Archive for January 9th, 2010
பலஸ்தீன் வீடுகளைத் இடித்து தகர்ப்பதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை உத்தரவு
பலஸ்தீனர்களின் வீடுகளைத் தரைமட்டமாக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை உடைமையாளர்கள் 28 பேருக்கு 48 மணிநேரத்துக்குள் தத்தமது வீடுகளைவிட்டு வெளியேறுமாறு கூறி, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை கட்டடத்தகர்ப்பு உத்தரவுப் பத்திரங்களை வழங்கியுள்ளது.மேற்படி வீட்டு உடைமையாளர்களான பலஸ்தீனர்கள், பரம்பரை பரம்பரையாகத் தமது நிலத்தில் விவசாயம் மேற்கொண்டு வருபவர்கள் என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன விரிவாக பார்க்க.
மரணித்த புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மீண்டும் உயிர் பெறும் நிலை
ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேசத் துரோக கும்பல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுமாயின் மரணித்த புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மீண்டும் உயிர் பெறும் நிலையே உருவாகும். எனவே, மேலதிகமான இரண்டு இலட்சம் வாக்குகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
புலிகள் இயக்கத்தின் ஊதுகுழலாக செயற்பட்ட அமெரிக்கா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இன்று ஜெனரல் சரத் பொன்சேகாவினை வெற்றி பெற வைப்பதற்கு பாரியளவு நிதியினை செலவிட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைபெற்றப் போதே விமல் வீரவன்ச எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு இலங்கையை இழுத்துச் செல்ல ஐ.நா. “சிலுவை யுத்தம்
போர்க்குற்ற நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையை இழுத்துச் செல்வதற்கான சிலுவைப் போரில் ஐ.நா. ஈடுபட்டிருப்பதாக அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.கைதிகளுக்கு மரண தண்டனையை படையினர் நிறைவேற்றுவதாக குற்றம் சாட்டப்படும் ஒளிநாடா தொடர்பான புதிய அழுத்தம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டை ஐ.நா. மீது தெரிவித்திருக்கிறது.
ஆயுதமற்ற தமிழ்ப் புலி கிளர்ச்சியாளருக்கு மரண தண்டனையை படையினர் நிறைவேற்றுவதாக குற்றம் சாட்டப்பட்ட ஒளிநாடா பிரதிமையானது உண்மையானது என்றும் பக்கச் சார்பற்ற விசாரணையை கொழும்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நீதி விசாரணைக்குப் புறம்பானதும் தன்னிச்சையானதுமான மரணதண்டனை விவகாரங்களைக் கையாளும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
சர்ச்சைக்குரிய ஒளிநாடாவானது நம்பகத்தன்மையானது என்று அறிவிப்பை விடுக்கும் விடயத்தில் உரிய நடைமுறைகளை பின்பற்ற பிலிப் அல்ஸ்ரன் தவறிவிட்டதாக மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்ததாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை குறிப்பிட்டது.








