தர்ஹா டவுன் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்

தர்ஹா டவுன், மீரிபன்னையைச் சேர்ந்த முஹம்மத் செய்னுலாப்தீன் அரூஸ் வயது 44 என்ற முஸ்லிம் வர்த்தகரொருவர் நேற்று முன்தினமிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மீரிப்பன்னையில் வசிக்கும் அரூஸ் என்ற வர்த்தகரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
அளுத்கம நகரில் கடையொன்றை நடாத்தி வரும் இவர், சம்பவ தின இரவு 7.30 மணியளவில் தமது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு போகும் வழியில் தர்ஹா நகர் சந்தியிலிருந்து இவரைப் பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு , தப்பிச் சென்றுள்ளனர்.
இவரின் தலைப் பகுதியிலேயே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. படுகாயமுற்ற இவர் உடனடியாக களுத்துறை, நகொட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வபாதானதாக தெரிவிக்க படுகின்றது இந்த சம்பவம் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது போலீஸ் விசாரணை தொடர்கின்றது








