிட்டிருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.
புத்தளம், களுத்துறை அரசியல் தோல்வியின் ஒற்றுமை
களுத்துறை மாவட்டதில் 70 கும் அதிகமான மஸ்ஜிதுகளும் 20 கும் அதிகமான முஸ்லிம் பாடசாலைகளும் ஒரு இலச்சத்தி 30 ஆயிரதுக்கு அதிகமான முஸ்லிம்களும் இருக்கும் களுத்துறை மாவட்டதில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நான்கு முஸ்லிம்கள் வேட்பாளர்கள் போட்டியிட்டமை முஸ்லிம்களின் வாக்குகளை மேலும் மேலும் விரிக்க உதவியுள்ளது
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட அப்துல் காதர் மசூர் மவ்லான -8,659- வாக்குகளை பெற ஐக்கிய தேசிய முன்னணி- சார்பில் போட்டியிட்ட மஸாஹிம் முஹம்மத் -26,368 வாக்குகளையும், M.S.M.அஸ்லம் – 21,755 – வாக்குகளையும் ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட M.P.M. மர்சூக் -2,597 வாக்குகளையும் பெற்று முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகளை வெற்றிகரமாக பிரித்துள்ளார்கள் முஸ்லிம்களின் வாக்குகள் மூன்று பிரதான பிரிவாக பிரிக்கப்பட்டதும் இந்த பிரதேசத்தில் உள்ள பெரும் தொகையான முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிக்க வில்லை போன்ற காரணங்களும் தொடர்ந்தும் இந்த முறையும் பாராளுமன்றம் தவறியுள்ளது
களுத்துறை மாவட்டம் மூன்று கட்சிகளில் போட்டியிட்ட நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வி கண்டனர் 14 கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் 468 பேரை களமிறக்கின களுத்துறை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 313,836 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றிக்கொண்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 139,596 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றிக்கொண்டுள்ளது. ஜனநாயக தேசிய முன்னணி 139,596 வாக்குகள பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது
புத்தளம் மாவட்டம் 150 கும் அதிகமான மஸ்ஜிதுகளும் 47 கும் அதிகமான முஸ்லிம் பாடசாலைகளும் ஒரு இலச்சத்தி 50 ஆயிரதுக்கு அதிகமான முஸ்லிம்கள் இருக்கும் இந்த மாவட்டதில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை- இதில் புத்தளத்தில் வசிக்கும் வட மாகாண முஸ்லிம்கள், அவர்களின் பாடசாலைகள் , மஸ்ஜிதுகள் சேர்க்கப்படவில்லை அவர்களையும் சேர்த்தால் புத்தள மாவட்ட முஸ்லிம்களின் தொகை மூன்று
இலச்சத்தி 50 ஆயிரதுக்கு அதிகமாக இருக்கும்- தேசிய பட்டியல் ஊடாக முஸ்லிம் காங்ரஸ் பெற்ற ஆசனம் புத்தளத்துக்கு கிடைத்திருந்தது எனிலும் இந்த முறை அதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை புத்தளத்தில் 15 கட்சிகளும் 17 சுயேச்
சைக் குழுக்களும் போட்டியிட்டன . இவற்றின் சார்பில் 338 பேர் களம் இறங்கினர் இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட A.K. பாயிஸ் -26,489- பெற ஐக்கிய தேசிய முன்னணி- சார்பில் போட்டியிட்ட ஆப்தீன் யஹ்யா 17,571 வாக்குகளையும் முஹமட் இஸ்மாயில்- 12,021- வாக்குகளையும் பெற்று
முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகளை வெற்றிகரமாக பிரித்துள்ளார்கள் முஸ்லிம்களின் வாக்குகள் 2 பிரதான பிரிவாக பிரிக்கப்பட்டதும் இந்த பிரதேசத்தில் உள்ள பெரும் தொகையான முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிக்க வில்லை போன்ற காரணங்களும் தொடர்ந்தும் இந்த முறையும் பாராளுமன்றம் தவறியுள்ளது
சிறுபான்மையினர் பலமும் முஸ்லிம்களும்

பேராதனைபல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என்.பீ.எம்.சைபுதீன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி-
சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் அமைக்கப்படும் புதிய அரசாங்கம் சிறுபான்மை மக்களின் பங்களிப்பின்றி அரசியலமைப்பு மாற்றங்களைச் செய்யக்கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான நிலையை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஊக்குவிக்குமானால் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் எதிர்காலம் பலவீனமான நிலைக்கே தள்ளப்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியலறிவுத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் என்.பீ.எம்.சைஃபுதீன் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.
சிறுபான்மை சமூகங்கள் ஒற்றுமையாக இணைந்து தேர்தலைகளை எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே தமது விகிதாசாரங்களுக்கு ஏற்ப பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
பல மாவட்டங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கடந்த தடவைகளைவிட இம்முறை குறைந்துள்ளமைக்கு ஒரே கட்சி வேட்பாளர்களுக்கிடையிலான போட்டியும் போட்டி கட்சிகளுக்கிடையில் வாக்குகள் சிதறிப்போனமையுமே காரணம் என சைஃபுதீன் கூறுகிறார்.
முஸ்லிம் மக்கள் வழமையாக பெற்றுவந்த பிரதிநிதித்துவங்கள் குறைந்துவருவதை முஸ்லிம் கட்சிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் அவரது கருத்தாக அமைந்துள்ளது.
முஸ்லிம்களுக்கு தேசியப்பட்டியல் ஆசனங்களை வழங்க வேண்டு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில்
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் முஸ்லிம்களுக்கு தேசியப்பட்டியல் ஆசனங்களை வழங்க வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில்- The Muslim Council of Sri Lanka (MCSL)- கோரிக்கை விடுத்துள்ளது கடந்த பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைவடைந்துள்ளதென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சில பிரதேசங்களில் இரண்டு பிரதான கட்சிகளிலும் முஸ்லிம் பிரதிநித்துவம் இல்லாத ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடந்த தமிழீழ அரசும் முஸ்லிம்களும் !!
M.ஷாமில் முஹம்மட்நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள வி.உருத்திரகுமார் தலைமையிலான குழு அய்வு செய்து தனது இறுதி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. 42 பக்கங்களை கொண்டுள்ள இந்த அறிக்கை முஸ்லிம்கள் பற்றி தனது செறிவான கருத்துகளை கொண்டுள்ளது 1976 இல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை தளமாக கொண்டு அமைந்த தமிழர் ஓர் தேசிய இனம், வடக்கு- கிழக்கு தமிழர் தாயகம் , ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை இறுதியாக சுதந்திர தமிழ் ஈழத் தாயகம் என்று கூறி செல்லும் இந்த அறிக்கை முஸ்லிம்கள் பற்றிய வித்தியாசமானதும் , தமிழ் விடுதலை போராட்டம் முள்ளிவாய்கால் வரையும் முஸ்லிம்கள் பற்றி கடைபிடித்த கொள்கைக்கு மாற்றமான அணுகு முறை ஒன்றை கொண்டதுமான அறிமுகமாகியுள்ளது.
இவர்கள் குறிபிடும் முஸ்லிம் தேசியம் , சுய நிர்ணய உரிமை- போன்ற பதங்கள் குழப்பம் நிறைந்தவை என்பதுடன் ” விரும்பும் போது பிரிந்து சென்று தனியாக வாழும் சுய நிர்ணய உரிமை முஸ்லிம் மக்களுக்கு உரியது என்பது ஏற்றுகொள்ளபடும் ” என்று கூறுவதன் ஊடாக “தனக்கே தகராறாம் தம்பிக்கு அல்வாவாம்” என்ற கதைக்கு ஒப்பாக இருக்கிறது , எனிலும் இந்த அறிக்கை “மத நம்பிக்கைகளின் அடிபடையிலான ஒரு இனக்குழுவாக முஸ்லிம் மக்களினை வகைப்படுதல் ஏற்று கொள்ளப்படவேண்டும் ” என்று கூறி இருப்பதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தை மறைமுகமாக ஒரு கோட்பாட்டு சமூகமாக ஏற்றுகொண்டிருகின்றார்கள் அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் பற்றி கூறப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு : விரிவாக பார்க்க..
