Archive for February 28th, 2010
பேரியல் அஷ்ரப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
![]() |
அம்பாறையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் பேரியல் அஷ்ரப்பின் ஆதர வாளர்கள் மீது அதே கட்சியின் சார்பில் போட்டியிடும் சரத்வீரசேகர என்பவரின் ஆதரவாளர்கள் நேற்றுமுன்தினம் இரவு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தத் தாக்குதலின் போது சிலர் காய மடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.இதுதொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன . கிழக்கில் இடம் பெற்ற முதலாவது தேர்தல் வன்செயல் சம்பவம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதே வேலை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சிங்கள கட்சிகளுக்கே சிங்கள மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோரும் சுவரொட்டிகள் அம்பாறையில் பிரதான நகரில் நேற்று ஒட்டப்பட்டுள்ளனதுடன் . எந்தக் கட்சிகளின் ஆதாரவாளர்களாக இருந்தாலும், சிங்கள மக்கள் அனைவரும் சிங்கள கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்று அச்சுவரொட்டிகளில் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன










