Lankamuslim.org

One World One Ummah

யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமும் பாகம்-1

with 5 comments

M. ஷாமில் முஹம்மட்

இலங்கையின் வட பகுதியின் ஐந்து மாவட்டங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் வட பகுதியின் தலை நகரான யாழ்ப்பாணத்திலும் முஸ்லிம்கள் நுற்றாண்டு காலமாக வாழ்ந்த்து வந்தார்கள் , இவர்கள் வட மாகாணதின் பூர்விக குடிகள் 7 இம் நுற்றாண்டின் பின் பகுதிலும் 8 இம் நுற்றாண்டின் ஆரம்ப பகுதியிலும் இஸ்லாம் இலங்கைக்கு அறிமுகமானது இந்த கால பகுதியில் தமிழ் பேசும் இந்துகளும் ஏற்கனவே யாழ்ப்பாணத்துடன் வியாபார தொடர்பில் இருந்த அரபியரும் இஸ்லாத்தை ஏற்றுகொண்டு யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை தொடங்கிவைத்துள்ளனர்.

வட மாகாண முஸ்லிம்களின் வரலாறும் இப்படி ஆரம்பமாகிறது வட மாகாண முஸ்லிம்களின் வரலாறும் ஆரம்பமாகிறது வட மாகாணத்தின் தலை நகராக கருதப்படும் யாழப்பாணத்தில் முஸ்லிம்கள் ஆரம்ப காலத்தில் மிகவும் செல்வாக்குடன் வாழ்ந்ததுடன் இந்துக்களுடன் சுமுகமான உறவு காணபட்டது வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு வாழ்ந்த்து வந்தனர் என்று குறிபிடலாம் 1981 இல் யாழ்ப்பாணத்தில் இறுதியாக எடுக்கப்பட்ட மக்கட்தொகைக் (சனத்தொகைக்) கணக்கெடுப்பின்படி, யாழ் நகரின் சனத்தொகை 118,000 ஆக இருந்தது. இதில் 10 விதமானவர்கள் முஸ்லிம்கள் என்பது குறிபிடத்தக்கது விரிவாக

யாழ்ப்பாண வரலாற்றை வசதி கருதிப் பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கலாம். ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு முற்பட்டகாலம். (கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்), ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (கி.பி 12 ஆம் நூஆ – கி.பி 1620) ,குடியேற்றவாத ஆட்சிக் காலம் (கி.பி 1620 – கி.பி 1948) குடியேற்றவாத ஆட்சிகளுக்குப் பிற்பட்ட காலம். ( கி.பி 1948 க்குப் பின்) இங்கு யாழ்ப்பாணத்தின், 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றை அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்றுவரை மிக அரிதாகவே காணப்படுகின்றன. அதிலும் முஸ்லிம்கள் பற்றிய ஆய்வுகள் ஒரு முறையான வடிவில் மேட் கொள்ள பட வேண்டிய நிலையில் இலங்கை முழுவதும் இருப்பதை போன்று யாழ்ப்பாணதிலும் எந்த தொடக்கமும் இன்றி இருக்கிறது பொதுவாக, ஒரு நாட்டின் அல்லது ஒரு ஊரின் , வரலாற்றை வெளிப்படுத்துவனவான, இலக்கியச் சான்றுகள், தொல்லியல் சான்றுகள், வாய்மொழிச் சான்றுகள் முதலியவை இங்கு (கி.பி 12 ஆம் நூஆ – கி.பி 1620) இக்கு முற்பட்ட காலத்துக்குரிய போதிய அளவு இல்லை. என்பது குறித்து கொள்ள வேண்டிய விடையம்

பதின் மூன்றாம் நுற்றாண்டின் யாழ்ப்பாண அரசு பற்றி குறிபிடும் இப்னு பதுதா யாழ்ப்பாண அரசு இரண்டு பிரதான நகரங்களை கொண்டு காணபட்டது ஒன்று நல்லூர் மற்றது புத்தளம் என்றும் இங்கு சர்வதேச வியாபாரம் பிரதானமாக காணபட்டது இவற்றில் முஸ்லிம்கள் செல்வா க்குடன் இருந்தார்கள் என்று குறிபிடுகிறார்.

1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் போத்துக்கீசர் வசம் செல்லும் வரையில், அதன் தலைநகரம் என்ற வகையில் நல்லூரே இப்பகுதியில் பிரதான நகரமாக இருந்தது இங்கு முஸ்லிம்கள் பிரதான வியாபாரிகளாக இருந்தனர் அக்காலத்தில் இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் கொழும்புத்துறையில் ஒரு முஸ்லிம் வணிகர்களின் இறங்கு துறையும், போத்துக்கீசரின் மற்றும் ஒல்லாந்தர் கோட்டை இருக்கும் இடத்தில் முஸ்லிம் வணிகர்களின் மற்றுமொரு இறங்குதுறையும், பண்டகசாலைகளும், குடியிருப்புக்களும் இருந்தன போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தை தம் வசபடுத்தி . 1590 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாண அரசனைக் கொன்று அவ்விடத்தில் இன்னொரு அரசனை நியமித்த பின்னர் அவர்களது செல்வாக்கு, அதிகரித்தது.

மேலாதிக்க வெறியுடன் கொல்லை இட்டு தேசங்கள் சுற்றிய போத்துக்கீசரின் வருகையுடன் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் கையில் இருந்த சர்வதேச வர்த்தகம் பலாத்காரமாக பிடுங்கபட்டது ஐரோப்பிய ஆக்கிரமிப்பு படை முஸ்லிம்கள் மீது இலங்கை முழுவதும் கொடுரமான தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம்களை சொத்துகளை கொல்லை இட்டது முஸ்லிம் ஆண்களை கொலை செய்து முஸ்லிம் பெண்களையும் சிறுவர்களையும் அடிமையாக கொழும்புக்கு விலங்கிட்டு இழுத்து சென்றது முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகளில் வரலாற்றில் பதியப்பட்ட 1640 “மாத்தறை முஸ்லிம் படுகொலை” குறிபிடத் தக்கது.

வரலாற்று பதிவின் படி மாத்தறை முஸ்லிம் படுகொலையில் போது நுற்றுகணக்கான முஸ்லிம்கள் கொலை செய்ய பட்டார்கள் முஸ்லிம் பெண்கள் கற்பழிக்க பட்டனர் என்பதுடன் விலங்கிட்டு அடிமைகளாக கொழும்புக்கு கொண்டுசென்று “அடிமை தீவில்” -இன்போது உள்ள Slave Island – அடைத்து வைத்து தமது காமத்தை தீர்த்ததுடன் கடுமையாக வதைத்து வேலை வாங்கினர் இந்த போத்துக்கீசர்கள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் போது இங்கும் முஸ்லிம்களை சர்வதேச வியாபாரிகளாக கண்டனர் முஸ்லிம்கள் மீதும் அவர்களின் சர்வதேச வர்த்தகத்தின் மேலாதிக்க வெறிகொண்டு பாய்ந்து தம் வசப்படுத்தியதுடன் முஸ்லிம்களின் குடி இருப்புகள் , இறங்கு துறைகள் ,பண்டசாலைகள் , வியாபார கப்பல் என்பனவும் இவர்களால் அழிக்கப்பட்டது , இலங்கை முழுவதும் முஸ்லிம்கள் வியாபாரத்தை விட்டும் போத்துக்கீசர்களால் தடுக்கப்பட்டது போன்று யாழ்ப்பாணத்திலும் தடுக்கப்பட்டனர் முஸ்லிம்கள் முடக்கப்பட்டனர் இஸ்லாத்தை விட்டு மதமாற நிர்பந்திக்கபட்னர் இவர்களும் இவர்களுக்கு பின்பு வந்த ஒல்லாந்தர்களும் ஆங்கிலேயர்களும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினால் தான் கல்வி என்ற கொள்கையை கடைபிடித்தனர் யாழ்ப்பாண முஸ்லிம்களும் ஏனைய இலங்கை முஸ்லிம்களை போன்று இஸ்லாத்தை விட்டு கொடுக்கவில்லை ,விளைவு சர்வதேச வியாபாரத்தையும், கல்வியையும் இழந்தார்கள்

இங்கு நிற்பந்தால் யாழ்ப்பாணத்தில் அதிகமான இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினர் ஆனால் எந்த ஒரு முஸ்லிமும் மதம்மாற வில்லை இது யாழ்ப்பாண நகர மக்கள் தொகையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி யாழ்ப்பாண நகர மக்கள் தொகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தொகை அதிகரித்து நகர பெரும்பான்மையாக கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் உருவாக காரணமாக அமைந்தது.

முஸ்லிம்களின் வியாபாரம் பறிக்கபட்டது, கல்வி மறுக்கப்பட்டது கைத்தொழில் மட்டுமே அவர்களுக்கு இருந்த ஒரே வலியானது யாழ்ப்பாண முஸ்லிம்கள் கைத்தொழிலை கற்றுகொள்ள முற்பட்டனர் கற்றுக்கொண்டனர் பிற்காலத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களில் அதிகமானவர்கள் கைத்தொழிகளுடன் தொடர்புடையவர்களாக இருந்தார்கள் என்பதற்கு இது காரணமாக அமைத்து விட்டது என்ற முடிவுக்கு வர முடியும்.

