நாட்டின் இறைமைக்கும் ஒற்றுமையுடன் செயற்பட்ட முஸ்லிம் தலைவர்கள்
எமது நாடு சுதந்திரமான சுதந்திரக்காற்றை அனுபவித்து 62 ஆண்டுகள் கடந்த நிலையில், 1948 இல் பெற்ற சுதந்திரத்தின் முழுமைத்தன்மையை நாட்டின் அனைத்துள்ளங்களும் மிகவும் மனமகிழ்வுடன் இன்று கொண்டாடுவதற்கு இந்நாட்டின் வாழ் முஸ்லிம் தலைவர்களும் சுதந்திரத்தின் மீட்சிக்கு தம்மால் இயன்ற முயற்சிகளில் அன்று பல்வேறு பிரயத்தனங்களில் கால்கோள் பதித்துள்ளார்கள் என்றால் அது இன்றும் நினைவு கூரப்படவேண்டியவையே.
அன்று இலங்கையின் ஏகாதி பத்தியம் பிரித்தானியரின் ஆதிக் கத்தில் இருந்தபோது அன்றிருந்த பல முஸ்லிம் தலைவர்கள் சிங்கள மற்றும் தமிழ் தலைவர்களுடன் ஒன்றித்து அயராது பாடுபட்டுள்ளனர்.ஆளும் அரசில் அங்கம் வகித்து தான் சார்ந்த சமூகத்திற்கு பல்வேறு அபிவிருத்திகளை ஆற்றியுள்ளதோடு நாட்டின் ஒற்றுமைக்கும் பங்காளி களாக இருந்து உழைத்திருக்கி றார்கள். இவ்வாறு உழைத்த சமூகப் பெரியார்களின் வரிசையில் பல தலைவர்களைக் கூறலாம் விரிவாக பார்க்க..








