Lankamuslim.org

One World One Ummah

Archive for December 16th, 2009

புத்தளத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

leave a comment »

http://www.tamilwin.org/photos/thumbs/srilanka/MP/hakeem-200_.jpg
அலரிமாளிகை இன்று ஒரு அன்னதானசாலை. இந்த அன்னதான சாலைக்கு சம்பந்தன் வருவாரோ வரமாட்டாரோ என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த. இப்படி இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் இணைத் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை மாலை புத்தளம் ஹீதா பள்ளிவாசல் முன்றலிலும், புத்தளம் எருக்கலம்பிட்டி ஜும்மாப் பள்ளியிலும் இடம்பெற்ற கூட்டங்களில் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப் பதற்கான காரணங்களை யாழ்., வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்கும் புத்தளம் பகுதி மக்களுக்கும் அவர் விளக்கினார்.அச்சமயமே அவர் இவ்வாறு தெரிவித்தார். மு.கா. தவிசாளரும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான பஷீர் சேகுதாவூத், கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர், முன்னாள் அமைச்சர் நூர்தீன்  மசூர், புத்தளம் மாவட்ட ஐ.தே.க. அமைப் பாளர் பாலித்த ரங்கே பண்டார எம்.பி., புத்தளம் நகரசபை உபதலைவர் அலிக்கான், வட மேல் மாகாணசபை உறுப்பினர் எஹியா ஆகியோரும் அங்கு உரையாற்றினர்.விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 16, 2009 at 9:22 pm

இலங்கையின் அமைதியை குழப்பும் இந்தியா

leave a comment »

பாகிஸ்தான் பத்திரிகை தகவல்:

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை அரசு விலக்கிக் கொள்வதற்கான ஆலோசனையை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கியதாக, பாகிஸ்தானின் செய்தி நாளிதழான ‘நேஷன்’ வெளியிட்டுள்ள செய்தியொன்றில் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது .

நீண்டகாலமாகவே இலங்கையில் அமைதி நிலை காண்பதற்கு பாடுபடுவதாகக் கூறிக் கொண்டு செயற்படும் இந்தியாவினது உளவுத்துறை, அங்கு இந்திய இராணுவ ஆதிக்கம் நிலவவேண்டுமென்பதற்காக, உண்மையில் அங்கு ஒரு அமைதிநிலை உருவாகிவிடாமல் பார்த்துக் கொள்கிறது. அதனாலேதான் சரத் பொன்சேகாவை பதவியிலிருந்து அகற்றி அங்கு ஒரு குழப்பமான சூழலை மீளவும் இந்தியா உருவாக்கியுள்ளது என்ற தொனிப் பொருளில், அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில்  போரின் பின்னதாக இராணுவப்புரட்சி ஏற்படவுள்ளதாக இந்திய உளவுத்துறைக்குக் கிடைத்த தகவலை சுட்டிக்காட்டியே, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த  ராஜபக்சவுக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மேற்படி ஆலோசனையை வழங்கியதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

December 16, 2009 at 9:00 pm

இளம் முஸ்லிம் யுவதி மின்னல் தாக்கி வபாத்தானார்

leave a comment »

Lightning Strike in Tree

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் , மின்னல் காரணமாக நேற்று முன்தினம், இறக்காமம் ஒன்பதாம் பிரிவில் வசிக்கும் ஐ. நஸ்ரியா என்ற இளம்  முஸ்லிம் யுவதி மின்னல் தாக்கி வபாத்தானார் மற்றும்   ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

பிள்ளையாரடி காவல் நிலையத்திலிருந்த மூன்று பொலிஸாரும் காத்தான்குடி வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இருவரும் மட்டு. வீதியால் பயணித்த நபர் ஒருவருமே மின்னலினால் காயமடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ‘வார்ட்’ புயல் சின்னம் வலுவிழுந்து இன்று இலங்கைக்கு மேல் திருகோணமலை ஊடாக மன்னார் குடாவை நோக்கி நகர்ந்து செல்கிறது. காற்றழுத்தம் மிகவும் வலுவிழந்துள்ளதால் இலங்கையை கடந்து செல்வது தாமதமாகிறது. இதனால் வடக்கு கிழக்கு, வட மத்திய வடமேல் மாகாண, மத்திய மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. இலங்கைக்கு மேல் மேகக் கூட்டங்கள் அதிகளவு காணப்படும். அத்துடன் மன்னார், வளைகுடா பகுதி வடக்கு கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கிறது.

Written by lankamuslim

December 16, 2009 at 5:59 pm

எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி

leave a comment »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மீறி ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். நேற்றுக் கூட்டமைப்பின் மற்றொரு உறுப்பினரான என் ஸ்ரீகாந்தாவுடன் சென்று அவர் கட்டுப்பணம் செலுத்தினார்.

தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான நடவடிக்கை எதனையும் முன்னெடுப்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமீபத்தில் முடிவு செய்திருந்தது. என்பது குறிபிடதக்கது

Written by lankamuslim

December 16, 2009 at 5:47 pm

பலஸ்தீன் மக்கள் பிரிவினைத் தீர்மானத்தை அன்று எதிர்த்ததைப் போலவே இன்றும் எதிர்க்கிறார்கள்

leave a comment »

ஹுஸாம் அஹ்மத்

காஸா- 1947 ஆம் ஆண்டு பிரிவினையை ஏற்குமாறு நிர்ப்பந்தித்த 181 ஆவது தீர்மானம் பெல்ஃபர் உடன்படிக்கையை சட்டபூர்வமாக்குவதை நோக்காகக் கொண்ட ஒரு சதித்திட்டமாகும் என்று ஹமாஸின் அகதிகள் விவகாரம் தொடர்பான திணைக்களத் தலைவர் ஹுஸாம் அஹ்மத் கருத்துரைத்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.11.2009) பத்திரிகையாளர்களைச் சந்தித்த அஹ்மத், 62 ஆண்டுகளாகத் தொடரும் இந்தச் சதித்திட்டம் இன்னுமே முடிவுறவில்லை. இதன் பின்னணியாக இருந்து செயல்படும் சர்வதேச சக்திகள் பலஸ்தீனர்கள் தமக்குள் பிளவுபட்டு இருப்பதையே இன்று பெரிதும் விரும்புகின்றன. அதன்மூலம் அவை தமது அரசியல் நலன்களை அடையவே விழைகின்றன. எனினும், இதனாலெல்லாம் பலஸ்தீன் மக்கள் தமது இலட்சியத்தை அடைவதில் சோர்ந்துவிடப்போவதில்லை என்று குறிப்பிட்டார். விரிவாக பார்க்க

Written by lankamuslim

December 16, 2009 at 1:24 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,834 other followers