Lankamuslim.org

One World One Ummah

Archive for February 6th, 2010

ஜனாதிபதி இன்று ரஷ்யா பயணம்

leave a comment »

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ளார். எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அவர் ரஷ்யாவில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடெவ்வைச் சந்திக்கும் ஜனாதிபதி அந்நாட்டின் கடன் திட்டம் ஒன்று குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ, இரண்டாவது முறையாகவும், ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாக இது அமைகிறது.பிரத்தியேக விமானம் ஒன்றில் இவர் இன்று காலை பயணித்ததாக, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன-வீரகேசரி

Written by lankamuslim

February 6, 2010 at 11:10 pm

நேற்று “கஷ்மீர் தினம்”

leave a comment »

http://online.wsj.com/media/0205pod14.jpg

நேற்று  “கஷ்மீர் தினம்”  பாகிஸ்தானில் அனைத்து பிரதான நகரங்களிலும்  பாரிய  மக்கள் தொகையை கொண்ட கஷ்மீர்     விடுதலைப் போராட்டத்திக்கு ஆதரவான  ஆர்பாட்டங்கள் நடந்துள்ளன ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி  5ம் நாள் கஷ்மீர்,பாகிஸ்தான் மக்களால் “காஷ்மீர் தினம்”  கொண்டாடுவது வழக்கம் கஷ்மீர் கடந்த 150 ஆண்டுகளாக  கஷ்மீர்  விடுதலைப் போராட்ட பாதையில் நடக்கிறது   இந்தியா என்ற நாடு தோன்றுவதற்கு முன்பு  காஷ்மீர் விடுதலை போராட்டம் தொடங்கி விட்டது என்பது வரலாறு

Written by lankamuslim

February 6, 2010 at 6:25 pm

ஹக்கீம் தலைமையிலான மு.காவை அரசுடன் இணைப்பதில்லையென ஜனாதிபதி எம்மிடம் உறுதி

leave a comment »

ரவூப் ஹக்கீம் சார்ந்த முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிடம் தெரிவித்ததாக கட்சியின் தலைவரும் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நிப்போன் ஹோட்டலில் நடை பெற்றது. இதன்போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Written by lankamuslim

February 6, 2010 at 12:17 am

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஓரிரு தினங்களில் வழக்குத் தாக்கல்: ஐ.தே.மு

leave a comment »

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தாம் முற்றாக பகிஷ்கரிப்பதாக எதிர்க்கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அது தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவத்துள்ளனர். ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இத் தகவலை உறுதிப்படுத்தினர்.

இவ்விடயம் பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் இடம்பெற்ற மோசடிகளை ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் குழுவொன்றை நாம் நியமித்துள்ளோம். உரிய முறையில் தகவல்களை திரட்டி, ஆதாரத்துடன் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்துவருகிறார்கள். இன்னும் சில  தினங்களில் வழக்கு தொடரலாம் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

அதேவேளை, இரத்தினபுரியில் வாக்காளர் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய முன்னணியினர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்வதற்கு தேர்தல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்றுள்ளதாக திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்-வீரகேசரி

Written by lankamuslim

February 6, 2010 at 12:07 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,834 other followers