Archive for December 11th, 2009
மன்னாரில் ஒயில் அகழ்வு பணிகள் இந்திய நிறுவனத்தால் ஆரம்பிக்கப்படுகின்றது

மன்னார் கடலோர பகுதியில் எரிபொருள் அகழ்வுபணிகளை இந்திய கம்பனியான கெயர்ன் இந்தியா ஆரம்பித்துள்ளது. 100 மில்லியன் டொல்ர்கள் பெறுமதியில் இந்த அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் இந்த அகழ்வுபணிக்கான முப்பரிமாண வரைபட அறிக்கையினை இலங்கையிடம் இருந்து 10 மில்லியன் டொலர்களுக்கு இந்திய கம்பனி பெற்றுக்கொண்டது. இந்த ஆய்வு பணிகளை ஏற்கனவே நோர்வே பிரித்தானியா ஆகிய நாடுகள் செய்து கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 11 அகழ்வு புள்ளிகளையும் ஈரான் ,இந்தியா, சீனா, பிரித்தானியா, நோர்வே, ஆகிய நாடுகளுக்கு விற்க தீர்மானித்து அதனை வழங்கியும் உள்ளது இலங்கை அரசு. தற்போது இந்திய கம்பனிகளால் ஆரம்பிக்கப்படும் இந்த திட்டம் 2011 நடுப்பகுதியில் முடிவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒற்றுமை காலத்தின் தேவை, சன்மார்க்கக் கடமை
”முஷ்ரிகீன்களில் நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் தங்கள் மார்கத்தில் பிரிவினையை உண்டு பண்ணி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.(அவர்கள்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடமுள்ளதை வைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.” (ஸுரா : அர்ரூம் :32)
”எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தம் இஷ்டப்படி) பிரித்து (அவர்களும்) பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை.” (அல் அன்ஆம் :159)
ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்;;(பகைத்துக்கொண்டு) புறம் காட்டிச் செல்லாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களாகிய நீங்கள் சகோதரர்களாக விளங்குங்கள். மேலும் ஒரு முஸ்லிம் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் பகைத்துக்கொண்டிருத்தல் கூடாது.’ (புகாரி,முஸ்லிம்) விரிவாக பார்க்க
புத்தளம் மதுரங்குளி நகரில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தின்போது

புத்தளம் மதுரங்குளி நகரில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தின்போது கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி வந்துக் கொண்டிருந்த சொகுசு பஸ் வண்டி மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 27வயது முஹமட் இம்ரான் என்பவர் உயிரிழந்தார். மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வாகனவிபத்தில் இளைஞர் பலி, பொலீஸ் அதிகாரியை இடம்மாற்றுமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்- புத்தளம் மாவட்டம் முந்தல் மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தினால் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுரங்குளி பிரதேசத்தில் இன்றுபிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார். தனியார் சொகுசு பஸ் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட முந்தல் பொலீஸ் அதிகாரி, சொகுசு பஸ் சாரதிக்கு சார்பாக விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், குறித்த பொலீஸ் அதிகாரியை இடம்மாற்றுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து ஸ்தலத்திற்கு முப்படையினரும் வரவழைக்கப்பட்டு நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப் படுகின்றது. இதனை படங்களில் காணலாம் விரிவாக பார்க்க.
நன்றி அதிரடி







