Lankamuslim.org

One World One Ummah

மேற்கு பயங்கரவாதம் இஸ்லாமிய விஞ்ஞானத்தை ஊதி அணைக்க முனைகிறது!

with 2 comments

Dr .மசூத் முஹம்மதி

M.ஷாமில் முஹம்மட்

பெப்ரவரி 2007 ஆண்டு அமெரிகாவின் டெனிசி பல்கலை கழகதின் – University of Tennessee- சட்டத்துறை பேராசிரியர் றிநோல்ட் -Glenn “Instapundit” Reynolds- அமெரிக்கா ஈரானின் இஸ்லாமிய தலைவர்களையும் , அணுவாயுத விஞ்ஞானிகளையும் கொலை செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார் நேற்று -12.01.2010- மேற்கு பயங்கரவாதம் ஈரான் அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதியை கொலை செய்துள்ளது. இது றிநோல்டின் என்ற ஒருவருடைய வாதம் அல்ல இது ஒரு சிந்தனை போக்கு இதை மேற்கு பயங்கரவாதம் றிநோல்டின் வாதத்திக்கு முன்னரும் பின்னரும் அழகாக செய்து வருகின்றது.

மேற்கு பயங்கரவாதம் அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதியை ஈரான் தலை நகரில் அவரின் வீட்டின் அருகில் ரிமோட் மூலம் இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் குண்டின் மூலம் கொலை செய்துள்ளது இதை அமெரிக்க , இஸ்ரேலிய பயங்கரவாதம் என ஈரான் கூறியுள்ளது. இந்த கொலை இஸ்லாமிய உலகத்துக்கு புதியது அல்ல அதிகமான முஸ்லிம் விஞ்ஞானிகள் அன்மை காலமாக கொலை செய்யப்படுகின்ரனர் அல்லது கடத்தடுகின்ரனர் விரிவாக பார்க்க

ஈராக் ஆக்ரமிக்கபட்டு ஆரம்ப 18 மாதங்களில் மட்டும் 310 முஸ்லிம் விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் இவர்கள் முக்கிய அணு விஞ்ஞானத்துடன் தொடர்புடையவர்கள் , 17500 கும் அதிகமான விஞ்ஞானிகள் நாட்டை விட்டும் வெளியேரிவிட்டனர் இவர்களில் அதிகமானவர்கள் மேற்கு மேலாதிக்க பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்க வைக்கப்பட்டுள்ளனர் அல்லது ஏதே ஒரு வகையில் அச்சுறுத்தலின் கீழ் வாழ்கின்றனர் என்று இது பற்றிய ஆய்வை மேற்கொண்ட ஒரு எகிப்திய ஆய்வுமையம் கூறுகிறது என்பதுடன் இந்த கொலைகள் அமெரிக்க, இஸ்ரேலிய உளவு நிறுவனங்களினால் செய்யப்பட்டவை என சுட்டிகாட்டுகிறது.

ரஷிய கம்யூனிஸ ராஜ்ஜியம் பிரிந்து உடைந்த போது கீர்கிஸ்தான்- Kyrgyzstan- , தாஜ்கிஸ்தான்-Tajikistan-, டேக்மிஸ்தான் -Turkmenistan-, உஸ்பெக்கிஸ்தான்-Uzbekistan- என்ற நாடுகள் கம்யூனிஸ அராஜகதில் இருந்து முஸ்லிம் நாடுகளாக விடுதலை பெற்று நிமிர்ந்தன அங்கும், செச்னியா-Chechnya-, டாகஸ்தான்- Dagestan- , இங்குஸ்கீட்டியா-Ingushetia- ஆகிய ரஷ்ய ஆக்கிரமிப்பு தேசங்களிலும் பல முஸ்லிம் விஞ்ஞானிகள் ,புத்திஜீவிகள் கடத்த பட்டு காணாமல் போயுள்ளனர் அல்லது கொலை செய்யபட்டுள்ளனர் கடத்தப்பட்ட முஸ்லிம் விஞ்ஞானிகள் பற்றி கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர் என்பதை தவிர வேறு எந்த தகவலும் இதுவரையும் கிடைக்கவில்லை , இங்கு நடந்த கடத்தல் , காணாமல் போதல் என்பன வற்றின் சூத்திர தாரிகளாக ரஷிய , அமெரிக்க மேலாதிக்கங்கள் இருப்தாக நம்பபடுகிறது .

அதேபோன்று மேற்கு நாடுகளில் பணியாற்றும் முஸ்லிம் விஞ்ஞானிகள் ஐந்து வேலை தொழுதாலும் பயங்கர வாத பிரிவுகளினால் கைதாகின்றனர் , கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முஸ்லிம் அணு விஞ்ஞானி ஒருவர் சுவிட்சர்லாந்தில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரும் இவரின் சகோதரர்களும் இணையத்தின் ஊடாக அல்ஜீரியா இஸ்லாமிய போராளிகளின் இணைய தளங்களை பார்க்கிறார்கள் தாடி வைத்துள்ளார் ஐந்து தடவை தொழுகிறார் என்ற காரணத்தால் வட ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்லாமிய போராளிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி . இவருடன் சேர்ந்து, அவரது 2 விஞ்ஞா துறை மாணவர்களான சகோதரர்களையும் கைது செய்தனர்.

பாகிஸ்தானிலும் பல முஸ்லிம் அணுவாயுத விஞ்ஞானிகள் கடத்தபடுகின்றனர் இந்த வரிசையில் பாகிஸ்தானைச் சேர்ந்த Dr.ஆபியா என்ற பெண் முஸ்லிம் விஞ்ஞானி 2003 மார்ச் 30ல் கடத்தப்பட்டு காணாமல் போனார் . கடத்தப்பட்ட அவர் அமெரிக்க கட்டுபாட்டில் இயங்கும் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு மிக கடுமையாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார் . சிறைக்காவலர்களால் மோசமான முறையில் பாலியல் வதைகளுக்கும் ஆளாகியுள்ளார் இந்த பயங்கரவாத அமெரிக்க கொடுமையை 2008 ஜுலை 06ஆம் திகதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். இவோன் ரெட்லி இதை வெளிகொண்டுவந்ததால் உலகம் இதை அறிந்து கொண்டது அல்லது மற்ற ஆயிர கணக்கான முஸ்லிம் விஞ்ஞானிகள், முஸ்லிம் புத்திஜீவிகள் , போன்று இதுவும் அறியப்படாத விடையமாக இருந்திருக்கும்

இருட்டில் இருந்த ஐரோப்பாவை விஞ்ஞா யுகத்துக்கு அலைத்து வந்தவர்கள் முஸ்லிம்கள் தான் இதுபற்றி Marguis’ எனும் அறிஞர் தனது ‘speeches delivered in ‘ எனும் நூலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘It is to Muslim science, to Muslim art and to Muslim literature that Europe has been in a great means indebted for its extrication from darkness of the middle ages.’ ‘ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது என்று குறிபிடுகிறார் .’

8-12ம் நூற்றாண்டு காலப்பகுதி ‘ஐரோப்பா அறியாமை இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்’ என வரலாறு கூறுகின்றது. இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் . இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு விஞ்ஞா அடிபடைகளை உருவாக்கி இருந்தது இந்த கால பகுதியில் இருட்டில் இருந்த ஐரோப்பாவுக்கு எழுச்சி , புரட்சி விஞ்ஞாம் என்று சிந்திப்பதற்கு கற்றுகொடுத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்று உலக வரலாறு கூறுகிறது .
இன்றைய நவீன விஞ்ஞானத்துக்கு அத்திவாரமாக அமைந்த முஸ்லிம்களின் 1000 வருட விஞ்ஞானம் திட்மிட்டு மேற்கு உலகால் மறைக்கபட்டுள்ளது என்பது அதிர்ச்சியான தகவல் ஆனாலும் இப்போது அவை மீண்டும் வெளிகொண்டுவர படுகின்றது என்பது மகிழ்ச்சியளிகிறது.

இன்று இஸ்லாத்தின் எழுச்சியை தடுக்க இஸ்லாம் மீண்டும் உலகை ஆள்வதை தடுக்க இஸ்ரேல மற்றும் அமெரிக்க , மேற்குலக பயங்கரவாதம் இஸ்லாத்தை நேசிக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளை கொலை செய்து வருகின்றது.

கடந்த வருடம் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடந்த சர்வதேச அளவிலான பெண் விஞ்ஞானிகளுக்கான போட்டி (Korea International Women’s Invention Exposition) யில் 12 தங்கப் பதக்கங்களும், 5 வெள்ளிப் பதக்கங்களும், 6 வெண்கலப்பதக்கங்களையும் அள்ளி முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் உலகில் முதலிடம் பெற்றனர்.

விஞ்ஞானத்தில் சாதனை புரிந்து வரும் 25 நாடுகள் இதில் கலந்து கொண்டன என்பதும் முஸ்லிம் பெண் விஞ்ஞானி மெஹ்ராஜ் கோல்கின்பர் , மின் உற்பத்தித் திட்டம் (electricity generator system) ஒன்றை வடிவமைத்ததற்காகச் சிறப்புப் பரிசு பெற்றார் . மூன்றாம் உலக நாடுகளின் பயன்பாடுகளுக்காக என்றே தனித்துவமாகவும் அதேவேளை சுற்றுப்புறச் சூழல்களுக்கு மாசு விளைவிக்காத முதல் மின் உற்பத்தி நிலையம் என்பதாலும் இவரது கண்டுபிடிப்பு சிறப்புப் பரிசை வென்றது

சோனியா சப்ரீ பல்வேறு மூலப்பொருட்கள் சேர்ந்து உருவாக்கும் “நானோ காம்ப்போஸைட்” கண்டுபிடிப்புகள் World Intellectual Property Organization (WIPO) பரிசினை பெற்றார், மரியம் இஸ்லாமி என்பவரின் எலும்புகள் தொடர்பான நோய் அறுவை சிகிச்சை முறைக்கான புதிய தொழில் நுட்பம், International Federation of Inventors’ Associations (IFIA)வின் பரிசை வென்றுள்ளது.என்பனவும் அவதானிக்க படவேண்டியவை இந்த முஸ்லிம் பெண் விஞ்ஞானிகள் இருவர் பிரித்தானியாவுக்கு சென்ற போது அங்கு பிரித்தானிய உளவு துறையால் பல மணி நேரம் விசாரிக்க பட்டார்கள் என்பதும் இவர்கள் இஸ்லாமிய உடைஅணிந்தவர்கள் என்பது குறிபிட்டதக்கது

உலகளாவிய இஸ்லாமிய எழுச்சியை, இஸ்லாமிய ஆச்சியை-இஸ்லாமிய கிலாபத்- தடுக்க , தாமதபடுத்த மேற்கு பயங்கரவாதம் பல களங்களில் முனைகிறது அதில் ஒன்றுதான் இந்த முஸ்லிம் விஞ்ஞானிகளை, புத்திஜீவிகளை ஊதி அணைக்க முனையும் முயற்சி

நிராகரிபவர்கள் இஸ்லாத்தின் ஒளியை தன் வாயால் ஊதி அணைத்துவிட எண்ணுகின்றனர் இருப்பினும், அல்லாஹ் அவ்வொளியை பிரகாசிக்கச் செய்வான். அல் குர்ஆன் (9:32)

 

 

 

 

Written by lankamuslim

January 13, 2010 at 8:31 pm

2 Responses

Subscribe to comments with RSS.

  1. நவீன யுகத்தில் ஆபிரிக்காவுக்கு அதன் முதலாவது புரட்சியை வழங்கியது கடாபியின் லிபியா ஆகும். இது முழு ஆபிரிக்கக் கண்டத்தையும் தொலைபேசி, தொலைக்காட்சி, வானொலி ஒலிபரப்பு மற்றும் தொலைமருத்துவம் மற்றும் தொலைக்கல்வி போன்ற வேறு பல தொழில்நுட்பப் பிரயோகங்கள்மூலம் இணைத்த புரட்சியாகும். Worldwide Interoperability for Microwave Access எனப்படும் (மைக்ரோவேவ் பிரவேசத்துக்கான உலகளாவிய சர்வநிலைச் செயற்பாடு) வானொலிப் பாலத்தின் காரணமாக கிராமியப் பிரதேசங்கள் உள்ளடங்கும் வகையில் முழு ஆபிரிக்கக் கண்டத்தின் மக்களுக்கும் குறைந்த ஆகுசெலவிலான இணைப்பு வசதிகள் கிட்டியுள்ளன.
    1992இல் 45 ஆபிரிக்கத் தேசங்கள் Regional African Satellite Communication Organization (பிராந்திய ஆபிரிக்க செய்மதித் தொடர்பாடல் அமைப்பு) அமைப்பைத் தாபித்ததோடு, இது ஆரம்பமாகியது. இதன்மூலம் ஆபிரிக்காவுக்குத் தனது சொந்தச் செய்மதி கிடைப்பதோடு, ஆபிரிக்கக் கண்டத்தில் தொலைத்தொடர்பு ஆகுசெலவுகளும் வெகுவாகக் குறைவடையும். இக்காலத்தில் ஆபிரிக்காவிலிருந்து வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் தொலைபேசி அழைப்புகள் உலகிலேயே மிகவும் செலவு நிறைந்தவையாகவிருந்தன. தொலைபேசி உரையாடல்களுக்காக, உள்நாட்டு தொலைதூர தொலைபேசி உரையாடல் உள்ளிட்டவகையில் INTELSAT போன்ற ஐரோப்பிய செய்மதிகளின் பயன்பாட்டுக்கு ஐரோப்பிய நிறுவனங்கள் வருடாந்தம் 500 மில்லியன யுரோவை அறவிட்டுக் கொண்டிருந்ததே இதற்கான காரணமாகும்.
    ஓர் ஆபிரிக்கச் செய்மதியின் கிரயம் ஒரு தடவை மாத்திரம் செலுத்தப்படும் 400 மில்லியன் யுரோ மாத்திரமேயாகுமென்பதோடு, இது யதார்த்தமாயின், ஆபிரிக்கக் கண்டம் இதற்குமேலும் 500 மில்லியன யுரோவை வருடாந்தக் குத்தகையாகச் செலுத்தவேண்டிய அவசியமும் இல்லாதுபோய்விடும். இத்தகைய ஒரு கருத்திட்டத்துக்கு நிதியுதவி வழங்க முன்வராத வங்கியாளர் யார்? ஆயினும் பிரச்சினை தொடர்ந்தது. எஜமானின் சுரண்டலிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள நாடும் அடிமைகள், அத்தகைய சுதந்திரத்தை அடைய உதவுமாறு எவ்வாறு எஜமானரிடம் கேட்கமுடியும்? உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும், அமெரிக்காவும், ஐரோப்பாவும் 14 வருட காலமாகத் தட்டிக்கழிக்கும்விதமான வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கிவந்தது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. மேற்கத்தைய கடூர வட்டியில் கடன் கொடுப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட இக்கெஞ்சல்களுக்கு கடாபி முற்றுப்புள்ளி வைத்தார். லிபியா 300 மில்லியன யுரோவை வழங்கியது. ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி மேலும் 50 மில்லியன யுரோவை வழங்கியது. மேற்கு ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி மேலும் 27 மில்லியன யுரோவை வழங்கியது. இவ்வாறாகவே ஆபிரிக்கா தனது முதலாவது தொடர்பாடல் செய்மதி RASCOM-QAF1ஐ 2007 டிசம்பர் 26ஆந் திகதி பெற்றுக்கொண்டது.
    சீனாவும், ரஷ்யாவும் இதைத்தொடர்ந்து ஆபிரிக்காவுடன் தமது தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்துகொண்டதோடு, தென்னாபிரிக்கா, நைஜீரியா, அங்கோலா மற்றும் அல்ஜீரியாவுக்குச் செய்மதிகளை விண்ணில் செலுத்த உதவின. 2010 ஜுலையில் ஆபிரிக்கா தனது இரண்டாவது செய்மதி RASCOM-QAF1Rயும் விண்ணில் செலுத்தியது. முழுக்க முழுக்கச் சுதேசிகளால் உருவாக்கப்பட்டதும், அல்ஜீரியாவில் ஆபிரிக்க மண்ணில் தயாரிக்கப்பட்டதுமான முதலாவது செய்மதி 2020இல் விண்ணில் ஏவப்படவுள்ளது. இச்செய்மதி உலகிலுள்ள மிகச்சிறந்த செய்மதிகளுடன் போட்டியிடுமென்றும், அதன் ஆகுசெலவு அவற்றைவிடப் பத்து மடங்கு குறைவாக இருக்குமென்றும் இருக்கும் எதிர்பார்ப்பு சவால்நிறைந்த ஒன்றாகும்.
    இவ்வாறுதான் வெறுமனே 300 மில்லியன யுரோவைக்கொண்ட ஓர் அடையாள நகர்வு ஒரு கண்டத்தின் வாழ்வையே மாற்றியமைத்தது. கடாபியின் லிபியா மேற்குலகத்துக்கு வருடாந்தம் 500 மில்லியன யுரோவை மாத்திரம் இல்லாமற்செய்யவில்லை. ஆரம்பக்கடன் வரவிருக்கும் பல வருட காலங்களுக்கு கடன் என்றவகையிலும், வட்டியென்றவகையிலும் பிறப்பிக்கும் பல பில்லியன் கணக்கிலான டொலர்களையும், ஆபிரிக்கக் கண்டத்தைக் கொள்ளையடிப்பதற்கு மறைவியலான ஒரு முறைமையைப் பேணுவதற்கான உதவியையும் அவர் எடுத்துக்காட்டானவகையில் இல்லாமற்செய்துள்ளார்.

    ஆபிரிக்க நாணயநிதி, ஆபிரிக்க மத்திய வங்கி, ஆபிரிக்க முதலீட்டு வங்கி
    டோகோளிஸ் குடியரசில் நடைபெற்ற லோம் உச்சிமாநாடு (2000) ஆபிரிக்க யூனியனின் குறிக்கோள்கள், கோட்பாடுகள் மற்றும் அங்கங்களைக் குறித்துரைக்கும் ஆபிரிக்க யூனியன் அமைப்பியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. இச்சட்டத்தில் 27 ஆபிரிக்க நாடுகள் கையொப்பமிட்டிருந்தன. இது பரந்த வகையிலான பல நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு வழிசெய்திருந்தது. தனி ஆபிரிக்கப் பாராளுமன்றம், நீதிமன்றம், ஆபிரிக்க மத்திய வங்கி, ஆபிரிக்க நாணய நிதியம் மற்றும் ஆபிரிக்க முதலீட்டு வங்கி என்பவை இவற்றுள் அடங்கும். 2005இல் ஆபிரிக்க யூனியன் எதியோப்பியா, அடிஸ் அபாபாவில் இந்த மூன்று நிறுவனங்கள் சம்பந்தமாக ஆபிரிக்க யூனியன் ஆணைக்குழு(AUC)வினால் தயாரிக்கப்பட்ட கருப்பொருள் அறிக்கைகள் மற்றும் வரைபு மரபுடன்படிக்கைகளை ஆய்வு செய்வதற்கான நிபுணர்களின் கூட்டமொன்றை நடத்தியது. ஆபிரிக்க யூனியன் ஆபிரிக்க மத்திய வங்கி (நைஜீரியா), ஆபிரிக்க முதலீட்டு வங்கி (லிபியா) மற்றும் ஆபிரிக்க நாணய நிதியம் (மத்திய ஆபிரிக்கா) ஆகிய நிதியியல் நிறுவனங்களுக்கான ஆசனங்களையும் தீர்மானித்தது.
    ஆபிரிக்க நாணய நிதியம், காலப்போக்கில் அதன் பொறுப்புகள் ஆபிரிக்க மத்திய வங்கிக்கு மாற்றப்படுமென்றபோதிலும், ஓர் ஆபிரிக்க யூனியன் நிதி நிறுவனமாக விளங்கும் இந்த நிறுவனம் எதிர்கால ஆபிரிக்க யூனியனின் மூன்று நிதி நிறுவனங்களுள் ஒன்றாகும். இது கமரூனில், யாவோன்டேயைத் தளமாகக் கொண்டு இயங்கும்.
    ஆபிரிக்க மத்திய வங்கி (ACB) ஆபிரிக்க நிதி நிறுவனங்கள் மூன்றில் ஒன்றாகும். இது காலப்போக்கில் ஆபிரிக்க நாணய நிதியத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும்.
    1991 அபூஜா சர்வதேச உடன்படிக்கையில் ஆபிரிக்க மத்திய வங்கியின் உருவாக்கம்குறித்து உடன்பாடு காணப்பட்டிருந்தது. இது 2028இல் நிறைவடைதல் வேண்டும். 1999 சேர்ட்டி பிரகடனம் இச்செயல்முறை விரைவுபடுத்தப்பட்டு 2020 அளவில் உருவாக்கம் இடம்பெற வேண்டுமென்று அழைப்புவிடுத்தது. தனி ஆபிரிக்கப் பாராளுமன்றச் சட்டவாக்கத்தினூடாக இது பூரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டதும், ஆபிரிக்க மத்திய வங்கியே ஆபிரிக்கத் தனி நாணயத்தை வெளியிடும் நிறுவனமாகவும், ஆபிரிக்க அரசாங்கத்தின் வங்கியாளராகவும், ஆபிரிக்காவின் தனியார் மற்றும் பொது வங்கித்தொழில் நிறுவனங்களின் வங்கியாளராகவும் விளங்குவதோடு, ஆபிரிக்க வங்கிக் கைத்தொழிலைப் பிரமாணப்படுத்தி, மேற்பார்வை செய்யும் அமைப்பாகவும் விளங்கும். அது உத்தியோகபூர்வ வட்டி மற்றும் பரிவர்த்தனை வீதங்களை நிர்ணயிக்கும். இது ஆபிரிக்க அரசாங்கத்தின் நிர்வாகத்துடன் இணைந்து இக்கருமங்களை மேற்கொள்ளும்.
    ஆபிரிக்க முதலீட்டு வங்கி AIB ஆபிரிக்க யூனியனின் மூன்று நிதி நிறுவனங்களுள் ஒன்றாகும். ஏனைய இரண்டும் ஆபிரிக்க நாணய நிதியமும், ஆபிரிக்க மத்திய வங்கியுமாகும். ஆபிரிக்க முதலீட்டு வங்கி லிபியாவில், திரிப்பொலியில் தனது தலைமையகத்தைக் கொண்டிருக்கும். அது 2007 ஏப்ரில் முதல் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
    ஒபாமாவினால் முடக்கப்பட்டிருக்கும் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களும் லிபியன் மத்திய வங்கிக்குச் சொந்தமானதாகும். இத்தொகை ஆபிரிக்க சமஷடி அமைப்புக்கு இறுதி வடிவம் வழங்கும் மூன்று முக்கிய கருத்திட்டங்களுக்கு லிபியாவின் பங்களிப்பாகுமென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவை லிபியா, சேர்ட்டியிலுள்ள ஆபிரிக்க முதலீட்டு வங்கி, யாவோன்டேயில் 42 பில்லியன் அமெரிக்க டாலர் மூலதன நிதியுடன் 2011இல் தாபிக்கப்படவிருந்த ஆபிரிக்க நாணய நிதியம் மற்றும் நைஜீரியா, அபூஜாவிலுள்ள ஆபிரிக்க மத்திய வங்கி என்பவையாகும். ஆபிரிக்க மத்திய வங்கி ஆபிரிக்க நாணயத்தை அச்சிடத் தொடங்கும்போது அது பாரிஸ் கடந்த 50 வருட காலமாகச் சில ஆபிரிக்க தேசங்கள்மீது தனது பிடியைப் பேணுவதற்கு உதவிகரமாகவிருந்த Colonies françaises d’Afrique FRANC பிராங் மீது விழும் மரண அடியாகவிருக்கும். இதிலிருந்து கடாபிமீது பிரான்சுக்குள்ள கோபத்தைப் புரிந்துகொள்வது இலகுவானதாகும்.
    சர்வதேச நாணய நிதியம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்தொகையை மாத்திரம் வைத்துக்கொண்டு ஒரு முழுக் கண்டத்தை முழந்தாழிட வைத்துள்ளது. அது ஆபிரிக்க தேசங்களை அரச ஏகபோக நிறுவனங்களைத் தனியார் ஏகபோக நிறுவனங்களாக மாற்றுவதுபோன்ற கேள்விக்கிடமான தனியார்மயமாக்கல்களுக்குச் சம்மதிக்க வைத்துள்ளது. ஆகவே, 2010 டிசம்பர் 16–17இல் ஆபிரிக்க நாடுகள் மேற்குலக நாடுகள் ஆபிரிக்க நாணய நிதியத்தில் இணைந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏகமனதாக எதிர்ப்புத் தெரிவித்தமை ஆச்சரியமூட்டுவதன்று. அந்த உரிமை ஆபிரிக்கத் தேசங்களுக்கு மாத்திரமே உரியதென்று அவை கூறிவிட்டன.
    லிபியாவுக்குப் பின்னர் மேற்குலகக் கூட்டணி அல்ஜீரியாவை ஆக்கிரமிக்குமென்பது இப்பொழுது அதிகரித்தவகையில் பிரத்தியட்சமாகவுள்ளது. ஏனெனில் அந்த நாடு தனது பாரிய சக்தி மூலவளங்களுக்கு மேலதிகமாக, சுமார் 150 பில்லியன் யுரோ பண ஒதுக்கீடுகளையும் கொண்டுள்ளது. லிபியாமீது குண்டுவீச்சுத் தாக்குதல்களை மேற்கொள்ளும் நாடுகளைக் கவர்ந்திழுப்பது இதுவேயாகும். அவையனைத்துக்கும் பொதுவான ஒரு விடயமுள்ளது. அவையனைத்துமே நடைமுறையில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளன. அமெரிக்கா மாத்திரம் ஒருவரைத் திகைக்கவைக்கும் 14,000 பில்லியன் அமெரிக்க டாலர் கடனில் மூழ்கியுள்ளது. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஒவ்வொன்றும் 2,000 பில்லியன் அமெரிக்க டாலர் வரவு-செலவுப் பற்றாக்குறையில் சிக்கியுள்ளன. இவற்றுடன் ஒப்பீடாக 45 ஆபிரிக்க நாடுகளின் ஒட்டுமொத்தப் பொதுக்கடன் 400 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் குறைவானதாகும்.
    மூழ்கிக்கொண்டிருக்கும் தமது பொருளாதாரங்களுக்குப் புத்துயிரளிக்குமென்ற நோக்கில் ஆபிரிக்காவில் சந்தேகத்துக்கிடமான யுத்தங்களைத் தூண்டிவிடுவது, 1994இல் இடம்பெற்ற கேவலமான பேர்லின் மாநாட்டில் ஆரம்பித்த மேற்குலக நாடுகளின் வீழ்ச்சியை இறுதியில் மேலும் துரிதப்படுத்தவே உதவும். 1865இல் அமெரிக்கப் பொருளியலாளர் ஆடம் ஸ்மித் அடிமை முறையை ஒழிப்பதற்கு ஆபிரகாம் லிங்கனுக்கு வெளிப்படையாகவே ஆதரவளித்தவேளையில் முன்னறிவித்ததுபோன்று, ‘கறுப்பின மக்களின் அடிமை முறையில் தங்கியிருக்கும் எந்த நாட்டினதும் பொருளாதாரம், அந்த நாடுகள் விழித்தெழும்போது நரகத்தில் வீழ்ச்சியடைவது உறுதியாகும்’.

    ஆபிரிக்க ஐக்கிய இராச்சியமொன்றை உருவாக்குவதில் தடையாக விளங்கும் பிராந்திய ஐக்கியம்
    (மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரையில்) மிகவும் அபாயகரமானமுறையில் கடாபியின் வழிகாட்டலின்கீழ் ஓர் ஆபிரிக்க ஐக்கிய இராச்சியத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் ஆபிரிக்க யூனியனின் ஸ்திர நிலையைக் குலைத்து, அதை அழிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முதலில் மத்தியதரை (மெடிற்றரேனியன்) யூனியன் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதிலும், அது வெற்றியளிக்கவில்லை. வட ஆபிரிக்காவை எந்த வழியிலேனும் ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளிலிருந்து பிரிக்கவேண்டியிருந்தது. இதற்கு அரபு வம்சாவளி ஆபிரிக்கர்கள் ஏனைய ஆபிரிக்கர்களைவிடப் பரிணாம வளர்ச்சியிலும், நாகரிகத்திலும் உயர்ந்தவர்களென்று தெரிவிக்கும் பழைய, 18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளின் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டன. கடாபி இதை நிராகரித்தமையால் இது தோல்விகண்டது. மெடிற்றரேனியன் குழுவில் இணைந்துகொள்வதற்கு ஆபிரிக்க யூனியனுக்கு அறிவிக்காதநிலையில் ஒருசில ஆபிரிக்கத் தேசங்களே அழைக்கப்பட்டிருந்ததாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சகல 27 தேசங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாலும் எத்தகைய விளையாட்டு இடம்பெறுகின்றது என்பதை அவர் புரிந்துகொண்டார்.
    ஆபிரிக்க சம்மேளனத்தை முன்னேசெலுத்தும் சக்தி இல்லாதநிலையில் மெடிற்றரேனியன்) யூனியன் ஆரம்பிக்கு முன்னரே தோல்வியைத் தழுவியது. பிரான்சின் ஜனாதிபதி சார்க்கோஸியைத் தலைவராகவும், எகிப்தின் ஜனாதிபதி முபாரக்கை உப-தலைவராகவும் ஏற்றநிலையில் அது குறைப்பிரசவமானது. பிரான்சின் வெளிநாட்டமைச்சர் அலெயின் ஜுப்பே, கடாபி வீழ்ந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இந்த யோசனையை மீண்டும் முன்னெடுக்க முயற்சிக்கின்றார். ஆபிரிக்க யூனியனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியளிப்பது தொடரும்வரையில் தற்போதுள்ள நிலையே தொடரும் என்பதையும், உண்மையான சுதந்திரம் இருக்காது என்பதையும் ஆபிரிக்கத் தலைவர்கள் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர். இதனாலேயே ஐரோப்பிய ஒன்றியம் ஆபிரிக்காவில் பிராந்தியக் குழுக்களுக்கு ஊக்குவிப்பும், நிதியளிப்பும் வழங்கிவருகின்றது.
    பிரசல்ஸில் ஒரு தூதரகத்தைக் கொண்டுள்ளதும், நிதியளிப்புக்குப் பெருமளவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கிநிற்பதுமான மேற்கு ஆபிரிக்க பொருளாதார சமூகம் ஆபிரிக்க சமஷ்டி அமைப்பை எதிர்த்துக் குரல் கொடுப்பது பிரத்தியட்சமானதாகும். இத்தகைய ஒரு காரணத்துக்காகவே ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கப் பிரிவினை யுத்தத்தில் போராடினார். ஒரு குழுவான நாடுகள் ஒரு பிராந்திய அரசியல் அமைப்பினுள் ஒன்றுசேர்ந்ததும், அது பிரதான குழுவைப் பலவீனப்படுத்துவதே இதற்கான காரணமாகும். இதையே ஐரோப்பாவும் விரும்பியது. போன்ற பெரும் எண்ணிக்கையிலான COMESA, UDEAC, SADC பிராந்தியக் கூட்டுகளை உருவாக்கும் ஆபிரிக்கர்கள் இந்தத் திட்டத்தை ஒருபோதும் அறிந்துகொள்ளவில்லை. பாரிய வட ஆபிரிக்க கூட்டு என்பது கடாபியின் மதிநுட்பத்தால் தோற்றம்பெறவேயில்லை.

    ஆபிரிக்கக் கண்டத்தை நிறபேதம் என்னும் அவமானத்திலிருந்து விடுதலைசெய்த கடாபி என்னும் ஆபிரிக்கர்
    பல ஆபிரிக்கர்களைப் பொறுத்தவரையில் கடாபி ஒரு தயாள சிந்தையும், மனிதாபிமானமும் உள்ள, தென்னாபிரிக்க இனவெறி ஆட்சிக்குழுவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னலம்பாராது ஆதரவு வழங்கிய ஒருவராவார். அவர் ஒரு சுயநலவாதியாக இருந்திருப்பின் நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸுக்கு இராணுவரீதியாகவும், நிதியியல்ரீதியாகவும் உதவிசெய்து மேற்குலகத்தின் கோபம் என்னும் இடர்வரவை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். இதனால்தான் நெல்சன் மன்டேலா தனது 27 வருடகாலச் சிறைவாழ்க்கையிலிருந்து விடுதலையடைந்ததும், 1997 அக்டோபர் 23ஆந் திகதி ஐ.நா. தடையையும் மீறி லிபியாவுக்குப் பயணஞ்செய்யத் தீர்மானித்தார். இத்தடை காரணமாக 5 வருடகாலமாக எந்த விமானமும் லிபியாவில் தரையிறங்க முடியவில்லை. ஒருவர் டுனீசிய நகரமாகிய ஜெர்பாவுக்குப் பயணஞ்செய்து, வீதியால் 5 மணித்தியாலங்கள் பிரயாணம்செய்து, பென் கார்டெனுக்குச் சென்று, எல்லையைக் கடந்து பாலைவன வீதியில் 3 மணித்தியாலங்கள் பிரயாணம்செய்து திரிப்பொலியை அடைதல் வேண்டும். இன்னுமொரு வழி மோல்ட்டாவினூடாகச் சென்று, மோசமான படகுகளில் இரவில் பாதைச் சேவையில் லிபியன் கரையை அண்மிக்கவேண்டும்.
    முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் இந்த விஜயம் ‘வரவேற்கத்தக்க ஒன்றல்ல’ என்று கூறியபோது, மன்டேலா அதற்குத் தக்க பதிலை வழங்கினார்.’எந்த நாடுமே தான் உலகின் பொலீஸ்காரன் என்று கூறுவதற்கு உரிமை கிடையாது. ஓர் அரசு என்ன செய்யவேண்டுமென்று கூறும் உரிமையும் இன்னுமோர் அரசுக்குக் கிடையாது’. மேலும் அவர், ‘நேற்று எமது எதிரிகளின் நண்பர்களாக இருந்தவர்கள் இன்று துணிவுடன் நான் எனது சகோதரன் கடாபியைப் போய்ப் பார்க்கக்கூடாதென்று சொல்லுகின்றனர். எம்மை நன்றியற்றவர்களாகவும், எமது கடந்தகால நண்பர்களை மறந்தவர்களாகவும் இருக்குமாறு புத்திமதி கூறுகின்றனர்’ என்று கூறினார்.
    உண்மையில், மேற்குலகம் இன்னமும் தென்னாபிரிக்க இனவெறியர்களைப் பாதுகாக்கப் படவேண்டிய தனது சகோதரர்களாகவே எண்ணுகின்றது. இதனால்தான் நெல்சன் மன்டேலா உள்ளிட்டவகையில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் அங்கத்தவர்கள் ஆபத்தான பயங்கரவாதிகள் என்று கருதப்பட்டனர்.
    2008 ஜுலை 02ஆந் திகதியே அமெரிக்க காங்கிரஸ் நெல்சன் மன்டேலாவினதும், அவரது ANC தோழர்களினதும் பெயர்களைக் கறுப்பு நிரலிலிருந்து அகற்றும் சட்டத்துக்கு வாக்களித்தது. இது இந்த நிரலின் முட்டாள்தனத்தை உணர்ந்தமையால் அல்லாது, மன்டேலாவின் 90வது பிறந்த தினத்தை நினைவுகூரும்வகையிலேயே செய்யப்பட்டது. கடந்தகாலத்தில் மன்டேலாவின் எதிரிகளுக்கு ஆதரவளித்தமைகுறித்து மேற்குலகம் உண்மையில் வருந்தினால், அவரின் பெயரைத் தெருக்களுக்கும், இடங்களுக்கும் நேர்மையாக வழங்குவதாகவிருந்தால், மன்டேலாவும் அவரின் மக்களும் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு உதவிய கடாபிமீது தொடர்ச்சியாகப் போர் புரிவது எவ்வாறு?

    ஜனநாயகத்தை ஏற்றுமதிசெய்ய விரும்புவோர் உண்மையில் ஜனநாயகவாதிகளா?
    அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் லிபியாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்தப் போர் புரியும் ஏனைய தேசங்களைவிட கடாபியின் லிபியாவில் கூடுதலான ஜனநாயகம் நிலவினால் என்ன? ஈராக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் சாட்டில் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் 2003 மார்ச் 19இல் அந்த நாட்டில் விமானக் குண்டுவீச்சை ஆரம்பித்தார். 2011 மார்ச் 19ஆந் திகதி பிரான்ஸ், சரியாக எட்டு வருடங்கள் கழிந்தநிலையில், லிபியாவில் குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இது இடம்பெறுகின்றதென்று மீண்டும் கூறப்படுகின்றது. நோபல் சமாதானப் பரிசை வென்ற அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சர்வாதிகாரியை அகற்றி, ஜனநாயகத்தை நிலைநாட்டவே நீர்மூழ்கிகளிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றார்.
    அதிகுறைவான விவேகமுள்ள ஒருவர்கூட பின்வரும் வினாக்களை எழுப்பாமல் இருக்க முடியாது. தமது ஜனநாயக அந்தஸ்துகுறித்துப் பேசிக்கொண்டு, லிபியாமீது குண்டு வீசத் தமக்கு உரிமையுண்டென்று தெரிவிக்கும் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, நோர்வே, டென்மார்க் மற்றும் போலந்து என்பவை உண்மையில் ஜனநாயக நாடுகளா? ஆம் எனில், அவை கடாபியின் லிபியாவைவிடக் கூடுதலான ஜனநாயகத்தன்மை கொண்டவையா? உண்மையில் இதற்கான பதில் உரத்து ஒலிக்கவில்லை என்பதாகும். இதற்கான எளிமையான, வெளிப்படையான காரணம் ஜனநாயகம் இல்லை என்பதாகும். பிரபலமான ‘சமூக ஒப்பந்தம்’ என்னும் நூலின் மூன்றாவது ஏட்டின் 4ஆம் அத்தியாயத்தில் ‘ஓர் உண்மையான ஜனநாயகம் என்றும் இருந்ததில்லை; இருக்கப் போவதுமில்லை’ என்று எழுதியவரும், 1712இல் ஜெனீவாவில் பிறந்தவருமான ஜீன் ஜேக்குவிஸ் ரூசோ ஒரு தேசம் ஜனநாயகமென்று பெயரிடப்படவேண்டுமெனில், பின்வரும் நான்கு நிபந்தனைகள் இருக்கவேண்டுமென்று தெரிவிக்கின்றார். இவற்றின் பிரகாரம் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜனநாயத்தை ஏற்றுமதிசெய்வதாகக் கூறும் ஏனைய நாடுகளைவிடக் கடாபியின் லிபியா கூடுதலான ஜனநாயகத் தன்மையைக் கொண்டதாகும்.
    நாடொன்று பெரிதாக இருக்கும்போது அதன் ஜனநாயகத்தன்மை குறைவாகவிருக்கலாம். ரூசோ கூறுவதன் பிரகாரம் அரசு மிகவும் சிறியதாக இருந்தால் மாத்திரமே மக்கள் ஒன்றிணைந்து, ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ள முடியும். மக்களை வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்வதற்கு முன்னராக, ஒவ்வொருவரும் ஏனைய ஒவ்வொருவர் குறித்தும் நன்கு அறிந்திருப்பதை உறுதிசெய்தல் வேண்டும். இல்லையெனில், வாக்களிப்புக்கு எவ்வித ஜனநாயக அடிப்படையும் இருக்கமாட்டாது. அது ஒரு சர்வாதிகாரியைத் தெரிவுசெய்யும் ஜனநாயகத்தின் போலித் தோற்றமாகவே அமையும்.
    லிபிய அரசு ஒரு பழங்குடிகள் கூட்டிணைவு முறைமை அடிப்படையில் அமைந்ததாகும். அது அதன் வரைவிலக்கணத்தின் பிரகாரம் மக்களைச் சிறிய தனியமைப்புகளாகக் குழுநிலைப்படுத்துகின்றது. ஒரு குல மரபுக்குழு அல்லது ஒரு கிராமம் ஒரு தேசத்தைவிடக் கூடுதலான ஜனநாயக உணர்வைக் கொண்டதாகும். இதற்கான மிக எளிமையான காரணம் மக்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருப்பதும், அங்கத்தவர்களின் தாக்கங்களும், பிரதித் தாக்கங்களும் குழுமீது விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவகையில் ஒருவகையான சுய-பிரமாணப்படுத்தலையும், சுய-தணிக்கையையும் கொண்டிருக்கும் ஒரு பொதுவான வாழ்க்கை ஒத்திசைவு நயத்தைப் பகிர்ந்துகொள்வதுமாகும்.
    இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, லிபியா அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைவிடக் கூடுதலாக ரூசோவின் நிபந்தனைகளுடன் பொருந்தியமைவது கண்கூடாகும். இச்சமூகங்கள் அனைத்தும் பெருமளவுக்கு நகர்மயப்படுத்தப்பட்டவை என்பதோடு, அனேகமான அயலவர்கள் இருபது வருட காலம் அருகருகே வசித்தபோதிலும் ஒருவரையொருவர் அறியாதவர்களாக, பேசாதவர்களாக உள்ளனர் என்பதே யதார்த்த நிலையாகும். இந்த நாடுகள் ‘வாக்கு’ எனப்படும் அடுத்த படிநிலைக்குப் பாய்ந்து வந்தவையாகும். வாக்கு என்பது புனிதநிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாக்காளர் ஏனைய பிரஜைகளை அறிந்திராவிடில், நாட்டின் எதிர்காலம்குறித்து வாக்களிப்பதில் புண்ணியமில்லையென்ற விடயம் தெளிவாக மழுங்கடிக்கப்பட்டுள்ளது. இது வெளிநாடுகளில் வசிப்போருக்கும் வாக்குரிமை வழங்குமளவுக்கு எள்ளிநகையாடும் அளவுக்குச் சென்றுள்ளது. தேர்தலொன்றுக்கு முன்னர் இடம்பெறும் எந்த ஜனநாயக விவாதத்துக்கும் ஒருவரோடொருவரும், ஒவ்வொருவரிடையிலும் தொடர்பாடல் என்பது ஒரு முக்கியமான முன்நிபந்தனையாகும்.
    ஒரு பெரிய, சிக்கலான சமூகத்தில் தவிர்க்கமுடியாதவாறு எழக்கூடிய ஆயிரக்கணக்கான நலன் முரண்பாடுகளைக் கையாளும்வகையில் எழக்கூடிய சட்ட மற்றும் நீதிசார் நடவடிக்கைமுறைகளை விவாதிப்பதற்குச் செலவழிக்கவேண்டிய பெருமளவிலான நேரத்தைச் சேமிக்கவேண்டுமாயின், வழங்கங்கள் மற்றும் நடத்தைப் பாங்குகளில் எளிமை அவசியமாகும். மேற்குலக நாடுகள் தம்மை மேலும் சிக்கலான சமூகக் கட்டமைப்பைக்கொண்ட நாகரிகமடைந்த தேசங்களென்று அழைத்துக் கொள்ளுகின்றன. அதேவேளையில் லிபியா ஓர் எளிமையான வழக்கங்கள் தொகுதியைக் கொண்ட, நாகரிக முதிர்ச்சியற்ற பழங்காலச் சமூகமாகக் கருதப்படுகின்றது. இந்த அம்சம்கூட லிபியா ஜனநாயகத்தில் பாடம் வழங்க முயலும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மேலும் சிறந்தமுறையில் ரூசோவின் ஜனநாயகம்குறித்த அளவுகோல்களுடன் பொருந்தியமைகின்றது என்பதைக் காட்டுகின்றது. சிக்கலான சமூகங்களில் எழும் முரண்பாடுகளில் அனேகமான சந்தர்ப்பங்களில் அதிகார வலுக்கொண்டவர்களே வெற்றியடைகின்றனர். இதனாலேயே பணக்காரர்கள் சிறைவாசத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கு மிகச்சிறந்த வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்ளுகின்றனர். வங்கியொன்றை நாசமாக்கிய நிதியியல் குற்றவாளியொருவர் தப்பிச்செல்வதற்கும், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வாழைப்பழமொன்றைத் திருடியவர்மீது அரச அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, நியூயோர்க் நகரத்தின் ஜனத்தொகையில் 75%ஆனோர் வெள்ளையினத்தோராவர். 80%ஆன முகாமைத்துவப் பதவிகளில் அவர்களே உள்ளனர். ஆயினும் சிறைகளிலுள்ளவர்களில் 20%ஆனோர் மாத்திரமே வெள்ளையர்களாகவுள்ளனர்.