எழுத்தாளர் ஸாராவின் விடுதலைக்கு உழைப்பது எமது கடமை
இவரின் விடுதலைக்கு உதவுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை ஒரு முஸ்லிம் பெண் சிறைபிடிக்கபட்டால் அவளை விடுதலை செய்யும் வரை உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் மீதும் அவளின் விடுதலைக்கு உழைப்பது பர்ளு ஐய்ன் ஆகிவிடும் என்பது நான்கு இமாம்களின் ஏகோபித்த தீர்ப்பு எத்தனை ஆயிரம் முஸ்லிம் பெண்கள் இன்று முஸ்லிம் என்ற காரணத்தால் சிறைகளில் வதைக்க படுகின்றார்கள் எத்தனை முஸ்லிம்கள் அவர்களுக்காக அவர்களின் விடுதலைக்காக உழைகின்றார்கள் , இன்று நமது நாட்டில் தடுப்பு காவலில் முஸ்லிம் சகோதரி ஸாராஹ் வாடுகின்றார் எத்தனை பேர் எம்மில் அவருக்காக ஒரு கணம் சிந்தித்தார்கள் , இன்று சில முஸ்லிம் பகுதிகளில் வெடி கொளுத்தி அரசியல் வெற்றி கொண்டாட்டங்கள் புரியாணி சாப்பாட்டுடன் அரங்கேறுகின்றது.
ஒரு முஸ்லிம் அரசியல்வாதி கூட இவர் பற்றி வாய்திறந்ததாக அறிய முடிய வில்லை ஏன் இஸ்லாமிய அமைப்புகள் கூட இந்த விடையத்தில் வாயை மூடிகொண்டுள்ளது ஒரு ஆளும் தரப்பு அரசியல் வாதி ஒருவரை தொடர்பு கொண்டு இது பற்றி வினவினேன் அது பற்றி நான் பிறகு உங்களுக்கு சொல்கின்றேன் என்றார் அவ்வளவுதான் அதன் பின்னர் தொடர்பு கொள்ளமுடிய வில்லை விரிவாக பார்க்க….
திருகோணமலை மாவட்டத்தில் புத்தர் சிலை

திருகேணமலை மட்டக்களப்பு ஏ 15 வீதியில் அமைக்கப்பட்டுள்ள கிண்ணியா பாலத்தின் தொடக்கத்தில் புத்தர் சிலை ஒன்று தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தில் இருந்த காலபகுதியில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன. இங்கு வைக்கப்பட்டுள்ள சிலை இப்பகுதி மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகின்றது.
அந்த செய்தியில் பெரும்பலானவர்களாக முஸ்லிம்கள் வாழும் இப்பகுதியில் இவ்வாறு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது. இப்பாலதின் ஊடாகவே கிண்ணியா பிரதேசத்தற்கு செல்ல வேண்டி உள்ளது என்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சாதாரண நிலையில் பெரும்பாலான உள்ளுரி உல்லாச பிரயாணிகள் கிண்ணியா பாலத்ததை பார்வையிடுவதற்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் மத்தியில் கிண்ணியா ஒரு பௌத்த பிரதேசம் என்பதை வெளிக்காட்டும் முகமாக இது அமைக்க்பட்டுள்ளது. கிண்ணியா முழுமையாக முஸ்லிம்களைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். இங்கு 85 வீதமானவர்கள் முஸ்லிம்கள், 15 வீதமானவர்கள் தமிழர்கள். என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது
மேலும் தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் 06.04.2010 இச்சிலை வைக்கப்பட்டள்ளது. இதில் விமானப்டையினர் காவலுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அரசியல் பிரமுகர்கள் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதன் காரணத்தால் அவ் விடயத்தில் அதிக அக்கறையை எடுத்துக் கொள்வில்லை என பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர் என்றும் சிறிய விடயங்களுக்கு எல்லாம் ஒன்றுகூடி எதர்ப்பு தெரிவிக்கும் இப்பிரதேச மக்கள் இதனை கண்டு கொள்ளாது இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்றும் அந்த செய்தி குறிபிட்டுள்ளது
திருகோணமலை பட்டினத்தை பொறுத்தமட்டில் 250 மீற்றருக்கு ஒரு புத்தர் சிலை என்று காணப்படுகின்றது என்றும் இவ்வாறு சிறிலங்கா அரசு நில ஆக்கிரமிப்பின் சின்னமாக பௌத்த மதத்தை பயன்படுத்துகின்றது என்றும் குற்றசாட்டுகள் எழுந்தமை குறிபிடதக்கது
ஒரே பார்வையில்: நாம் பெற்ற பெறாத பாராளுமன்ற உறுப்புரிமை
இலங்கை பூராவும் வேறு பட்ட அரசியல் கட்சிகளில் பங்கு கொண்ட முஸ்லிம் வேட்பாளர்கள் அவர்கள் பெற்று கொண்ட வாக்குகள், அவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்களா , இல்லையா போன்ற விபரங்கள் கொண்ட ஒரு தொகுப்பு இங்கு உங்களின் பார்வைக்கு தரப்படுகின்றது, கண்டி மாவட்ட நாவலப்பிட்டி ,திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுபிட்டிய பகுதிகளில் 34 வாக்கெடுப்பு நிலையங்களின் வாக்குகள் ரத்து செய்யப்பட்டது. அந்த வாக்கெடுப்பபு நிலையங்களில் மீண்டும் வாக்குப் பதிவுகள் மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் 20ஆம் திகதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே மீண்டும் வாக்குப் பதிவுகள் நடை பெற்று முடிந்த பின்னர்தான் கண்டி , திருகோணமலை மாவட்ட முடிவுகள் வெளியாகும் அதுவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தொகையை சரிவர குறிபிட முடியாது என்பது குறிபிடதக்கது எனிலும் தேசிய பட்டியல் ஆசனங்கள் தவிர்ந்த 15 ஆசனங்கள் வரை இந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் பெற முடிந்துள்ளது என்பதை கூறமுடியும் இது கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற ஆசனங்களை விட மிகவும் குறைந்த தொகையாகும்
திகாமடுள்ள மாவட்டம் -முஸ்லிம்கள் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம் – 03
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
A.L.M.அதவுல்லா – 36,943-தெரிவானார்
பேரியல் அஸ்ரப்- 30,761- தெரிவாக வில்லை
அப்துல் பஷீர் -27,534- தெரிவாக வில்லை
A.M.M.நௌசாத் -27,039-தெரிவாக வில்லை
அமீர் அஹமட் லெப்பை- 22,208-தெரிவாக வில்லைவிரிவாக பார்க்க..
முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பார்வை
.
கடந்த பாராளுமன்றத்தில் 225 உறுபினர்களில் 25 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தார்கள் 51 கபினட் அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையில் ஐந்து முஸ்லிம்கள் கபினட் அமைச்சர்ளாக அங்கம் வகித்தார்கள் , 39 கபினட் அந்தஸ்து அற்ற அமைச்சர்களை கொண்ட அவையில் ஐந்து முஸ்லிம்கள் கபினட் அந்தஸ்து அற்ற அமைச்சர்களாக அங்கம் வகித்தார்கள் மேலும் 19 பிரதி அமைச்சர்களை கொண்ட அவையில் ஐந்து முஸ்லிம்கள் அங்கம் வகிதுள்ளார்கள் கடந்த பாரளுமன்றத்தின் ஊடாக கிட்டதட்ட 15 அமைச்சர்கள் அங்கம் வகிதுள்ளார்கள் ஆக கடந்த முறை 25 பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தார்கள் அவர்களில் 15 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள் இதை வாசிபவர்களுக்கு ஒரு கேள்வி எழும்பும் இவ்ளவு பேர் இருந்து முஸ்லிம் சமுகத்துக்கு எதை செய்தார்கள் ??? அந்த கேள்விக்கு விடையை பின்னர் பார்போம் -
1. A.H.M.பௌசி- பெற்றோல் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்
2. பேரியல் அஸ்ரப் – வீடு அமைப்பு அமைச்சர்
3. A.L.M.அதவுல்லா- நீர் வழங்கல் வடிகாலமைப்பு
4. ரிஷாத் பதியுதீன்- மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள்
5. M.H.முஹமத்- பாராளுமன்ற விவகாரம்



















