Archive for March 2010
வதை முகாம்களில் சிதைக்கபட்ட பெண் Dr.ஆபியா சித்தீக்கி
7 வருடங்கள் வதை முகாம்களில். Dr.ஆபியாவை நிர்வாண படுத்தி அல் குர்ஆனை நிலத்தில் வீசி அதன் மீது நடக்கு மாறு வதைத்துள்ளார்கள் மறுக்கும் போது மிகவும் கடுமையாக அடிப்பார்கள் என்று Dr.ஆபியாவின் தாய் கூறியுள்ளார்.
Dr.ஆபியா சித்தீக்கி மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் போனார் இந்த அராஜகம் நடைபெற்று நேற்றுடன் 7 வருடங்கள் ஆகியுள்ளது Dr.ஆபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்ட அவர் அமெரிக்க கட்டுபாட்டில் இயங்கும் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு மிக கடுமையாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் . இங்கு அமெரிக்க , பாகிஸ்தானிய ஏஜண்டுகளால் மோசமான முறையில் பாலியல் வதைகளுக்கு ஆளானார் இந்த பயங்கரவாத அமெரிக்க கொடுமையை 2008 ஜுலை 06ஆம் திகதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். வெளி உலகம் அறிந்து விட்டதால் அமெரிகாவுக்கு கொண்டு சென்று வழக்கு தொடர்ந்துள்ளனர் இந்த அமெரிக்க பயங்கரவாதிகள் விரிவாக பார்க்க…
இஸ்லாமிய வங்கி பிரிவு குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விளக்கம்
இலங்கை வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய இஸ்லாமிய வங்கிப் பிரிவின் பணிகள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படு த்தப்பட்டு வருகின்றது. அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வைபவம் அதிபர் ஏ. சீ. சைபுதீன் தலைமையில் நடைபெற்றது. அல் முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவியருக்கு விளக்கமளிக்கும் வைபவம் அதிபர் கே. எம். சுபையிர் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி வைபவங்களில் தலைமைக் காரியாலய இஸ்லாமிய வங்கிப் பிரிவு முகாமையாளர் எஸ். எம். அப்துல்லா, இலங்கை வங்கி அட்டாளைச்சேனை கிளை முகாமையாளர் ஏ. சீ. கியாஸ்தீன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர். அம்பாறை மாவட்டத்திலுள்ள 11 இலங்கை வங்கிக் கிளைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய இஸ்லாமிய வங்கிப் பிரிவில் இணைந்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் முறையான அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இஸ்லாமியப் பிரிவு குறித்து எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை எனவும் முகாமையாளர் எஸ். எம். அப்துல்லா கூறினார். – தினகரன்
இஸ்லாமிய விஞ்ஞானம் பற்றி நூல் எழுதியுள்ளார் டாக்டர் ஜெயலத் ஜயவர்தன
மனித உரிமைகள் செயல் பாட்டாளரும் , முன்னால் அமைச்சரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜெயலத் ஜயவர்தன அன்மை காலமாக இஸ்லாம் பற்றி கற்பதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்க படுகின்றது தற்போது இவர் நவீன விஞ்ஞானத்தையும் இஸ்லாமிய கோட்பாடுகளையும் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் இந்த நூலுக்கு “ வைத்திய விஞ்ஞானம் அங்கீகரித்துள்ள இஸ்லாத்தின் உண்மைகள்” -Truth of Islam which is being proved medically -என்ற தலைப்பில் குறித்த நூலை எழுதியுள்ளார் இஸ்லாமிய கோட்பாடுகளை நவீன விஞ்ஞர்னத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் போக்கு உலகின் பல மட்டங்களிலும் அதிகரித்துள்ளது என்பதுடன் மேற்கு உலக ஆய்வாளர்கள் , விஞ்ஞர்னத் துறை டாக்டர்கள் அதிகம் ஆய்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருவது குறிபிடதக்கது
கடந்த ஐந்து வருடங்களில் அதிகமான இஸ்லாமிய கோட்பாடுகளை நவீன விஞ்ஞானத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து வெளிவரும் நூல்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கபடுகின்றது டாக்டர் ஜெயலத் ஜயவர்தன முன்னாள் மீள் குடியேற்ற புனர் நிர்மான துறை அமைச்சராக இருந்ததுடன் , இவர் கொழும்பு பல்கலை கழகத்தின் வைத்திய துறையில் பட்டம் பெற்ற டாக்டர் , ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பல்வேறு துறை சார் முதுநிலை பட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிபிடதக்கது , கல்விதகமையுள்ள முஸ்லிம் அல்லாத ஒரு முன்னிலை இலங்கை அரசியல் வாதி ஒருவரினால் இஸ்லாம் பற்றி எழுதபட்ட முதல் நூலாக இது இருக்க முடியும் அண்மையில் இதன் பிரதி ஒன்றை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அஷ் ஷெய்க் ரிஸ்வி முப்தியிடம் வழகியுள்ளார்- இது http://www.lankamuslim.org தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய தகவல்
ஸ்ரப்ரேனிற்சா இனப்படுகொலைக்கு- மன்னிப்பு கேற்க கூட தயங்கும் செர்பியா

ஸ்ரப்ரேனிற்சா இனப்படுகொலை- மன்னிப்பு!!
ஸ்ரப்ரேனிற்சாவில் 1995ம் ஆண்டில் ஏழாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் பொஸ்னியாவின் செர்பியப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவது குறித்து செர்பிய நாடாளுமன்றம் ஆராயவுள்ளது.
ஜெனோசைட் எனப்படும் இனப்படுகொலை தாக்குதல்களை நிறுத்துமாறு கோரும் இந்தத் தீர்மானம் செர்பியாவின் தேசியவாதக் கட்சிகளை திருப்திப்படுத்தக்கூடியது. அத்தோடு சர்பியா அதன் அண்டை நாடுகளுடன் ஏற்படுத்தக்கூடிய மீள் இணக்கப்பாட்டு முயற்சிகளில் முக்கியமான ஒரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம பார்க்கப்படுகிறது. ஸ்ரப்ரேனிற்சா படுகொலைகள் நிகழ்ந்து ஒரு தசாப்பதத்துக்கும் அதிகமான காலம் கடந்துள்ள போதிலும் சர்பியாவைப் பொறுத்தவரை பொஸ்னிய யுத்தம் இன்றும் பெரும் சர்ச்சைக்குரிய விடயங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இந்த போர்க்காலத்தின் போது, பல மோசமான கொடூரங்கள் செர்பியாவின் பெயரிலேயே புரியப்பட்டுள்ளதை அவர்களின் நாடு ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்று அங்குள்ள பலரதும் கருதுகின்றனர். விரிவாக பார்க்க…
போலீஸ் தடுப்பு காவலில் ஸாராஹ் மாலினி பெரேரா

இணைப்பு-4
ஸாராஹ் மாலினி பெரேராவின் சட்டத்தரணி அலெக்ஸ் பெர்னாண்டோ இன்று உயர் நீதி மன்றத்தில் உடனடியாக ஸாராஹ்வை விடுதலை செய்ய கோரும் வழக்கு ஒன்றை செய்வார் என்று ஸாராஹ்வின் சகோதரி மர்யம் தெரிவித்துள்ளார் , அவர் மேலும் கூறுகையில் போலீசார் ஸாராஹ்வுக்கு எதிரான எந்த குற்றசாட்டையும் முன்வைக்க முடியாத நிலையில் இருப்தாகவும் அவர் தெரிவித்துள்ளார் இன்றுடன் 9 வது நாளாக தடுப்பு காவலில் வைக்க பட்டிருப்பது குறிபிடதக்கது
இவர் இலங்கையை சேர்ந்த பௌத்த மத குடும்பத்தில் பிறந்து பௌத்த குடும்பத்தில் வளர்ந்த சிங்கள இன பெண் இவர் இஸ்லாத்தை டிஸ்கவர் இஸ்லாம் நிகழ்ச்சிகளின் ஊடாக் கற்றதன் மூலம் 1999 இல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் இவர் தற்போது பஹ்ரைன் நாட்டின் பாடசாலை ஒன்றின் ஆசியராக தொழில் புரிகிறார்
இவர் விடுமுறையில் இலங்கை வந்த போது தான் எழுதி முடித்திருந்த இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்கள் பற்றி ஒப்பிட்டு ஆய்வு கொண்ட இரண்டு புத்தகங்களை சிங்கள மொழியில் பதிப்பு செய்துள்ளார் இந்த புத்தகங்கள் பௌத்த மதத்தை நித்திப்பதாக கூறி மிரிஹான போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டுள்ளார்
முல்லைத்தீவு முஸ்லிம்கள் மறக்கப்பட்ட ஒரு சமூகம்
1990 ல் வடமாகாணத்தின் யாழப்பாணம், முல்லைதீவு ,வவுனியா, மன்னார் ,கிழிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் ஒரு இலட்சம் வரையிலான முஸ்லிம்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள். இவற்றில் முல்லைத்தீவு முஸ்லிம்கள், வவுனியா முஸ்லிம்கள் பற்றிய செய்திகள் , விபரங்கள் பெரிதாக இடம்பெறவில்லை என்றுதான் கூறவேண்டும் பொதுவாக வடமாகாண முஸ்லிம்கள் என்று விழிக்க பட்டாலும் முல்லைத்தீவு முஸ்லிம்கள், வவுனியா முஸ்லிம்கள் என்று தனியாக அணுகுவது அவர்களை பற்றிய கூடிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவதற்கு உதவும் இந்த கட்டுரையில் முல்லைத்தீவு முஸ்லிம்கள் பற்றிய விபரங்களை பார்போம் , வவுனியா முஸ்லிம்கள் பற்றிய கட்டுரை ஒன்றை தனியாக எழுதவேண்டி இருப்பதால் அதை வேறு ஒரு கட்டுரையில் பார்போம்
முல்லைத்தீவு இலங்கையின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை அமைந்திருக்கின்றது . முல்லைத்தீவு புலிகளின் இராணுவ முக்கியத்துவம் பாய்ந்த இடமாக இருந்ததும் இறுதி யுத்தம் நடைபெற்ற இடமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின் முஸ்லிம்கள் வாழ்ந்த மற்றொரு மாவட்டமான முல்லைத்தீவு இங்கு 1990 இல் முஸ்லிம்கள் வெளியேற்ற படும்போது சுமார் 7000 ஆயிரம் பேர் வரை வாழ்ந்துள்ளனர் விரிவாக Read the rest of this entry »
அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை
ராஜகிரியவில் இன்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசார மேடையை அகற்றுவதற்கு பொலிஸார் முற்பட்ட வேளையில், பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
‘உதயன்’ மற்றும் ‘சுடரொளி’ ஆகிய பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக சமூகசேவைகள் மற்றும் சமூக நலன்புரித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
இளைஞர்களிடம் இருக்கவேண்டிய மிகப் பெரிய பலம் அறிவேயன்றி ஆயுதங்கள் அல்ல. கடந்த சில தசாப்தங்களாக சில தேசியத் தலைவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதியான உயிர்களை இல்லாதொழிக்கும் வகையில் அவர்களை தவறான வழியில் இட்டுச் சென்றதால் அவர்கள் ஆயுதங்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்
யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக இராணுவத்தினரால் நிர்மாணிக்க ப்பட்டுள்ள 437 வீடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்
ஊடகங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி ஊடகவியலாளர்கள் இன்று கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் .
குவைத்திலிருந்து 108 இலங்கையர்கள் நேற்று நாடு திரும்பியுள்ளனர். வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்று குவைத்துக்குச் சென்று அங்கு , நிர்க்கதியானோரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் சுவரொட்டிகள் சகலதும் அகற்றப்படும் பொதுத் தேர்தல் தொடர்பாக ஒட்டப் பட்டுள்ள சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் கட்அவுட்களை அகற்றும் பணி தொடர்ந்தும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார்
வன்னியில் இறுதி யுத்தத்தின் போது வங்கிகளின் பெட்டகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகள் என்பன பாதுகாப்பாகவுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைமை வேட்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு;அரசு மறுப்பு

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங் கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பு இலங்கைக்கு தனது நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளது என வெளியான செய்திகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இந்த அமைப்பு இலங்கையில் தங்கியிருக்கிறது என்று நிரூபிப்பதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை எனவும் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் மீளிணக்கப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்த அமைப்பு இலங்கையில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறித்து அரசிற்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் “டெயிலிமிரர்’ இணையத்தளத்திற்குக் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு தனது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது என்று வெளியான செய்தியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும் மறுத்துள்ளது
அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை
![]() |
குடாநாட்டில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கபிலநாத்தின் படுகொலை தொடர்பாக முக்கிய தமிழ் கட்சியி ஒன்றின் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படும் ஜீவன் என்ற இளைஞனைத் தேடிக் கண்டுபிடித்துக் கைதுசெய்யுமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.
அடுத்த அரசாங்கத்தில் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படமாட்டாது. ஆனால் தற்போதைய அரசியல் யாப்பில் பல்வேறு வகையிலான மாற்றங்களை கொண்டுவர எதிர்பார்க்கின்றோம். என்று சுற்றாடல் மற்றும் இயற்கைவள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் .
முன்னள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் விடுதலை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிக்க சிறை ஆலோசனைக் குழு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் இந்தப் பரிந்துரையை ஏற்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்ள புதிதாக மூன்று நீதிபதிகள் குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் குழுவின் தலைவராக பணியாற்றுவார் எனவும் தென்பிராந்திய பாதுகாப்பு தலைமையாளர் மேஜர் ஜெனரல் லலித் தோலகல மற்றும் யாழ்ப்பாண படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது
தேசாபிமானம் என்ற பதத்தை பயன்படுத்தி அதற்கு தவறான விளக்கத்தைக் கொடுத்து ஐ.தே.க.ஆதரிப்பவர்களை பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஓரம் கட்டும் ஒரு கைங்கரியத்தை அரசு மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளார்
எம்.ரி.வி./ எம்.பி.சி.நிறுவன தலைமை அலுவலகம் மீது கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுடன் அரசாங்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லையென்றும் அவ்வாறான எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றும் தேசியப் பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசார நட வடிக்கையில் ஈடுபடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் வியா ழக்கிழமை யாழ்ப்பாணம் செல்கிறார் .கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகயீனம் காரணமாக இறுதி நேரத்தில் தனது விஜயத்தை ஒத்திவைத்தார்.
வடக்கு கிழக்கு மகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சின் தலைவருமான அ.வரதராஜப்பெருமாள் நேற்றுப் பிற்பகல் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார்.இந்தியாவில் பல வருடங்களாகத் தங்கியிருந்த அவர், தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக நாடுதிரும்பியுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேக ஆரோக்கியத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என இராணுவத்தினர் தெரிவித்தனர். ஜெனரல் சரத் பொன்சேகாவை இன்று மருத்துவ அதிகாரிகள் பரிசோதனை செய்திருப்பதாகவும் இராணுவத்தினர் குறிப்பிட்டனர். அவர் தொடர்ந்தும் சிறந்த மருத்துவ சிகிச்சையை பெற்றுவருவதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்
போலீஸ் தடுப்பு காவலில் ஸாராஹ் மாலினி பெரேரா
இணைப்பு-3
ஸாராஹ் மாலினி பெரேராவின் சட்டத்தரணி அலெக்ஸ் பெர்னாண்டோ BBC சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் ஸாராஹ்வின் தடுப்புகாவல் சட்டவிரோதமானது என்று குறிபிட்டுள்ளார் என்பதுடன் தனக்கு இவரின் கைதுக்கான காரணம் இன்னும் அறிவிக்கபடவில்லை என்றும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஸாராஹ்வுக்கு கூட கைதுக்கான காரணம் அறிவிக்கபடவில்லை என்று கூறியுள்ளார் மேலும் இவர் கூறுகையில் ஸாராஹ் மிரிஹான போலீஸ் நிலைய அதிகாரிகள் அவரின் முகத் திரையை நீக்குமாறு கட்டாய படுத்தியதாகவும் தெரிவித்ததாக BBC செய்தி கூறுகின்றது.
இந்த தொந்தரவுகள்- Harassment – பற்றி போலீஸ் பேச்சாளர் BBC சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவ்வாறான தொந்தரவுகள் -Harassment-பற்றி தான் அறிந்திருக்க வில்லை என்று கூறியுள்ளார். SP தர போலீஸ் அதிகாரியான ப்ரிஷந்த ஜெயகொடி கூறுகையில் ஸாராஹ் மாலினி பெரேரா தேச விரோத நடத்தைக்கான தடுப்பு கட்டளையின் கீழ் தடுத்து வைக்கபட்டுள்ளார் -under a detention order (DO) for anti-state activity-என்றும் போலீஸ்க்கு எதிரான குற்றசாட்டுகள் இருப்பின் அவற்றை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் முறையிடமுடியும் என்றும் குறிபிட்டுள்ளார்
ஆனால் சட்டத்தரணி அலெக்ஸ் பெர்னாண்டோ கூறுகையில் நான் போலீஸிடம் பல தடவைகள் வேண்டியும் -போலீஸ் கூறுவதை போன்று தேச விரோத நடத்தைக்கான தடுப்பு கட்டளை- ஒன்றுக்கான ஒரு ஆவண ஆதாரத்தையும் இன்னும் பார்க்க வில்லை என்று கூறியுள்ளார்
ஸாராஹ் மாலினி பெரேரா பற்றி சண்டே லீடர் குறிபிடுகையில் சண்டே லீடர் பத்திரிகையின் விசேட செய்தி பிரிவு மிரிஹான போலீஸ் நிலையத்துக்கு விஜயம் செய்து இன்ஸ்பெக்டர் உதைய குமார , OIC பிரதீப் ரத்னாயகே ஆகியோருடன் சந்தித்து பேசியுள்ளது எனிலும் இருவரும் ஸாராஹ் மாலினி பெரேராவுக்கு எதிரான குற்றசாட்டின் பெயரை கூற மறுத்து விட்டனர் என்றும் இந்த விடையம் தொடர்பாக எந்த தகவலும் தர மறுத்து விட்டதாகவும் சண்டே லீடர் பத்திரிகை நேற்று குறிபிட்டுள்ளது மேலும் அந்த பத்திரிகை ஸாராஹ் மாலினி பெரேரா எழுதியுள்ள இரண்டு புத்தகங்களையும் தமக்கு பார்க்க முடிந்ததாகவும் அவற்றில் கிறிஸ்தவம் , இந்து , பௌத்தம் பற்றி கூற பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள
யாழ்ப்பாண பறங்கியர் தெரு மஸ்ஜித்
யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை ஒவ்வொரு கிழமையும் எமது இணையத்தளத்தில் பதிவு செய்யபடுகின்றது இந்த கிழமை யாழ்ப்பாண முஸ்லிம் பகுதிகளில் ஒன்றான பறங்கியர் தெரு பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜித் இங்கு தரப்படுகின்றது இந்த பகுதி யாழ் பிரதான குடியிருப்புக்களில் இருந்து சுமார் 4 K M துரத்தில் அமைந்துள்ளது பறங்கியர் தெரு பகுதியில் தான் முஸ்லிம்களின் மிகவும் பழமையான குடியிருப்புக்கள் அமைதிருந்து போத்துக்கீசரின் யாழ்ப்பாண போருடன் போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தை தம் வசபடுத்தி 1590 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாண அரசனைக் கொன்று முஸ்லிம்களின் குடியிருப்புக்களை அழித்து முஸ்லிம் வர்தகர்த்தை தாம் கைப்பற்றி அங்கிருந்து முஸ்லிம்களை வெளியேற்றினர் பின்னர் போத்துக்கீசரின் வெளியேற்றத்தின் பின்னர் மீண்டும் முஸ்லிம்கள் தமது பழைய இடங்களுக்கு பெரிதாக மீண்டும் திரும்பி போக வில்லை எனிலும் சிறிய அளவில் பறங்கியர் தெரு பகுதியில் முஸ்லிம்கள் குடியிருப்புகள் தோன்றின இவற்றில் ஒன்றுதான் இந்த படங்களில் காணப்படும் மஸ்ஜித் முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றும் வரை பல முஸ்லிம் குடும்பங்கள் இங்கும் வாழ்துள்ளன
இந்தியாவின் பழைய கதைக்கு அமெரிக்கா என்ற புதிய பப்ளிஷர்
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு தனது நடவடிக்கைகளை இலங்கை உட்பட தென்னாசியா நாடுகளுக்கு விஸ்தரித்துள்ளதாக அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியத் தளபதி அட்மிரல் றொபேட் விளாட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஆயுதப்படைகளின் சேவைக்குழுவுக்கு முன் நேற்று கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். செனட்டர் ஜோர்ஜ் லெமிலுக்ஸ் முன்னிலையில் விளக்கமளித்த அட்மிரல் றோபேட் மேலும் கூறியதாவது, லஷ்கர் இ தொய்பா அமைப்பு கடந்தவருடம் இந்தியாவில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குப் பொறுப்பான அமைப்பு. இவ்வமைப்பு இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு தனது நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளது. இந்த விஸ்தரிப்பு சம்ந்தமாக ஒபாமா நிர்வாகம் மிகுந்த கவனம் கொண்டிருபதாகவும் தெரிவித்துள்ளார் இந்நாடுகளைத் தவிர மேலும் சில நாடுகளிலும் அதன் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரியதும் கண்காணிக்கப்பட வேண்டிய ஆபத்தான விடயமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். லஷ்கர் இ தொய்பாவை இந்தியாவுடன் இணைந்துதாம் உன்னிபாக அவதானித்து வருவதாகவும் அட்மிரல் றொபேட் விளாட் தெரிவித்துள்ளார்
ம.மா.கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவுக்கு 56 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது:பைஸர் முஸ்தபா
மத்திய மகாண கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவுக்கு 56 மில்லியன் ரூபா நிதி கடைக்கப் பெற்றுள்தாகவும் இதன் மூலம் மத்திய மகாண முஸ்லிம் பாடசாலைகளை துரித அபிவிருத்தி செய்யவிருப்பதாக சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நேற்று வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள மடவளை மதீனா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். மத்திய மாகாண கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட பாடசாலை அதிபர்கள் பாராட்டு வைபவத்திலே பிரதமஅதிதியாக சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சர் பைஸர் முஸ்தபா கலந்து கொண்டார். அமைச்சரின் பாரியார் சட்டத்தரணி ரிபா முஸ்தபாவும் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார்- வீரகேசரி
நீதி அமைச்சர் மிலிந்த மொரகொடவின் முஸ்லிம்களுக்கான Road Map- காரிதத்துள் தரீக்
சமகால இலங்கை முஸ்லிம் சமுகத்தின் பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் கொண்டதாக குறிபிடப்படும் 12 அம்ச வேலை திட்டம் ஒன்றை நீதி அமைச்சர் மிலிந்த மொரகொட தலைமையிலான ஸ்ரீ லங்கா தேசிய கான்ரஸ் தாயாரித்து வெயிட்டுள்ளதுடன்
அவற்றை நடைமுறை படுத்துவதற்கான வேலை திட்டம் ஒன்றை ஆரம்பிதுலதாக தெரிவிக்கபடுகின்றது இந்த வேலை திட்டம் அமைச்சர் மிலிந்த மொரகொட தலைமையிலான ஸ்ரீ லங்கா தேசிய கான்ரஸ் முஸ்லிம் பிரிவு உருவாக்கியுள்ளது Read the rest of this entry »
எதிர்க்கட்சி முன்னாள் எம்பிக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகக் குறைந்தது நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கடமையில் அமர்த்துமாறு பிரதம நீதியரசர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பினை பாதுகாப்பு அமைச்சு நீக்கியிருந்தது. அதன் பின்னர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றினைத் தாக்கல் செய்திருந்தனர். அது தொடர்பான விசாரணையின் பின்னரே உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை நேற்று பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – வீரகேசரி
போலீஸ் தடுப்பு காவலில் ஸாராஹ் மாலினி பெரேரா
இணைப்பு -2
இந்த விடையமாக எமக்கு கிடைத்த தகவலின் படி தற்போது இவர் மிரிஹான போலீஸ் நிலையத்தில் DO- detention orders தடுப்பு காவல் கட்டளை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கபட்டுள்ளார் இந்த DO கட்டளை சட்டம் என்பது ஒருவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தாமல் 30 நாட்கள் வரை போலிஸ் தடுப்பு காவல் விசாரணைக்காக தடுத்து வைக்க முடியும் 30 நாட்கள் முடியும் போது மீண்டும் பல தடவைகள் 30 நாட்கள் நீடிப்புகளை போலீஸ் பெற்றுக்கொள்ள முடியும் இந்த DO கட்டளை சட்டத்தின் கீழ் தான் ஸாராஹ் மாலினி பெரேரா கடந்த திங்கள் முதல் இன்று வரை தடுத்து வைக்கபட்டுள்ளார்.
இவரை விடுவிக்கும் முயற்சியில் இவரின் குடும்பம் உட்பட இன்னும் சில தரப்பில் முயற்சிகள் நடைபெறுகின்றது இந்த விடையத்தில் ஈடு பட்டுள்ள ஒரு சட்டத்தரணி கூறுகையில் விரிவாக பார்க்க..
அமெரிக்காவில் மாநில துணை ஆளுநராக தமிழர் நியமனம்
அமெரிக்காவில் இலினொய்ஸ் மாநிலத் துணை ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்க ப்படவுள்ளார். ஜனாதிபதி பராக் ஒபாமா இந்நியமனத்தை வழங்கவுள்ளார். அமெரிக்காவில் வாழும் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கே இந் நியமனம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஒபாமாவின் அரசாங்கத்தில் கொள்கை திட்டமிடல் ஆலோசகராக கடமையாற்றியுள்ளார். இலினொய்ஸ் மாநிலத்துக்கான ஆளுநர், துணை ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. துணை ஆளுநராக ராஜா கிருஷ்ணமூர்த்தி தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்க மாநிலமொன்றில் இந்தப் பதவியை முதன் முதலில் பெற்ற தமிழராக கிருஷ்ணமூர்த்தி இருப்பார்
விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் திருமாவளவன்
(21 March) மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க முஸ்லிம்களை போல – தலித் சகோதரர்களும் ஆவலுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்ததனர். அனைத்து அமைப்புக்களும்’ பங்கேற்கும் என்று அழைப்பிதழில் குறிபிடப்பட்டிருந்தது – அதற்கேற்ப த.த.ஜ தவிர பெரும்பாலான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அமைப்புக்களும் கலந்துக்கொண்டன.
மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி, மவ்லவி ஹாமித் பக்ரி ஆகியோரின் உரைகள் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி சிறப்பாக இருந்தது. பேரா. அப்துல்லாஹ்வை வாழ்த்துவதற்கா விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தோழர் திருமா அவர்கள் வந்துகொண்டிருப்பதாக செய்தி பரவியதும் பள்ளியில் குழுமியிருந்த சகோதரர்கள் மத்தியில் ஆர்வம் இன்னும் அதிகரித்தது. கூடியிருப்பவர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக ‘மக்கா மஸ்ஜித்’ இமாம் மவ்லவி காஸிமி அவர்கள் – பேரா.பெரியார் தாசனை தொடர்ந்து – ’இஸ்லாத்தை’ விரைவில் ஏற்கப்போகும் தோழர் திருமா இன்னும் சிறிது நேரத்தில் மேடைக்கு வந்துவிடுவார் என்று அறிவித்தார். அதைக்கேட்டதும் ’நாரே தக்பீர்’ முழக்கம் ஒலித்தது. விரிவாக பார்க்க…
20 வருடங்களின் பின்னர் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பகுதி நேர அரபு பாடசாலை ஆரம்பிக்க படுகின்றது
20 வருடங்களின் பின்னர் முதல் முறையாக நாளை யாழ்ப்பாணத்தில் பகுதி நேர அரபு பாடசாலை ஆரம்பிக்க படுகின்றது இந்த பாடசாலை மஸ்ரவுதீன் பாடசாலையில் இயங்கும் மஸ்ரவுதீன் பாடசாலை 20 வருடங்களுக்கு முன்னர் ஆரம்ப , மற்றும் தரம் 5 வரை கற்பிக்கும் சிறுவர் பாடசாலையாகவும் மாலை நேர அரபு பாடசாலையாகவும் இருந்து வந்துள்ளது , இந்த பாடசாலை யாழ்ப்பாணத்தின் மிகவும் பழைய பாடசாலைகளில் ஒன்று இது 1903 ஆண்டு கட்டப்பட்டுள்ளது 1903 ஆண்டில் இருந்து 1991 வரை முஸ்லிம்களுக்கு கல்வி போதித்த பாடசாலை புலிகளில் அராஜக நடவடிக்கையுடன் தனது உயர்வான கல்வி சேவையை நிறுத்தி கொண்டது தற்போது மஸ்ரவுதீன் பாடசாலை மீண்டும் ஓர் அளவு புனர் நிர்மாணம் செய்யப்பட்ட நிலையில் நாளை தனது அரபு கல்வி சேவையை தொடர் இருக்கிறது இன்ஷா அல்லாஹ்
இந்த அரபு பாடசாலை மீள் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொள்ள உலமாக்கள் , சமுக பிரமுகர்கள் கல்வியாளர்கள் இன்று யாழ்பாணம் சென்றுள்ளனர் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி பகுதி நேர அரபு பாடசாலையை நாளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்
போலீஸ் தடுப்பு காவலில் ஸாராஹ் மாலினி பெரேரா
இணைப்பு-1
ஸாராஹ் மாலினி பெரேரா என்ற முஸ்லிம் பெண்
ஸாராஹ் மாலினி பெரேரா – Sarah Malanie Perera – என்ற முஸ்லிம் பெண் இலங்கையை சேர்ந்த பௌத்த மத குடும்பத்தில் பிறந்து பௌத்த குடும்பத்தில் வளர்ந்த சிங்கள இன பெண் இவர் இஸ்லாத்தை டிஸ்கவர் இஸ்லாம் நிகழ்ச்சிகளின் ஊடாக் கற்றதன் மூலம் 1999 இல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் இவர் தற்போது பஹ்ரைன் நாட்டின் பாடசாலை ஒன்றின் ஆசியராக தொழில் புரிகிறார்
இவர் விடுமுறையில் இலங்கை வந்த போது தான் எழுதி முடித்திருந்த இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்கள் பற்றி ஒப்பிட்டு ஆய்வு கொண்ட இரண்டு புத்தகங்களை சிங்கள மொழியில் பதிப்பு செய்துள்ளார் இந்த புத்தகங்கள் பௌத்த மதத்தை நித்திப்பதாக கூறி மிரிஹான போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டுள்ளார்
இவரின் சகோதரி மரியம் இது பற்றி கூறுகையில் இவர் இஸ்லாத்தை தழுவி கொண்ட கால பகுதியில் இருந்து இஸ்லாத்தையும் மற்ற மதங்களையும் ஒப்பிட்டு நூல் ஒன்றை எழுதிகொண்டிருந்தார் என்றும் எழுதும் பணி கடந்த வருடம் நிறைவடைந்ததாகவும் -2009 – விடுமுறையில் இலங்கை சென்ற ஸாராஹ் மாலினி பெரேரா தனது சிங்கள மொழி புத்தகங்களான ஒன்று From Darkness to Light இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு என்ற தலைப்பிலும் இரண்டாவது Questions and Answers கேள்விகளும் பதில்களும் என்ற தலைப்பிலும் எழுதியிருந்தார் அவற்றை புத்தகங்களாக பதிப்பு செய்து அவற்றில் ஒரு பகுதியை கார்கோ முகவர் ஒன்றின் ஊடாக அனுப்பும் வேளையில் குறித்த கார்கோ முகவர் நியையத்தின் உரிமையாளர் போலீசாரை அழைத்து இந்த புத்தகங்கள் லார்ட் புத்தாவுக்கு எதிரானவை என்று முறையிட்டுள்ளார் இவர் தீவிர இனவாத அமைப்பான சின்ஹல உரிமையவுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் என்று மரியம் கூறியுள்ளார் விரிவாகபார்க்க…..
அல் குர்ஆனை அரசியல் களத்தில் தவறாக பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும்

இஸ்லாமிய அரசியல் என்பது அராஜகம் , பயங்கரவாதம் , இனவாதம் , துவேசம் , சிறு பான்மை ஒடுக்கு முறை போன்ற அணைத்து மனித விரோத உணர்வுகளுக்கும் நேர் எதிரானது அல் குர்ஆன் போதிக்கும் அரசியல் , பொருளாதார , சமுகவியல் , போரியல் கோட்பாடுகள் மனிதனையும் இறைவனையும் மிகவும் நெருக்கமாக தொடர்பு படுத்தி நிற்பவை அது போதிக்கும் நீதி என்றும் நிலையானது சொந்த இலாபங்களுக்காக ,தான் சார்ந்த கட்சியின் ஆட்களுக்காக , பச்சை , நீளம் , சிகப்பு என்ற நிரங்களுக்காக அதன் நீதி சாய்ந்து விடாது , இஸ்லாமிய அரசின் தலைவர் கலீபா குற்றம் செய்தால் அவரும் தண்டிக்கபடுவார் இஸ்லாமிய அரசியல் ஒவ்வோர் தனி மனிதனின் உரிமைகளையும் மிகவும் நுட்பமாக பாதுகாக்கும் தன்மை கொண்டது இதை தான் இஸ்லாமிய இரண்டாவது அரசியல் தலைவர் கலீபா உமர் இப்படி கூறினார் ” எனது ஆட்சியில் .. கடற்கரை .. ஒன்றில் ஒரு நாய் இறந்தாலும் அதற்கும் நான் ..பொறுப்பு சொல்லவேண்டும் என்றார் ” இவை வெறும் வார்த்தைகள் அல்ல உலகை ஆண்ட நடைமுறை அரசியல் . தனி நபர் சுதந்திரத்துக்காக சமூகத்தையோ , சமுகத்தின் சுதந்திரத்துக்காக தனி நபரையோ இஸ்லாமிய அரசியலில் பலி இடமுடியாது இந்த அரசியல் முற்றிலும் நடைமுறை சார்ந்தது இந்த உண்மையான நடைமுறை பண்புகளை கொண்ட அரசியல் யாப்புதான் அல் குர்ஆன் இதை எந்த அரசியல் கட்சி தவறாக பயன் படுத்த முற்பட்டாலும் அது மிக பெரிய குற்றமாகத்தான் அமையும்.
உதாரணமாக கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி போகும் பஸ் நாங்கள் லண்டன் போகின்றோம் லண்டன் போகும் பிரயாணிகள் பஸ்ஸில் ஏறி கொள்ளுங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானதுதான் நமது நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அல் குர்ஆனை பயன்படுத்துவது இந்த புதிய முறையற்ற பலக்கம் முற்றாக தவிர்க்க வேண்டும் முழு மனித சமூகத்துக்குமான விடிவு இஸ்லாம் கூறும் அரசியலில் மட்டும்தான் நடைமுறையில் இருக்கும் இஸ்லாம் கூறும் அரசியல் மனிதனை அணைத்து அடிமைத்தனத்தில் இருந்தும் விடுதலை செய்து பிரபஞ்சங்களின் இறைவனுக்கு மட்டும் கட்டுப்படும் மனிதனாக மாற்றும் தன்மை கொண்டது
அமைச்சர் அதாவுல்லாவின் தேர்தல் பிரசாரங்களுக்காக பாடசாலைகளுக்கு மூடுவிழா
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடும் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தேர்தல் பிரசாரங்களுக்காக பொத்துவில் தேர்தல் தொகுதியிலுள்ள 10 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
மேற்படி 10 பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு மத்தியில் கல்விக் கருத்தரங்கு போன்றதொரு தேர்தல் பிரசாரத்தை ஏ.எல்.எம்.அதாவுல்லா மேற்கொண்டிருந்தார்.
பொத்துவில் மத்திய கல்லூரி, அல் இல்ஸான் வித்தியாலயம், அல் அஷ்ரப் வித்தியாலயம், அல் பஹூ ஜா வித்தியாலயம், அல் வித்திய வித்தியாலயம், அல் முவ்வரா வித்தியாலயம், அல் அக்ஸா வித்தியாலயம், அல் மீனா வித்தியாலயம், அல் அபயன் வித்தியாலயம், அஸ்லாம் வித்தியாலயம், அல் மஸ்மியா வித்தியாலயம், அல் ஹிஜ்ரா வித்தியாலயம், தருஸ்சலாம் வித்தியாலயம் ஆகியனவே மூடப்பட்ட இந்தப் 10 பாடசாலைகளும் ஆகும்.
இது குறித்து அம்பாறை மாவட்டத்தின் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் பண்டார மாபாவிடம், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் வசந்த பியதிஸ்ஸ முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார். எனினும், காலதாமதமாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருப்பதால் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமுடியாது எனவும் அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். -தமிழ் மிரர்
ஊடகவியலாளர் விருதுக்காக திஸ்ஸநாயகத்தின் பெயர்

பிரிட்டன் ஊடகவியலாளர் விருதுக்காக ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் வருடந்தோறும் வழங்கப்பட்டு வரும் விருதுக்காகவே இவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்க படுகின்றது . இப்பெயர் பட்டியலில் 16 நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. விருது வழங்கும் வைபவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரிட்டனில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கப்பல் ஒன்று 23 இலங்கையருடன் கடத்தப்பட்டுள்ளது

எகிப்திலிருந்து ஈரான் நோக்கிச் சென்ற கப்பல் ஒன்று 23 இலங்கையருடன் கடத்தப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து 180 கடல் மைல்களுக்கப்பாலுள்ள கடலில் 25 பேருடன் பயணித்த கப்பலே கடத்தப்பட்டுள்ளது. இதில் 23 இலங்கையரும், பிலிப்பைன்ஸ், சிரியாவைச் சேர்ந்த இருவரும் கடத்தப்பட்டுள்ளனர். இந்தக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தியிருக்காலம் என நம்பப்படுகிறது
பங்களாதேஷ் இராணுவத்துடன் இலங்கை யுத்த அனுபவப் பகிர்வு

இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இரு இராணுவங்களுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.இலங்கை இராணுவம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ள நிலையில் இரு நாடுகளும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
பங்களாதேஷைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் முஹம்மட் இஹ்திஸாம் உல் ஹக் மற்றும் மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக் ஆகியோர் வன்னி இராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்து கொண்டனர்.இந்த சந்திப்பின் முடிவில் பங்களாதேஷ் இராணுவ குழுவினர் இலங்கை இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கினர். இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரும் கலந்துகொண்டார். என்று தெரிவிக்க படுகின்றது
அகோனுக்கு இலங்கை வருவதற்கான விசா விண்ணப்பம் நிராகரிக்கபட்டுள்ளது

இலங்கையில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகைதரவிருந்த பிரபல சர்வதேச பாடகரான அகோனுக்கு -Akon – இலங்கை வருவதற்கான விசா விண்ணப்பம் அரசினால் நிராகரிக்கபட்டுள்ளது . இவர் இலங்கையின் தேசிய மதமான பௌத்த மதத்தை உருவாக்கிய புத்தரின் உருவ சிலையை சூழ அரை நிர்வான பெண்கள் காம நடனம் ஆடும் காட்சிகளுடன் பாடல் ஒன்று வெளி யிட்டமை பௌத்த மதத்தை அவமான படுத்தும் செயலாக குறிபிடபடுகின்றது என்பதுடன் விசா நிராகரிக்க பட்டமை பல மட்டங்களில் ஆதரவாக விமர்சிக்க படுகின்றது
மன்னார் மாவட்டத்தின் நாச்சி குடா முஸ்லிம் கிராம மஸ்ஜித் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது

இந்த முஸ்லிம் கிராமம் 20 வருடங்களின் பின்னர் தனது முதலாவது ஜும்மாஹ் தொழுகையை நடத்தியுள்ளது மன்னார் மாவட்டத்தில் 60 கும் அதிகமான் மஸ்ஜிதுகள் இருந்தன தற்போது இவைகளில் அதிகமானவை சிதைவடைந்த நிலையில் தான் இன்னும் காணபடுகின்றன எனிலும் மஸ்ஜிதுகளை மீளவும் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பாகியுள்ளது என்பது மகிழ்ச்சி தரும் விடையம் சிதைவடைந்த மஸ்ஜிதுகளில் ஒன்றுதான் இந்த நாச்சி குடா மஸ்ஜித்
வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்த பல பிரதேசங்களில் நாச்சி குடாவும் ஒன்று இங்கு முஸ்லிம்கள் மிகவும் மகிழ்ச்சியாக பரம்பரை பரம்பரையாக புலிகள் முஸ்லிம்கள் மீது தனது பயங்கரவாத பற்களை பதிக்கும் வரை வாழ்ந்து வந்தார்கள் . இங்கு முஸ்லிம் பாடசாலை , பெரிய மஸ்ஜித் என்பனவும் கம்பிரமாக அந்த அழகிய கடற்கரை கிராமத்தை அழகு படுத்திகொண்டு இருந்தது இந்த பிரதேச கடல் அழகான ஆழம் குறைந்த கடற்பகுதி, பெருமளவு இறால் கணவாய் நண்டு என்பவற்றுக்குப் பேர்போன இடம். முஸ்லிம்கள் இங்கும் பொருளாதார பிரச்சனைகள் இன்றி வாழ்ந்து வந்தார்கள் 1990 இல் வடமாகாணத்தின் அனைத்து பகுதிகளை விட்டும் புலி பயங்கரவாதத்தால் முஸ்லிம்கள் வெளியேற்றபட்டனர் அவர்களின் அனைத்து அசையும் அசையாத சொத்துகளும் புலிகளால் கொள்ளையிடப்பட்டது அணைத்தையும் இழந்த அகதிகளாக ஆக்கப்பட்டனர் அவர்களுடன் இந்த கிராம முஸ்லிம் மக்களும் அகதிகளாக ஆகினர்.
20 வருடங்களின் பின்னர் நாச்சி குடா கிராம முஸ்லிம்கள் மீண்டும் தமது பிரதேசத்துக்கு சிறிய அளவில் போக ஆரம்பித்துள்ளனர் தற்போது அங்கு 50 வரை முஸ்லிம் குடும்பங்கள் மீள் குடியேறியுள்ளது அங்கு இருக்கும் பாடசாலை , மஸ்ஜித் என்பன மீண்டும் இயங்க தொடங்கியுள்ளன , இங்கு காணப்படும் மஸ்ஜித் கடந்த கிழமை உலமாக்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது
இது பற்றிய பிந்திய செய்திகள்
எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஈ-மெயில் செய்தி ஒன்றில் பஷீர் என்பவர் குறிபிடுகையில் நாச்சி குடா மஸ்ஜித் திறக்க பட்ட செய்தி தவறானது என்றும் கடந்த வாரம் மூன்று வாகனங்களில் சென்ற பல பிரதேசங்களை சேர்ந்த வாலிபர்கள் வெள்ளி கிழமை நாச்சி குடா மஸ்ஜித் வளாகத்தில் சும்மாஹ் தொழுகை நடத்தியதாகவும் அதை தொடர்ந்து மஸ்ஜித் திறக்கபட்ட செய்தி அறிவிக்க பட்டுள்ளதாகவும் இது தவறான செய்தி என்றும் நாச்சி குடா மஸ்ஜித் இன்னும் சிதைவடைந்த திறக்கபாடாத நிலையில் தான் இருப்தாகவும் தெரிவித்துள்ளார்
ஓட்டமாவடி பாத்திமா மகளிர் கல்லூரி லண்டன் சென்பற்றிக்ஸ் கல்லூரியுடன் இணைப்பு ?
இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் வகுப்பறைகளை இணைத்தல் செயற்றிட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முன்னோடி நடவடிக்கையாக மட்டு. மத்தி கல்வி வலயத்தின் சிபாரிசுக்கமைவாக பாலிகா ம.வி. கணனி கற்கை வள நிலைய பெறுப்பாசிரியர் எம்.என்.எம். பைசல் 10 நாள் கல்விசார் சுற்றுலாவொன்றை லண்டன் நகரத்தில் மேற்கொண்டு இணைப்பு பாடசாலையை பார்வையிட்டார்.
இத்திட்டத்தின் மூலம் எதிர் காலத்தில் இப்பாடசாலை லண்டன் பாடசாலையுடன் நட்புறவு அதிகரிப்பு, மொழி விருத்தி, தகவல் தொழிநுட்ப அறிவு விருத்தி, கலாசாரப் பரிமாற்றம் ஆகிய தொலைநோக்குத் திட்டங்களுக்காக ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக வித்தியாலய அதிபர் எம்.ரி.எம். அஷ்ரப் தெரிவித்தார் என்று செய்திகள் தெரிவிகின்றன .
காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் 50 வது ஆண்டு பொன் விழா
காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் 50 வது ஆண்டு பொன் விழாவைக் கொண்டாடுவதற்கு விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் தலைவரும் காதி நீதிபதியுமான எம். எம். மஹ்றூப் கரீம் தெரிவித்துள்ளார் .
நவ இலக்கிய மன்றத்தின் பொன் விழா ஏற்பாடுகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தலைவர் மஹ்றூப் கரீம் தெரிவித்தார். காத்தான்குடி நவ இலக்கிய மன்றமானது 13 நூல்களை இதுவரையில் வெளியிட்டுள்ளது. இதன் பொன் விழாவன்று 9 நூல்களை இலவசமாக வெளியிட தீர்மானித்துள்ளது
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மௌனம் சாதிப்பது ஏன்?
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மௌனம் சாதிப்பது ஏன்? என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும கேள்வியெழுப்பினார்.
“தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அண்மையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். அதன் உள்ளடக்கங்களை பார்க்கும்போது எங்களுக்கு கவலையாக இருக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவேண்டும் என்ற விடயம் உள்ளிட்ட நாட்டின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது. என்று தெரிவித்துள்ளார்
புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது
புத்தளம் மாம்புரியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க நேற்று திறந்து வைத்துள்ளார் .செனக் தனியார் நிறுவனம் இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிறுவியுள்ளது. 10 மெகா வோர்ட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது.தற்போது 5 காற்றாலை மின் விசிறிகள் பொறுத்தப்பட்டுள்ளதுடன் இன்னும் மூன்று விசிறிகள் அடுத்த மாதம் முடிவடைவதற்குள் பொறுத்தப்படும் என அதிகாரியொருவர் தெரிவித்தார். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் புத்தளம் குருநாகல் வீதியில் அமைந்துள்ள கல்லடி மின் விநியோக நிலையத்துக்கு வழங்கப்பட்டு,அங்கிருந்து விநியோகப் பணிகள் இடம்பெறும் என்று தெரிவிக்க படுகின்றது
புதிய ஓட்டமாவடி பாலம் நாளை திறக்கபடுகின்றது
ஓட்டமாவடி – கொழும்பு பிரதான வீதி ஓட்டமாவடியில் புதிதாக நிர்மாணிக் கப்பட்ட 250 மீற்றர் நீளமான புதிய பாலம் நாளை 24 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 2.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். முன்னாள் அமைச்சர் அமீர் அலியின் முயற்சியால் நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலம் மற்றும் அமீர் அலி விளையாட்டரங்கு என்பன நாளை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படும்.
அத்துடன் அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் அமீர் அலி விளையாட்டரங் கில் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெறும். இக்கூட்டத்தில் மட்டு. மாவட்ட ஐ.ம.சு. கூட்டமைப்பு வேட்பாளர்களனைவரும் கலந்து கொள்வர்என்று தெரிவிக்க படுகின்றது
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை புலிகளால் முஸ்லிம்களின் சொத்துகள் கொள்ளை யிடப்பட்டதுதான்
![]() |
M. ஷாமில் முஹம்மட் ஆங்கிலத்தில் – Northern Muslim IDps’ Situation and Case completely different from Tamil IDPs- என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை இப்படி கூறுகின்றது ‘வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனித்துவமாக அணுகப்படவேண்டும் , தமிழ் மக்களின் மணிக் பாம் போன்ற தமிழ் மக்களின் முகாம்களுடன் ஒபிட்டு முஸ்லிம்களின் பிரச்சனையை அணுகமுடியாது இலங்கை வரலாற்றில் நடை பெற்ற மிகப்பெரிய கொள்ளை புலிகளால் முஸ்லிம்களின் சொத்துகள் கொள்ளையிடப்பட்டதுதான் , இந்த கொள்ளை உலக வரலாற்றில் மிக பெரிய கொள்ளை சம்பவங்களில் ஒன்று என்றும் முஸ்லிம்களிடம் கொள்ளை இட்ட பல கோடி டாலர் சொத்துகளை புலிகள் தமது சர்வதேச வியாபாரத்தில் முதலீடு செய்திருபதாகவும் அவற்றை அரசு கண்டு பிடித்து பறிமுதல் செய்து மீண்டும் முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் விளக்கி கூறுகின்றார் தற்போதைய முஸ்லிம் மீள் குடியேற்றம் பற்றிய அணுகு முறைகள் முற்றிலும் தவறானதாகதான் இருபதாகவும் தமிழ் மக்களின் பிரச்சனை தனியானது தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் என்பது வேறு , முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் என்பது முற்றிலும் வேறானது முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனித்துவமாக அணுகப்படவேண்டும் என்று கூறுகின்றாள் விரிவாக பார்க்க…
கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றில் கொள்ளையர்கள் கைது

கல்முனை ,மருதமுனைப் சாய்ந்தமருது, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கடந்த நான்கு நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது கடந்த மாதங்களாக கல்முனை மருதமுனைப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களான புடவை வர்த்தக நிலையங்கள், தொலைத் தொடர்பாடல் நிலையங்கள், மோட்டார் வாகன உதிரிப்பாக வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிலையங்களில் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்க படுகின்றது குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலீசார் மேலும் தெரிவித்துள்ளனர். கைதானவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்கரைப்பற்று பொலீசார் தெரிவித்துள்ளனர்
துப்பாக்கி சூட்டில் காத்தான்குடி முபாரக் படுகாயம்

கடந்த சனிக்கிழமை புதிய காத்தான்குடி பரீத் நகரைச் சேர்ந்த முபாரக் என்ற 40 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் குடும்பஸ்தர் சனிக்கிழமை இரவு 9:30 மட்டக்களப்பு நாவக் குடா பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் சுடப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார் இவர் மட்டக்களப்பு டீ ரூம் ஒன்றில் வேலை செய்து வந்தார் என்பதும் வேலை முடிந்து காத்தான்குடிக்கு திரும்பும் போது இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை செய்து வருகின்றது
ஊடகம் இனிமேல் பூடகமில்லை! – பாகம் ஐந்து
எஸ்.எம்.எம்.பஷீர்
இளைய அப்துல்லாஹ் என்பவர் பிரித்தானியாவில் உள்ள “தீபம்” தொலைக்காட்சியல் பணிபுரிபவர். இவர் எழுத்தாளராக கவிஞராகவிருப்பினும் ஊடகவியலாளர் என்றவகையில் புலிகளின் புளுகுப்பிரச்சார “தீபத்துக்கு” இவரும் எண்ணையை ஊற்றினார். தானும் புலிகளால் விரட்டப்பட்ட ஒரு ” முஸ்லிம்” என்று கூறி முஸ்லிம்களுக்குள் அனுதாபம் தேடியவர் , பின்னர் ஏன் புலிகளின் பிரச்சாரத்துக்கு துணை போனார். ஆனால் இவர் புலிகளை எதிர்த்தவரோ அல்லது புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்தவரோ அல்ல , மாறாக புலிகளை வடமாகாண முஸ்லிம் வெளிஏற்றத்துக்காக மட்டும் தனது எழுத்தில் “கண்டித்தவர்”. ஆனால் வடபுல முஸ்லிம்களிடம் இவர் பற்றிய பின்னணி பற்றி உசாவினால் யாருக்கும் அவரை பெரிதாக தெரிந்திருக்கவில்லை. தனது நூலொன்றின் அறிமுகத்தில் “இலங்கை முஸ்லிம்களுடைய அடையாளத்தை பலர் விளங்குவதில்லை. அவர்கள் தமிழ் பேசுவதால் தமிழர்களல்ல…இஸ்லாமியர். அவர்களின் அடையாளம் தனித்துவமானது. அவர்கள் தனி இனம்.” என்று எழுதியர் இவர்தானா என்று சந்தேகப்படுமளவுக்கு பின்னர் புலிபபரணி பாடியதாக கூறப்படுகிறது.
இவர் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றம் குறித்து ஒலிப்பேழை வெளியிட்டுள்ளார் என்றும் அது குறித்து எழுதியுள்ளார் என்பதுதான் இலங்கையில் அறியப்பட்ட விடயம் , பின்னர் இங்கிலாந்து வந்து சிலகாலம் இங்கு தீபம் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராக பணியாற்றிவிட்டு இலங்கை சென்று (! )மீண்டும் இலண்டன் வந்து தீபத்தில் பணியாற்ற “வாய்ப்பு” பெற்றவர். வடபுலத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்பிலக்கியங்களும் வட மாகான மக்களின் வெளியேற்றத்துடன் சிலகாலம் மௌனித்திருந்ததுடன், பின்னர் அது குறித்த எழுத்துக்களின் தீவிரம் முனைப்புப்பெற்ற கால இடைவெளியில் இளைய அப்துல்லாஹ் தன்னை வடபுல வெளியேற்றப்பட்ட முஸ்லிம் எழுத்தாளராக விரிவாக பார்க்க…
யுத்தம் காரணமாக உடைமைகளை விட்டு வந்த தமிழ் மக்களிடம் அவற்றை ஒப்டைக்க ஏற்பாடு
யுத்தம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தங்களது வாகனங்கள் உடைமைகளை விட்டு வந்தவர்கள் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உடனடியாக விபரங்களை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விரு மாவட்டங்களிலும் இதுவரை 50,000 சைக்கிள்கள், 20,000 மோட்டார் சைக்கிள்கள், 500 டிராக்டர்கள் (உழவு இயந்திரங்கள்) 20,000 தண்ணீர்ப் பம்புகள் மற்றும் ஒரு தொகை சிறியரக உழவு இயந்திரங்கள் (லேண்ட் மாஸ்டர்) என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் கிளிநோச்சிக்குக் கொண்டு வரப்படவுள்ளதுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் திருத்த வேலைகள் செய்து புதுப்பிக்கப்படவுள்ளன.கிளிநொச்சியில் 16 ஏக்கர் நிலப்பரப்பு தெரிவு செய்யப்பட்டு சுத்தப்படுத்தும் வேலைகள் செய்ய ப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களும் இங்கு கொண்டு வரப்பட்டு திருத்த வேலைகள் நடத்தப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
மோட்டார் சைக் கிள்கள், டிராக்டர்கள் போன்றவற்றின் உரிமையை உறுதி செய்யக்கூடிய ஆவ ணங்கள் அல்லது ஏதாவது ஒரு சான் றைக் காண்பித்து தங்களது வாகனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.இதேவேளை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வாகன உரிமம் தொடர்பாகவும் உறுதி செய்யப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் விட்டுவந்த பஸ், லொறிகள் போன்றவற் றையும் பெற்றுக்கொள்ள முடியுமா என ஆளுநரிடம் கேட்ட போது: இப்போதைக்கு அது சாத்தியப்படமாட் டது. அவை பழுதடைந்த நிலையில் இருப்பதால் கொண்டுவருவதில் சிக்கல்கள் உள்ளன. முதலில் இப்போது சேகரிக்கப்பட்ட 10,000 வாகனங்களையும் மக்களிடம் கையயிப்பதே எமது நோக்கம் என்றும் தெரிவித்தார்.
இன்று பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் இரு வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்
கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு பாலஸ்தீன மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான ஜெரூசலம், மேற்கு கரை போன்ற பகுதிகளில் அந்த மக்களுக்கும், அவர்களின் புனிதத் தலங்களுக்கும் எதிராக மிக மோசமான பயங்கரவாதத்தை மேற்கொண்டு வருகின்றது கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய அராஜகங்கள் அல் குத்ஸ் மஸ்ஜித் பகுதியிலும் அதிகரித்துள்ளது இஸ்ரேலிய அராஜகங்கள்,எதிர்த்து மக்கள் மேற்கு கரை மற்றும் காஸா பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. மேற்கு கரை பகுதியில் இன்று இடம் பெற்ற இஸ்ரேலிய அராஜக துப்பாக்கி தாக்குதலில் இரு பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துப்பாக்கி சூட்டு தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் விரிவாக பார்க்க…
இஸ்ரேல் என்ற சட்டவிரோத குழந்தைக்கு எப்போதும் அமெரிக்காவின் ஆதரவு உண்டு

