இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி பீட்டர் ரெக்கட்ஸ் நேற்று தினம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் உலகத் தமிழ் பேரவை மாநாடு தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தீர்த்து கொள்வதே இவரது விஜயத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சிறைக்கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்குமாறு நேற்று பிரகடனம் செய்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது
இலங்கைத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும் என்று இந்தியப்பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்
முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழு நிரூபமா ராவை சந்தித்தது இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்க படுகின்றது முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவில் ரவூப் ஹகீம்,நிஸாம் காரியப்பர்,ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் இடம்பெற்றதாக தெரிவிக்கபட்டது
அரசியல் அதிகாரம் இருந்தால் மட்டுமே எமது பிரதேசத்தின் அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும், மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விலையில் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தும் வகையில் இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட முற்றுகையிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக வர்த்தக விவகார நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்திய தூதரகத்தின் துணை அலுவலகமொன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. விரைவில் இது ஏற்படுத்தபடும் என தெரிகின்றது
பொது மக்களுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாண த்தில் நேற்று அலுவலகமொன்றை திறந்துள்ளது.
தெல்லிப்பழையில் ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்திய சாலை ஆகியன அமைந்துள்ள பிரதேசங்கள் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
மனோ கணேசன் நேற்று நாடாளுமன்றம் கூடிய வேளை சுலோகம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டார். “பிரதமர் அவர்களே, கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி நகரத்தில் அராஜக ‘கமகே’ அரசியலை உடனடியாக தடுத்து நிறுத்தி நீதியும் நியாயமானதுமான தேர்தலை உறுதி செய்யுங்கள்” என சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்தது.
பாதாள உலகத்தை சேர்ந்த இருவர் நேற்று பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். குருநாகலையில் படல்கமுவ காட்டுப் பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி சமரின் போதே இவர்கள் கொல்லப்பட்டனர்.









