Lankamuslim.org

One World One Ummah

முஹம்மது நபியின் வாழ்வை ஓர் புரட்சியாளரின் வரலாறாகவே நாம் பார்க்கிறோம் – அ.மார்க்ஸ்

leave a comment »

‘முஹம்மது நபியின் வாழ்வை வெறும் மத போதகராகவோ அல்லது சித்தாந்தத்தை உருவாக்கியவராகவோ காணமுடியாது. ஆவரை ஒரு சமூகத்தை உருவாக்கிய, அரசியல் தீர்வுகளை பெற்றுக் கொடுத்த மாபெரும் புரட்சியாளராகவே நான் காண்கிறோன்’ என்று பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்தார்.
கொழும்பு ஸாஹிரா கல்லூரி கபூர் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை மர்கஸுஸ் ஸலாமாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர் அ.மார்க்ஸ் மேற்கண்டவாறு தொவித்தார்.

புகழ்பெற்ற இலக்கியவாதியும், மானிட, அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் அ.மாக்ஸ் 50க்கும் மேட்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். தமிழ் நாட்டைச் சேர்ந்த இவர் அண்மையில் எழுதிய ‘நான் புரிந்த கொண்ட நபிகளார்’ என்ற புத்தகம் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பெரு வரவேட்பைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் முஸ்தபா ஸிபாஈ எழுதிய நபி (ஸல்) அவர்களின் வாழ்வியல் – பாடங்களும் படிப்பினைகளும் என்ற நூல் இங்கு வெளியடப்பட்டது. இந்நூல் விமர்சனத்தை ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.பளீல் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வுக்கு சுமார் 350க்கும் அதிகமான தமிழ் மற்றும் முஸ்லிம் சகோதரர்களும் கலந்து கொண்டுள்ளனர். - தகவல் முஸ்லிம் காடியன்

Written by lankamuslim

March 9, 2010 at 10:28 am

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers