இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுடன் இலங்கையின் உறவு
இஸ்ரேல் இலங்கையுடன் பொருளாதார ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடவுள்ளதாகவும் இரு நாடுகளுக்கு இடையில் வியாபார கவுன்சில் ஒன்றை ஏற்படுத்த போவதாகவும் தெரிவிக்க படுகின்றது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், புதுடில்லி மற்றும் கொழும்புக்கான இஸ்ரேலியத் தூதுவர் Mark Sofer க்கும் இடையில் கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பில் இதுகுறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது .
விவசாயம், தொழில் வாய்ப்பு, சுற்றுலாத்துறை மற்றும் தொழில்நுட்பம் உட்பட மற்றும் பல்வேறு துறைகளில் இவ்விரு நாடுகளும் இணைந்து புதிய திட்டங்களை மேற்கொள்வது குறித்தும் இச்சந்திப்பின் போது உடன்பாடுகள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற்றமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட Mark Sofer, தற்போது இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் புதுடில்லி மற்றும் கொழும்புக்கான இஸ்ரேலியத் தூதுவர் Mark Sofer இஸ்ரேலியப் பிரதமர் Shimon Peres இன் முன்னாள் கொள்கை வகுப்பு ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது விரிவாக பார்க்க….
இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் 2004 ஆம் ஆண்டு முதல் நெருக்கமான உறவுகள் தொடர்ந்துவருகின்றன. ஈரான் இலங்கையின் பொருளாதாரத் துறையில் பல பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதது ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான இராணுவ ரீதியான உறவுகள் குறித்து அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்தன
ஈரான் தற்போது இலங்கையின் பொருளாதார மற்றும் பாதுகாப்புத் துறையில் பிரதான முதலீட்டாளராக மாறியுள்ளதாகவும் தெரிவிக்க படுகின்றது ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கமான உறவு காரணமாக, இஸ்ரேலிய மிகவும் சிரமம் அடைந்ததாக விளங்கி கொள்ளமுடிகின்றது
60களில் அணிசேரா நாடு உரு வாக்கப்பட்டதன் பின்னர் இலங்கை பலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. இதற்கு மத்தியில் கூட இஸ்ரேலும் இலங் கையும் நல்லுறவைப் பேணி வருகின்றன. எனிலும் இஸ்ரேல் மீது இலங்கை பல தடவைகள் பாய்ந்துள்ளது 1970-ஆம் ஆண்டு டேவிட் மாட்னி என்ற இஸ்ரேல் நாட்டு ராஜதந்திரி ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவால் வெளியேற்றப்பட்டவர் . இவர் இலங்கையில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்குக்காக உளவு வேலை பார்த்த குற்றத்திற்காகத்தான் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா இவரை இலங்கையை விட்டுத் துரத்தி அடித்தாதார் என்று ஒரு செய்தி குறிபிடுகின்றது .
பின்னர் ஜனாதிபதி J.R. இன் காலத்தில் இலங்கை இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை மீள ஏற்படுத்திக் கொண்டது. இதை கடுமையாக எதிர்த்த முஸ்லிம்கள் தமது எதிர்ப்பை இலங்கை முழுவதும் காட்டினர் அதற்கு பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி பிரேமதாசா இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை துண்டித்தார் , ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் 2000 ஏப்ரலில் புலிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆணை யிறவு படைத்தளத்தை கைப்பற்றிய பின், குறுகிய கால இடைவெளியில் இலங்கை இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை மீள ஏற்படுத்திக் கொண்டது உறவு மீண்டும் வலுவடைந்தது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் தற்போது ஒருவையான Balance பேணப்படுகின்றது சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைப் பிரதமர் மத்திய கிழக் கிற்கு விஜயம் செய்தபோது இஸ் ரேல், பலஸ்தீன் ஆகிய இரு நாடு களுக்கும் சென்று வந்தார் எனிலும் வலுவாக பலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருவதாக தெரிகின்றது
இஸ்ரேல காஸா பகுதியில் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரிவில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை தூதுவர் தயான் ஜெயதிலக்க தெரிவித்த கருத்துக் கள் பாலஸ்தீன மக்கள் சார்பாகவும் இஸ்ரேல் அரசுக்கு எதிராகவும் அமைந்திருந்தது இதை தொடர்ந்து இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. தயான் ஜெயதிலக்கவின் கருத்துக்களுக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக இஸ்ரேல் இலங்கைக்கு தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பியிருந்தது.
இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் இலங்கை வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்னவை சந்தித்து தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.











Why did not mention about Dr.Dayan Bit more?, he lost the job due to this incident.
Jamal Nowfer.
April 27, 2012 at 9:34 am