Archive for December 27th, 2009
மீண்டும் உருவாகி வரும் பாசிச புலனாய்வு புலி பயங்கரவாதம்
M. ஷாமில் முஹம்மட்
* முஸ்லிம்கள் இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை தம் மீது மேலாதிக்கம் செலுத்த முற்படும் ஒன்றாக பார்த்தனர் பார்க்கின்றனர்
* வட்டுக்கோட்டை தீர்மானம் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்படுவதானது தமிழ் மக்களின் உள்ளங்களில் இருந்து வழுக்கி விழ்ந்து இறுதி கட்ட போரில் நந்திகடல் மூழ்கி விட்ட தமிழ் தேசியம் மீண்டும் அத்திவாரமிடபட்டு அதில் இலகுவாக புலி பாசிச பயங்கரவாதம் கட்டமைக்க முடியும்.
மீண்டும் புலிகள் உருவாகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன” இதன் உண்மை தன்மை ஆராயப்படவேண்டும் புலிகளின் பல இணையத்தளங்கள் மூடப்பட்டு மீண்டும் வேறு பெயர்களில் தீவிரமாக இயங்கி வருகிறது என்பதுடன் புலம் பெயர் நாடுகளில் இவர்கள் நடத்தி வருகிற ஈழத்துக்கான தேர்தல்கள், இளையோருக்கான ஈழ போராட்ட விளக்க வகுப்புகள் ,இரகசிய ஒன்று கூடல்கள் என்பன வற்றை பார்க்கும்போது புலிகள் முனைப்புடன் இருப்பது தெரியவருகிறது என்பதுடன் புலிசார்பு இணையத்தளங்களை இவர்கள் மீண்டும் ஒரு திசை நோக்கி வழி நடத்த முற்படுவதும் தெரிகிறது சில தினங்களுக்கு முன்பு ஒரு புலி சார்பான இணையத்தளம் 24 மணிக்குள் ஈழத் துரோகிகளின் பட்டியல் ஒன்றை தாம் வெளி இடப்போவதாக அறிவித்தது எனிலும் அது வெளியிடப்படவிலை காரணம் புலிகளின் புலனாய்வு பிரிவு தமக்கு தடை விதித்ததாக குறிப்பிட்டது என்பது நோக்கதக்கது .
இங்கு புலிகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்டு விட்டது என்பது அவர்களின் பாசிச இயங்கும் சக்தி அழிக்க பட்டுவிட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது புலிகள் இறுதி கட்ட போரில் நந்திகடல் பகுதியில் தமது தலைவனுடன் ஆட் பலத்தை, ஆயுத பலத்தை , நில பரப்புடன் நில பலத்தை இழந்து சுமார் மூன்று வருடங்கள் நீடித்த மஹிந்தவின் யுத்தத்தில் முப்பது வருடங்களாக உருவாகிய பிரமாண்டமான பாசிச பயங்கரவாத இராணுவ கட்டுமானம் முற்றாக இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை ஆனால் அவர்களின் பாசிச சிந்தனை இன்னும் பல ஆயிரம் புலம் பெயர் புலிகளிடம் புது முனைப்புடன் இருக்கிறது, உருவாக்கபடுகிறது விரிவாக பார்க்க
மீண்டும் உருவாகி வரும் புலிகள்:பலமான தாக்குதல் திட்டம் !
மீண்டும் உருவாகி வரும் புலிகள் இலங்கையில் புனர் வாழ்வு தடுப்பு முகாம் ஒன்றைத்தாக்குவதற்கு புலம்பெயர் புலிகளால் உருவாக்கப்பட்ட”புதிய புலிகள்” அமைப்பினர்கள் பாரிய திட்டத்துடன் இருப்தாக தகவல் வெளியாகியுள்ளன நடைபெறவிருக்கும் ஐனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தடுப்பு முகாம்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் புலிகள் பலரை கொலை செய்து மாபெரும் மனிதபேரவலத்தை உண்டுபண்ணி நடைபெறவிருக்கும் ஐனதிபதி தேர்தலை குழப்பியடிக்கவும் அந்த பழியை இராணுவத்தினரின் மேல்போட்டு நாட்டை ஒரு குழப்ப நிலைக்கு கொண்டுவருவதற்கு பாரிய தாக்குதல் திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. புலிகளின் பல இணையத்தளங்கள் மூடப்பட்டு மீண்டும் வேறு பெயர்களில் தீவிரமாக இயங்கி வருகிறது என்பது குறிபிட தக்கது
வடக்கு முஸ்லிம்கள் மே மாதம் முழுமையாக மீள்குடியேற்றம்:
வடக்கு முஸ்லிம்கள் மே மாதம் முழுமையாக மீள்குடியேற்றம்:
அமைச்சர் ரிஷாட்டுக்கு ஜனாதிபதி புகழாரம்:
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சகல முஸ்லிம்களும் மே மாதமளவில் சொந்த இடங்களில் முற்றாக மீள்குடியேற்றப்படுவ ரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்கு வசதியாக புத்தளத்திலிருந்து மன்னார் செல்லும் பாதை அடுத்த மாதம் திறந்து வைக்கப்படுமெனவும் ஜனாதிபதி கூறினார்.அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வடமாகாண மாநாடு நேற்று 26.12.2009 புத்தளம் ஆலங்குடாவில் நடைபெற்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் ஐம்பதினாயிரம் பேர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி:-
முஸ்லிம் மக்களை பணயக் கைதிகளாக வைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்களை நாம் முழுமையாகப் பொறுப்பேற்கிறோம்.முஸ்லிம்கள் எனது சகோதரர்கள். என்னை முழுமையாக நம்புங்கள். முஸ்லிம்கள் தொடர்பாக என்மீது பல்வேறு அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் எதிர்க் கட்சிகளால் சுமத்தப்பட்டன. ஐந்து வேளைத் தொழுகையை நான் நிறுத்தி விடுவேனெனக் கூறினார்கள். இப்போது உண்மை நிலையை நீங்கள் புரிந்திருப்பீர்கள். அவ்வாறான பொய்களெல்லாம் எதிர்க் கட்சிகளினாலும் அதன் தலைவர்களினாலும் பரப்பப்பட்டவை. அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள். விரிவாக பார்க்க
முஸ்லிம்களை, அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள குடியமர்த்துவது எனது பொறுப்பு
நேற்று 26.12.2009 புத்தளத்தில் வட மாகாண முஸ்லிம்களை வட மாகாணத்தில் மீண்டும் மீள் குடியமர்த்த எடுக்கப்பட்டும் நடவடிக்கைகளை ஆரமித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து விடுதலைப்புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களை, அவர்களின் சொந்த இடங்களிலேயே மீள குடியமர்த்துவது தமது பொறுப்பு எனவும் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்கள் குடியமர்த்த படுவார்கள் என தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், வடக்கின் இடம்பெயர்ந்தவர்களின் சொந்த இடங்களில் மாற்று பிரதேசத்தவர்கள் குடியமர்த்தப்படுவர் என யாரும் நம்பவேண்டாம் எனவும், அந்த பிரதேசங்களில் அவ்வாறான குடியேற்றங்கள் எவையும் நிகழாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு சீனா சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி அளிக்கிறது
. இலங்கையின் உள்கட்டமைப்பைச் சரிசெய்ய இந்த நிதி அளிக்கப்படுவதாக சீனா தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இலங்கையின் பொருளாதாரத்துறை அமைச்சர் ஜெயசுந்தர சீனாவின் வர்த்தக இணை அமைச்சர் சென் ஜியானை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது இந்த நிதி உதவி குறித்து சீனா உறுதி அளித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. இலங்கையில் இன்னும் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள், அதற்கு சீனாவிடம் இருந்து இலங்கை எதிர்பார்க்கும் உதவி ஆகியவை குறித்தும் ஜெயசுந்தர இந்த சந்திப்பின்போது எடுத்துக் கூறினார்.
இலங்கை எதிர்ப்பாக்கும் அனைத்து உதவிகளை செய்ய சீனா தயாராகவுள்ளதாக சென் ஜியான் உறுதியளித்துள்ளார். இந்தச் சந்திப்புக்குப் பின் சீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த சந்திப்பின்போது மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு, நாட்டின் உள்கட்டமைப்பை விரைந்து மேம்படுத்துவதற்கும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் முன்னுரிமை அளித்து செயல்பட்டுவருகிறது. அதற்கு சீனா அனைத்து உதவிகளையும் செய்ய முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சிவாஜிலிங்கம் எம்.பி, திருச்சி விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தப்பட்டார்
தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள விமானம் மூலம் திருச்சி வந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குடியேற்றத் துறையால் அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.இலங்கை அதிபர் தேர்தலில் தனி வேட்பாளராக போட்டியிடும் சிவாஜிலிங்கம் இன்று அதிகாலை 3.00 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். ஆனால் அவரை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதி மறுத்த குடியேற்றத் துறை அதிகாரிகள், அவரை தடுத்து வைத்தனர்.
சிறிது நேரத்தில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டனர். அங்கிருந்து சிவாஜிலிங்கம் கொழும்பு செல்ல வேண்டும் என்ன காரணத்திற்காக சிவாஜிலிங்கத்தை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தனர் என்று குடியேற்றத்துறை அவருக்குத் தெரிவிக்கவில்லை.இலங்கை அதிபர் தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதில் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் சரத் பொன்சேகாவிற்கும், மகிந்த ராஜபக்சவிற்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், வெற்றி பெறுவதற்கு தமிழர்களின் வாக்குத் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தனி வேட்பாளராக சிவாஜிலிங்கம் களமிறங்கியிருப்பது தேர்தலில் விழும் தமிழர்களின் வாக்குகளை பெறும் வாய்ப்புள்ளதால் தங்கள் வெற்றி பாதிக்கப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர்.இதுமட்டுமின்றி, தமிழர்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டணியின் வாயிலாக தமிழர்களின் வாக்குகளை அதிபர் ராஜபக்சவுக்கு சாதகமாக திருப்புவதில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த திட்டத்திற்கு எதிராக சிவாஜிலிங்கம் களமிறங்கியிருப்பதாலும், ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் அவர் கலந்துகொள்வது அவருக்கு ஆதரவாக தமிழர்களின் வாக்குகளை ஒன்று சேர்க்கும் என்று கருதப்பட்டதாலும் அவரை மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.