    அந்தஸ்திலும், செல்வத்திலும் சமத்துவம்: போர்ப்ஸ் 2010 நிரல் தற்போது லிபியாவில் குண்டுவீசிக்கொண்டிருக்கும் நாடுகளின் மிகவும் பணக்காரப் புள்ளிகள் யாரென்பதைக் காட்டுகின்றத அவர்களுக்கும் அந்தத் தேசங்களில் அதிகுறைவான சம்பளம் பெறுவோருக்குமிடையிலான வேறுபாட்டையும் காண்பிக்கின்றது. லிபியா விடயத்தில் இத்தகைய ஒரு செயற்பாடு இடம்பெற்றால் செல்வம் பகிரப்படும் நியதிகளைப்பொறுத்தவரையில் அதனோடு இப்போது சண்டையிடும் நாடுகளைவிடக் கூடுதலான பாடங்களை அது கற்பிக்கக்கூடியதாகவிருக்கும் நிச்சயம் அதற்கெதிராகவிருக்காது. ஆகவே, இங்குகூட, ரூசோவின் அளவுகோல்களை உபயோகிக்கும்போது, ஜனநாயகத்தைக் கொண்டுவருவதாகப் பீற்றிக்கொள்ளும் நாடுகளைவிட லிபியா கூடுதலான அளவுக்கு ஜனநாயகத்தைக் கொண்டதாகும்.
    ஆடம்பரப் பொருட்கள் இருத்தலாகாது: ரூசோ கூறுவதன் பிரகாரம் ஜனநாயகம் இருக்கவேண்டுமாயின் ஆடம்பரப் பொருட்கள் இருத்தலாகாது. ‘சுகபோகப் பொருட்கள் செல்வத்தை அவசியப்படுத்துகின்றன. இதனால் செல்வம் தன்னளவிலேயே ஒரு தகுதியாகின்றது. இதனால் மக்களின் நலன் என்பது என்ன விலை கொடுத்தும் வாங்க வேண்டிய ஒரு விடயம் அல்லவென்னும் நிலை ஏற்படுகின்றது. ஆடம்பரப் பொருட்கள் செல்வந்;தர்களையும், ஏழைகளையும் ஊழல் நிலைக்குத் தள்ளிக் கெடுக்கின்றன. செல்வந்தர்கள் ஆடம்பரப் பொருட்களை வைத்திருப்பதாலும், ஏழைகள் பொறாமையாலும் கெட்டுப்போகின்றனர். அது தேசத்தின் வலிமையைக் குறைக்கின்றது. வீண் டம்ப உணர்வுக்கு அடிமையாக்குகின்றது. அது மக்களை அரசிலிருந்து தொலைவுக்குத் தள்ளி, அவர்களை அடிமையாக்குகின்றது. அவர்கள் அபிப்பிராயங்களின் அடிமைகளாகின்றனர்’ என்று அவர் கூறுகின்றார்.
    லிபியாவைவிட பிரான்சில் அதிக ஆடம்பர வாழ்க்கை உள்ளதா? அரசாங்க மற்றும் பகுதி அரசாங்கக் கம்பனிகளில் ஒரு சிறுபான்மையினரின் ஆடம்பர வாழ்வுக்காக, இலாபங்களை அதியுயர்வாக்குதல் என்ற பெயரில், மனப்பதற்றம் ஏற்படுத்தும் மோசமான வேலை நிலைமைகள் காரணமாக ஊழியர்கள் தற்கொலைசெய்யும் அறிக்கைகள் மேற்குலக நாடுகளில் வெளிவருகின்றன. இவை லிபியாவில் இடம்பெறுவதில்லை.
    அமெரிக்க ஜனநாயகம் சலுகைபெற்ற ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரமென்று, 1956இல் அமெரிக்கச் சமூகவியலாளர் சி. ரைட் மில்ஸ் எழுதினார். அவர் கூறுவதன் பிரகாரம், தேர்தல்களின்போது மக்கள் பேசாமல், பணமே பேசுவதால் அமெரிக்கா ஒரு ஜனநாயகம் அல்ல. ஒவ்வொரு தேர்தல் முடிவும் பணத்தின் குரலின் வெளிப்பாடாகும். அது மக்களின் குரல் அல்ல. அரசியல் அதிகாரம் அதிகாரித்துவவாதத்தில் தங்கிநிற்பதால், அமெரிக்காவில் 43 மில்லியன் அதிகாரத்துவவாதிகளும், இராணுவ ஆளணியினரும் உள்ளனர். இவர்களே நாட்டை ஆளுகின்றனர். இவர்கள் தெரிவுசெய்யப்படுவதுமில்லை, தங்கள் செயற்பாடுகள்குறித்து மக்களுக்கு வகைப்பொறுப்புக்கூறுவதுமில்லை. ஒருவர் தெரிவு செய்யப்படுகின்றார். ஆயினும், உண்மையான அதிகாரம் தூதுவர்களாகவும், ஜெனரல்களாகவும் பின்னர் பெயர்குறிக்கப்படும் செல்வந்தர் கூட்டத்திடமே உள்ளது.
    தாம் ஜனநாயகத் தேசங்களென்று சுய-விளம்பரம் செய்துகொள்ளும் இந்த நாடுகளிலுள்ள எத்தனைபேர் பெரு நாட்டில் ஒருவர் இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகப் பணிப்பாணை கேட்பதை அரசியலமைப்புத் தடைசெய்வதை அறிந்துள்ளனர்? கௌதமாலாவில் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அப்பதவிக்குப் போட்டியிடமுடியாது என்பதோடு, அவரின் குடும்பத்தைச்சேர்ந்த எவருமே அப்பதவிக்குப் போட்டியிடமுடியாது என்பதையும் எத்தனைபேர் அறிந்துள்ளனர்? ருவாண்டாவே பாராளுமன்றத்தில் 56% பெண் உறுப்பினர்களைக்கொண்ட உலகின் ஒரேயொரு தேசம் என்பதை எத்தனைபேர் அறிவார்கள்? உலகில் மிகச்சிறப்பான ஆட்சிமுறை நிலவும் 4 நாடுகள் ஆபிரிக்காவிலேயே உள்ளனவென்பதை எத்தனைபேர் அறிவார்கள்? ஈக்குவடோரியல் கினி பொதுக்கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.14 வீதமாகவே உள்ள நாடென்றவகையில் மிகவும் உயர்வான இடத்திலிருப்பதை எத்தனைபேர் அறிவார்கள்?
    சிவில் யுத்தங்களும், கிளர்ச்சிகளும், கலகங்களும் ஜனநாயகத்தின் ஆரம்பத்தின் ஆக்கப் பொருட்களாகுமென்று ரூசோ தெரிவிக்கின்றார். ஜனநாயகமென்பது தன்னளவில் ஒரு முடிவல்ல; மாறாக அது உலகம் முழுவதிலும் (எவ்வித விதிவிலக்குமின்றி) உள்ள நாடுகளில் மனிதர்களின் உரிமைகளை மீண்டும் வலியுறுத்தும் ஒரு நிரந்தரமான செயல்முறையாகும். இந்த நாடுகளில் மனிதர்களின் உரிமைகள், மக்களின் அதிகாரத்தைத் திருடியுள்ள ஒருசில ஆண்களாலும், பெண்களாலும் தமது மேலாதிக்கத்தை நீடிப்பதற்காகக் காலின்கீழ் போட்டு மிதிக்கப்படுகின்றன. ‘ஜனநாயகம்’ என்னும் பதத்தை அபகரித்துக்கொண்ட சில குழுக்கள் அங்குமிங்குமாகக் காணப்படுகின்றன. ஒருவர் ஈட்டிக்கொள்ளவேண்டிய இலட்சியத்தைக் குறிப்பதற்குப் பதிலாக, அது அபகரித்துக்கொள்ளப்படவேண்டிய ஒரு வியாபாரப் பெயராக அல்லது, ஏனையோரைவிட உரத்த குரலில் சத்தமிடக்கூடியவர்கள் பயன்படுத்தும் ஒரு சுலோகமாக மாறியுள்ளது. பிரான்ஸ் அல்லது அமெரிக்கா போன்று ஒரு தேசம் அமைதியாகக் காணப்பட்டால், அதாவது கலகங்கள் எதுவுமற்றநிலையில் காணப்பட்டால், ரூசோவின் கண்ணோட்டத்தில் அதன் கருத்து, சர்வாதிகார முறைமை ஏதாவது எதிர்ப்பு நடவடிக்கையை முன்கூட்டியே இல்லாமற்செய்யும்வகையில் போதிய அளவுக்கு அடக்குமுறை நிறைந்ததாகவுள்ளது என்பதேயாகும்.
    லிபிய மக்கள் கலகம் செய்தால் அது ஒரு மோசமான விடயமல்ல. உலகம் முழுவதும் மக்கள் தம்மை அடக்கியொடுக்கும் ஒரு முறைமையை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுகின்றனர் என்று தெரிவிப்பதே மோசமான விடயமாகும். ரூசோ பின்வருமாறு விடயங்களை நிறைவுசெய்கின்றார்: ‘கடவுளர் மனிதர்களாகவிருப்பின், அவர்கள் தம்மை ஜனநாயகமுறையில் ஆட்சிசெய்துகொள்வர். அத்தகைய பரிபூரணமான அரசாங்கமொன்று மனிதர்கள் விடயத்தில் பிரயோகப் பொருத்தமற்றதாகும்.’ லிபியர்களை அவர்களின் சொந்த நன்மைக்காகவே கொல்லுகின்றோம் என்று கூறுவது பெரும் ஏமாற்று வித்தையாகும்.
    - நல்லையா தயாபரன்

    Nalliah Thayabharan

    May 19, 2011 at 11:59 pm

  2. அண்மையில் நோர்வேயில் நடந்த குண்டுவெடிப்பும் படுகொலையும் ஐரோப்பாவை மட்டுமல்ல முழு உலகத்தையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன. அல்கைதா தான் இந்த உலகின் ஒரே பயங்கரவாதிகள் என்ற மேற்கத்திய ஊடகங்கள் இதுவரை பரப்பி வந்த பூச்சாண்டிக் கதைகளை இது தகர்த்துள்ளது. தமது சொந்த மக்களைச் சுரண்டவும், மூன்றாம் உலக நாடுகளை சூறையாடவும் திரைமறைவில் நிறவெறியைக் கக்கி, இஸ்லாமிய எதிர்ப்பை முன்னிறுத்தித்தான் மேற்குலகில் தேர்தலில் வென்று ஆட்சி நடாத்துகின்றார்கள். .
    நோர்வேயில் குண்டுவெடிப்பும் படுகொலையும் நடந்தவுடன், இஸ்லாமிய பயங்கரவாதம்தான் அதற்கு காரணம் என மேற்குலக கிறிஸ்தவ ஊடகங்கள் செய்திகள் பரப்பின. படுகொலைகளை நடாத்திய பயங்கரவாதி பிடிபட்டபின் இந்தப் பயங்கரவாதியை உருவாக்கியது மேற்கத்திய ஆட்சியாளர்கள்தான் என்ற உண்மையை மூடிமறைத்து இந்தப் பயங்கரவாதத்தை தூண்டியதற்கு தாங்கள் பாத்திரவாளிகள் அல்ல என்று நம்பவைப்பதற்காக தற்போது இதனை தனிப்பட்ட ஒருவரின் கொடூரமான செயலாக, வழிதவறிய மந்தையின் செயலாக, மேற்கத்திய கிறிஸ்தவ ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. படுகொலைகளை நடாத்திய பயங்கரவாதி ஒரு மனநோயாளியாக இருக்கலாம் என்று கூட இந்த மேற்கத்திய கிறிஸ்தவ ஊடகங்கள் ஊகங்களை வெளியிடுகின்றன.
    நல்லையா தயாபரன்

    Nalliah Thayabharan

    July 24, 2011 at 5:40 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers