Lankamuslim.org

One World One Ummah

Archive for March 18th, 2010

யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஐந்து பிரதான பாடசாலைகளில் ஒன்றான பெரிய கதீஜா பெண்கள் கல்லூரி

leave a comment »

lankamuslim.org இலங்கையில் அணைத்து பிரதேசங்களிலும் உள்ள முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை பதிவு செய்து வருகின்றது இந்த வகையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை ஒவ்வொரு கிழமையும் எமது இணையத்தளத்தில் பதிவு செய்யபடுகின்றது சென்ற கிழமை சில தொழில் நுட்ப இடையூறு ஒன்றின் காரணமாக பதிவு செய்ய முடியவில்லை என்பதை கூறி இந்த முறை யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஐந்து பிரதான பாடசாலைகளில் ஒன்றான பெரிய  கதீஜா பெண்கள் கல்லூரியை இங்கு பதிவு செய்கிறோம் கதீஜா பெண்கள் கல்லூரி இரண்டு பிரிவுகளை இரண்டு இடங்களில் கொண்டு இயங்கி வந்தது என்பதுடன் பல முஸ்லிம் யுவதிகளுக்கு கல்வி அறிவூட்டி முஸ்லிம் பெண்கள் சமூகத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாய் இருந்ததாக எமது யாழ் செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்  இங்கு பெரிய  கதீஜா பெண்கள் கல்லூரியை மட்டும் இங்கு பதிவு செய்கிரோம் இதன் தற்போதைய தேற்றம் வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனியான சட்ட கொள்ளை ஒன்றின் ஊடாக அணுகப் படவேண்டும் என்பதை பறை சாற்றுகின்றது

யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றிய எமது முந்திய பதிவுகளை பார்க்க

Written by lankamuslim

March 18, 2010 at 7:53 pm

வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனியான சட்ட கொள்கை ஒன்றின் ஊடாக அணுகப் படவேண்டும்

with 3 comments

முஸ்லிம் மீள் குடியேற்றம் ஓர் ஆய்வு: M. ஷாமில் முஹம்மட்

1990 இல் வட  மாகாணத்தின்   பூர்விக குடிகளில் ஒன்றான  முஸ்லிம்கள்  புலி பயங்கர வாதத்தால்  வெளியேற்றபட்டனர்    அவர்களின் அனைத்து அசையும் அசையாத சொத்துகளும் புலி பயங்கரவாதத்தால்  கொள்ளையிடப்பட்டது  கோடிகணக்கான சொத்துகளின் சொந்தகாரர்கள்  சில  மணித்தியால அவகாசத்தில் அனைத்தையும்  இழந்த அகதிகளாக ஆக்கப்பட்டனர்  அன்றில் இருந்து இன்றுவரை வடமாகாண முஸ்லிம்களில் அகதி வாழ்கை இருபது வருடயங்களை எட்டியும் விடிவு இன்றி தொடர்கின்றது.

வடக்கில் இருந்து அன்று வட மாகான முஸ்லிம்கள் ஒரு இலட்சதுக்கும் அதிகமான மக்கள் பலவந்தாமாக வெளியேற்ற பட்டனர் இன்று அவர்களின் தொகை இரு மடங்குகளால் அதிகரித்துள்ளது ஒரு கும்பமாக வந்தவர்கள் இன்று மூன்று குடும்பங்களாக , நான்கு குடும்பங்களாக பெருகியுள்ளார்கள்  20 வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆகவே மீள் குடியேற்றம் என்பது அவர்களின் இடங்களை அவர்களுக்கு பெற்று கொடுபதுடன் , அவர்களின்  மஸ்ஜித்துகளையும், பாடசாலைகளையும் மீள  கூரை போட்டு, சுவர்களுக்கு வர்ணம் பூசி கொடுப்பதுடன் முடிந்து விடாது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

March 18, 2010 at 12:54 pm

இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

leave a comment »

அமைச்சரும் கண்டி மாவட்ட  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்   பாராளுமன்ற  தேர்தலுக்கான வேட்பாளரும்  சட்டத்தரணியுமான் , பாயிஸ் பைஸர் முஸ்தபாவின் அக்குரணை   காரியாலையம் ஒன்று இன்று அதிகாலை இனம் தெரியாக குழு ஒன்றினால் தாக்கப்பட்டு உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்த பட்டுள்ளதாக அங்கு இருந்து வரும் ஆரம்ப செய்திகள் தெரிவிக்கின்றன

மூடப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழகம் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடி க்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு உயர் கல்வி அமைச்சர் விஸ்வா வர்ணபால நேற்று பதில் உபவேந்தர் கலாநிதி பிரேம்குமாருக்கு பணிப்புரை விடுத்தார் என செய்திகள் கூறுகின்றன

தமிழர் தாயகக் கோட்பாட்டில், அதன் அடிப்படையில் உரிமையை வென்றெடுப் பதில் விட்டுக் கொடுப்புக்கோ வேறு வகையான இணக்கப்பாட்டுக்கோ இட மில்லை யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் வெற்றிலையும் சுயேச்சைகளும் வெற்றி பெற்றால் அரசாங்கம் இதுவரை செய்த கொடுமைகளைத் தமிழ்மக்கள் சரியெனக் கருதுகிறார்கள் என்று சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வழி செய்ததாகிவிடும்.  இரா.சம்பந்தன்.

இலங்கையின் இறுதி யுத்த காலத்தில் இடம் பெற்றதாக கூறப்படும்  மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற் றங்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்புக் கூறும் விவகாரம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிப்பதைத் தாம தப்படுத்தப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், அந்த நடவடிக்கை இலங்கையின் இறைமையை மீறும் செயல் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

அத்தகையதொரு குழு அவசியமில்லையெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் இந்த விடயம் தொடர்பான தனதுநிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் அறிவித்திருக்கிறது.

தேர்தல் காலங்களில் பிரச்சினைகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின் வெற்றியின் பின் பதவிகளை வழங்காமல் இருக்க ஜனாதிபதி தீர்மானமாணித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயளாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் இரு அமைச்சர்கள் சட்டவிரோத வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றை நடத்திவருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பட்டியலில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பஷீர் சேகுதாவூத் இன்று குற்றஞ்சாட்டினார்.

Written by lankamuslim

March 18, 2010 at 9:50 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers