Lankamuslim.org

One World One Ummah

Archive for February 2010

பேரியல் அஷ்ரப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

leave a comment »

See  full size image

அம்பாறையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் பேரியல் அஷ்ரப்பின் ஆதர வாளர்கள் மீது அதே கட்சியின் சார்பில் போட்டியிடும் சரத்வீரசேகர என்பவரின் ஆதரவாளர்கள் நேற்றுமுன்தினம் இரவு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தத் தாக்குதலின் போது சிலர் காய மடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.இதுதொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன . கிழக்கில் இடம் பெற்ற முதலாவது தேர்தல் வன்செயல் சம்பவம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதே வேலை  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சிங்கள கட்சிகளுக்கே சிங்கள மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோரும் சுவரொட்டிகள் அம்பாறையில் பிரதான நகரில் நேற்று ஒட்டப்பட்டுள்ளனதுடன் . எந்தக் கட்சிகளின் ஆதாரவாளர்களாக இருந்தாலும், சிங்கள மக்கள் அனைவரும் சிங்கள கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்று அச்சுவரொட்டிகளில் கோரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

February 28, 2010 at 1:10 pm

உண்மையான புலிகள் செயற்குழுவொன்றை நிறுவி இரகசியமாக செயற்படுகின்றார்கள் : வி.உருத்திரகுமாரன்

leave a comment »

http://www.lovetamils.com/cin/wp-content/uploads/2009/11/Rudra356x274.jpg

BBC க்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் நாடு கடந்த தமிழீழ அரசின் என்று குறிபிடப்படும் அமைப்பின் இணைப்பாளர் வி. உருத்திரகுமாரன் விடுதலைப்புலிகளின் உண்மையான அமைப்பு எதுவென கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தற்போது செயற்குழுவொன்றை நிறுவி அவர்கள் செயற்படுவதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களால் இப்போது வெளிப்படையாக செயற்படமுடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது வெவ்வேறு பெயர்களில் அறிக்கைகள் வெளிவந்துள்ளனவே எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சரியான விடுதலைப்புலிகளின் பின்னால் மக்கள் தாமாகவே அணிதிரளுவார்கள் அப்போது உண்மையானது எதுவென நீங்களே அறிந்துகொள்வீர்கள் என பதிலளித்தார்.

அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்களுடன் இணைந்து அரசியல் வேலை செய்தல் சட்ட ஆலோசனை வழங்கல் என்பனவும் பயங்கரவாத நடவடிக்கைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அரசியல் ரீதியான வேலைகளில் ஈடுபடுதல் அவர்களுக்கான சட்ட ஆலோசனை வழங்கல் போன்ற பணிகளில் ஈடுபடுவதை அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கின் புலிகளின்   தரப்பில்  வி. உருத்திரகுமாரன் வாதாடுவது குறிபிடதக்கது

Written by lankamuslim

February 27, 2010 at 8:10 pm

இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

leave a comment »

http://images.clipartof.com/small/29667-Clipart-Illustration-Of-A-White-Character-Giving-A-Political-Speech-To-A-Group-Of-People.jpg

கண்டி மாவட்ட முஸ்லிம்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமாயின் பொதுத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை ஆளுந்தரப்பில் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய வேண்டுமென சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இனி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்றும், பதிலாக பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் இராணுவப் பிரிவுகளில் அரசியலைக் களையும் முயற்சிகளில் ஒன்றாக இது அமையும் என்றும்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது

ஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி -EPDP- யாழ். மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு எதிராக இன்று கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை மாலை கிண்ணியாவில் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.ஏ.எம்.மஹ்ரூபின் ஆதரவாளர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர் என்று தகவல்கள் கூறுகின்றன

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் 12 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 14 பதிவு செய்யப்பட்ட கட்சிகளையும் 17 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 465 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.16 கட்சிகளும் 18 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த போதும் அவற்றில் ஒரு கட்சியினதும் இரு சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

Written by lankamuslim

February 27, 2010 at 7:48 pm

புத்தளத்தில் 15 அரசியல் கட்சிகள் – 12 சுயேட்சைக் குழுக்கள் போட்டி

leave a comment »

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடவென 15 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மற்றும் 12 சயேட்சைக் குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் யாவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகப் புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்ஸ்லி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் இத்தேர்தலில் 297 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

Written by lankamuslim

February 27, 2010 at 7:09 pm

புத்தளம்- மன்னார் வீதி அபிவிருத்தி தடைகள் இன்றி தொடரும்

with one comment

புத்தளம்- மன்னார் வீதி வடமேற்குக் கரையில் அமைந்துள்ள புத்தளத்துக்கும் ,மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேசத்தின் மறிச்சிக்கட்டிக்கும் இடையிலான  66 கி. மீட்டர்  தூரம் கொண்ட பாதை,  புத்தளம்- மன்னார் பாதை திறக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நீண்ட காலமாக முன்வைக்க படும் விடையமாக இருந்து வருகின்றது இது பற்றிய கட்டுரைகள் , கருத்தரங்குகள் , புத்தளம் மன்னார் பாதை என்ற பெயரில் ஒரு நூலும் வெளிவந்தன என்பது குறிபிடதக்கது இந்த வீதி வடக்கின் ஆறு பிரதான வீதிகளின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் புத்தளம் மன்னார் வீதி அபிவிருத்தி திட்டமும் தொடங்கபட்டது . தற்போது  திறக்கப்பட்டுள்ள புத்தளம் மன்னார் வீதி முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படுவது பொதுவாக அனைவருக்கும் பயன் தர கூடியதாகவும் குறிப்பாக புத்தளம், மன்னார் மக்களுக்கு மிகவும் பயன் தர கூடியதாகவும் அமையும் ,

தற்போது புத்தளம் மன்னார் வீதி அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுழல் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட ஆரம்பித்துள்ளது என்பது குறிபிடதக்கது எனிலும் வீதி அபிவிருத்தி திட்டங்களுக்கு இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற தகவல் எமக்கு கிடைக்க பெற்றுள்ளது

கடந்த வருடம் கல்பிட்டி ஆலங்குடாவில் மீள் குடியேற்ற அனர்த்த சேவைகள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வடபுல மகாநாட்டுக்கு பிரதம அதிதியாக வருகை தந்த ஜனாதிபதி, அங்கு குழுமியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் 2010 ஜனவரியில் புத்தளம்- மன்னார் பாதை திறக்கப்படும் என்று உறுதி மொழி வழங்கினார் இதற்கு அமைவாக இந்த வருடம் ஜனவரி 24 இம் திகதி பல காலங்களாக மூடப்பட்டுக் கிடந்த புத்தளம் – மன்னார் வீதி வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இப்பாதையை அபிவிருத்தி செய்ய 650 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிபிடதக்கது .

தகவல்  எமது புத்தளம் செய்தியாளர்கள்:

Written by lankamuslim

February 27, 2010 at 6:44 pm

25 கட்சிகள், 312 சுயேச்சைகள் போட்டி: 196 ஆசனங்களுக்கு 7625 பேர் களத்தில்

leave a comment »

கட்சிகளின் 46 மனுக்களும் 35 சுயேச்சைகளும் நிராகரிப்பு

பாராளுமன்றத்திற்கு வாக்கெடுப்பின் மூலம் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 7,625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இருபத்து நான்கு அரசியல் கட்சிகளிலும் 312 சுயேச்சைக் குழுக்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளார்கள். 22 தேர்தல் மாவட்டங்களுக்கும் அரசியல் கட்சிகளினூ டாக 3859 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் 3691 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் நேற்று நண்பகலுடன் நிறை வடைந்தன. ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பிற்பகல் 1.30 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முறையாகப் பூர்த்திசெய்யப்படாததால், கட்சிகள் தாக்கல் செய்த 46 வேட்பு மனுக்களும் 35 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வன்னி மாவட்டத்திற்குத் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. அந்தக் கட்சியில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு வேட்பாளரின் பெயர் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் பட்டியலிலும் இடம்பெற் றிருந்ததால் அந்த இரண்டு கட்சிகளின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. விரிவாக பார்க்க..

Written by lankamuslim

February 27, 2010 at 12:17 am

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியலில் 4 முஸ்லிம் பெயர்கள்

leave a comment »

http://blog.oodle.com/wp-content/uploads/2007/03/national-cars.jpg

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணியின் தேசிய பட்டியல் 29உறுபினர்களை கொண்டுள்ளது இதில் 4  முஸ்லிம் பெயர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணியின் தேசிய பட்டியலில் உள்ளடக்க பட்டுள்ளது எம். எச். முஹம்மட், முஹம்மத் முசம்மில் , A. H. M. அஸ்வர்  ,  U. L. சாகுல்  ஹமீது ஆகியன முஸ்லிம் பெயர்களாகும்  இந்த 27 பேர் கொண்ட பட்டியலில் கருணா அம்மான் பெயரும் இடம் பெற்றுள்ளது

Written by lankamuslim

February 26, 2010 at 4:32 pm

பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி ஒருவரை அடையாளம் காட்டினார்

leave a comment »

மட்டக்களப்பு  பிரதேசத்தில் 9 வயது பாடசாலை மாணவி ஒருவர் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான ஒரு  இராணுவ சிப்பாய் சிறுமியால் அடையாளம் காட்ட பட்டுள்ளார்  நேற்று  அணிவகுப்பு நடைபெற்ற போது, சம்பவ  தினம் குறித்த முகாமில் கடமையிலிருந்த 48 இராணுவ சிப்பாய்களும் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் ஏற்கனவே இந்த விடையம் தொடர்பில் கைதான 6 இராணுவ சிப்பாய்களும் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் எனிலும் குறித்த சிறுமியால் ஒருவரை மட்டும்தான் அடையாளம் காட்ட முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Written by lankamuslim

February 26, 2010 at 4:01 pm

இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

leave a comment »

See  full size image

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் படி உத்தரவிடக் கோரிதாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை மார்ச் 2ஆம் திகதி நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட்டிருந்த 40 பேர் கொண்ட இராணுவ பாதுகாப்பு திடீரென நீக்கப்பட்டுள்ளது ஆனால் 6 பேரை கொண்ட போலீஸ் பாதுகாப்பு தொடர்கின்றது .