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பலர் நல்லூர் பகுதியில் குடியேறினர் எனிலும் அங்கும் தொடர்ந்தும் பிரச்சனைகள் தொடர்ந்தன இறுதியாக முஸ்லிம்கள் நாவாந்துறைப் பகுதியில் குடியேறினர் 1990 வரை பெரும்பான்மையான முஸ்லிம்கள் அங்கு வாழ்ந்தனர் யாழ்ப்பாணக் குடாநாடெங்கும் முஸ்லிம்கள் பரந்து வாழ்ந்ததுடன் நெயினார் தீவு, மண்டைதீவு, மண்கும்பான், காரைதீவு எனும் தீவுகளிலும் பரந்து வாழ்ந்துள்ளனர் இன்றும் குடாநாட்டின் பெரும்பாலான காணிகள் சோனகன் வடவி, சோனக வெளி, சோனக வாடி, சோனக அடி, சோனகரடைப்பு என்னும் முஸ்லிம்களின் தனிப் பெயரையும் கொண்டு விளங்குகின்றன. இவை போன்ற பலவற்றையும் குடாநாட்டின் பெரும்பாலான காணிகளது தாய் உறுதிகளிலிருந்து பெறலாம்”

மிருசுவிலில் உள்ள உசன், சாவகச் சேகரிக்கும் சங்கத்தானுக்குமிடையிலுள்ள சோனகன் புலவு போன்ற இடப்பெயர்கள், அப்பிரதேசங்கள் முஸ்லிம்களது குடியிருப்புக்களாக இருந்தமைக்கான சான்றுகளாகும். நல்லூர் கந்தசாமிக் கோயிலை அடுத்துள்ள பகுதியில் சோனகன் தோப்பு என்ற பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்துவந்தார்கள். அங்கு தற்போதும் ஒரு ஸியாரம் காணப்படுகிறது.

போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தில் 40 ஆண்டுகளும், ஒல்லாந்தர் 140 ஆண்டுகளும் யாழ்ப்பாணத்தை ஆண்டனர். இந்த காலப்பகுதி முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கமான காலமாகும் முஸ்லிம்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் , மஸ்ஜிதுகள் இடிக்கப்பட்டு முஸ்லிம்களின் வரலாற்று சுவடுகள் அழிக்க பட்டன இவர்களுடைய ஆட்சியின் பின்புதான் மஸ்ஜிதுகள் மீண்டும் கட்டப்பட்டன என்பது நோக்கப்படவேண்டிய விடையம் யாழ்ப்பாண நகரத்தின் எல்லைக்குள்லும் அதன் சுற்று புறங்களிலும் கட்டப் பட்டுள்ள 20 இகும் அதிகமான மஸ்ஜிதுகள் போத்துக்கீச, ஒல்லாந்த காலத்துக்கு பின்னர் தான் கட்டப்பட்டவை . யாழ்ப்பாண நகரத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள இந்துக் கோயில்களும் இவர்களுடைய ஆட்சியின் பின்புதான் கட்டப்பட்டவை என்பதும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றிய வரலாற்று பார்வைக்கு துணைபுரிகிறது நல்லூர் கந்தசுவாமி கோயில் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில், யாழ் பெருமாள் கோயில் என்பன இவற்றுள் முக்கியமானவை

தொடரும்…….

Advertisement

Written by lankamuslim

January 10, 2010 at 11:34 pm

5 Responses

Subscribe to comments with RSS.

  1. ஷாமில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு நடந்த எல்லா அநியாயங்களையும் குறிபிட்டு எழுதுமாறு அன்புடன் வேண்டுகிறேன் – யாழ் அஸ்ரப்

    A.Asraf

    January 11, 2010 at 11:52 am

  2. I like to know about Jaffna Muslims – shamil your articl is a statment for me

    Rifath

    January 13, 2010 at 11:19 pm

  3. I Read the jaffna Muslims history. mr shamil your article is great, please cont………….

    Abdul Rased Abool

    August 21, 2010 at 12:30 pm

  4. MashALLAH shamil
    Assalamu allaikkum
    You are doing the great nobal task on behalf of all jaffna Muslims , I am one of them, write all the truth , do not afraid to anyone ecept ALLAH only. write every single action took agains to Jaffna Muslims by the terrorist , Any further help contact me via my e mail
    Wassalam

    Jawsad Yoosuf

    June 10, 2011 at 4:56 pm

  5. புலிகளின் அத்துமீறல்கள் முஸ்லிம்கள் மீதான
    ஈழப் போர் என்று கூறி இலங்கை நாட்டை அழிக்க துடித்த புலிகள் அழிந்துவிட்டனர்.
    அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எமக்கு இரத்த கண்ணீரை வரவழைக்கும்.
    கர்ப்பினிப் பெண்ணின் வயிற்கை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து அதனை கத்தியால் குத்திய கொன்ற சம்பவம் இப்படி அவர்களின் காட்டுமிராண்டி கொலைகளை விரித்துக் கொண்டே போகலாம.எது எப்படியோ இறைவனின் தண்டனை அந்த மக்களின் கண்முன்னாலேயே காட்டப்பட்டு விட்டது,அல்ஹம்துலில்லலாஹ் எல்லாப் புகளும் அவனுக்கே,

    shihar mohamed

    September 5, 2011 at 10:12 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 67 other followers