Lankamuslim.org

One World One Ummah

இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

leave a comment »

இ.தொ.க தலைவர் ஆறுமுகம் தொண்டமான் தங்கியிருந்த பதுளை விடுதி மீது நேற்று இரவு   இனந்தெரியா குழு ஒன்று  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது . சேதமும் ஏற்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்று விசாரணை நடத்துவதற்காக நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என்ற ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூனின்  யோசனைக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன என்று  அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்றுக் கூறியுள்ளார்

ஜீ.எஸ்.பி.
பிளஸ் குறித்தும் ஏனைய விடயங்கள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்வரும் திங்ககிழமை  இலங்கை குழுவொன்று பிரஸெல்ஸ் செல்லவுள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பீற்றர் றிக்கெட்ஸ் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.


தேர்தல்
பிரசாரங்களை மேற்கொள்ளும் முகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். குடாநாட்டிற்கு பயணம் செய்கின்றார்  எனத் தெரிவிக்கப்படுகிறது  .

உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட தெல்லிப்பளை மற்றும் திருநெல்வேலியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் மற்றும் வயல் நிலங்களை மீண்டும் அவற்றின் சொந்தக்காரர்களுக்கே கையளிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார் .

அரசியலின் எதிராளிகள் மீது அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தாக்குதல்களை மேற்கொள்வது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது என்பதுடன் அரசாங்கத்தின் அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதற்கே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் நேற்று தெரிவிதுள்ளார்

பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஒரு போதும் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தியதில்லை. சிறை வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் புலி உறுப்பினர்களுக்காகவே அவசர காலச் சட்டம் தற்போது தேவைப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன  தெரிவிதுள்ளார்.

கிராமத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பெலிஅத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதின்னாகொட பாலத்துக்குக் கீழிருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.கொழும்பு, மட்டக்குளிய இராணுவ முகாமுக்கு அருகில் இருந்து நேற்றுமுன்தினம் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப் படுகிறது.


பொதுத்தேர்தல்
முடிவடைந்ததும் 13ஆவது அரசியல் அமைப்பை நடை    முறைப்படுத்தி மாகாண சபைக்கு முழு அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜனாதிபதி யிடம் கோரிக்கை விடுக்கவுள்ளார். இந்தத் தகவலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சிப் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்ததாக செய்திகள் குறிபிடுகின்றன. 13ஆவது அரசியல் அமைப்பு நடை முறைப்படுத்தும் தமது கட்சியின் யோசனைக்கு இந்தியாவும் தமது ஆதரவை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Written by lankamuslim

March 11, 2010 at 12:57 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers