Archive for December 25th, 2009
ரிசானாவின் மேல்முறையீடு விசாரணைக்கு வருகின்றது. மொழிபெயர்பாளரை மாற்ற உத்தரவு.

parents of Rizana Nafeek
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணான ரிசானா நௌபீக் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 19ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என அந்த நாட்டின் நீதியரசர் அப்துல்லா அல் ரசீம் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ரிசானாவின் வாக்குமூலத்தை மொழிபெயர்த்த இந்திய மொழிபெயர்ப்பாளரை நீக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மன்றில் ரிசானா நௌபீக் மற்றும் அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்திருந்த இரு பொலிஸாரும் ஆஜராகியிருந்தனர். கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நீதிமன்றில் ஆஜராகிவந்த இறந்தகுழந்தையின் தந்தை இம்முறை மன்றில் ஆஜராகி இருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. விரிவாக பார்க்க
வந்தேமதரம் பாடலை தொடர்ந்து பாடுவேன் என்று அடம் பிடிக்கும் ஏ.ஆர். ரஹ்மான்
இசை மதங்களை, வேறுபாடுகளை, வெறுப்புகளை கடந்த ஒன்று என்று கூறுகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.வந்தேமாதரம் பாடலை இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த ரஹ்மான் பாடியது தவறு என்றும் முஸ்லிம்கள் இந்த பாடலை பாடுவது ஷிர்க் என்றும் பல இஸ்லாமிய அமைப்புகள் கண்டித்தது குறித்து கேட்கப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இந்தியாவின் தேசிய பாடலான வந்தேமாதரம் பாடலை இந்திய சுதந்திரப் பொன்விழாவின் போது வெளியிடப்பட்ட ஒரு இசைத் தொகுப்பில் உணர்சிகரமாக பாடியிருந்த ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலை தான் தொடர்ந்து பாடிவருவதாகவும் தெரிவித்தார்.
இந்தப் பாடலின் சில வரிகள் இஸ்லாமிய கோட்பாடுக்கு எதிராக இருப்பதாகவும் இதை முஸ்லிம்கள் பாடக் கூடாது என்றும் இந்திய உலமாக்கள் சபை என்ற இஸ்லாமிய அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தமை சர்ச்சையை கிளப்பியிருந்தது.வந்தேமாதரம் பாடலை பாடுமாறு யாரும் தன்னை அப்போது நிர்பந்திக்கவில்லை என்றும், அதே போன்ற நிலை தொடர வேண்டும் என்றும் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், ஒவ்வொருவரின் மத நம்பிக்கைகளும் அது தொடர்பிலான புரிதல்களும் மாறுபட்டவை என்றும் அவை மதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார் .தான் இப்போதும் தனது இசை நிகழ்சிகளை நிறைவு செய்யும் முன்பாக இந்தப் பாடலை பாடுவதாகவும் அவர் கூறினார்.
ஏ.ஆர். ரஹ்மான் மிகவும் பிரபல்யமான ஆங்கில பாடகர் லூன்னிடம் பாடம் படிக்கட்டும்
லூன் ( AKA LOON) என்ற மிகவும் பிரபல்யமான பாடகர் இசையின் ஹராமான பகுதிகளை முழுமையாக ஒதுக்கி விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு கிறித்தவ வாலிபர் இவரிடம் ஏ.ஆர். ரஹ்மான் படிப்பினை பெறவேண்டும்
பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்ற இந்த பேரணியில் அரசாங்கத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.விடுதலைப்புலிகளை வெற்றிகொண்ட இலங்கை அரசாங்கத்தை காட்டிக்கொடுக்க ஜெனரலுக்கு வெட்கம் இல்லையா? ஐக்கிய தேசிய கட்சிக்கு வெட்கம் இல்லையா என எழுதப்பட்ட பாதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.இராணுவத்தை காட்டிக்கொடுத்த சரத் பொன்சேகா, தேசத்துரோகி பொன்சேகா, ஸ்ரீலங்காவை சர்வதேச சக்திகளுக்கு அடகுவைக்க முற்படும் பொன்சேகா என ஆர்ப்பாட்டக்கார்கள் கோசங்களை எழுப்பினர்.மேல் மாகாணசபை ஆளுநர் அலவி மெளலானா உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அல்-அக்ஸா எதிர்கொள்ளும் புதிய அச்சுறுத்தல்
மர்லின் மரிக்கார்
இஸ்லாத்தை ஏற்று விசுவாசிக் கின்ற ஒவ்வொரு முஸ்லிமுக் கும் அல்- அக்ஸா புனித தலமாகும். அது இறை நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்ட புனித தலமே யன்றி நிலம் சார்ந்ததல்ல. அதனால் அல்-அக்ஸா முழு முஸ்லிம் உம்மாவுக் கும் சொந்தமான ஒன்றாகத் திகழுகின் றது. மாறாக இது பலஸ்தீனர்களுக்கு மாத்திரமுரிய ஒன்றல்ல.
சர்வ வல்லமை படைத்த அல்லாஹுத ஆலாவை வணங்கி வழிபடவென பூமியில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது மஸ்ஜிதே அல்- அக்ஸாவாகும். இது மக்கா நகரிலுள்ள கஃபாவுக்கு அடுத்த படியாகவே நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.
அதாவது கஃபா நிர்மாணிக்கப்பட்டு நாற்பது வருடங்கள் கழிந்த பின்னரே அல்- அக்ஸா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல இறைத்தூதர்கள் வழிபட்டி ருக்கின்றார்கள்.
இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவிலி ருந்து அல்-அக்ஸா வுக்கு, ‘இஸ்ரா’ பயணம் மேற்கொண்டிருக்கின்றார்கள் விரிவாக பார்க்க
கல்முனை பிரதேசத்தில் 7500 குடும்பங்கள் பாதிப்பு
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் 7500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். தெளபீக் தெரிவித்தார்.
கல்முனை இஸ்லாமாபாத், கல்முனைக்குடி, மருதமுனை போன்ற தாழ் நிலப் பிரதேசங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பிரதேச மக்கள் இடம்பெயரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளரைப் பணிந்துள்ளதாகவும், அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பதில் பிரதேச செயலாளர் எம். ஐ. எம். தெளபீக் மேலும் தெரிவித்தார்.
தற்போது மழை ஓய்ந்து ஓரளவு சீரான காலநிலை நிலவி வருவதால் வெள்ள நீர் படிப்படியாக வடிந்து வருவது குறிப் பிடத்தக்கது.








