Lankamuslim.org

One World One Ummah

Archive for January 7th, 2010

இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களும்: 04

leave a comment »

பி.எம்.புன்னியாமீன்

500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்களுடன் நடைபெற்ற 2ஆவது ஜனாதிபதித் தேர்தல்


இலங்கையின் 2வது ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1988 நவம்பர் 10ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமென தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி சில்வா அவர்களினால் அறிவிக்கப்பட்டது. இதற்கிணங்க 3 அபேட்சகர்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

1. திரு. ரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி)
2. திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி)
3. திரு. ஒஸி அபயகுணவர்தனா (ஸ்ரீலங்கா மக்கள் கட்சி)  விரிவாக பார்க்க……

Written by lankamuslim

January 7, 2010 at 11:46 pm

குருக்கள் மடத்தில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 69 ஹாஜிகளின் உடல்களை கண்டுபிடிப்பேன் !

leave a comment »

காத்தான்குடியில் சரத் பொன்சேகா:

காத்தான்குடியில் பயங்கரவாதிகளால் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஹஜ்ஜுக்குச் சென்று வந்த  69 ஹாஜிகளை குருக்கள் மடத்தில் வைத்து  கடத்திச் சென்றார்கள். அவர்களின் உடலங்கள் கூட கிடைக்கவில்லை. இதே போல ஏறாவூர், அளிஞ்சிப்பொத்தான போன்ற இடங்களிலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களுக்கெல்லாம் நஷ்டஈடுகள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என்பதும் எனக்குத் தெரியும். நான் பதவிக்கு வந்தததும் அவற்றையெல்லாம் வழங்குவதுடன் கொல்லப்பட்ட ஹாஜிகளின் உடல்களுக்கு என்ன நடந்தது என்பதையும் கண்டு பிடிப்பேன்.’ இவ்வாறு காத்தான்குடியில் இரண்டு தினங்களுக்கு முன்பு  முஸ்லிம் மக்கள் மத்தியில்உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

January 7, 2010 at 10:05 pm

10 பிரதான அம்சங்களுடன் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம் சமர்ப்பிப்பு

leave a comment »

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனம், ‘நம்பிக்கைமிக்க மாற்றம்’ என்ற தொனிப் பொருளில் 10 பிரதான அம்சங்களை உள்ளடக்கியதாக இன்று முற்பகல் கொழும்பு இன்டர் கொன்டினெண்டல் ஹோட்டலில் வெளியிட்டு  வைக்கப்பட்டது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

01. ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்பி சமாதானத்தை முறையாகப் பேணல்
02. ஊழல்,விரயங்களை முற்றாக இல்லாதொழித்தல்
03. நெருக்கமான உறவுகளைப் பேணி அனைத்து குடும்பங்களுக்கும் தேவையானவற்றை செய்தல்
04. வாழ்க்கைச் செலவை குறைத்தல்
05. நாட்டின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல்
06. சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தல்
07. பெண்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் கௌரவமான நிலைமையைத் தோற்றுவித்தல்
08. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல்
09. காத்திரமானதும் வினைத்திறன் மிக்கதுமான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அடித்தளம் அமைத்தல்
10. நாட்டின் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்தல்

மேற்கண்ட 10 அம்சங்களையும் அவற்றுக்கான விளங்கங்களையும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதுடன் ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் துரித மாற்றத்தை ஏற்படுத்த மேற்கொள்ளவுள்ள 7 படிமுறைகள் குறித்தும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வீரகேசரி

Written by lankamuslim

January 7, 2010 at 9:32 pm

ஜனாதிபதியுடன் த.சித்தார்த்தன், எஸ்.சதானந்தம், தி.சிறீதரன் ஆகியோர் கலந்துரையாடல்!

leave a comment »

புளொட் PLOT தலைவர் த.சித்தார்த்தன், செயலாளர் எஸ்.சதானந்தம், ஈ.பி.ஆர்.எல்.எவ் EPRLF (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன் ஆகியோர் நேற்று காலை 9மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்து இன்றைய நிலைமைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் சந்தேகநபர்கள் என கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 12ஆயிரம் பேரில் புலிகளால் பலவந்தமாக பிடிக்கப்பட்ட பல  சிறார்களும் இருப்பதால் அவர்களை மிகவும் குறுகியகால இடைவெளிக்குள் விடுதலை செய்யுமாறு மேற்படி தமிழ்க்கட்சி தலைவர்கள் விரிவாக பார்க்க

Written by lankamuslim

January 7, 2010 at 8:26 pm

ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் இன்று வெளியிடப்படும்

leave a comment »

எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் இன்று வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர, ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர். நாட்டை அபிவிருத்தி செய்தல், நல்லாட்சியை ஏற்படுத்தல், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல், இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை சுபீட்சப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் தொடர்பில் இந்த தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில் விபரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Written by lankamuslim

January 7, 2010 at 12:56 pm

இருபதுக்கும் அதிகமான முஸ்லிம் அமைச்சர்கள் உள்ள அரசாங்கதில் தொடரும் “அதான்” தடை !

leave a comment »

.

M. ஷாமில் முஹம்மட்

இருபதுக்கும் (20)  அதிகமான முஸ்லிம் அமைச்சர்கள் உள்ள அரசாங்கம்  என்று பெருமையாக  கூறும் ஜனாதிபதி   முஸ்லிம் அல்லாத வேறு நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அனுபவிக்காத பல அனுகூலங்களை இந்நாட்டு முஸ்லிம்கள் அனுபவிப்பதற்கு வழி சமைத்துள்ளேன். , இலங்கை வானொலியில் ஐவேளை முஸ்லிம்களுக்கான அதான் சொல்லவும் நான் வழி சமைத்திருக்கிறேன் என்று   ஜனாதிபதி கூறுகிறார் இதில் உண்மை இருக்கிறது.

ஆனால் மறுபக்கம்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  ஆட்சியில்தான் மஸ்ஜிதுகளில்  ஒலிபெருக்கி பயன்படுத்தி சொல்லபடும்  அதானுக்கு தடை வந்தது இப்போதும் சுபஹ் தொழுகைக்கான அதிகாலை வேலை அதானுக்கு தடை தொடர்கிறது 20 இகும் அதிகமான   முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கும் அரசாங்கத்தில் , “என்னை முழுமையாக நம்புங்கள்” என்று கூறும் ஜனாதிபதி அரசாங்கத்தில்    அதிகாலை அதான் மீதான தடை  தொடர்கிறது இதை என்வென்று சொல்வது   இலங்கையில் உள்ள அனைத்து மஸ்ஜிதுகளிலும்   அதிகாலை வேலை இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று காலம் தொடக்கம் பல நூற்றாண்டு   காலமாக ஒலித்துகொண்டிருந்த “அதான்”  -தொழுகைக்கான  அழைப்பு-  இந்த அரசாங்கத்தில் தடை விதிக்க பட்ட ஒன்றாக இருப்பது “என்னை முழுமையாக நம்புங்கள்” என்று கூறும் ஜனாதிபதி கூற்றுக்கு நேர்  எதிரான விடையமாகும் இதை முஸ்லிம் அமைச்சர்கள், அரசியல் வாதிகள் கவனத்தில் எடுக்கவேண்டும். விரிவாக பார்க்க

Written by lankamuslim

January 7, 2010 at 12:30 pm

வடக்கு கிழக்கு இணைக்கப்படமாட்டாது ஜனாதிபதி மீண்டும் உறுதி

leave a comment »

வடக்கு கிழக்கு இணைப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் வடக்குக் கிழக்கை இணைக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.அலரி   மாளிகையில் கடந்த  செவ்வாய்க்கிழமை தேசிய கவிஞர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பௌத்த மதப் பாடசாலை ஆசிரியர்கள், கைப்பணிப்பொருள் கலைஞர்கள் ஆகியோர் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் தமது ஆட்சிக் காலத்தில் வடக்குக் கிழக்கு இணைக்கப்படும் என யாழ்ப்பாண மக்களுக்கு உறுதியளித்துள்ளதுடன் தேர்தலில் அவர்களது ஆதரவையும் கோரியுள்ளனர் என ஜனாதிபதி அப்போது தெரிவித்தார்.எதிர்க்கட்சிகள் தேர்தலுக்காகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. எனினும் தன்னால் அவ்வாறு செயற்பட முடியாது என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கியத்தையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்கவும், நாட்டை மீளக்கட்டியெழுப்பவும் தான் தயாராகவுள்ளதாக அங்கு மேலும் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது பற்றிய பேச்சுக்கே இனி இடமில்லை. அது கேள்விக்கு அப்பாற்பட்டது. காலாவதியான விவகாரம். புலிகளின் அரசியலுடன் அதுவும் செத்துவிட்டது. புலிகளின் அந்த அரசியலை மீண்டும் தோண்டி எடுத்துக்கொண்டு வராதீர்கள். கிழக்கில் இன்று பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அப்படியிருக்க அவர்களின் விருப்பை மீறி நாம் வடக்கு கிழக்கை இணைத்து, அவர்களுக்கு அநீதி இழைக்க முடியாது.என்று ஜனாதிபதி அண்மையில்  “உதயன்”, “சுடர்ஒளி’ நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடன் உரையாடிய போதே அவர் இவ்விடயத்தைத் தெளிவுபடக் கூறினார் என்பது குறிபிடதக்கது

Written by lankamuslim

January 7, 2010 at 9:33 am

இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் வளம் இருப்பது உறுதி

leave a comment »

இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் வளம் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள் ளதாகப் பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ. எச். எம். பெளவ்சி தெரிவித்தார்.

இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வுகளை மேற்கொள்வது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் வெனிநாட்டு நிறுவனத்தின் மூன்றாவது அநிக்கை இதனை உறுதி செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை கொழும்பு மகாவலி கேந்திரத்தில் நடைபெற்றது. அமைச்சர் இங்கு மேலும் கூநியதாவது “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் அதிர்ஷ்டசாலி, அவரது அதிர்ஷ்டம் எமக்கும் அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது. அதுதான் இலங்கையில் எண்ணெய் வளம் உள்ளமை தொடர்பான தகவலாகும்.”

எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பித்தால் இலங்கையையும் தெற்காசி யாவில் முன்னணி நாடாக மாற்நியமைக்க முடியும்.பாரிய அபிவிருத்திகளை எதிர்காலத்தில் இலகுவாக முன்னெடுக்க முடியும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் வளமான எதிர்காலம் கிடைக்கப் போவது உறுதி என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தினகரன்

Written by lankamuslim

January 7, 2010 at 12:11 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers