Lankamuslim.org

One World One Ummah

Archive for March 25th, 2010

போலீஸ் தடுப்பு காவலில் ஸாராஹ் மாலினி பெரேரா

with 3 comments

இணைப்பு-1

ஸாராஹ் மாலினி பெரேரா என்ற முஸ்லிம் பெண்

ஸாராஹ் மாலினி பெரேரா – Sarah Malanie Perera – என்ற முஸ்லிம் பெண் இலங்கையை சேர்ந்த பௌத்த மத குடும்பத்தில் பிறந்து பௌத்த குடும்பத்தில் வளர்ந்த சிங்கள இன பெண் இவர் இஸ்லாத்தை டிஸ்கவர் இஸ்லாம் நிகழ்ச்சிகளின் ஊடாக் கற்றதன் மூலம் 1999 இல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் இவர் தற்போது பஹ்ரைன் நாட்டின் பாடசாலை ஒன்றின் ஆசியராக தொழில் புரிகிறார்

இவர் விடுமுறையில் இலங்கை வந்த போது தான் எழுதி முடித்திருந்த இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்கள் பற்றி ஒப்பிட்டு ஆய்வு கொண்ட இரண்டு புத்தகங்களை சிங்கள மொழியில் பதிப்பு செய்துள்ளார் இந்த புத்தகங்கள் பௌத்த மதத்தை நித்திப்பதாக கூறி மிரிஹான போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டுள்ளார்

இவரின் சகோதரி மரியம் இது பற்றி கூறுகையில் இவர் இஸ்லாத்தை தழுவி கொண்ட கால பகுதியில் இருந்து இஸ்லாத்தையும் மற்ற மதங்களையும் ஒப்பிட்டு நூல் ஒன்றை எழுதிகொண்டிருந்தார் என்றும் எழுதும் பணி கடந்த வருடம் நிறைவடைந்ததாகவும் -2009 – விடுமுறையில் இலங்கை சென்ற ஸாராஹ் மாலினி பெரேரா தனது சிங்கள மொழி புத்தகங்களான ஒன்று From Darkness to Light இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு என்ற தலைப்பிலும் இரண்டாவது Questions and Answers கேள்விகளும் பதில்களும் என்ற தலைப்பிலும்  எழுதியிருந்தார் அவற்றை  புத்தகங்களாக பதிப்பு செய்து அவற்றில் ஒரு பகுதியை கார்கோ முகவர் ஒன்றின் ஊடாக அனுப்பும் வேளையில் குறித்த கார்கோ முகவர் நியையத்தின் உரிமையாளர் போலீசாரை அழைத்து இந்த புத்தகங்கள் லார்ட் புத்தாவுக்கு எதிரானவை என்று முறையிட்டுள்ளார் இவர் தீவிர இனவாத அமைப்பான சின்ஹல உரிமையவுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் என்று மரியம் கூறியுள்ளார் விரிவாகபார்க்க…..

Written by lankamuslim

March 25, 2010 at 3:21 pm

அல் குர்ஆனை அரசியல் களத்தில் தவறாக பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும்

with 2 comments


இஸ்லாமிய அரசியல் என்பது அராஜகம் , பயங்கரவாதம் , இனவாதம் , துவேசம் , சிறு பான்மை ஒடுக்கு முறை போன்ற அணைத்து மனித விரோத உணர்வுகளுக்கும் நேர் எதிரானது அல் குர்ஆன் போதிக்கும் அரசியல் , பொருளாதார , சமுகவியல் , போரியல் கோட்பாடுகள் மனிதனையும் இறைவனையும் மிகவும் நெருக்கமாக தொடர்பு படுத்தி நிற்பவை அது போதிக்கும் நீதி என்றும் நிலையானது சொந்த இலாபங்களுக்காக ,தான் சார்ந்த கட்சியின் ஆட்களுக்காக , பச்சை , நீளம் , சிகப்பு  என்ற நிரங்களுக்காக அதன் நீதி சாய்ந்து விடாது , இஸ்லாமிய அரசின்  தலைவர் கலீபா குற்றம் செய்தால் அவரும் தண்டிக்கபடுவார் இஸ்லாமிய அரசியல் ஒவ்வோர் தனி மனிதனின் உரிமைகளையும் மிகவும் நுட்பமாக பாதுகாக்கும் தன்மை கொண்டது இதை தான் இஸ்லாமிய இரண்டாவது அரசியல் தலைவர் கலீபா உமர் இப்படி கூறினார் ” எனது ஆட்சியில் .. கடற்கரை .. ஒன்றில் ஒரு நாய் இறந்தாலும் அதற்கும் நான் ..பொறுப்பு  சொல்லவேண்டும் என்றார் ” இவை வெறும் வார்த்தைகள் அல்ல உலகை ஆண்ட நடைமுறை அரசியல் .    தனி நபர் சுதந்திரத்துக்காக சமூகத்தையோ , சமுகத்தின் சுதந்திரத்துக்காக தனி நபரையோ இஸ்லாமிய அரசியலில் பலி இடமுடியாது இந்த அரசியல் முற்றிலும் நடைமுறை சார்ந்தது இந்த  உண்மையான நடைமுறை பண்புகளை கொண்ட அரசியல் யாப்புதான்   அல் குர்ஆன் இதை எந்த அரசியல் கட்சி தவறாக பயன் படுத்த முற்பட்டாலும் அது மிக பெரிய  குற்றமாகத்தான் அமையும்.

உதாரணமாக கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி போகும் பஸ் நாங்கள் லண்டன்  போகின்றோம்  லண்டன்  போகும் பிரயாணிகள் பஸ்ஸில் ஏறி கொள்ளுங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானதுதான் நமது நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அல் குர்ஆனை பயன்படுத்துவது இந்த புதிய முறையற்ற  பலக்கம் முற்றாக தவிர்க்க  வேண்டும்   முழு மனித சமூகத்துக்குமான விடிவு இஸ்லாம் கூறும் அரசியலில் மட்டும்தான் நடைமுறையில் இருக்கும் இஸ்லாம் கூறும் அரசியல் மனிதனை அணைத்து அடிமைத்தனத்தில் இருந்தும்  விடுதலை செய்து  பிரபஞ்சங்களின் இறைவனுக்கு மட்டும் கட்டுப்படும் மனிதனாக மாற்றும் தன்மை கொண்டது

Written by lankamuslim

March 25, 2010 at 10:47 am

அமைச்சர் அதாவுல்லாவின் தேர்தல் பிரசாரங்களுக்காக பாடசாலைகளுக்கு மூடுவிழா

leave a comment »

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடும் அமைச்சர்  ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேர்தல் பிரசாரங்களுக்காக  பொத்துவில் தேர்தல் தொகுதியிலுள்ள 10 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேற்படி 10 பாடசாலைகளைச் சேர்ந்த  ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு மத்தியில் கல்விக் கருத்தரங்கு போன்றதொரு தேர்தல் பிரசாரத்தை ஏ.எல்.எம்.அதாவுல்லா மேற்கொண்டிருந்தார்.

பொத்துவில் மத்திய கல்லூரி, அல் இல்ஸான் வித்தியாலயம், அல் அஷ்ரப் வித்தியாலயம், அல் பஹூ ஜா வித்தியாலயம், அல் வித்திய வித்தியாலயம், அல் முவ்வரா வித்தியாலயம், அல் அக்ஸா வித்தியாலயம், அல் மீனா வித்தியாலயம், அல் அபயன் வித்தியாலயம், அஸ்லாம் வித்தியாலயம், அல் மஸ்மியா வித்தியாலயம், அல் ஹிஜ்ரா வித்தியாலயம், தருஸ்சலாம் வித்தியாலயம் ஆகியனவே மூடப்பட்ட இந்தப் 10 பாடசாலைகளும் ஆகும்.

இது குறித்து அம்பாறை மாவட்டத்தின் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் பண்டார மாபாவிடம், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் வசந்த பியதிஸ்ஸ முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார். எனினும், காலதாமதமாக  முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருப்பதால் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமுடியாது எனவும் அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். -தமிழ் மிரர்

Written by lankamuslim

March 25, 2010 at 10:31 am

ஊடகவியலாளர் விருதுக்காக திஸ்ஸநாயகத்தின் பெயர்

leave a comment »

பிரிட்டன் ஊடகவியலாளர் விருதுக்காக ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் வருடந்தோறும் வழங்கப்பட்டு வரும் விருதுக்காகவே இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்க படுகின்றது . இப்பெயர் பட்டியலில் 16 நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. விருது வழங்கும் வைபவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரிட்டனில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Written by lankamuslim

March 25, 2010 at 10:25 am

கப்பல் ஒன்று 23 இலங்கையருடன் கடத்தப்பட்டுள்ளது

leave a comment »

எகிப்திலிருந்து ஈரான் நோக்கிச் சென்ற கப்பல் ஒன்று 23 இலங்கையருடன் கடத்தப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து 180 கடல் மைல்களுக்கப்பாலுள்ள கடலில் 25 பேருடன் பயணித்த கப்பலே கடத்தப்பட்டுள்ளது. இதில் 23 இலங்கையரும், பிலிப்பைன்ஸ், சிரியாவைச் சேர்ந்த இருவரும் கடத்தப்பட்டுள்ளனர். இந்தக் கப்பலை  கடற்கொள்ளையர்கள்  கடத்தியிருக்காலம் என நம்பப்படுகிறது

Written by lankamuslim

March 25, 2010 at 10:15 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers