Archive for February 8th, 2010
போராளிகள் இணையத்தளம்-www.ourummah.org- என்ற முகவரியில் இயங்கும்
எமது இணையத்தள குழுமம்களில் ஒன்றான “போராளிகள்” தளம் டொமைன் பதிப்பு வேலை காரணமாக இன்றும் , நாளையும் சில பகுதிகளில் பார்வை இடுவது சிரமமானதாக அமையமுடியும் – إن شاء الله- இனிவரும்காலங்களில் போராளிகள் இணையத்தளம் www.ourummah.org என்ற முகவரியில் இயங்கும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம் என்பதுடன் 193 கும் அதிகமான நாடுகளில் வாழும் உலகளாவிய முஸ்லிம் உம்மாஹ் பற்றிய தகவல்கள் , கட்டுரைகள் என்பன வற்றுடன் பொதுவான உலக செய்திகளையும் முடியுமான வரை உடனுக்குடன் தரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம்
மன்னார் மாவட்ட மீனவர்கள் 24 மணி நேரமும் தொழிலுக்கு செல்ல முடியும்
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த நடைமுறை மற்றும் ஏனனய கெடுபிடிகள் நீக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண முகாமைதுவ அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அதாவது மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கி வந்த பிரச்சினை தொடர்பாக தான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும், இதன் பேரில் ஜனாதிபதி மன்னார் மாவட்ட கடற்தளபதிகளுடன் உரையாடியதோடு மன்னார் மாவட்ட மீனவர்கள் 24 மணி நேரமும் தொழிலுக்கு செல்ல முடியும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.