பொத்துவில் முன்னாள் எம்.பி.யும் கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருமான எம். ஏ. அப்துல் மஜீத் அரசாங்கத்துடன் இணைந்ததாக தகவல்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையான ஆசனங்களைப்பெற்று தன்னுடைய பலத்தை மீண்டும் நிரூபிக்கும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார் .

அமைச்சர் ஆறுமுகன் தொண்டானின் அழைப்பின் பேரில் உலங்கு வானூர்தியில் ஹட்டனுக்கு விஜயம் செய்த ஷிராந்தி ராஜபக்ஷ, மலையகத் தமிழ்-சிங்கள மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது இந்த நிலையில், 18 அரசியல்க் கட்சிகளும், 37 சுயேச்சைக் குழுக்களும் இதுவரையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. 230 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என தெரிகின்றது .



Written by lankamuslim

February 26, 2010 at 3:20 pm

துருக்கி அரசுக்கும் இராணுவத்துக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது

with one comment

முஸ்தபா கமால் அதா துர்க்

அரசியல் களஆய்வு:

துருக்கி  அரசுக்கும் இராணுவத்துக்கும் இடையில் முறுகல் ,இராணுவ சதி ஒன்றுக்கு   தயார் ஆவதாக கூறி   துருக்கிய இராணுவம்  40 இராணுவ உயர் அதிகாரிகளை கைது செய்ததை தொடர்ந்து  பிரதமர் தையிப் அர்பகான்-Recep Tayyip Erdogan- அரசுக்கும்  துருக்கி இராணுவத்துக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது  கைதானவர்களில் முன்னால் துருக்கிய  இராணுவ, ஆகாய படை தளபதிகளும் அடங்கும்

துருக்கியில் தான் 1924 மார்ச் 3 இம் திகதி  திங்கள் கிழமை  கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது இறுதியாக துருக்கியில் இஸ்லாமிய சாம்ராஜியதின் கிலாபத்தின் கொடி  இறக்கப்பட்டது    இந்த சாம்ராஜிய அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற இஸ்லாமிய சாம்ராஜிய துரோகி,  கிலாபத் அழிக்கபட்டு அடுத்த மாதத்துடன்   86 வருடங்களை முஸ்லிம் உம்மாஹ் எட்ட போகின்றது

இஸ்லாமிய ஆட்சி உலகில் அல்லாஹ்வின் தூதரினால் நிலை நிறுத்தப்பட்டு 7ஆம் நூற்றாண்டில் இருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை மனித இனத்திற்கு அருளாய் இருந்த பிரமாண்டமான சாம்ராஜ்யம் மேற்கின் சதியால் அழிக்கப்பட்டது

துருக்கி நாட்டை ஆண்டு வந்த ஒஸ்மானிய  பேரரசு தனது இறுதிக் காலத்தில் வலிமை குன்றியது .  ஒஸ்மானிய பேரரசு தனது 623 ஆண்டுகால வரலாற்றில், கிழக்கு நாடுகளோடும், மேற்கு நாடுகளோடும் தொடர்புகளை வைத்திருந்தது. 16 ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் இது உலகின் மிகவும்  பலம் வாய்ந்த வல்லரசுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. விரிவாக பார்க்க…

Written by lankamuslim

February 25, 2010 at 11:08 pm

உலகத் தமிழர் பேரவை மகாநாடு நேற்று ஆரம்பமானது

leave a comment »

உலகத் தமிழர் பேரவை மகாநாடு பிரித்தானிய பாராளுமன்றத்தில்  கீழ் மன்றம் கிளாட்ஸ்டன் அறையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை நேற்றைய அமர்வு நடை பெற்றுள்ளது நேற்று புதன்கிழமை ஆரம்பமான இந்நிகழ்வு நான்கு நாட்கள் வரை நடைபெறவுள்ளது.   இந்நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண் மற்றும் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர். மகாநாட்டில் கலந்து கொண்டோரில் சிலர் பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுன் உடன் தனிப்பட்ட பேச்சுகளை நடத்தியதாகவும் செய்திகள் கூறுகின்றன. மகாநாடு பிரித்தானிய
உலகத்தமிழ் பேரவை பற்றியும், அதில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் மிலிபான்ட் உரையாற்றுவது பற்றியும் இலங்கை அரச தரப்பு ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தது.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து தாம் ஓர் அணியில் திரள வேண்டும் என்று தீர்மானித்து ஆகஸ்ட் 2009 இல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் 15 நாடுகளில் இருக்கும்   தமிழர் அமைப்புகளை கொண்ட குடை அமைப்பாக  உருவாக்கப்பட்டதுதான்  உலகத் தமிழர் பேரவை.

Written by lankamuslim

February 25, 2010 at 8:28 pm

இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

leave a comment »

http://tvbythenumbers.com/wp-content/uploads/2009/12/Chess-Board.jpg

சட்டத்தரணி ஆர்.எம்.இமாமின் தேசியப்பட்டியல் இன்னும் உறுதி படுத்தப்படவில்லை கடந்த முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்டத்துக்கான தேசியப்பட்டியல் இடம்பெற்ற ஆர்.எம்.இமாமின் தெரிவு இன்னும் முடிவாக வில்லை வடக்கு,கிழக்கு மாகாணங்களின் சார்பில் கூட்டமைப்பு எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரையும் களத்தில் இறக்கவில்லை என்பது குறிபிடதக்கது

கிழக்கு மாகாணத்தில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அதிக ஆசனங்களை  ஒதுக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முறுகல் இன்றும் தொடர்வதாக தகவல்

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,  அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வன்னி மாவட்டத்தில் போட்டிடுவதற்காக நாளைய தினம் கட்டுப்பணம் செலுத்த உள்ளார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ஆஸ்திரேலிய விசேட தூதுவர் ஜோன் மெக்கார்த்திக்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது

ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளர் லலித் குமார்  யாழ் தேர்தல் செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதாக  செய்திகள் தெரிவிக்கின்றன்

ஜெனரல் சரத் பொன்சேகா விரைவில் சிவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கல்லெறிந்து களங்கம் விளைவித்த நபர்களை இனங்காண நீதிமன்றம் வசமுள்ள புகைப்படங்களைப் பயன்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by lankamuslim

February 25, 2010 at 8:05 pm

யாழ் மாவட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எம். அமீன் போட்டி

leave a comment »

See  full size image

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்  யாழ் மாவட்டத்தில் தனது வேட்பாளர் ஒருவரை நிறுத்த தீர்மானித்துள்ளது  வேட்பாளராக    அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் யாழ் மாவட்ட அமைப்பாளரான  எம். அமீன் போட்டியிடவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது  .  அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து 6 மாவட்டங்களில் போட்டியிடுவதாக அ.இ.மு.கா. தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்திருந்தார் என்பது குறிபிடதக்கது  . மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை, வன்னி, குருணாகல், அநுராதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களிலேயே இம்முறை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடும்  என  தெரிகின்றது

Written by lankamuslim

February 25, 2010 at 11:05 am

மட்டக்களப்பு சிறுமி கற்பழிப்பு : 48 படையினர் நீதிமன்றில் அடையாள அணிவகுப்பில்.

leave a comment »

See  full size image

பாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மட்டக்களப்பு கமாண்டோ படையணி முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மூவரை அடையாளம் காண்பதற்காக அந்த முகாமிலுள்ள 48 படையினரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

February 25, 2010 at 10:11 am

கல்முனை- யாழ்ப்பாண இரவு நேர பஸ்சேவை

leave a comment »

http://www.kalaproduction.com/tt/img/prevost-conversion-bus-picture.jpg

கல்முனையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான இரவு நேர பஸ்சேவை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை  யாழ்ப்பாணத்தில் இருந்து கல்முனைக்கு  தினமும் பிறிதொரு பஸ்சேவையை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை யாழ்ப்பாண மக்களால் அமைச்சர்களிடம் தெரிவிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கல்முனை இ.போ. சபை மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மாலை 6.00 மணிக்கு புறப்படும் பஸ் காத்தான்குடி, மட்டக்களப்பு, பொலன்னறுவையூடாக யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்து மீண்டும் மறுநாள் மாலை 6.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனை நோக்கி புறப்படவுள்ளது

Written by lankamuslim

February 24, 2010 at 7:22 pm

இலங்கை பிரிட்டனுக்கு கண்டனம் அமெ. பிரதிநிதி பிளேக்கு எச்சரிக்கை

with one comment

இலங்கையிலுள்ள பிரிட்டனின் பதில் உயர் ஸ்தானிகரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த  போகொல்லாகம கண்டனம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டனிலுள்ள உலகளாவிய தமிழ் பேரவையின் மாநாட்டில் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான்ட் உரையாற்றவிருப்பதை முன்னிட்டேரோஹித்த  போகொல்லாகம   கண்டனம் தெரிவித்தாக தெரிவிக்கப்படுகின்றது .

பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்  இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உயரிய வாய்ப்பு காணப்படுவதாக பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்லிபான்ட் தெரிவித்திருந்தார்  என்பதுடன்   எதிர்வரும் நாட்களில் லண்டனில் நடைபெறவுள்ள உலக தமிழர் மாநாட்டில், டேவிட் மிலிபாண்ட் கலந்து கொள்ளவிருப்பதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்திருந்தும் குறிபிடத்தக்கது  .

இதற்கிடையில் டேவிட் மிலிபாண்ட், உலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளமை, இலங்கை அரசாங்கத்துக்கும் அவருக்கும் இடையிலான உறவை மேலும் விரிசலடையச் செய்யலாம் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதும் குறிபிடத்தக்கது

இதே வேலை இலங்கை  அமெ. பிரதிநிதி பிளேக்கு இலங்கை விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என்று  தெரிவித்துள்ளது இலங்கையின் நீதி விவகாரங்களில் தென், மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதிச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக்கு கருத்துத் தெரிவிக்க   உரிமை இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன  தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

February 24, 2010 at 6:23 pm

மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டம் 500 மில்லியன் ரூபாவில் தொடங்கி . இன்று 6000 மில்லியன் ரூபாவையும் கடந்துள்ளது

leave a comment »

http://www.dailynews.lk/2009/10/10/z_p09-sda4.jpg

நாட்டுக்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தத் தவறியதால் நாடு 40 வருட கால பலனை இழந்து நிற்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அபிவிருத்தியாகட்டும், யுத்தமாகட்டும் நாம் போதிய நிதியைக் கையில் வைத்துக்கொண்டு ஆரம்பிக்கவில்லை. உள்ளதை வைத்தே தொடங்கினோம். மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டத்தை 500 மில்லியன் ரூபாவை வைத்தே ஆரம்பித்தோம். எனினும் இதுவரை 6000 மில்லியன் ரூபா நிதியைச் செலவு செய்துள்ளோம் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி நேற்று அங்கு விஜயம் செய்ததுடன் மொரகஹகந்த பாலம் உட்பட பல மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்தித் திட்டங்களையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

Written by lankamuslim

February 24, 2010 at 6:06 pm

இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

leave a comment »

http://www.freeiconsdownload.com/site-images/Large/PlayStopPauseIcons_452.jpgகண்டியை மையமாகவைத்து இயங்கும் U.C.M.C அல்லது மலையக முஸ்லிம் பேரவை என்ற அமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் கண்டி மாவட்டத்தில்போட்டியிட  இடமளிக்கக்கூடாது  என  ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளதாக அக்கட்சி பேச்சாளர் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது என்று செய்திகள் தெரிக்விகின்றன

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னும்  சில  நாட்களில்  வெளியிடப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் இணையுமாறு  விடுக்கப்பட்ட அழைப்பை ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கவலை தெரிவித்துள்ளார்

ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுப் பத்திரத்தில் இன்று கையொப்பமிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வன்னி மற்றும் யாழ். மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களை நேற்று தாக்கல் செய்ததுள்ளது

Written by lankamuslim

February 24, 2010 at 5:54 pm

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற ஊக்குவிப்பு பயணம்

leave a comment »

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களில் மீண்டும்  மீள்குடியேற்றத்தை ஊக்க படுத்தும் முகமாக  யாழ்ப்பாண முஸ்லிம்களை கொண்ட ஒரு தொகுதி மக்கள் புத்தளம் , நீர் கொழும்பு , கொழும்பு, கண்டி , போன்ற பகுதிகளில் இருந்து         மூன்று நாட்களை யாழ்ப்பாணத்தில் கழிக்கும் விதமாக யாழ் பயணமாக இருகின்றனர் இவர்களுக்கான ஏற்பாடுகளை பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கின்றன   இவர்கள் 25திகதி புறப்பட்டு 28 திகதி திரும்புவார்கள் இவர்களுக்கான நிகழ்ச்சி திட்டமொன்றும் தயார் படுத்தி இருப்பதாக   மௌலவி ரோஷான் மதனி அவர்கள் எமது செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்  மண் கும்பான் கடற்கரை கிராமத்தில் இவர்களுக்கான விருந்து  ஒன்றும்  , ஒஸ்மானிய  கல்லூரியில் இவர்களுக்கான நிகழ்ச்சிகளும் ஒழுங்கு  செய்ய பட்டுள்ளதாகவும் புத்தளத்தில் இருந்து மட்டும் 600 தொடக்கம் 1000 பேர் வரை புறப்பட கூடும் என்றும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்

1990 இல் யாழ்ப்பாணத்தை விட்டும் யாழ்ப்பாண பூர்விக குடிகளில் ஒன்றான  யாழ்ப்பாண முஸ்லிம்களை    புலிகள்   ஆயுத பயங்கரவாதத்தின் மூலம் வெளியேற்றபட்டனர் அன்றில் இருந்து இன்றுவரை வடமாகாண  முஸ்லிம்களில் அகதி வாழ்கை இருபது வருடங்களை எட்டியும் விடிவு இன்றி தொடர்கின்றது 1996 இல் யாழ் குடாநாடு புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கபட்ட பின்னரும்  2002 யில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் யாழ்ப்பாணம் வரலாம் என்று புலிகளால் அறிவிக்கபட்ட பின்னரும்   புலிகளின் கெடுபிடிகள் தொடர்ந்த மையால் சிறிய அளவிலான யாழ் முஸ்லிம்கள் தான் மீள் குடியமர்ந்தனர் 2009 ஆண்டு வரை பெரிதாக குறிபிடும் படியான மீள்குடியேற்றங்கள் நடைபெற வில்லை 2009 ஆண்டுக்கு பின்னர் நிலை மாற்றம் கண்டு வருகின்றது  என்பதுடன் முதல் கட்டமாக 100 முஸ்லிம் குடும்பங்கள்  யாழ்ப்பாணத்தில் மீள் குடியமர்த்து நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது என்பது குறிபிடத்தக்கது.

Written by lankamuslim

February 23, 2010 at 9:36 pm

இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

leave a comment »

புத்தள மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற காங்கிரஸ் உறுப்பினர் மத்தியில்   கடும் போட்டி,  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒரு சிலரை குறிவைத்திருக்கும் நிலையில் அலிகான் , யஹ்யா இருவருக்கும்  மத்தியில்   கடும் போட்டி ஏற்பட்டுள்ளது

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி  அனோமா பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஜெனரல் சரத் பொன்சேகாவை  விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி மறுத்துள்ளதாக தெரிகின்றது .

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முரண்பட்ட  இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கஜேந்திரகுமார் பல மட்டங்களில் தமிழ் மக்களை சந்திக்க இருப்பதாக தெரிகின்றது

ஜெனரல் சரத் பொன்சேக்கா தலைமையில்   உருவாக்கப்பட்ட தேசிய ஜனநாயக முன்னணியின் முதலாவது செய்தியாளர் மாநாடு ஜெனரல் சரத் பொன்சேக்காவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில்நேற்று  இடம் பெற்றுள்ளது

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிறீகாந்தா ஆகியோருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் வலுத்ததன்  விளைவு  தமிழ்த் தேசிய விடுதலை  கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்க இருவரும் முடிவு

ரவூப் ஹக்கீம் அல்லது மனோ கணேசன் நாடாளுமன்றத் தோ்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டி இடலாம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட கே.தங்கேஸ்வரி உள்ளிட்ட சிலர் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்

ஐ. ம. சு. மு. வின் 19 மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு எஞ்சியுள்ள யாழ்ப்பாணம். வன்னி மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியல்கள் இன்று பூர்த்தி செய்யப்பட உள்ளதாக ஐ. ம. சு. மு. வின்  செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார் .

யாழ்.மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் கொலையுண்ட  முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான தியாகராஜா மகேஸ்வரனின் மனைவி  விஜயகலா  மற்றும் அவரது சகோதரர் தியாகராஜா துவாரகீஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகின்றது  .

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் போட்டியிடவுள்ளாராம் .

Written by lankamuslim

February 23, 2010 at 5:37 pm

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளும் பெண்களுமாக 33 பேர் படுகொலை

leave a comment »

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில்   நேட்டோ    படை  நடத்திய மிகவும் மோசமான வான் தாக்குதல் ஒன்றில் 33 பொதுமக்கள்  கொல்லப்பட்டதை நேட்டோ ஒப்புகொண்டுள்ளது  தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள  உருஸ்கான் மாகாணத்தில் நடத்தப்பட்ட  மிகவும் மோசமான  தாக்குதலில் அதிகமான குழந்தைகளும்  பெண்களும் கொல்லப்பட்டதாக ஆப்கானிய பொம்மை  அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார் .  தாக்குதல் ஒன்றை நடத்துவதற்காக வந்து கொண்டிருந்த போராளிகளை தாம் அழித்து விட்டதாக நேற்று   நேட்டோ படை  தெரிவித்தமை குறிபிடதக்கது . விரிவாக பார்க்க…


We are unable to identify your browser, For mobile site click here.

//

Written by lankamuslim

February 22, 2010 at 7:56 pm

கொழும்பு நகரத்தை 5 வாரத்தில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

leave a comment »

‘நகரத்தை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தை 5 வார காலத்தில் அபிவிருத்தி செய்து முடிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

‘நகரை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டம் நேற்று  கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமாகியது. இங்கு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பில் ஆரம்பமாகும் இத்திட்டம் படிப்படியாக நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஆசியாவின் பெருமைக்குரிய நாடாக இலங்கையை மாற்றியமைக்கவேண்டுமா னால் அனைத்து நகரங்களும் பெருமளவு அபிவிருத்தி செய்யப்பட்டு அலங்காரம் மிக்க நகரங்களாக மாற்றப்படவேண்டும் என்று கூறியுள்ளார் .

‘நகரை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டத்தின் முதல்கட்டமாக கொழும்பு நகரை அண்டியுள்ள குடிசை மற்றும் குறைந்த வசதிகளுடன் கூடிய வீட்டுத் தொகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும் என தெரிகின்றது .

Written by lankamuslim

February 22, 2010 at 10:01 am

இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

leave a comment »

ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் தீர்க்கமான முடிவுகள் பலவற்றை எடுக்கக்கூடிய கூட்டமொன்று நேற்று இரவு இடம்பெற்றது   இலங்கை முழுவதும் யானையில் சவாரி செய்ய முடிவாகியுள்ளது

இதல் முஸ்லிம் காங்கிரஸின் ஆசன ஒதுக்கீடு விவகாரம்  கலந்தாலோசிக்கப் பட்டுள்ளது  எனிலும் மட்டகளப்பு  , மாவட்டத்தில்  ஆசன ஒதுக்கீடு பற்றிய தீர்மானம்  எடுக்கமுடியாத நிலை தொடர்கின்றது

அதேபோன்று நுவரேலியா மாவட்டத்தில் ஆசன ஒதுக்கீடு பற்றிய தீர்மானம் எடுக்கமுடியாத நிலை தொடர்கின்றது

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் எந்த மாவட்டத்தில் போட்டியிடுவார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

தேசிய நல்லிணக்க, ஒருமைப்பாட்டு அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவருமான   விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு  தேசியப்பட்டியலில் இடம் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகியுள்ளதுடன் தனியாக போட்டியிட  தீர்மானம் என்று ஒரு செய்தி குறிபிடுகின்றது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கட்சி ஒன்று உருவாக்குவதற்கு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் காணப்படும் பிரச்சினைகள், அந்த கூட்டணி கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றினை அம்பலப்படுத்தப்போவதாக  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்ததாக தகவல் உறுதிபடுத்த முடியாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆறு மாவட்டங்களில் போட்டியிடுவதாக அ.இ.மு.கா. தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம். எஸ். எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

February 22, 2010 at 9:50 am

யாழ் முஸ்லிம்களுக்கு கல்வி போதித்த 5 பாடசாலைகளில் ஒன்றான ஒஸ்மானியா கல்லூரி

with 2 comments

யாழ் முஸ்லிம்களுக்கு கல்வி போதித்து பல புத்திஜீவிகளை உருவாக்கிய ஐந்து பாடசாலைகளில் ஒன்றான  ஒஸ்மானியா கல்லூரியின்  தற்போதைய நிலையைத்தான் இந்த   படங்கள்  காட்டுகின்றன

1990 இல் யாழ்ப்பாணத்தை விட்டும் யாழ்ப்பாண பூர்விக குடிகளில் ஒன்றான  யாழ்ப்பாண முஸ்லிம்களை    புலிகள்    அராஜகம் புரிந்து   வெளியேற்றிய பின்னர்     முஸ்லிம்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவது   தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் யாழ்ப்பாண அரசாங்க அதிபருடன் ஆகஸ்ட் 21.2009 அன்று  பேசியதுடன் யாழ் ஒஸ்மானியா முஸ்லிம்  கல்லூரியை-மறுசீரமைப்பது குறித்து அறிக்கை ஒன்றையும் அரசாங்க அதிபரிடம் இருந்து கோரியதாக தெரிவிக்கப்பட்டது  எனிலும் இந்த கல்லூரியின் நிலை இன்னும் மாற்றம் காணவில்லை

1990 இல் புலிகளால் யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஏனைய வடமாகாண முஸ்லிம்களுடன்  அவர்களின் அனைத்து  அசையும் அசையாத சொத்துகளும்  புலிகளால் கொள்ளையிடப்பட்ட பின்னர்   இரண்டு  மணித்தியால அவகாசத்தில்   யாழ்ப்பாண நகரை விட்டும் ஆயுத பயங்கரவாதத்தின் மூலம் வெளியேற்றபட்டனர் அன்றில் இருந்து இன்றுவரை வடமாகாண  முஸ்லிம்களில் அகதி வாழ்கை இருபது வருடயங்களை எட்டியும் விடிவு இன்றி தொடர்கின்றது 1996 இல் யாழ் குடாநாடு புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கபட்ட பின்னரும்  2002 யில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் யாழ்ப்பாணம் வரலாம் என்று புலிகளால் அறிவிக்கபட்ட பின்னரும்   புலிகளின் கெடுபிடிகள் தொடர்ந்த மையால் சிறிய அளவிலான யாழ் முஸ்லிம்கள் தான் மீள் குடியமர்ந்ததுடன் 100 கு உட்பட்ட மாணவர்கள் மட்டும்தான் தற்போது இந்த பாடசலையில் கற்று வருகின்றனர் என்பது குறிபிட தக்கது

2009 ஆண்டு வரை பெரிதாக குறிபிடும் படியான மீள்குடியேற்றங்கள் நடைபெற வில்லை 2009 ஆண்டுக்கு பின்னர் நிலை மாற்றம் கண்டு வருகின்றது  என்பதுடன் முதல் கட்டமாக 100 முஸ்லிம் குடும்பங்கள்  யாழ்ப்பாணத்தில் மீள் குடியமர்த்து நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது என்பது குறிபிடதக்கது.

ஒஸ்மானியா என்ற பெயர் ஒஸ்மானிய இஸ்லாமிய கிலாபத்தை நினைவு கூறும் விதமாக சூட்டப்பட்ட பெயர் என்பது வரலாறு

படங்களும் தகவலும் எமது விசேட செய்தியாளர்கள்

Written by lankamuslim

February 21, 2010 at 3:38 pm

இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

leave a comment »

எதிர்வரும் ஏப்ரல் மாதம் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக புத்தளம் மாவட்டத்தில் இரண்டு சுயேட்சைக் கட்சிகள்  இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக  அறியமுடிகிறது இதில் முஹ்சின்  என்பவரின் தலைமையலானஒரு  சுயேட்சைக் கட்சியும் அடங்கும்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடளாவிய ரீதியில் வடக்கு,கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சியின் யானைச்சின்னத்தின் கீழ் போட்டியிடத்தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டரங்கள் இன்று தெரிவித்துள்ளன .

இதேவேளை,கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளதாக  தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிரதான தலைவர்களுக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில்  முறுகல் தொடர்வதாக   தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்தியாவினால் நேரடியாக இயக்கப்படும் தமிழ் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறியுள்ளதாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இம்முறை  இரண்டு சிங்கள ஒரு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டி ,  2005 தேர்தலில் போட்டியிட்டு, எம்.பிக்களான 9பேருக்கு இம்முறை சந்தர்ப்பமில்லை என்று செய்திகள் கூறுகின்றன !

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹ வுக்கும் இடையிலான முறுகல் நிலை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும்,ஆறாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான லொக்குபண்டார ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இன்று இணைந்துகொண்டார்.

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் சனத் ஜயசூரிய போட்டியிடவுள்ளார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கதேர்தலில் போட்டியிடுவது குறித்துத் தீர்க்கமாக ஆராய்ந்து வருவதாக  தெரிவித்தார்.

Written by lankamuslim

February 20, 2010 at 10:00 pm

நைஜர் இராணுவ சதிப் புரட்சியை …?

leave a comment »

  • நைஜர் ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ளது
  • மக்கள் தொகையில் 90 % வீதமானவர்கள் முஸ்லிம்கள்
  • தங்கம் ,எண்ணெய், உரேனியம் போன்ற கனிய வளம் கொண்ட நாடு
  • மொத்த தேசிய ஏற்றுமதியில் 72% வீ தம் உரேனியம்ஏற்றுமதியாகிறது
  • ஈரான்  ஆபிரிக்க  உரேனியத்தை இரகசியமாக வாங்க முற்படுகின்றது: மேற்கு
  • இன்று நைஜரில்  சதி இராணுவப்  புரட்சி…………….??

மேற்கு ஆப்பிரிக்கக் குடியரசான நைஜரில் இடம்பெற்ற இராணுவப் சதி புரட்சியை அடுத்து அந்நாட்டின் அரசுத் தலைவர் தாஞ்சா மமடோவு கைது செய்யப்பட்டு இராணுவக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. “மக்களாட்சியைக் காப்பதற்கான அதிஉயர் மன்றம்” என்ற பெயரில் நைஜரின் இராணுவத்தினர் அதிபர் மாளிகையை நேற்று வியாழக்கிழமை தாக்கி நான்கு மணி நேர துப்பாக்கி மோதலின் அடுத்து அரசுத்தலைவர் கைது செய்யப்பட்டார். விரிவாக பார்க்க….

Written by lankamuslim

February 19, 2010 at 8:56 pm

பௌத்த மதகுருமார்கள் அச்சுறுத்தப்பட்டதாக ரணில் குற்றச்சாட்டு

leave a comment »

தென்னிலங்கையில் 500 பௌத்த விகாரைகளிலுள்ள மதகுருமார்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் .

பௌத்த மதகுருமார்களின் விசேட மாநாடு இந்த மாதம் 18ஆம் திகதி நடைபெறவிருந்ததாகவும், பின்னர் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இந்த மாநாடு பிற்போடப்பட்டதாகவும் அவர் கூறினார். அரசாங்கத்தின் உதவியுடனையே இந்த மாநாடு நிறுத்தப்பட்டதாகவும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்

அரசியலமப்புச் சபையின் 9வது உறுப்புரையின் படி, நாட்டில் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கவேண்டிய அதேவேளை, பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்
வேறு ஒரு சந்தர்பத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரம சிங்க அரசியல்வாதிகள் மீது சேறு பூசிவந்த அரசாங்கம் இன்று அமல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் மீதும் சேறுபூசும் கலாசாரத்தைத் தோற்றுவித்திருப்பதாகத் தெரிவித்ததுள்ளார் மேலும்  புத்தசாசனத்துக்கு களங்கமேற்படுத்த யாராவது முனைந்தால் அதனை முறியடிக்க எந்தச் சவாலையும் எதிர் கொள்ளத்தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்

Written by lankamuslim

February 19, 2010 at 7:37 pm

இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

leave a comment »

See  full size image

வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று (19) ஆரம்பமாகிறது. 22 மாவட்ட செயலகங்களில் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் முன்னிலையில் இந்த நடவடிக்கை

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி யானைச்சின்னத்தில் கொழும்பில் போட்டியிடவுள்ளது

கொழும்பில் போட்டியிடுவது  தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சி ,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திரக்கட்சியின் மங்கள பிரிவு பேச்சுவார்த்தைகள்  தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

முறுகலை தவிர்க்க இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ,ஜனநாயக மக்கள் முன்னணி சந்தித்து பேசுகின்றன

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல்  இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என  அறியமுடிகிறது .

சிவாஜிலிங்கம்.ஸ்ரீகாந்தா  உட்பட முக்கியமான பலருக்கு இத்தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்படா மாட்டாது-TNA

தமிழ்க் கூட்டமைப்பு பல பிரிவாக உடையும் நிலை , தமிழ்க் கூட்டமைப்பிற்கு மாற்றுத் தலைமை ஒன்று தேவை என்கிறார் ஸ்ரீகாந்தா

ஜே.வி.பி.மக்கள் விடுதலை முன்னணி ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணி என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டமைப்பு  “கிண்ணம்” சின்னத்தில்.   தேர்தலில் போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளது

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவி பேரியல் அஷ்ரப் தனது 250 ஆதரவாளர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்

சம்மாந்துறையைச் சேர்ந்த ஐக்கியதேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.நவுஷாட் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார்

தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

Written by lankamuslim

February 19, 2010 at 9:17 am

இன்றைய நாள் ஞாபகம் இருக்கிறதா? புதைக்கப்பட்ட உண்மைகள்

leave a comment »

அந்த நாள் நினைவிருக்கிறதா? 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே தினத்தில் அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று திட்டமிட்ட இனப்படுகொலை நடைபெற்றது. 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. அந்த நினைவலைகள் தொடர்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஹர்ஷ் மந்தர்(குஜராத் இனப்படுகொலையை கண்டித்து பதவி விலகிய இவர் தற்ப்பொழுது சமூக சேவையாற்றி வருகிறார்) தி ஹிந்து நாளிதழில் கட்டுரையொன்றை இங்கு பிரசுரிக்கிறோம்.
.
ஹர்ஷ் மந்தர் :

“நவம்பர் 26, 2008. அன்று தான் இந்தியாவின் வர்த்தக தலைநகரம் மும்பை மீது மூர்க்கத்தனமான  அதி பயங்கர தீவிரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அன்றைய தினம் நான் வெகு தூரத்தில் அஸ்ஸாமிலுள்ள நெல்லியில் இருந்தேன் விரிவாக பார்க்க…

Written by lankamuslim

February 18, 2010 at 9:12 pm

இன்று அரசியல் கள நகர்வுகள் ஒரு மினி பார்வை

leave a comment »

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்துப்போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றது. இறுதி முடிவெடுப்பதற்கான அரசியல் உயர் பீடக்கூட்டம் அமைச்சர் அதாவுல்லா தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.

இதேவேளை,ஐக்கியதேசியக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, மனோ கணேசன்,மங்கள சமரவீர,ரவூப் அகீம் ஆகியோர் யானை சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளதாக நேற்று   அறிவித்திருந்தார்.

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி  ,வடக்கு,கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்துவருவதாக  தெரிகிறது

நுஆ கட்சியின் தலைவியும்,அமைச்சருமான பேரியல் அஷ்ரப் சிரி லங்கா சுதந்திரக்கட்சியுடன் இணையவுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளன

இதேவேளை ஐக்கியதேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் நௌஷாத் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்  இணையவுள்ளார் என்ற செய்தியும் அதுபற்றி பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாகவும்  தற்போது செய்தி வெளியாகியுள்ளன

கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, முன்னாள் பிரதியமைச்சரான கணேசமூர்த்தி, அமீர் அலி, அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்

அமைச்சர் கருணா எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மட்டகளப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது

Written by lankamuslim

February 18, 2010 at 12:18 pm

கிழக்கில் இன முறுகலை மீண்டும் தோற்றுவிக்க அரசியல் சக்திகள் முனைகிறதா ??

leave a comment »

http://www.lankalibrary.com/news/tsunami_kalmunai_02.jpg

கிழக்கு மாகாணத்தில் சில வாரங்களாக நிலவி வரும் தமிழ் முஸ்லிம்  இன முறுகல் நிலை அரசியல் இலாபம் கருதி அரசியல் வாதிகளால் திட்டமிட்டு  உருவாக்கபடுகிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது காத்தான்குடியில் சிகரம் கிராம மையவாடி சம்பவங்கள் , நேற்று முன்தினம் நடந்த ஆரைப்பற்றை செல்வா நகரைச் சேர்ந்த ஒருவரின் பூத உடல் கர்பலா பகுதியில் கர்பலா ஜும்மா பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில்  முஸ்லிம் நபர் ஒருவருக்கு  சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டதை அடுத்து பிரதேசத்தில் பதற்றம் அவதானிக்கப்பட்டது.

இது ஒரு திட்டமிட ஒரு நடவடிக்கையாகவே  காத்தான்குடி முஸ்லிம்களால் பார்க்க படுகிறது கர்பலா கிராமம் என்பது சிகரம் கிராமதுக்கு போகும் வழியில் சிகரம் கிராமதுக்கு அண்மையில் உள்ள கிராமமாகும்  இவைகளின் பின்னால் பலமான  ,அரசியல் சக்திகளின் தொடர்புகள் இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம்  நிலவுவதாக எமது  காத்தான்குடி செய்தியாளர்  தெரிவிகின்றார்  பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த சந்தர்பத்தில் மீண்டும் உருவாகிவரும்  முஸ்லிம் தமிழ்  புரிந்துணர்வை தகர்க்கும் விதமாக சில அரசியல் சக்திகள் செயல் படுவதாக தெரிகின்றது புரிந்துணர்வுடன் இன விரோத பாகுபாடுகளை புறம் தள்ளி கிழக்கு மாகான மக்கள் மீண்டும் வாழ முற்படும் இந்த சந்தர்பத்தில் இப்படியான சம்பவங்கள் இன விரோத அரசியலை வளர்க்கும் அதில் இலாபங்களை காண முற்படும் சக்திகளின் எண்ணங்களை தெளிவாக காட்டுவதாக அமைகிறது கிழக்கு மாகாணதில்  ஜனாதிபதியை தெரிவு செய்யவதற்கான  தேர்தல் பிரசார  மேடைகளில்   இன விரோத அரசியல் கருத்துகள் முன்வைக்கப்பட்டமை குறிபிடதக்கது

Written by lankamuslim

February 17, 2010 at 2:13 pm

சிகரம்: என்ன நடக்கிறது…………?

with one comment

1977ல் பாலமுனைப் பள்ளிவாயலுக்கு காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரால் வக்பு செய்யப்பட்ட சிகரம் பகுதியிலுள்ள 19.85 பேர்ச் விஸ்தீரணமுள்ள காணி ஒன்று 1985ல் பாலமுனைப் பள்ளியால் சிகரம் பள்ளிவாயலுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டு அன்று முதல் அக்காணி சிகரத்தின் மக்பராவாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்குரிய காணி உறுதிகள் அனைத்தும் சிகரம் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையிடம் இருக்கின்றன.

இறுதியாக புலிகளால் மக்கள் விரட்டியடிக்கப்படுவதற்கு முன்னர் 1989 நவம்பர் மாதம் சிகரத்தில் பிறந்து அங்கேயே வாழ்ந்து மரணித்த 85 வயதான ஒருவரின் ஜனாஸா அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இவரது மரணச் சான்றிதழ் பள்ளிவாயல் நிர்வாகத்திடம் இருக்கிறது.

சிகரத்தில் மக்கள் 2005 பிற்பகுதியில் மீளக்குடியமர்ந்த பின்னர், கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மரணமடைந்த சிறு குழந்தை ஒன்றின் ஜனாசாவே முதல் தடவையாக இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. இரண்டு நாட்களின் பின்னர் ஜனாஸா தோண்டப்பட்டு மஞ்சிப் பலகை வெளியே எடுக்கப்பட்டு (ஜனாஸா உள்ளே இருக்கும் என்ற அனுமானத்தில்) டயர் ஒன்றையும் போட்டு எரிக்கப்பட்டுக் காணப்பட்டது. விரிவாக பார்க்க..

Written by lankamuslim

February 17, 2010 at 11:33 am

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முதலாவது ஹலால் மாநாடு

leave a comment »

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பங்களிப்புடன் உடோவியா வெகேஷன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த மாநாடு பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியிருந்ததாக தெரிகிறது இம் மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா ஹலால் கண்காட்சியையும் திறந்து வைத்திளார்

இலங்கைக்கு அரபு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் ஏனைய முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகளையும் அதிக அளவில் கவருவதற்கு இலங்கைக்கு ஹலால் அங்கீகாரம் பெற்ற ஹலால் சான்றிதழ் சுற்றுலாத்துறையை அறிமுகம் செய்து மேம்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதாக . முன்னாள் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா நேற்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஹலால் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க…

Written by lankamuslim

February 17, 2010 at 10:17 am

அணைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்காண பாதுகாப்பு வாபஸ்

leave a comment »

அணைத்து பாராளுமன்றம் உறுப்பினர்களுக்காண    பாதுகாப்பு ஏற்பாடு உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இன்று வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று    பொலிஸ் மா அதிபர்  மஹிந்த பாலசூரிய அறிவுறுத்தியுள்ளதாக  போலீஸ் ஊடக  பேச்சாளர் தெரிவித்தாக செய்திகள் தெரிவிகின்றன    புதிய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் வரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழமையான பாதுகாப்பு தொடர்வது இந்நாட்டின் சம்பிரதாயமாகும்  ஆனால் இந்த நடைமுறை புதிய பாராளுமன்றத்திற்கான தேர்தல் .நடைபெற்று  புதிய  பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யபட்ட  பின்னர் மீண்டும் புதிய  பாராளுமன்ற உறுப்பினர்கள்  பாதுகாப்பு ஏற்பாடு அமுலுக்கு வரும் என்றும் தெரிவித்ததாக அந்த செய்தி குறிபிடுகின்றது

இந்த நடைமுறை அமைச்சர்களுக்கும் பிரதி அமைச்சர்களுக்கும் பொருந்தாது என்றும் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் தெரிவித்ததாக அந்த செய்தி குறிபிடுகின்றது

Written by lankamuslim

February 16, 2010 at 9:04 pm

லங்கா ஆசிரியர் விடுதலை , ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடவடிக்கைக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அறிவிக்க வேண்டும்

leave a comment »

லங்கா செய்தி  பத்திரிகையின்     ஆசிரியர்  சந்தன சிறிலால்வத்த  புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கடந்த  தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று  நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எவ்வித  நிபந்தனைகளும் இல்லாமல் நீதிமன்று விடுவித்துள்ளது.புலனாய்வு பிரிவினர்  இவர் தொடர்பான குற்ற்சாட்டுக்கள் எதையும்  நீதிபதி  முன்வைக்கவில்லை  என்பதுடன் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ‘லங்கா’ பத்திரிகையின் ஆசிரியர் சந்தன சிறிமல்வத்தையை பிணையில் செல்வதற்கு உதவுமாறும் பொலீஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டமை குறிபிடதக்கது .

அதே நேரம் ஊடகவியலாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், தனக்கு அறிவிக்குமாறு பொலீஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Written by lankamuslim

February 16, 2010 at 8:37 pm

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாதுபாப்பு வாபஸ்

leave a comment »

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்றஉறுபினருமான  ரவூப் ஹக்கீமின் பாதுபாப்பு நேற்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது . ரவூப் ஹக்கீமிற்கு வழங்கப்பட்டிருந்த நான்கு பொலிஸாரை  கொண்ட   பாதுகாப்பு உடனடியாக அமுலுக்குவரும் வகையில் அரசாங்கத்தினால் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் செய்திகள் தெரிவிக்கின்றன நான்கு பொலீஸ் உத்தியோகத்தர்கள் ஒரு பொலீஸ் ஜீப்பை  கொண்ட இந்த அணி ரவூப் ஹக்கீமிற்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும், அந்த பாதுகாப்பு ஏற்பாடு நேற்று  திடீ  வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

February 16, 2010 at 1:37 pm

யாழ்ப்பாண குண்டு வெடிப்பில் இரு மாணவர்கள் மரணம்

leave a comment »

யாழ்ப்பாண பாடசாலை ஒன்றில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவர்கள்  பிரதேசத்தில் கிடந்த வெடிக்காத நிலையில் இருந்த குண்டு ஒன்றை எடுத்து விளையாட முற்பட போது அது குண்டு என்பதை இனம் கண்டுகொண்ட நிலையில் அதை வீசி எரித்ததாக கூறப்படும் கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர், அது வெடித்ததால் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் யாழ்ப்பாண இலந்தைக்குளம் பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது .

Written by lankamuslim

February 15, 2010 at 5:39 pm

அக்கரைப்பற்றில் வாள் வெட்டுக்கு இலக்கான முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் வபாதானார் إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

leave a comment »

http://api.ning.com/files/usg1bgRVqLsjqVpFKOpBBLRHP0x1*cjZOLB*TR*5KNyljqyyEdtKdVKgTusDBiaOtncrUIFVDtIDgLT6QccquCsHVfqAa9y2/tears.jpg

ஜனாதிபதித் தேர்தல்  வன்முறைச் சம்பவமொன்றில் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் முஹமட் குத்தூஸ்  கடந்த வியாழகிழமை வபாதானதாக அறிய முடிகிறது

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து கடந்த முதலாம் திகதி இவரின் வீட்டுக்குள் புகுந்த  ஆயுததாரிகள் இவரின் வீட்டில் வைத்து இவரை கடுமையாக வெட்டியுள்ளனர் , கடந்த 10 நாட்களாக அம்பாறை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த வியாழகிழமை வபாதானதாக தகவல்கள் தெரிவிகின்றன இவர் மூன்று இளம் பெண் பிள்ளைகளின் தந்தையாவார்  இவரது ஜனாஸா கடந்த வியாழகிழமை அக்கரைப்பற்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கபடுகிறது.

Written by lankamuslim

February 15, 2010 at 5:02 pm

நேரும் எதிருமான அரசியல் நகர்வுகள்

leave a comment »

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியினர் அன்னம் சின்னத்தின் கீழ் பரந்து பட்ட கூட்டணியாக களமிறங்கியது போல் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அந்தக் கூட்டணியை மென்மேலும் விரிவுபடுத்தி போட்டியிடவே விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., அதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இணங்கி வரவில்லை என்றால் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிலைப்படுத்தி விரிவான மாற்றும் கூட்டணியொன்றை அமைக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதை தொடர்ந்து  பாராளுமன்றத் தேர்தலை எதிரணிகள் ஒன்றாக இணைந்து எதிர்கொள்வதை வரவேற்றிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜே.வி.பி. உட்பட எதிரணியிலிருக்கும் சகல கட்சிகளின் யோசனைகளை மீள்பரிசீலித்து மாற்று யோசனைகள் அடிப்படையில் முடிவெடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  ஜெனரல் சரத்பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா எதிர்வரும் பொது  தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிகின்றன இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியும் ஜே.வி.பியும் இணைந்து மீண்டும் புதிய கூட்டணியில் போட்டியிட வேண்டும் என தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத்பொன்செகா தமது மனைவியின் மூலமும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் விஜயதாஸ ராஜபக்ஷ மூலமும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எனக் தெரிய வருகின்றது

Written by lankamuslim

February 15, 2010 at 12:59 pm

சிகரம் முஸ்லிம் கிராம மையவாடி சம்பவங்களின் பின்னணியில் இனவாதம் ??

leave a comment »

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிகரம் முஸ்லிம் கிராமத்தில் கடந்த வாரம்  இரண்டு மாதக் குழந்தை ஒன்றின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டு மூன்று தினங்கள் கடந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட இடம் “கபுறு” தோண்டபட்டு ஜனாஸா காணாமல் போனது  என்பதும்  இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட குழந்தையொன்றின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டு இரண்டு தினங்களில் வெளியில் எடுக்கப்பட்டு கபுறின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்தது இது தொடர்பாக இருவர் பொலிசாரால் கைதானதும் சேகர் என்ற 40 வயது மதிக்கதக்க நபர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்

சிகரம் முஸ்லிம் கிராமம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்டது இந்தக் கிராமம்  ஆரையம்பதி பிரதேச தமிழ் – முஸ்லிம் எல்லைக் கிராமமாகும் , ஆரையம்பதி பகுதியில்  கர்பலா  கிராமம் மற்றும்   ஆரையம்பதியைச் சுற்றி காணப்படும் காங்கேயனோடை, ஒல்லிக்குளம், கிச்சான் பள்ளம், சிகரம், பாலமுனை போன்ற   முஸ்லிம் கிராமங்கள் புலிகளினாலும் ஏனைய ஆயுத குழுவினராலும் 1985 ஆம் ஆண்டில் இருந்து ஆயுத மூலமான அடக்குமுறைகளை கண்டு வந்த கிராமங்களாகும் இதில்  சிகரம் கிராமன் முதன்மையானது  இது தமிழ் – முஸ்லிம் எல்லைக் கிராமமாகும் இங்கு புலிகள் கிழக்கில் இருந்து விரட்ட பட்ட பின்னரும் முஸ்லிமகள் இந்த பகுதியில் கடத்தப்படும் கொல்லப்படும் இருந்தனர் விரிவாக பார்க்க..

Written by lankamuslim

February 15, 2010 at 11:52 am

வட்டுக்கோட்டை தீர்மான மீள்ளுறுதி (re-validation) வாக்கெடுப்பும், நாடு கடந்த அரசும்

leave a comment »

http://www.tamilseythi.com/images/articles/635/primary-small.jpg

எஸ் ஆர் எம் நிஸ்தார்

வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது இலங்கையின் வடக்கையும், கிழக்கையும் இணைத்து அதில் வாழும் தமிழர்களுக்கு இறைமை கொண்ட ஒரு தனி ஆட்சி பிரதேசத்தை தமிழீழமாக உருவாக்குவதாகும். அதேபோல் புலிகளின் தமிழ் ஈழத்திற்கான கடைசி ஆயுத போராட்ட பரிசோதனை 18 மேயில் தோல்வியில் முடிய ஆரம்பிக்கப்பட்டதே நாடு கடந்த தமிழ்ஈழ அரசு எனும் அஹிம்சை போராட்ட பரிசோதனையாகும்.

நாடுகடந்த அரசு/தஞ்ச அரசு/புகலிட அரசு என்பதை Government in Exile என்று ஆங்கிலத்தில் கூறுவர். ஆனால் அத்தகைய அரசுக்கான வியாக்கியானம் புலம் பெயர் நாடுகளில் நடைபெற்ற(?) தேர்தல் மூலம் ஏற்படுத்தப்போகும் நாடு கடந்த அரசுக்கு (Transnational Government) கொடுக்கும் வியாக்கியானத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதும், பின்னய அரசு இதுவரை எங்கும் இல்லாத ஒரு பரிசோதனை என்பதும் நோக்கப்பட வேண்டியவை.

இதைவிடவும் புலன் பெயர் நாடுகளில் பேசப்படும் நாடு கடந்த அரசு தொடர்பாக ஏற்பட்டுள்ள தெளிவின்மையை ஒரு பக்கம் வைத்து விட்டு அத்தகைய அரசு ஒன்றிற்கு அடித்தளமாக அமைந்துள்ள வட்டுக்கோட்டை தீர்மானம் பக்கம் நம் பார்வையை முதலில் செலுத்துவோமானால் அதிலும் பல தெளிவின்மை காணப்படுவதை காணலாம் விரிவாக பார்க்க..

Written by lankamuslim

February 14, 2010 at 10:45 pm

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை

leave a comment »

http://www.army.lk/html/images/image/23president1.jpgஜெனரல் சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுள்ளனர். அரந்தலாவயில் பிக்குகளை கொலை செய்து, தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்திய புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பதவிகளை வழங்கியது போல தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, கைதுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு  கோரிக்கை விடுத்துள்ளனர்

அஸ்கிரிய, மல்வத்தை, அமரபுர, ராமாஞ்ய ஆகிய பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகா நாயக்கதேரர்கள் கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ஆத்திரத்தை ஆத்திரத்தால் தீர்க்க முடியாது என புத்த பகவான் போதித்துள்ளதை பின்பற்றி, பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுத்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் காணப்படும் கோபதாபங்களை கைவிடுங்கள்.

Written by lankamuslim

February 14, 2010 at 10:23 pm

யாழ்ப்பாண மஸ்ஜிதுகள் புனர் நிர்மாணம் செய்யப்படுகின்றன

leave a comment »

1990 இல் புலிகளால் யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஏனைய வடமாகாண முஸ்லிம்களுடன்  அவர்களின் அனைத்து  அசையும் அசையாத சொத்துகளும்  புலிகளால் கொள்ளையிடப்பட்ட பின்னர்   இரண்டு  மணித்தியால அவகாசத்தில்   யாழ்ப்பாண நகரை விட்டும் ஆயுத பயங்கரவாதத்தின் மூலம் வெளியேற்றபட்டனர் அன்றில் இருந்து இன்றுவரை வடமாகாண  முஸ்லிம்களில் அகதி வாழ்கை இருபது வருடயங்களை எட்டியும் விடிவு இன்றி தொடர்கின்றது 1996 இல் யாழ் குடாநாடு புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கபட்ட பின்னரும்  2002 யில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் யாழ்ப்பாணம் வரலாம் என்று புலிகளால் அறிவிக்கபட்ட பின்னரும்   புலிகளின் கெடுபிடிகள் தொடர்ந்த மையால் 2009 ஆண்டு வரை பெரிதாக குறிபிடும் படியான மீள்குடியேற்றங்கள் நடைபெற வில்லை 2009 ஆண்டுக்கு பின்னர் நிலை மாற்றம் கண்டு வருகின்றது முஸ்லிம்கள் வடக்கின் ஏனைய பகுதிகளை போன்று யாழ்ப்பாணதிலும்  மீள்குடியேற தொடங்கியுள்ளனர் யாழ்ப்பாண முஸ்லிம் பகுதிகளின் பொது கட்டிடங்களை மீள் எழுச்சித் திட்டதின் கீழ்  புனர் நிர்மாணம் செய்யும் வேலை திட்டமொன்று  அண்மையில் தொடங்கபட்டு நடை பெற்று  வருகின்றது யாழ் குடா நாட்டில் 20 க்கும் அதிகமான  மஸ்ஜிதுகள் இருகின்றன அவைகள் சிதைவடைந்த  நிலையில் இருகின்றன  தற்போது பொது கட்டிடங்களை புனர் நிர்மாண படுத்தும் திட்டத்தின் கீழ்  புனர் நிர்மாண அமைச்சால் இந்த மஸ்ஜிதுகளும் புனர் நிர்மாணம் செய்யப்படும்  விடையம் மகிழ்ச்சி தரும்  விடையமாகும்.

தகவலும் படமும் எமது விசேட செய்தியாளர்கள்

Written by lankamuslim

February 13, 2010 at 2:22 pm

மன்னார் மாவட்டத்தில் அமைச்சர் றிசாத்தின் துரித அபிவிருத்திகள்

leave a comment »

மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர்  றிசாத் பதியுதீன் நேற்று  முன்தினம்  மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் பிரவிற்குட்பட்ட   உப்புக்குளம், பள்ளிமுனை ,  பனங்கட்டிக் கொட்டு, தோட்டவெளி, துள்ளுகுடி  போன்ற கிராமங்களின் அபிவிருத்திக்கும்  மற்றும் மன்னார் மாவட்டத்தின்    பேசாலை,தலைமன்னார் பகுதிகளில் இடம் பெற்ற கிராமிய மீள் எழுச்சி திட்ட அபிவிருத்தி பணிகளுக்கான காசோலைகளை கையளிதார்   மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்டான்லி டிமெல் மீளெழுச்சித் திட்ட மன்னார் மாவட்ட பணிப்பாளர் ரொபட் குரூஸ்,அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் எம்.முனவ்வர், கலாநிதி யூசுப்  K  மரைக்கார் உட்பட பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்டததில் தெரிவு செய்யப்பட்ட 11 கிராமங்களில் ஏற்கனவே இத் திட்டம் 25 கிராமங்களில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு மேலதிகமாக 15 கிராமங்களில் இத்திட்டம் நடை முறைப்படுத்துவதற்கென நேற்று  முன்தினம்    120 மில்லியன் ரூபாய்களை அமைச்சர்கிராம அபிவிருத்தி சங்கங்களிடம் கையளித்தார் என்பது குறிபிடதக்கது

இதே வேளை இத்திட்டத்தின் மூலம், அரிப்பு நீர் விநியோகத் திட்டத்திற்கு 10 மில்லியன் ரூபாய்களும், 9 பலநோக்கு கூட்டுறவு சங்க கடைகள் நிர்மாணிப்புக்கு 20 மில்லியன் ரூபாய்களும், 25 மையக் கிராமங்களின் அபிவிருத்திக்கென 190 மில்லியன் ரூபாய்களும், கட்டுக்கரகுளப் பனரமைப்பு பணிக்கென 385 மில்லியன் ரூபாய்களும் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியதாக செய்திகள் குறிபிடுகின்றன

Written by lankamuslim

February 13, 2010 at 1:53 pm

காத்தான்குடி சிகரம் கிராமத்தில் தோண்டப்படும் குழந்தைகளின் கபுறுகள்

leave a comment »

நிந்தவூரில் இருந்து ஷகீட் அஹமட்:

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிகரம் முஸ்லிம் கிராமத்தில் இரண்டு மாதக் குழந்தை ஒன்றின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டு மூன்று தினங்கள் கடந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட இடம் “கபுறு” தோண்டபட்டு ஜனாஸா காணாமல் போய்யுள்ளது.

இச்சம்பவம் கடந்த புதன் கிழமை காலை பொது மக்காளால் அவதானிக்கபட்டுள்ளது குறித்த சம்பவம் புதன் அதிகாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் இது பற்றி அவர் மேலும் குறிபிடுகையில் இந்த கிராமத்தில் கடந்த 8.2.2010 அன்று இரண்டு மாதக் குழந்தையான அகமட் ஷியானின் ஜனாஸா சிகரம் கிராம மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்றும் .இந்தக் குழந்தையின் ஜனாஸா புதன் கிழமை அதிகாலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் இக்குழந்தையின் பெற்றோர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைபாபாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்

இதே போன்ற சம்பவம் சில மாதங்களுக்கு முன்பும் நடந்துள்ளது என்பது குறிபிடதக்கது அடக்கம் செய்யப்பட்ட குழந்தையொன்றின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டு இரண்டு தினங்களில் வெளியில் எடுக்கப்பட்டு கபுறின் மேல் பகுதியில் போடப்பட்டிருந்ததுடன் ஜனாஸாவை மூடுவதற்கு பயன்படுத்தும் பலகைகள் எரிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இது சமந்தமான விசாரணைகள் தொடர்கின்றன.

Written by lankamuslim

February 13, 2010 at 1:10 pm

கண்டி அக்குரணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு 45 லச்சம் பெறுமதியான பஸ்

leave a comment »

அஸ்ஹர் பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யபட்ட பஸ்

கண்டி அக்குரணை நகரில் அமைந்துள்ள அல் அஸ்ஹர்  தேசிய பாடசாலையின்  அஸ்ஹர்  பாடசாலை பழைய  மாணவர் அமைப்பின்-Old Azharian Union-  அஸ்ஹர் நிதியத்தின் -Azhar Foundation-  மூன்றாவது வருட  விசேட நிகழ்ச்சி  ஒன்றில்  அஸ்ஹர்  தேசிய பாடசாலைக்கு  45 லச்சம் பெறுமதியான சொகுசு பஸ் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது

இந்த  விசேட நிகழ்ச்சி கடந்த கிழமை பாடசாலையில் இடம் பெற்றது இந்த நிகழ்ச்சியில் பிரதம  அதீதியாக அஸ்ஷேய்க் A.C.M ஆகார் முஹம்மத் கலந்து கொண்டார் இங்கு அஸ்ஹர்  நிதியத்தின் மூன்றாவது வருட வைபவங்கள் , மதிப்பளிக்கும் நிகழ்ச்சி, சொகுசு பஸ் கையளிக்கும்  நிகழ்ச்சி என்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன

இந்த நிகழ்ச்சிகள் யாவும் அஸ்ஹர்  பழைய  மாணவர் அமைப்பினாள் ஏற்பாடு செய்யப்பட்டது இந்த  பழைய  மாணவர் அமைப்பு ஆறு வருடங்களுக்கு முன்னர் தொடங்கபட்டதாகும்  இந்த அமைப்பு பல வழிகளிலும் பாடசாலையின் வளர்சிக்கு உறுதுணையாய் இருந்து வருவதுடன் மூன்று வருடங்களுக்கு முன்னர்  அஸ்ஹர் அரகட்டளை நிதியம் என்ற அமைப்பையும் உருவாக்கியது இது சில கிளைகளை கொண்டு இயங்குகின்றது இதில் ஜப்பான் கிளை விசேடமானது  என்பதுடன் பாடசாலைக்கான சொகுசு பஸ் வழங்குவதற்கு பிரதான் பங்காற்றியுள்ளது -தகவல் எமது அக்குரணை செய்தியாளர்-kandy Akurana-.

Written by lankamuslim

February 12, 2010 at 9:01 am

நெல்லின் விலை வீழ்ச்சி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்

leave a comment »

See  full size image

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை இடம்பெற்று வருகையில் நாளுக்கு நாள் நெல்லின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு உத்தரவாத விலையினை வெளியிட்டு நெல்லினைக் கொள்வனவு செய்ய வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போகச் செய்கை சிறிதுகாலம் மழை இல்லாது பாதிக்கப்பட்டதுடன், பின்னர் அதிக மழை பெய்ததாலும் பாதிக்கப்பட்டது. இறுதி நேரத்தில் கபில நிறத்தத்தி, இலைச்சுருட்டி புழு போன்ற பூச்சித் தாக்கத்தினால் பாரிய பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கூடுதலாகச் செலவு செய்து கிருமி நாசினிகளைப் பயன்படுத்தினர்.

இரண்டாயிரத்து முந்நூறு ரூபாவிற்குக் கொள்வனவு செய்யப்பட்ட நீட்டு வெள்ளை இன நெல் தற்போது ஆயிரத்து அறுநூறு ரூபாவிற்குக் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல்லின் விலையை வியாபாரிகளே தீர்மானிக்கும் நிலை இன்று உள்ளதால் வியாபாரிகள் தங்களது தேவைக்கேற்ப நாளுக்கு நாள் குறைத்துகொண்டு செல்கின்றனர்.

