பௌத்த மதகுருமார்கள் அச்சுறுத்தப்பட்டதாக ரணில் குற்றச்சாட்டு
தென்னிலங்கையில் 500 பௌத்த விகாரைகளிலுள்ள மதகுருமார்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் .
அரசியலமப்புச் சபையின் 9வது உறுப்புரையின் படி, நாட்டில் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கவேண்டிய அதேவேளை, பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்
வேறு ஒரு சந்தர்பத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரம சிங்க அரசியல்வாதிகள் மீது சேறு பூசிவந்த அரசாங்கம் இன்று அமல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் மீதும் சேறுபூசும் கலாசாரத்தைத் தோற்றுவித்திருப்பதாகத் தெரிவித்ததுள்ளார் மேலும் புத்தசாசனத்துக்கு களங்கமேற்படுத்த யாராவது முனைந்தால் அதனை முறியடிக்க எந்தச் சவாலையும் எதிர் கொள்ளத்தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்







