Lankamuslim.org

One World One Ummah

Archive for March 31st, 2010

வதை முகாம்களில் சிதைக்கபட்ட பெண் Dr.ஆபியா சித்தீக்கி

leave a comment »

7 வருடங்கள் வதை முகாம்களில். Dr.ஆபியாவை நிர்வாண படுத்தி அல் குர்ஆனை நிலத்தில் வீசி அதன்  மீது நடக்கு மாறு வதைத்துள்ளார்கள் மறுக்கும் போது மிகவும் கடுமையாக அடிப்பார்கள் என்று Dr.ஆபியாவின் தாய் கூறியுள்ளார்.

Dr.ஆபியா சித்தீக்கி மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் போனார் இந்த அராஜகம் நடைபெற்று நேற்றுடன் 7 வருடங்கள் ஆகியுள்ளது Dr.ஆபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்ட அவர் அமெரிக்க கட்டுபாட்டில் இயங்கும் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு மிக கடுமையாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் . இங்கு அமெரிக்க , பாகிஸ்தானிய ஏஜண்டுகளால் மோசமான முறையில் பாலியல் வதைகளுக்கு ஆளானார் இந்த பயங்கரவாத அமெரிக்க கொடுமையை 2008 ஜுலை 06ஆம் திகதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். வெளி உலகம் அறிந்து விட்டதால் அமெரிகாவுக்கு கொண்டு சென்று வழக்கு தொடர்ந்துள்ளனர் இந்த அமெரிக்க பயங்கரவாதிகள் விரிவாக பார்க்க…

Written by lankamuslim

March 31, 2010 at 9:57 pm

இஸ்லாமிய வங்கி பிரிவு குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விளக்கம்

leave a comment »

இலங்கை வங்கி  அறிமுகப்படுத்தியுள்ள புதிய இஸ்லாமிய வங்கிப் பிரிவின் பணிகள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படு த்தப்பட்டு வருகின்றது. அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வைபவம் அதிபர் ஏ. சீ. சைபுதீன் தலைமையில் நடைபெற்றது. அல் முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவியருக்கு விளக்கமளிக்கும் வைபவம் அதிபர் கே. எம். சுபையிர் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி வைபவங்களில் தலைமைக் காரியாலய இஸ்லாமிய வங்கிப் பிரிவு முகாமையாளர் எஸ். எம். அப்துல்லா, இலங்கை வங்கி அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர் ஏ. சீ. கியாஸ்தீன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள 11 இலங்கை வங்கிக் கிளைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய இஸ்லாமிய வங்கிப் பிரிவில் இணைந்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் முறையான அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இஸ்லாமியப் பிரிவு குறித்து எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை எனவும் முகாமையாளர் எஸ். எம். அப்துல்லா கூறினார். – தினகரன்

Written by lankamuslim

March 31, 2010 at 10:50 am

இஸ்லாமிய விஞ்ஞானம் பற்றி நூல் எழுதியுள்ளார் டாக்டர் ஜெயலத் ஜயவர்தன

leave a comment »

மனித உரிமைகள் செயல் பாட்டாளரும்   , முன்னால் அமைச்சரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜெயலத் ஜயவர்தன அன்மை காலமாக இஸ்லாம் பற்றி கற்பதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்க படுகின்றது தற்போது இவர் நவீன   விஞ்ஞானத்தையும்  இஸ்லாமிய கோட்பாடுகளையும் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் இந்த நூலுக்கு   “  வைத்திய விஞ்ஞானம்  அங்கீகரித்துள்ள இஸ்லாத்தின் உண்மைகள்” -Truth of Islam which is being proved medically -என்ற தலைப்பில் குறித்த நூலை எழுதியுள்ளார்  இஸ்லாமிய கோட்பாடுகளை நவீன   விஞ்ஞர்னத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் போக்கு உலகின் பல மட்டங்களிலும் அதிகரித்துள்ளது என்பதுடன் மேற்கு உலக ஆய்வாளர்கள் , விஞ்ஞர்னத் துறை டாக்டர்கள் அதிகம் ஆய்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருவது குறிபிடதக்கது

கடந்த ஐந்து  வருடங்களில் அதிகமான இஸ்லாமிய கோட்பாடுகளை நவீன விஞ்ஞானத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து வெளிவரும் நூல்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கபடுகின்றது  டாக்டர் ஜெயலத் ஜயவர்தன முன்னாள் மீள் குடியேற்ற புனர் நிர்மான துறை  அமைச்சராக இருந்ததுடன் , இவர் கொழும்பு பல்கலை கழகத்தின்  வைத்திய துறையில் பட்டம் பெற்ற   டாக்டர்  , ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பல்வேறு துறை சார் முதுநிலை பட்டங்களை  பெற்றுள்ளார் என்பது குறிபிடதக்கது  , கல்விதகமையுள்ள முஸ்லிம் அல்லாத ஒரு முன்னிலை இலங்கை அரசியல் வாதி  ஒருவரினால் இஸ்லாம்  பற்றி எழுதபட்ட முதல் நூலாக இது  இருக்க முடியும் அண்மையில் இதன் பிரதி ஒன்றை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அஷ் ஷெய்க் ரிஸ்வி முப்தியிடம் வழகியுள்ளார்- இது www.lankamuslim.org தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய தகவல்

Written by lankamuslim

March 31, 2010 at 10:01 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers