Lankamuslim.org

One World One Ummah

Archive for March 16th, 2010

இஸ்லாத்தை பற்றி வரலாறு படைத்தவர்கள் என்ன கூறியுள்ளார்கள்

leave a comment »

இஸ்லாத்தை பற்றி  உலக அறிஞர்கள் , வரலாறு படைத்தவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்வது உலக வரலாறு பற்றிய எமது பார்வையை விரிவாக்க உதவும் என்பதுடன் இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு மனிதம் கொண்ட கோட்பாடு என்பதை அறிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் என்ற காரணத்தால் இந்த வீடியோவை இங்கு பதிவு செய்கிறோம்.

Written by lankamuslim

March 16, 2010 at 6:41 pm

இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுடன் இலங்கையின் உறவு

with one comment

அரசியல் களஆய்வு:M.ஷாமில் முஹம்மட்

இஸ்ரேல் இலங்கையுடன்  பொருளாதார ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடவுள்ளதாகவும் இரு நாடுகளுக்கு இடையில் வியாபார கவுன்சில் ஒன்றை ஏற்படுத்த போவதாகவும் தெரிவிக்க படுகின்றது  ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், புதுடில்லி மற்றும் கொழும்புக்கான இஸ்ரேலியத் தூதுவர் Mark Sofer க்கும் இடையில் கடந்த மாதம் நடைபெற்ற சந்திப்பில் இதுகுறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக  தெரிவிக்க படுகின்றது .

விவசாயம், தொழில் வாய்ப்பு, சுற்றுலாத்துறை மற்றும் தொழில்நுட்பம் உட்பட மற்றும் பல்வேறு துறைகளில் இவ்விரு நாடுகளும் இணைந்து புதிய திட்டங்களை மேற்கொள்வது குறித்தும் இச்சந்திப்பின் போது உடன்பாடுகள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்  இலங்கை வெற்றி பெற்றமை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட Mark Sofer, தற்போது இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் புதுடில்லி மற்றும் கொழும்புக்கான இஸ்ரேலியத் தூதுவர் Mark Sofer இஸ்ரேலியப் பிரதமர் Shimon Peres இன் முன்னாள் கொள்கை வகுப்பு ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது  விரிவாக பார்க்க…. Read the rest of this entry »

Written by lankamuslim

March 16, 2010 at 12:53 pm

இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

leave a comment »

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்றின் விசாரணை இன்று 16ம் திகதி ஆரம்பமாகிறது.  இராணுவ நீதிமன்றின் முதலாவது அமர்வு இன்று கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறுகிறது.

கைது செய்யப்பட்டு தடுத்து க்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று  செவ்வாய்க்கிழமை இராணுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளமையைக் கண்டித்து கொழும்புப் புறக்கோட்டையில் நேற்று  சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று நடைபெற்றது

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்களை நிராகரித்து கடந்த சில வருடங்களாக ஒர் ஜனநாயகமற்ற நாடாக மாறியுள்ளது என முன்னாள் பிரதம நீதியரசர் கூறியுள்ளார்

அணிசேரா அமையமானது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருப்பதையடுத்து இலங்கை விவகாரம் தொடர்பாக தமக்கு ஆலோசனை கூறுவதற்கு விசேட நிபுணர்குழுவொன்றை அமைப்பது தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீள்பரிசீலனை செய்யக்கூடும் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

மாத்தளை இறத்தோட்டைப் பகுதியில் நேற்றுமாலை இரு குழுக்களிடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஏழுபேர் காயமடைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களிடையேயே இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெனரல் பொன்சேகாவுக்கு தேசியப்பட்டியல் எம்.பீ பதவி வழங்க நாம் தயார் ; விடுதலை செய்ய அரசாங்கம் தயாரா ?ஜே.வீ.பீ சவால்

விருப்புவாக்குகளுக்காக சண்டை பிடிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி உத்தரவு.தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பமானதிலிருந்து இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் விருப்பு வாக்குகளுக்காக ஆழும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தமக்குள்ளே மோதிக்கொண்ட சப்பவங்கள் பரவலாக பதிவாகியுள்ளது.
.
ஐ.நா.வுடனும் அதன் முகவரமைப்புகளுடனும் தற்போது இடம்பெற்றுவரும் சிறிய சண்டையானது யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கான சர்வதேச நிதி உதவியைக் குறைத்துவிட மாட்டாது என்று கலாநிதி ரஜீவ விஜயசிங்க கூறியுள்ளார்.புனர்வாழ்வு,மீள்குடியேற்றத்திற்கான நிதி குறைந்துவிடவில்லை என்றும் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவைப்படும் நிதியுதவியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான உதவி இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்திருப்பதாகவும்  ரஜீவ விஜயசிங்க கூறியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று  பொதுமக்களின் விசாரணைகளை தமிழில் ஏற்கும் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கம்பஹா மாவட்ட பிரதி அமைப்பாளரும், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான கமால் அப்துல்நாஸர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

முன்னாள் அமைச்சரும், ஐ.தே.க.வின் திகாமடுல்ல மாவட்ட முக்கியஸ்தருமான எம். ஏ. அப்துல் மஜீத் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார மேடையில் நேற்று முன்தினம் பிரசன்னமானார்.

Written by lankamuslim

March 16, 2010 at 9:22 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers