Archive for March 21st, 2010
யுத்தம் காரணமாக உடைமைகளை விட்டு வந்த தமிழ் மக்களிடம் அவற்றை ஒப்டைக்க ஏற்பாடு
யுத்தம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்களது வாகனங்கள் உடைமைகளை விட்டு வந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உடனடியாக விபரங்களை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விரு மாவட்டங்களிலும் இதுவரை 50,000 சைக்கிள்கள், 20,000 மோட்டார் சைக்கிள்கள், 500 டிராக்டர்கள் (உழவு இயந்திரங்கள்) 20,000 தண்ணீர்ப் பம்புகள் மற்றும் ஒரு தொகை சிறியரக உழவு இயந்திரங்கள் (லேண்ட் மாஸ்டர்) என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் கிளிநோச்சிக்குக் கொண்டு வரப்படவுள்ளதுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் திருத்த வேலைகள் செய்து புதுப்பிக்கப்படவுள்ளன.கிளிநொச்சியில் 16 ஏக்கர் நிலப்பரப்பு தெரிவு செய்யப்பட்டு சுத்தப்படுத்தும் வேலைகள் செய்ய ப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் இங்கு கொண்டு வரப்பட்டு திருத்த வேலைகள் நடத்தப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
மோட்டார் சைக் கிள்கள், டிராக்டர்கள் போன்றவற்றின் உரிமையை உறுதி செய்யக்கூடிய ஆவ ணங்கள் அல்லது ஏதாவது ஒரு சான் றைக் காண்பித்து தங்களது வாகனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.இதேவேளை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வாகன உரிமம் தொடர்பாகவும் உறுதி செய்யப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் விட்டுவந்த பஸ், லொறிகள் போன்றவற் றையும் பெற்றுக்கொள்ள முடியுமா என ஆளுநரிடம் கேட்ட போது: இப்போதைக்கு அது சாத்தியப்படமாட் டது. அவை பழுதடைந்த நிலையில் இருப்பதால் கொண்டுவருவதில் சிக்கல்கள் உள்ளன. முதலில் இப்போது சேகரிக்கப்பட்ட 10,000 வாகனங்களையும் மக்களிடம் கையயிப்பதே எமது நோக்கம் என்றும் தெரிவித்தார்.
இன்று பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் இரு வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்
கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு பாலஸ்தீன மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான ஜெரூசலம், மேற்கு கரை போன்ற பகுதிகளில் அந்த மக்களுக்கும், அவர்களின் புனிதத் தலங்களுக்கும் எதிராக மிக மோசமான பயங்கரவாதத்தை மேற்கொண்டு வருகின்றது கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய அராஜகங்கள் அல் குத்ஸ் மஸ்ஜித் பகுதியிலும் அதிகரித்துள்ளது இஸ்ரேலிய அராஜகங்கள்,எதிர்த்து மக்கள் மேற்கு கரை மற்றும் காஸா பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. மேற்கு கரை பகுதியில் இன்று இடம் பெற்ற இஸ்ரேலிய அராஜக துப்பாக்கி தாக்குதலில் இரு பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துப்பாக்கி சூட்டு தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் விரிவாக பார்க்க…