இஸ்ரேல புதிதாக 50000 ஆயிரம் -ஐம்பதாயிரம்- புதிய குடியிருப்புகளை கிழக்கு ஜெருசலத்தின் அல் குத்ஸ் பகுதில் அமைக்க திட்டமிட்டுள்ளது இதில் 20000 ஆயிரம் குடியிருப்புகளை முதலில் நிர்மானிபதற்கான ஆரம்ப வேலைகள் பூர்த்தியான நிலையை அடைந்திருபதாகவும் ஏனைய 30000 ஆயிரம் குடியிருப்புகளை உருவாக்கும் திட்டம் திட்டமிடல் குழுவிடம் விரைவாக தயாராகி வருவதாகவும் இஸ்ரேலிய செய்திகளை ஆதாரம் காட்டி தகவல்கள் பலவழிகளிலும் வெளியாகியுள்ளன இந்த நிலையில் தான் 1600 புதிய விடு களையும் அதற்கு தேவையான அணைந்து பொது கட்டிங்களையும் ஜெருசலத்தின் கிழக்கு அல் குத்ஸ் பகுதில் அமைக்க இஸ்ரேல ஆக்கிரமிப்பு அரசாங்கம் அங்கீகாரம் கொடுத்துள்ளது விரிவாக பார்க்க…
தன்னுடைய சொந்தத்தாயாரினால் ஆற்றில்வீசி எறியப்பட்ட சிறுவர் இன்று உயிரிழந்துள்ளார்
களுத்துறை, களுகங்கை ஆற்றில் தன்னுடைய சொந்தத்தாயாரினால் வீசி எறியப்பட்ட நான்கு வயது சிறுவர் இன்று உயிரிழந்துள்ளார் . காலை 11.20 மணியளவில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . கடந்த 11 ஆம் திகதி ஆற்றில் தூக்கி வீசி எறியப்பட்ட அமில சந்தருவன் பெர்ணாண்டோ என்ற இச்சிறுவர் வாகன சாரதியொருவரால் பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த ஒன்பது நாட்களாக இச்சிறுவர் உயிருக்காகப்போராடிக்கொண்டிருந்தார்.அமில சந்தருவன் பெர்ணாண்டோவின் உயிரைக்காப்பாற்றுவதில் வைத்தியர்கள் அனைவரும் பெரு முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தச்சிறுவரின் தந்தை குடும்பத்தை விட்டும் வெளியேறிய நிலையில் தாயார் லொத்தர் டிக்கெட் விற்பனை மூலம் குழந்தைகளை பராமரித்து வந்தார் என விசாரணைகளின் மூலம் தெரிவிக்க படுகின்றது .
புத்தளம் ஆலங்குடாவில் கட்சி ஆதரவாளர்களுக் கிடையில் மோதல்

புத்தளம் ஆலங்குடாவில் கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன . இச்சம்பவத்தில் வாகனங்கள் சிலவும் சேதமாக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது.
புத்தளம் ஆலங்குடாவில் இடம் பெயர்ந்தவர்கள் வசிக்கும் பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர் ஒருவ்ர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச ஆதரவாளர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டுப் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் . இந்தச் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குள் அப்பிரதேசத்தில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மற்றுமொரு மோதல் சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் ஆதரவாளர்களின் வாகனங்கள் சில உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய மன்னார் பாலங்கள் நேற்று திறக்கபட்டுள்ளது
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பாலத்தையும் மேன்பாலதையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். மன்னார் தீவையும், பெரு நிலப் பரப்பையும் இணைக்கும் இப்பாலமும் மேன்பாலமும் 2460 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் 1836 மில்லியன் யென் நன் கொடையையும் 640 மில்லியன் ரூபா உள்ளூர் நிதியையும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலத்திற்கு இலங்கை ஜப்பான் நட்புறவு பாலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப் பாலம் 157 மீட்டர் நீளமாகவும் 10.4 மீட்டர் அகலமாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இரு வழிப் பாதை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பாலம் முதல் 3.14 கிலோ மீட்டர் வரை- தள்ளாடி சந்தி-, மேன்பாலமும் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இவ் வைபவத்தில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, முன்னாள் எம். பிக்களான சிவநாதன் கிஷோர், பி. சுமதிபால, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகரும், ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ. எச். எம். அஸ்வர், நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் வசந்த கரன்னாகொட உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்
புத்தளத்தில் இலங்கையின் முதலாவது காற்றாலை மின்சார உற்பத்தியாக்கி

தனது முதல் மின் உற்பத்தியை அடுத்த மாதம் அளவில் தொடங்கவுள்ளது
புத்தளத்தில் இலங்கையின் முதலாவது காற்றாலை மின்சார உற்பத்தியாக்கி wind energy plant புத்தளம் நுரைச்சோலை பகுதியில் நிர்மாணிக்க பட்டு வருகின்றது இது தனது முதல் மின் உற்பத்தியை அடுத்த மாதம் அளவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்க படுகின்றது அதே வேளை புத்தள நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்டத்துக்கான நிர்மாண வேலைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஆரம்பித்து வைத்துள்ளார் .மின் நிலையத்தின் இரண்டாவது கட்டம் 600 மெகாவோட் மின்சாரத்தை 2012ம் ஆண்டளவில் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கும். நுரைச் சோலை மின் நிலையத்துக்கான மொத்த செலவையும் சீனா வழங்கியுள்ளது என்பது குறிபிடதக்கது
இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் 10 ஆசனங்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி கொள்ளும் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இலங்கை தொடர்பில் நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருப்பது ஐ.நா. சாசனத்தின் உயிர் நாடியைச் சிதைக்கும் செயலாகுமென்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்க கூடாது. மீறி பலவந்தமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சி செய்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைத்து இலங்கைச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
தொடர்ந்தும் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை நாகரிகமின்றி தலையிடுமாயின் உள்நாட்டிலிருந்து ஐ. நா. அலுவலகத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் எழுதப்பட்ட பேட்டியின் பிரதியை கடற்படை தலைமையகத்திலிருந்து கடத்திச்சென்று பிரிட்டிஷ் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய சூத்திரதாரி மக்கள் விடுதலை முன்னணியே என அரசாங்கப் பேச்சாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான டளஸ் அழகப்பெரும குற்றஞ்சாட்டியுள்ளார்
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசனின் ஆதரவாளர்கள் இருவர் மீது கண்டி கலஹா பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு

எஸ்.எம்.எம்.பஷீர்
“சுடரொளி” வித்தியாதரன் சென்ற வருடம் மாசியில் கொழும்பில் புலிகள் நடத்திய வான் தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார். உண்மையில் இலண்டனில் புலிக்கு தீவிர ஆதரவாளராக நிதி உதவி, பிரச்சாரம் , அரசியல் ரீதியில் ஆதரவு திரட்டுதல் என பல வருடங்கள் செயற்பட்டு , பின்னர் அவர் இலங்கைக்கு சுனாமியின் பின்னர் சென்றபோது அங்கு புலிகளால் தண்டிக்கப்பட்டு, இலண்டன் திரும்பியதும் புலிகளுக்கு எதிராக மாறிய நபரை வித்தியாதரன் இலண்டனில் தன்னை சந்தித்து மீண்டும் புலிகளுடன் இணைந்து வேலை செய்யுமாறு வேண்டிக்கொண்டதாக அந்த நபரே என்னிடம் கூறினார். மேலும் வீரகேசரிப் பத்திரிக்கையில் பணியாற்றிய ஸ்ரீ கஜன் என்பவர் முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்காவினை சதிகொலை செய்ய முனைந்த கரும்புலியுடன் தொடர்புகொண்டிருந்தார் என்றதன் பேரில் கைது செய்யப்பட்டு 25 அக்டோபர் 1998 ல் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இவர் இப்போது வீரகேசரி செய்தி ஆசிரியராக இருக்கும் ஸ்ரீ கஜநேயாவார் என்று தகவல்கள் கூறுகின்றன. மேலும் இம்முறை இவர் யாழ்ப்பணத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் உருவாக்கப்பட்ட கூட்டணியின் சார்பில் போட்டியிடுகிறார் எனபது இன்னுமொரு சுவாரசியமான செய்தி. விரிவாக பார்க்க…
யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஐந்து பிரதான பாடசாலைகளில் ஒன்றான பெரிய கதீஜா பெண்கள் கல்லூரி
lankamuslim.org இலங்கையில் அணைத்து பிரதேசங்களிலும் உள்ள முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை பதிவு செய்து வருகின்றது இந்த வகையில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை ஒவ்வொரு கிழமையும் எமது இணையத்தளத்தில் பதிவு செய்யபடுகின்றது சென்ற கிழமை சில தொழில் நுட்ப இடையூறு ஒன்றின் காரணமாக பதிவு செய்ய முடியவில்லை என்பதை கூறி இந்த முறை யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஐந்து பிரதான பாடசாலைகளில் ஒன்றான பெரிய கதீஜா பெண்கள் கல்லூரியை இங்கு பதிவு செய்கிறோம் கதீஜா பெண்கள் கல்லூரி இரண்டு பிரிவுகளை இரண்டு இடங்களில் கொண்டு இயங்கி வந்தது என்பதுடன் பல முஸ்லிம் யுவதிகளுக்கு கல்வி அறிவூட்டி முஸ்லிம் பெண்கள் சமூகத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாய் இருந்ததாக எமது யாழ் செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள் இங்கு பெரிய கதீஜா பெண்கள் கல்லூரியை மட்டும் இங்கு பதிவு செய்கிரோம் இதன் தற்போதைய தேற்றம் வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனியான சட்ட கொள்ளை ஒன்றின் ஊடாக அணுகப் படவேண்டும் என்பதை பறை சாற்றுகின்றது
வட மாகான முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தனியான சட்ட கொள்கை ஒன்றின் ஊடாக அணுகப் படவேண்டும்
முஸ்லிம் மீள் குடியேற்றம் ஓர் ஆய்வு: M. ஷாமில் முஹம்மட்
1990 இல் வட மாகாணத்தின் பூர்விக குடிகளில் ஒன்றான முஸ்லிம்கள் புலி பயங்கர வாதத்தால் வெளியேற்றபட்டனர் அவர்களின் அனைத்து அசையும் அசையாத சொத்துகளும் புலி பயங்கரவாதத்தால் கொள்ளையிடப்பட்டது கோடிகணக்கான சொத்துகளின் சொந்தகாரர்கள் சில மணித்தியால அவகாசத்தில் அனைத்தையும் இழந்த அகதிகளாக ஆக்கப்பட்டனர் அன்றில் இருந்து இன்றுவரை வடமாகாண முஸ்லிம்களில் அகதி வாழ்கை இருபது வருடயங்களை எட்டியும் விடிவு இன்றி தொடர்கின்றது.
வடக்கில் இருந்து அன்று வட மாகான முஸ்லிம்கள் ஒரு இலட்சதுக்கும் அதிகமான மக்கள் பலவந்தாமாக வெளியேற்ற பட்டனர் இன்று அவர்களின் தொகை இரு மடங்குகளால் அதிகரித்துள்ளது ஒரு கும்பமாக வந்தவர்கள் இன்று மூன்று குடும்பங்களாக , நான்கு குடும்பங்களாக பெருகியுள்ளார்கள் 20 வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது ஆகவே மீள் குடியேற்றம் என்பது அவர்களின் இடங்களை அவர்களுக்கு பெற்று கொடுபதுடன் , அவர்களின் மஸ்ஜித்துகளையும், பாடசாலைகளையும் மீள கூரை போட்டு, சுவர்களுக்கு வர்ணம் பூசி கொடுப்பதுடன் முடிந்து விடாது விரிவாக Read the rest of this entry »
இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை
அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளரும் சட்டத்தரணியுமான் , பாயிஸ் பைஸர் முஸ்தபாவின் அக்குரணை காரியாலையம் ஒன்று இன்று அதிகாலை இனம் தெரியாக குழு ஒன்றினால் தாக்கப்பட்டு உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்த பட்டுள்ளதாக அங்கு இருந்து வரும் ஆரம்ப செய்திகள் தெரிவிக்கின்றன
மூடப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழகம் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடி க்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு உயர் கல்வி அமைச்சர் விஸ்வா வர்ணபால நேற்று பதில் உபவேந்தர் கலாநிதி பிரேம்குமாருக்கு பணிப்புரை விடுத்தார் என செய்திகள் கூறுகின்றன
தமிழர் தாயகக் கோட்பாட்டில், அதன் அடிப்படையில் உரிமையை வென்றெடுப் பதில் விட்டுக் கொடுப்புக்கோ வேறு வகையான இணக்கப்பாட்டுக்கோ இட மில்லை யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் வெற்றிலையும் சுயேச்சைகளும் வெற்றி பெற்றால் அரசாங்கம் இதுவரை செய்த கொடுமைகளைத் தமிழ்மக்கள் சரியெனக் கருதுகிறார்கள் என்று சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வழி செய்ததாகிவிடும். இரா.சம்பந்தன்.
இலங்கையின் இறுதி யுத்த காலத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற் றங்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்புக் கூறும் விவகாரம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிப்பதைத் தாம தப்படுத்தப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன், அந்த நடவடிக்கை இலங்கையின் இறைமையை மீறும் செயல் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தகையதொரு குழு அவசியமில்லையெனத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் இந்த விடயம் தொடர்பான தனதுநிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும் அறிவித்திருக்கிறது.
தேர்தல் காலங்களில் பிரச்சினைகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின் வெற்றியின் பின் பதவிகளை வழங்காமல் இருக்க ஜனாதிபதி தீர்மானமாணித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயளாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இரு அமைச்சர்கள் சட்டவிரோத வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றை நடத்திவருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் பட்டியலில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பஷீர் சேகுதாவூத் இன்று குற்றஞ்சாட்டினார்.
புத்தளம், குருநாகல் மாவட்டத்திலுள்ள 26 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யபடவுள்ளன
வடமேல் மாகாணத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்தும் இரண்டு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அவை சகல வளங்களும் கொண்ட பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதன் படி புத்தளம், குருநாகல் மாவட்டத்திலுள்ள 26 பாடசாலைகள் இவ்வாறு அபிவிருத்தி காணப்படவுள்ளன. இதற்கான நிதி வடமேல் மாகாண சபை ஒதுகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இதற்கென 9 கோடி ரூபா நிதியை வடமேல் மாகாண சபை ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா 35 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது .
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை- நிஜமாகுமா
கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு கல்விப் பிரச்சினைகள் பல உண்டு. அதில் மிகவும் பிரதானமாக கருதப்படும் பிரச்சனை கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் ஆண்கள் பாடசாலைகள் ஒன்றின் தேவை இது நீண்ட காலமாக கண்டி மாவட்ட முஸ்லிம்களால் முன்வைக்கப்படும் பிரதான கோரிக்கை.
கண்டி மாவட்டத்தில் சித்திலெப்பை முஸ்லிம் பாடசாலை இருந்தும் அந்த பாடசாலை கண்டி வாழ் முஸ்லிம்களால் பெரிதும் பயன்படுத்த பாடம் இருகின்றமைக்கு பல காரணங்கள் சொல்லபடுகின்றது மொத்தத்தில் கண்டி மாவட்ட முஸ்லிம்களின் கல்விதேவையை பூர்த்தி யாக்க கூடிய தரத்தில் அந்த பாடசாலை இல்லை என்றுதான் Read the rest of this entry »





