இதனைத் தடுத்து நிறுத்தி விவசாயிகளைப் பாதுகாக்க அரசு தலையிட்டு உத்தரவாத விலையினை வெளியிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Written by lankamuslim

February 11, 2010 at 6:09 pm

மன்னார் முசலிப் பிரதேச மின்சார அபிவிருத்திக்கு 50மில்லியன்

leave a comment »

http://www.telonews.com/sritelo/wordpress/wp-content/uploads/2009/04/rishad-bathiudeen.jpg

மன்னார் முசலிப் பிரதேச செயலகப் பிரிவில் மின்சாரமில்லாத பகுதியில் மின்சாரத்தை வழங்குவதற்காக சுமார் 50மில்லியன் ரூபாவை மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஒதுக்கீடு செய்துள்ளார். குறிப்பாக பிச்சைவானவக்குளம், பெரியபுள்ளச்சி, பொற்கேணி, அகத்திமுறிப்பு உட்பட மேலும் பல கிராமங்களுக்கு இந்த மின்விநியோகம் வழங்கப்படவுள்ளது. இதேவேளை சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தேவையான நீர்விநியோகத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் முசலி நாணாட்டன் பிரதேச மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்க 4.5 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர புத்தளம் நெலுக்குளம் ஊடான பாதைக்கு தார் இடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Written by lankamuslim

February 11, 2010 at 5:50 pm

ஜெனரல் பொன்சேகா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்:

leave a comment »

எதிர்க்கட்சித் தலைவர் ரணில்:

கூட்டுப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா எந்த விதமான அடிப்படையும் அற்ற விதத்தில் அருவருக்கத்தக்க வகையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இங்கு சட்டம் எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை.இவ் விடயத்திற்கு இன்று சர்வதேசமே எதிர்ப்புத் தெரிவித்து அதனை நிராகரித்திருக்கின்றது.

எனவே, பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, சட்டத்திற்கு முரணாகக் கைதுசெய்யப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதுடன், இது தொடர்பில் சட்ட நடவடிக்கைக்கான ஆராய்வுகள் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். விரிவாக பார்க்க..

Written by lankamuslim

February 11, 2010 at 3:52 pm

250 இனங்களை கொண்ட நைஜீரியா ஒரு பார்வை

leave a comment »

M.ஷாமில் முஹம்மட்

நைஜீரியா மேற்கு ஆபிரிக்காவிலிலுள்ள ஒரு சமஷ்டி குடியரசு நாடாகும். இது ஆபிரிக்க நாடுகளின் மத்தியில் பிராந்திய செல்வாக்கு மிக்கதாக பார்க்க படுகின்றது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மக்கள்தொகை மிகுந்த நாடுகளில் முக்கியமானது இதன் மக்கள்தொகை 15 கேடியை விடவும் அதிகம் இங்கு 36 மாநிலங்கள் உண்டு நைஜீரியாவினுள் 36 மாநிலங்களிளும் 250 கும் அதிகமான இனங்கள் வாழ்கின்றன என்பது முக்கியமானது இவர்கள் பல மொழிகளைப் பேசும் இனங்கள் இந்த நாட்டின் மக்கள்தொகையின் 52% தினர் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக நைஜீரியாவின் வட பகுதியில் வாழ்கின்றார்கள் இங்கு 40% மாணவர்கள் கிறிஸ்தவர்கள் இவர்கள் பெரும்பான்மையாக நைஜீரியாவின் தென்பகுதியில் வாழ்கிறார்கள் இவர்கள் அல்லாமல் மிகவும் சிறுபான்மை இனங்களும் உண்டு இங்கு நைஜீரியா தனது வரலாற்றில் தொடர்ந்தும் மேற்கின் ஆக்கிரமிப்பு களையும் இராணுவ புரட்சிகளையும் சந்தித்துள்ளது , கடைசியாக பிரித்தானியாவின் காலனித்துவ நாடாகவும் இருந்துள்ளது இவர்களின் ஆட்சிமுறை இனங்களை பிரித்தாளும் மனித விரோத அரசியல் வழிமுறைகளை கொண்டு காணப்பட்டது பிரித்தானியாவின் பிடியில் இருந்து 1960 விடுபட்டது எனிலும் 1960 தொடக்கம் 1999வரை தொடர்ந்து இராணுவ ஆட்சியின் பிடியில் தவித்தது  விரிவாக பார்க்க…..

Written by lankamuslim

February 11, 2010 at 11:30 am

பொன்சேகாவின் கைதினை கண்டித்து எதிர்கட்சிகளின் அமைதி போராட்டம் கலகமாக மாறியுள்ளது

leave a comment »

முன்னாள் இராணுவத் தளபதியும் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டவருமான ஜெனரல் பொன்சேகாவின் கைதினை கண்டித்து எதிர்கட்சிகள் அனைத்தும் இணைந்து இன்று புதுக்கடை பிரதேசத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நடாத்தினர். குறிப்பிட்ட சத்தியாகிரக போராட்டம் ஒரு  குழுவினரால்  தாக்கப்பட்டுள்ளதாக  ஊடகங்கள்  தெரிவிக்கின்றன. அதே நேரம் தமது அமைதியான போராட்டத்தினை அரசங்கத்தின் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் அனுசரணையில் இயங்கும் குழுவொன்று தாக்கியதாக ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் கண்டுநந்தி தெரிவித்துள்ளார்.

சத்தியாகிரகம் இடம்பெற்ற இடத்திற்கு வாகனங்களில் இரும்புப்பொல்லுகள் , தடிகள் கொண்டுவந்து இறக்கப்பட்டதாக நேரில் பார்த்த ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரம் சத்தியாகிரகம் இருந்தவர்கள் மீது கல், போத்தல், பொல்லுகளை காடையர்கள் வீசியுள்ளனர். இச்சம்பவம் இடம்பெறுகையில், தாம் தாக்கப்படுவதை தடுக்க பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிகின்றன

Written by lankamuslim

February 10, 2010 at 5:50 pm

நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்பட்டுள்ளது

leave a comment »

இலங்கையின் 6 வது நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கலைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் லூசியன் ராஜகருணாநாயக்க தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

Written by lankamuslim

February 9, 2010 at 10:24 pm

ஜெனரல் சரத் பொன்சேகாவை உறவினர்கள் பார்வையிட அரசாங்கம் அனுமதி வழங்கும்

leave a comment »

http://www.tamilwin.net/newsimages/spokesmanjp.jpg

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு பாதுகாப்பாக சகல வசதிகளுடனும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் தடுத்து வைக்கபட்டுள்ள இடம் இரகசியமாகவே பேணப்படும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

ஜெனரல் சரத் பொன்சேகாவின் உறவினர்கள் அவரை பார்வையிட கோருவார்களேயாயின் அவர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கும் எனத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர், இராணுவத்தில் கடமையாற்றுகையில் மேற்கொண்ட குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் போன்றவற்றிற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இராணுவப் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்திலிருந்து விலகிய ஆறு மாதங்களுக்குள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் இராணுவப் பேச்சாளர் இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

February 9, 2010 at 6:56 pm

கைதான ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த படுவார்

leave a comment »

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது  வேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல் சரத் பொன்சேகா  திங்கட்கிழமை இரவு கொழும்பில்  கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில்  அவரது அலுவலகத்தில் நுழைந்த ராணுவப் போலிசார் அவரைக் கைது செய்ததாக   தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா ராணுவக் குற்றங்களை இழைத்திருக்கிறார் என்று முதலில் அரசு தரப்பில் கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட போது, சரத் பொன்சேகா பல அரசியல் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

கைதான ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த படுவார் இவர் இராணுவ இரகசியங்களை வெளிட்டமை , ஜனாதிபதியை கொலை செய்ய முயன்றமை , இராணுவ சதி புரட்சி ஒன்றின் மூலம்  அரசாங்கத்தை கவிழ்க்க திட்டமிட்டமை  போன்ற குற்ற சாட்டுகள் இவர்மீது  இராணுவ நீதிமன்றத்தில் சுமத்தப்படும் என தெரிய வருகிறது

இராணுவ குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சரத் பொன்சேகா மிகவும் மோசமான, அருவருப்பான முறையில் இழுத்துச்செல்லப்பட்டார் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கூறியதாக ராடர் குறிபிடுகிறது    . ராணுவப்போலிசார் இந்த கைது குறித்து அப்போது எந்த காரணங்களையும் அவரிடம் தெரிவிக்கவில்லை என்று கூட்டத்திலிருந்த அரசியல் தலைவர்கள் கூறினர்.

கைது செய்யப்படுவதற்கு முன்னர் , திங்கட்கிழமை, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றங்கள் குறித்த விசாரணைகள் வருமானால் அப்போது, தான் சாட்சியம் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

“எனக்கு தெரிந்தது, நான் கேள்விப்பட்டது, எனக்கு கூறப்பட்டது ஆகியவை குறித்து நான் அவசியம் வெளிப்படுத்துவேன். போர் குற்றங்களை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உண்மைகளை சொல்லாதவர்கள் துரோகிகள். போர் குற்றங்களை செய்தவர்கள் யாரையும் நான் காப்பாற்றப் போவதில்லை”, என்று  ஜெனரல் சரத் பொன்சேகா. தெரிவித்தமை குறிபிடதக்கது

Written by lankamuslim

February 9, 2010 at 9:37 am

போராளிகள் இணையத்தளம்-www.ourummah.org- என்ற முகவரியில் இயங்கும்

with one comment

எமது இணையத்தள குழுமம்களில் ஒன்றான “போராளிகள்” தளம் டொமைன் பதிப்பு வேலை காரணமாக இன்றும் , நாளையும் சில பகுதிகளில் பார்வை இடுவது சிரமமானதாக அமையமுடியும் – إن شاء الله- இனிவரும்காலங்களில் போராளிகள்  இணையத்தளம் www.ourummah.org என்ற முகவரியில் இயங்கும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம் என்பதுடன் 193 கும் அதிகமான நாடுகளில் வாழும் உலகளாவிய முஸ்லிம் உம்மாஹ் பற்றிய தகவல்கள் , கட்டுரைகள் என்பன வற்றுடன் பொதுவான உலக செய்திகளையும் முடியுமான வரை உடனுக்குடன் தரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறிய தருகின்றோம்

Written by lankamuslim

February 8, 2010 at 6:52 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers