Lankamuslim.org

One World One Ummah

Archive for January 10th, 2010

யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டமும் பாகம்-1

with 6 comments

M. ஷாமில் முஹம்மட்

இலங்கையின் வட பகுதியின் ஐந்து மாவட்டங்களில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் வட பகுதியின் தலை நகரான யாழ்ப்பாணத்திலும் முஸ்லிம்கள் நுற்றாண்டு காலமாக வாழ்ந்த்து வந்தார்கள் , இவர்கள் வட மாகாணதின் பூர்விக குடிகள் 7 இம் நுற்றாண்டின் பின் பகுதிலும் 8 இம் நுற்றாண்டின் ஆரம்ப பகுதியிலும் இஸ்லாம் இலங்கைக்கு அறிமுகமானது இந்த கால பகுதியில் தமிழ் பேசும் இந்துகளும் ஏற்கனவே யாழ்ப்பாணத்துடன் வியாபார தொடர்பில் இருந்த அரபியரும் இஸ்லாத்தை ஏற்றுகொண்டு யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றை தொடங்கிவைத்துள்ளனர்.

வட மாகாண முஸ்லிம்களின் வரலாறும் இப்படி ஆரம்பமாகிறது வட மாகாண முஸ்லிம்களின் வரலாறும் ஆரம்பமாகிறது வட மாகாணத்தின் தலை நகராக கருதப்படும் யாழப்பாணத்தில் முஸ்லிம்கள் ஆரம்ப காலத்தில் மிகவும் செல்வாக்குடன் வாழ்ந்ததுடன் இந்துக்களுடன் சுமுகமான உறவு காணபட்டது வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு வாழ்ந்த்து வந்தனர் என்று குறிபிடலாம் 1981 இல் யாழ்ப்பாணத்தில் இறுதியாக எடுக்கப்பட்ட மக்கட்தொகைக் (சனத்தொகைக்) கணக்கெடுப்பின்படி, யாழ் நகரின் சனத்தொகை 118,000 ஆக இருந்தது. இதில் 10 விதமானவர்கள் முஸ்லிம்கள் என்பது குறிபிடத்தக்கது விரிவாக Read the rest of this entry »

Written by lankamuslim

January 10, 2010 at 11:34 pm

கண்டியில் தனியான முஸ்லிம் ஆண்கள் பாடசாலை பற்றி

leave a comment »

இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பிரதி அமைச்சரும் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி, பாயிஸ் பைஸர் முஸ்தபா

கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு கல்விப் பிரச்சினை உண்டு. பாடசாலைகள் போதாது. கண்டியில் ஆண்கள் பாடசாலை ஒன்றுக்கான கோரிக்கை. நீண்டகாலமாக நிறைவேறாமல் உள்ளது. இதனை நான் ஜனாதிபதிக்குத் தெரிவித்ததையடுத்து ஜனாதிபதியின் தலையீட்டில் கண்டி மாவட்ட முஸ்லிம் நிர்வாகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை முன்னேற்றத்துக்கு முஸ்லிம்களுக்குத் தனி நிர்வாகப் பிரிவு தேவை என முஸ்லிம்கள் கோரிவந்தனர். Read the rest of this entry »

Written by lankamuslim

January 10, 2010 at 11:15 am

சரத்துடன் இணைவது குறித்துத் தீர்மானமில்லை

leave a comment »

: அமைச்சர் சேகு இஸ்ஸதீன்

“ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதா என்பது குறித்துத் தான் இது வரை உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை” என ஏற்றுமதி  அபிவிருத்தி அமைச்சர் சேகு இஸ்ஸத்தீன் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பிட்ட அமைச்சர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்

Written by lankamuslim

January 10, 2010 at 10:19 am

ஜனதிபதிதேர்தலும் திண்ணைப்பேச்சு வீரர்களும்

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்

எனது ஜனதிபத்திதேர்தலும்  இனப்பிரச்சினை தீர்வு எனும் மாயமான் வேட்டையும் என்ற கட்டுரையின் பின்னர் நிகழ்ந்த சில சம்பவங்கள் எனது கட்டுரையில் குறிப்பிட்ட அனுமானங்களை பின்னூட்ட கருத்துக்களை மெய்பித்திருக்கின்றன; என்பதால் அவை பற்றி எனது அண்மைய அவதானங்களை எழுதலாம் என நினைக்கிரேன் அண்மையில் ( சில தினங்களுக்கு முன்பு ) காத்தான்குடியில் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் சரத் போன்செகாவுக்கான ஆதரவுக் கூட்டத்தில் பேசும்போது ஹக்கீம் புலிகளின் சென்ற ஜனாதிபதிதேர்தல் பகிஸ்கரிப்பு குறித்து ” சென்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்ஹா தோல்வி அடையச் செய்யப்பட்டார். அந்த அர்த்தமில்லாத பகிஸ்கரிப்பு இன்று மிகப்பெரிய அனர்த்தங்களை உருவாக்கியது “என்று குறிப்பிட்டார் ( அனர்த்தம் என்றால் சிலருக்கு சுனாமியும் அதற்காக அமைச்சராகவுள்ள அமீரலியும் ஞாபகம் வரலாம் ) ஒரு வேலை ஹக்கீமை பொருத்தவரைக்கும் மகிந்த ஆட்சிக்கு வந்தது அதன் பின்னரான நிகழ்வுகள் யாவுமே “அனர்த்தங்கள்” என்றால் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதும் அனர்த்தந்தான் .விரிவாக பார்க்க

Written by lankamuslim

January 10, 2010 at 9:47 am

715 பழைய புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் நேற்று மனிக் முகாமில் வைத்து விடுவிப்பு

leave a comment »

வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது  படையினரிடம் சரண் அடைந்த 715 பழைய புலிகள் இயக்கத்தின்  உறுப்பினர்கள் . வவுனியா மனிக் பாம் முகாமுக்கு நேற்றுப் பிற்பகல் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடையாளமாக 15 பேரை விடுத்து உறவினர்களிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன்சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,பிரதி  நிதிஅமைச்சர் எஸ். புத்திரசிகாமணி,  வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜென ரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரும் கலந்து கொண்டனர். சரண் அடைந்தோரை ஜனாதிபதி அடையாளமாக விடுவித்ததைத் தொடர்ந்து ஏனையயோரும் பூந்தோட்டம் மற்றும் பம்பைமடு நலன் புரிநிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு உறவினர்களி டம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடந்தவாரம் ஜனாதிபதிக்கும் புளொட் தூதுக்குழுவினருக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின்போது புலிகளால் பலாத்காரமாக பிடிக்கப்பட்ட மற்றும் சிறுவர்களை அவர்களது பெற்றோரிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர் என்பது குறிபிடதக்கது

Written by lankamuslim

January 10, 2010 at 9:32 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers