கம்பளை விகாராதிபதி கொலை:சந்தேகத்தில் ஒருவர் கைது!
விகாரை நலன்புரி விகாராபதி மீது குண்டுத்தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் சந்தேக நபர் ஒருவரை நேற்றுக் கைது செய்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். ஜனாதிபதி தேர்தலின் பின்னர், காலை வேளையில், வாகனம் ஒன்றில் வந்த சிலர் விகாரை மீது குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் 73 வயதான விகாராதிபதியும் மற்றொரு நபரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த கம்பளை பொலிஸார், நேற்று களுத்துறை பிரதேசத்தில் மறைந்து திரிந்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தலைமறைவாகியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இச்சம்பவம் தொடர்பாக மேலும் அரசியல்வாதி ஒருவரையும் மற்றும் இராணுவத்திலிருந்து தலைமறைவாகியதாகக் கூறப்படும் மேலும் சில இராணுவ வீரர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது








