Archive for February 17th, 2010
கிழக்கில் இன முறுகலை மீண்டும் தோற்றுவிக்க அரசியல் சக்திகள் முனைகிறதா ??

கிழக்கு மாகாணத்தில் சில வாரங்களாக நிலவி வரும் தமிழ் முஸ்லிம் இன முறுகல் நிலை அரசியல் இலாபம் கருதி அரசியல் வாதிகளால் திட்டமிட்டு உருவாக்கபடுகிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது காத்தான்குடியில் சிகரம் கிராம மையவாடி சம்பவங்கள் , நேற்று முன்தினம் நடந்த ஆரைப்பற்றை செல்வா நகரைச் சேர்ந்த ஒருவரின் பூத உடல் கர்பலா பகுதியில் கர்பலா ஜும்மா பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டதை அடுத்து பிரதேசத்தில் பதற்றம் அவதானிக்கப்பட்டது.
இது ஒரு திட்டமிட ஒரு நடவடிக்கையாகவே காத்தான்குடி முஸ்லிம்களால் பார்க்க படுகிறது கர்பலா கிராமம் என்பது சிகரம் கிராமதுக்கு போகும் வழியில் சிகரம் கிராமதுக்கு அண்மையில் உள்ள கிராமமாகும் இவைகளின் பின்னால் பலமான ,அரசியல் சக்திகளின் தொடர்புகள் இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் நிலவுவதாக எமது காத்தான்குடி செய்தியாளர் தெரிவிகின்றார் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த சந்தர்பத்தில் மீண்டும் உருவாகிவரும் முஸ்லிம் தமிழ் புரிந்துணர்வை தகர்க்கும் விதமாக சில அரசியல் சக்திகள் செயல் படுவதாக தெரிகின்றது புரிந்துணர்வுடன் இன விரோத பாகுபாடுகளை புறம் தள்ளி கிழக்கு மாகான மக்கள் மீண்டும் வாழ முற்படும் இந்த சந்தர்பத்தில் இப்படியான சம்பவங்கள் இன விரோத அரசியலை வளர்க்கும் அதில் இலாபங்களை காண முற்படும் சக்திகளின் எண்ணங்களை தெளிவாக காட்டுவதாக அமைகிறது கிழக்கு மாகாணதில் ஜனாதிபதியை தெரிவு செய்யவதற்கான தேர்தல் பிரசார மேடைகளில் இன விரோத அரசியல் கருத்துகள் முன்வைக்கப்பட்டமை குறிபிடதக்கது
சிகரம்: என்ன நடக்கிறது…………?
1977ல் பாலமுனைப் பள்ளிவாயலுக்கு காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரால் வக்பு செய்யப்பட்ட சிகரம் பகுதியிலுள்ள 19.85 பேர்ச் விஸ்தீரணமுள்ள காணி ஒன்று 1985ல் பாலமுனைப் பள்ளியால் சிகரம் பள்ளிவாயலுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டு அன்று முதல் அக்காணி சிகரத்தின் மக்பராவாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்குரிய காணி உறுதிகள் அனைத்தும் சிகரம் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையிடம் இருக்கின்றன.
இறுதியாக புலிகளால் மக்கள் விரட்டியடிக்கப்படுவதற்கு முன்னர் 1989 நவம்பர் மாதம் சிகரத்தில் பிறந்து அங்கேயே வாழ்ந்து மரணித்த 85 வயதான ஒருவரின் ஜனாஸா அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இவரது மரணச் சான்றிதழ் பள்ளிவாயல் நிர்வாகத்திடம் இருக்கிறது.
சிகரத்தில் மக்கள் 2005 பிற்பகுதியில் மீளக்குடியமர்ந்த பின்னர், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மரணமடைந்த சிறு குழந்தை ஒன்றின் ஜனாசாவே முதல் தடவையாக இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. இரண்டு நாட்களின் பின்னர் ஜனாஸா தோண்டப்பட்டு மஞ்சிப் பலகை வெளியே எடுக்கப்பட்டு (ஜனாஸா உள்ளே இருக்கும் என்ற அனுமானத்தில்) டயர் ஒன்றையும் போட்டு எரிக்கப்பட்டுக் காணப்பட்டது. விரிவாக பார்க்க..
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முதலாவது ஹலால் மாநாடு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்களிப்புடன் உடோவியா வெகேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த மாநாடு பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்ததாக தெரிகிறது இம் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா ஹலால் கண்காட்சியையும் திறந்து வைத்திளார்
இலங்கைக்கு அரபு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் ஏனைய முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளையும் அதிக அளவில் கவருவதற்கு இலங்கைக்கு ஹலால் அங்கீகாரம் பெற்ற ஹலால் சான்றிதழ் சுற்றுலாத்துறையை அறிமுகம் செய்து மேம்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதாக . முன்னாள் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா நேற்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஹலால் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க…








