Archive for December 12th, 2009
மாத்தளை நகரில் கம்பீர தோற்றத்துடன் இஸ்லாமிய கலாச்சார நிலயம்
மாத்தளை நகரில் டவுன் மஸ்ஜித் வளாகத்தில் மூன்று அடுக்குகளை கொண்ட இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒன்று மாத்தளை முஸ்லிம்களின் முயற்சியால் கட்டப்பட்டு பூர்த்தியாகும் நிலையில் உள்ளது இது மாத்தளை முஸ்லிம்களுக்கு மார்க்க கல்வி போதிக்கும் மத்திய நிலயமாக விளங்க இருக்கிறது இங்கு திருமணம் முடித்த பெண்களுக்கும் , திருமணம் முடிக்காத யுவதிகளுக்கும் தனி தனியாகவும் மற்றும் ஆண்களுக்கும் , வாலிபர்களுக்கும் தனி தனியாகவும் இஸ்லாமிய வகுப்புகள் நடந்துவருவதுடன் மேலும் வகுப்புகள் ஏற்பாடாகி வருகிறது
கிழக்குக் கடலில் உருவான தாழமுக்க புயல் அபாயம் நீங்கிவிட்டது
கிழக்குக் கடலில் உருவான தாழமுக்கம் காரணமாக விடுக்கப்பட்ட புயல் அபாயம் நீங்கிவிட்டது என வானிலை அவதான நிலையம் நேற்றிரவு அறிவித்தது. எனினும் வடக்கு, கிழக்கில் அவ்வப் போது காற்றோடு மழை பெய்யும் சாத்தி யம் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. தாழமுக்கம் செயலிழந்து இந்தியக் கரையை நோக்கி சென்றுவிட்டது என்றும் இதன் காரணமாக வடக்கு, கிழக்கை புயல் தாக்கும் அபாயம் முற்றாக நீங்கிவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா 50 பிரசாரத்துறை நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை
மேற்கொள்வதற்கு என சோனியா காந்தித் தரப்பினரினால் பிரசாரத்துறை நிபுணர்கள் 50 பேர் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் பிரபல தேர்தல் பிரசார நிறுவனங்களில் ஒன்றான விப்லவ் கொமியூனிகேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள்வெளியாகியுள்ளன
அரபு கலாசாலைகள் பயங்கர வாதத்தை போதிக்கும் இடம் அல்ல
அரபு கலாசாலைகள் பயங்கர வாதத்தை தோற்றுவிக்கும் நிறுவனமாக சில கடும் போக்கு ஊடகங்கள் பிழையான தகவல்களை வெளியிடுகிறது இது சமூகங்களுக்கிடையில் பிளவை துபமிடும் செயலென கண்டனம் தெரிவித்தார் விரிவாக பார்க்க
அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 41 ஆயிரத்து 800 குடும்பங்கள் வெள்ளதால் பாதிப்பு
அம்பாறை- மட்டக்களப்பு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் பெய்து வரும் பருவ மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 41 ஆயிரத்து 800 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என பிரதேச செயலாளர்கள் அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளனர். சாய்ந்தமருது -6300 குடும்பங்கள், கல்முனை முஸ்லிம் பிரிவு – 4750 குடும்பங்கள் அட்டாளைச்சேனை 4500 குடும்பங்கள்காரைதீவு – 3200 குடும்பங்கள், அக்கரைப்பற்று 4500 குடும்பங்கள் ஆலையடிவேம்பு – 5150 குடும்பங்கள் , , கல்முனை தமிழ் பிரிவு – 4505 குடும்பங்கள், , பொத்துவில் – 6100 குடும்பங்கள், பதியதலாவ – 2700 குடும்பங்கள், என பிரதேச செயலக பிரிவுகள் ரீதியாக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய வெள்ள நிலைமை காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு சமைத்த உணவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு அம்பாறை அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இணைப்பு -2
அடைமழை காரணமாக நேற்றுவரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் 52218 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் உயிர் இழந்துள்ளதாக முகாமைத்துவ நிலைய பொறுப்பதிகாரி ஏ. எஸ். எம். சியாத் தெரிவித்தார்.
அதேநேரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1220 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் 200 குடும்பங்களைச் சேர்ந்தோர் மாத்திரம் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவுகளை வழங்குவதில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பிரதேச செயலக பிரிவு ரீதியாக கல்முனையில் 7565 குடும்பங்களும் காரைதீவில் 2595 குடும்பங்களும் சாய்ந்தமருதுவில் 6566 குடும்பங்களும் நிந்தவூரில் 7000 குடும்பங்களும் அட்டாளைச்சேனையில் 5842 குடும்பங்களும் ஆலையடிவேம்பில் 5009 குடும்பங்களும் திருக்கோவில் 8426 சம்மாந்துறையில் 9,895 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை பதில் அரச அதிபர் தெரிவித்தார் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 6200 குடும்பங்களும், நாவிதன்வெளியில் 1800 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது மழை தணிந்து வருவதாக நிந்தவூரில் இருந்து ஷயிட் அஹம்மட் எமக்கு தெரிவித்தார்
தினகரனில் சற்று முன்பு வெளியாகியுள்ள இந்த செய்தி எதை சொல்ல வருகிறது புரியவில்லை

தினகரனில் வெளியான செய்தி :
ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா அமைப்பை உருவாக்க உதவுங்கள்
அலவி, அஸ்வரிடம் உலமாக்கள் கோரிக்கை
ஸ்ரீலங்கா ஜம்இய்யத் துல் உலமா என்ற புது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி பக்கச் சார்பற்ற முறையில் அதனை இயங்க வைக்க உதவிகள் செய்ய வேண்டுமென ஆளுநர் எஸ். அலவி மெளலானா, ஜனாதிபதி ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோரை நேற்றுக் காலை கொழும்பில் சந்தித்த உலமாக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நடுநிலையான அமைப்பு. அரசியல் கட்சிக்கோ அல்லது ஒரு வேட்பாளருக்கோ இந்தமைப்பு அதன் சரித்திரத்திலேயே ஆதரவளித்தது கிடையாது.உலமா சபைக்கு ஒரு கட்டடம் வேண்டு மென்ற வேண்டுகோளு க்கமைய கொழும்பில் பெறுமதிமிக்க காணித் துண்டை பெற்றுக் கொடுத்து அதில் நிர்வாகக் கட்டடம் அமைத்துக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் மறக்காது என்றும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தலைமைகள் விடும் தவறுகளுக்காக முழு உலமா சமுதாயமும் பொறுப்பாகாது. நிதான மாக சிந்தித்து நடுநிலை வகித்து முஸ்லிம் சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஏராளமான உலமாக்கள் இந்நாட்டில் இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினர்.
தினகரனில் சற்று முன்பு வெளியாகியுள்ள இந்த செய்தி எதை சொல்ல வருகிறது புரிய வில்லை
ஸ்ரீலங்கா ஜம்இய்யத் துல் உலமா என்ற புது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி பக்கச் சார்பற்ற முறையில் அதனை இயங்க வைக்க உதவிகள் செய்ய வேண்டுமென ஆளுநர் எஸ். அலவி மெளலானா, ஜனாதிபதி ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோரை நேற்றுக் காலை கொழும்பில் சந்தித்த உலமாக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
யார் இந்த உலமாக்கள் ஏன் புதிய ஸ்ரீலங்கா ஜம்இய்யத் துல் உலமா இலங்கை முஸ்லிம்களின் தலைமையாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இருக்க ஏன் புதிய இயக்கம் மேலும் மேலும் பிரிவினை ஏற்படுத்தவா போன்ற கேள்விகளை தூண்டுகிறது









