Archive for January 19th, 2010
சிறுபான்மையினர் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் புடவைத்துண்டு போல் சரத்பொன்சேகா
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் :ரவூப் ஹக்கீம்
முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் மக்களுடைய அரசியல் போராட்டத்தையோ அவர்களுடைய ஆயுதப் போராட்டத்தையோ கீழ்த்தரமாகப் கொச்சைப்படுத்திப் பேசுகின்ற அரசியலில் ஈடுபட்டதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகாவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஹக்கீம் இங்கு தொடர்ந்து பேசுகையில்ஏன் ஜெனரல் சரத்பொன்சேகாவை இந்தத் தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களும் நான்கு, ஐந்து மணித்தியாலங்கள் பேசினோம். அதன் போது சரத்பொன்சேகா என்றால் தமிழர் தேசியக் கூட்டமைப்பு மத்தியில் இராணுவ நடவடிக்கைகளை கொடூரமாகச் செய்தவர் என்ற வித்தியாசமான கருத்து இருந்தது. இவரை எப்படித் தமிழ் மக்கள் மத்தியில் சந்தைப்படுத்துவது என்ற அச்சம் காணப்பட்டது.விரிவாக பார்க்க
அக்கரைப்பற்றில் துப்பாக்கி சூடு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் காயம்
அக்கரைப்பற்று பழைய திரையரங்கு பகுதியில் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்று இன்று காலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளரான சூர்த்தீன் றிபாஸ் (19 வயது) காயமடைந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது .இந்த சம்பவத்திற்கு கருணா தரப்பினரே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின், சாகாமம் வீதியில் அமைந்துள்ள வியாபார கட்டிடத்தொகுதி நேற்று நள்ளிரவு தீயிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக சுமார் 20 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க பித்தலாட்டத்திற்கு உரிய பாடம் கற்பிக்கப்படும்: ரவூப் ஹக்கீம்
மாறி மாறி ஒவ்வொரு தேர்தலிலும் யுத்தத்தை மட்டும் மூலதனமாக வைத்து இந்த அரசாங்கம் செய்து வந்த பித்தலாட்டத்திற்கும், ஊழலுக்கும் இந்த ஜனாதிபதி தேர்தல் சிறந்த பாடத்தை கற்பிக்கும்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பா.உ. தெரிவித்தார். சாய்ந்தமருது பிரதான வீதியில் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,இதுவரை காலம் தமிழ் மக்கள் மத்தியில் வித்தியாசமான பார்வையொன்று சரத் பொன்சேகா மீது இருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நடவடிக்கையின் பயனாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜெனரல் சரத் பொன்சேகாவை எந்தவிதமான எழுத்து மூலமான கோரிக்கையையும் முன்வைக்காமல் ஆதரிக்க முன்வந்தமையினால் தமிழ் மக்கள் இன்று ஏகமனதாக அவரை ஆதரிக்க தயாராகி விட்டதுடன் சரத் பொன்சேகா மீதான சந்தேகப் பார்வையும் நீங்கியுள்ளது.விரிவாக பார்க்க
தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருகும் முஸ்லிம் அணு விஞ்ஞானி Dr.ஆபியா வழக்கு இன்று விசாரனைக்கு வருகிறது
தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருகும் முஸ்லிம் பெண் அணு விஞ்ஞானி Dr.ஆபியா வழக்கு இன்று 19.01.2010 அமெரிக்க நேரம் கலை 9.00 மணிக்கு நியூ யார்க் நகரின் விசாரனைக்கு .எடுகபடுகிறது இதைbமனிதாபிமான அமைப்புகள் இஸ்லாமிய இயக்கங்கள் என்பன ஒன்றிணைந்து “Free Dr Aafia Siddiqui Day” ,Dr.ஆபியா சித்தீக்கி விடுதலை நாளாக பிரகடனம் செய்துள்ளன அமெரிக்க நிர்வாகம் மேற்கொண்டுவரும் நியாயமற்ற வதைச்செயல்களை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் Dr.ஆபியா சிந்தீக்கி உடனடியாக விடுவிக்குமாறும் கோரும் ஆர்பாட்டங்கள் நேற்று பாகிஸ்தான் , U.S. UK, ஆஸ்திரேலியா ஸ்பெயின் , கத்தார் , துர்கி , போன்ற நாடுகளில் இடம் பெற்றுள்ளன. விரிவாக பார்க்க…
இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும்: 06
நான்காவது ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் 1994.11.10ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அரசியலமைப்பின் 30ம் உறுப்புரையின் 2ம் பந்திக்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். ஆனால், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே 4வது ஜனாதிபதித் தேர்தலுக்குரிய அறிவித்தல் விடுக்கப்பட்டது. (ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை 4 ஆண்டுகள் பூரணப்படுத்திய பின்பு ஜனாதிபதி விரும்பின் இடைக்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அதிகாரம் அவருக்குண்டு.4வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 1999.11.16ம் திகதி ஏற்றுக் கொள்ளப்படுமெனவும், 199.12.21ம் திகதி தேர்தல் நடைபெறுமெனவும், ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பணிப்புரையின் படி பதில் தேர்தல் ஆணையாளர் அவர்களினால் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டது.விரிவாக பார்க்க
சிவாஜிலிங்கம், சிறீகாந்தா ரெலோ அமைப்பிலிருந்து நீக்கம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செயலளார் பிரசன்னா ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த இருவரும் கட்சியின் அனைத்து பதவி நிலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்தமை தொடர்பில் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்கியமை காரணமாக ஸ்ரீகாந்தா கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கே.பியின் வங்கிக் கணக்கிலிருந்து அரசு பணம் எதனையும் பெறவில்லை
மறுக்கிறார் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் ஹெந்த விதாரண:
கைது செய்யப்பட்டு புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் புலிகளின் முக்கியஸ்தர் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாத னின் வங்கிக் கணக்கிலிருந்து, அரசாங்கம் பணத்தை எடுத்துச் செலவுசெய்ய வில்லை என்று இலங்கை புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹெந்த விதாரண நேற்றுக் கூறினார். கே.பியிடம் 600 வங்கிக் கணக்குகளும் 5 கப்பல்களும் இருக்கின்றன என்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் ஹெந்த விதாரண மறுத்துள்ளார்.










